RSS

சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!ரொம்ப கஷ்டமா போச்சு சார்! இந்த படு பாதக பய மனசு எதெதுக்கெல்லாம் கிடந்து அடிச்சிக்குது பாருங்க! சச்சின் 200 அடிச்சுப்புட்டாரு..யாரோட? சாம்பியன்ஸ் பங்களாதேஷோடயோ ஜிம்பாப்வேயோடயோ இல்லை... சொத்தை டீம் சௌத் ஆஃப்ரிக்காவோட...எவன் வேணா அடிப்பான்! இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப அவசியமா? நீங்களே சொல்லுங்க?


எனக்கு என்ன தோணுதுன்னா..இதனால சச்சினுக்கு ஜட்டி விளம்பரம் கிடைக்கும்..ஆனா தெலுங்கானா பிரச்சினை தீருமா... தீராது! காஷ்மீர் பிரச்சினை ஓயுமா...ஓயாது! என்ன கருமம் சார் இது..நாட்டுல எவனுக்கும் சிந்திக்கவே தெரியலை! மூளை கெட்டுப் போய் கிறுக்குப் புடிச்சு அலையிறானுங்க..இப்படிதான் சார் ஏ.ஆர்.ரகுமான்னு ஒரு பய... நாட்டுல எவ்வளோ பிரச்சினை இருக்கு...அதை பத்தியெல்லாம் கவலைப் படாம அவன் பாட்டுக்கு ம்யூசிக் போட்டுட்டு இருக்கான்..அவனை கண்டிச்சு வளர்க்க ஆளில்லாம போச்சு வாத்யாரே...இந்த லட்சணத்துல அவன் போட்ட பாட்டுக்கு அவனுக்கு ஆஸ்கார் வேற...

அவனுக்கு ஆஸ்கர்னு கேட்ட போது நெஞ்செல்லாம் எனக்குப் பதறிடுச்சு! இதனால அவனுக்கு ஹாலிவுட் சான்ஸெல்லாம் வேற கிடைக்கும்...நம்மாளு ஒருத்தன் வெளிநாட்ல போய் சாதனை செஞ்சா நமக்கு எவ்வளவு அசிங்கம் சார்! சே.. இவனுங்க எல்லாம் எப்பதான் திருந்த போறாங்களோ...ஆஸ்கார் மேடைல ரகுமான் பேசின தமிழை கேட்டப்போ..எனக்கு மானமே போயிடுச்சி!ஈழத்தமிழர் பிரச்சினை நடக்கும் போது அதிகமா பாராட்டு விழா வேண்டாம்னு சொன்ன இவன்லாம் ஒரு தமிழன்!

ஏர்டல் விளம்பரத்துக்காகத்தான் அவன் இவ்வளோ நாள் ம்யூசிக் போட்டு நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினான்னு நான் சொன்னா எவனும் நம்ப மாட்றானுங்க சார்!..

அப்புறம் இந்த சச்சின் பயலுக்கு தேசபக்தி இருக்கற மாதிரி நடிக்கவே தெரியலை சார்.. சென்னை ல பாகிஸ்தானோட ஆடும்போது முதுகைப் பிடிச்சுக்கிடே ஆடினானே..அதுலயெல்லாம் நடிப்பு பத்தாது சார்! கைல காயம், கால் ல காயம்,முதுகில ஆபரேஷன்.. இதெல்லாமே பிசாத்து ஜட்டி விளம்பரத்துக்காகத்தானே! அப்பா செத்த நாலு நாள் ல செஞ்சுரி போட்டதெல்லாம் காசு குடுத்து தான போட்டாரு! எனக்கென்னவோ இந்த நாடு உருப்படும்னு தோணலை சார்!

இதுக்காக மட்டும் தான் மனசு கஷ்டப்பட்டுச்சுன்னு நினைக்காதீங்க...ரோஜர் ஃபெடரர் ரெக்கார்ட் மேல ரெக்கார்ட் பிரேக் பண்ணப்பவும் தனியா உக்காந்து அழுதேன்! இந்த மனுஷன் அவங்க நாட்டுக்காக இப்படி துரோகம் பண்றாரேன்னு! அப்புறம் உசைன் போல்ட்..நீச்சலடிப்பானே ஒரு பையன்..மைக்கேல் ஃபெல்ப்ஸ்..அவன் செஞ்ச சாதனைக்கு அவனை தூக்குல போட்டாதான் சார் என் மனசு ஆறும்!

இவனுகளுக்கு இதே பொழைப்பு சார்...சாதனை ஏதாவது செய்ய வேண்டியது... நாட்டுல நல்ல பேர் வாங்க வேண்டியது...என்னை இப்படி பதிவு போட்டு அழவைக்க வேண்டியது? அடிச்ச 200 ரன்னை இவ்வளோ நாள் சப்போர்ட் பண்ண மக்களுக்கு அர்ப்பணிச்சுட்டு தேச்சபக்தியை ஜட்டிக்குள்ள வச்சிடறானுங்க சார்! நாங்க எல்லாம் பதிவு எழுதியே நாட்டை காப்பத்தணும்... இவனுக ரெக்கார்டுகளை எல்லாம் உடைச்சிட்டு இந்தியாவுக்கு அவமானத்தை தேடித் தருவாங்க! என்ன மனுஷங்க சார் இவங்க?

இப்படிக்கு என்றுமே ஜட்டி விளம்பரம் கிடைக்காத கோபத்துடன்

ஒரு ப்ளாக்கர்!

(இந்த பதிவு எதற்காக என்று நினைத்து ஏங்கும் நெஞ்சங்கள் புலவன் புலிகேசி பக்கத்துப் போங்க..விடை கிடைக்கும்!அப்புறம் எங்களுக்கு எதிர்பதிவு போடறதா நினைச்சு சச்சினின் தேசபக்தியை திரும்பவும் அவமானப் படுத்தினால் அவர்கள் சங்கு, சச்சின் சத்தியமா அறுக்கப்படும்....இப்படிக்கு கடவுள் சச்சினின் சாதுவான பூசாரிகள்)
 1. சி. கருணாகரசு

  Thursday, February 25, 2010

  ஏனிந்த...கோபம்....

  சச்சினுக்கு.... வாழ்த்துக்கள்.

 1. Veliyoorkaran

  Thursday, February 25, 2010

  @@@@அப்புறம் எங்களுக்கு எதிர்பதிவு போடறதா நினைச்சு சச்சினின் தேசபக்தியை திரும்பவும் அவமானப் படுத்தினால் அவர்கள் சங்கு, சச்சின் சத்தியமா அறுக்கப்படும்....இப்படிக்கு கடவுள் சச்சினின் சாதுவான பூசாரிகள்)//////

  அப்டியா சொல்ற...சரி விடு அருத்துட்லாம்....சச்சின்காக என்ன வேணா செய்யலாம்..தப்பில்ல..!!-இப்படிக்கு
  வெளியூர்க்காரன்பூசாரி, (ஆடு வெட்டும் ஸ்பெசலிஸ்ட்..) ரெட்டைவால்ஸ் கோவில்...!! :)

 1. ரமேஷ்

  Thursday, February 25, 2010

  யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்

 1. Veliyoorkaran

  Thursday, February 25, 2010

  @@@@ரமேஷ் said...
  யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்.////

  டேய் சார் சொல்லிட்டார்ல...இனிமே பதிவெல்லாம் எழுதாதடா.!!.சார் நீங்க கோவபடாம போங்க .நான் பார்த்துக்கறேன்...(பதிவெழுதி பேமஸ் ஆகி அப்டியே ஒரு ஜட்டி விளம்பரத்துல நடிச்சு காசு பார்க்கலாம்னு பார்த்தா விடமாட்டாங்கே போலருக்கு...!!)

 1. பட்டாபட்டி..

  Thursday, February 25, 2010

  ரெட்டை. யாருமேலயா காண்டு...
  போட்டு தள்ளிட்டு போயிட்டேயிருப்பியா...

 1. ரெட்டைவால் ' ஸ்

  Thursday, February 25, 2010

  ரமேஷ் said...
  யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்
  *************************************
  பட்டாபட்டி...இங்க பாரேன் டமாசை....

 1. பட்டாபட்டி..

  Thursday, February 25, 2010

  அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
  எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு...

 1. ரெட்டைவால் ' ஸ்

  Thursday, February 25, 2010

  பட்டாபட்டி.. said...
  அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
  எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு...

  வேணாம் பட்டு சார்! மன்னர் முக்கிய( அந்த முக்கிய இல்ல...இல்லைனா இதுக்கு வேற கலாய்ப்பாய்ங்க!) வேலையா நகர்வலம் போறார்! வந்து கவனிச்சுக்கலாம்!டம்மிக்கெல்லாம் உங்க எனெர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க! தளபதி வருவான்,. அவனோட சேந்து கும்முங்க!

 1. தர்ஷன்

  Thursday, February 25, 2010

  அருமை
  எனக்கும் சம்பந்த்தப் பட்ட பதிவைப் பார்த்த போது எரிச்சல் வந்தது உண்மை

 1. ILLUMINATI

  Thursday, February 25, 2010

  அட விடு ரெட்ட.நம்ம ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க.’ஆட தெரியாதவள் முற்றம் கோணல்னு சொன்னாளாம்’ன்னு.

  இவனுங்க சொல்லி சச்சினுக்கு கெட்ட பெரு வரவா போகுது?எனக்கு கிரிக்கெட் பிடிக்காது தான்.ஆனா,சச்சின எனக்கு ரொம்ப பிடிக்கும்.அது தான் அவரோட reach. HE IS A LEGEND UNTO HIMSELF. கொற சொல்ற கூட்டம் கொற சொல்ல தன் செய்யும்.இதுக்கு இவ்ளோ மதிப்பு கொடுக்குறது தான் நாம செய்யுற தப்பு.

 1. Muthu

  Thursday, February 25, 2010

  Veliyoorkaran said...

  @@@@அப்புறம் எங்களுக்கு எதிர்பதிவு போடறதா நினைச்சு சச்சினின் தேசபக்தியை திரும்பவும் அவமானப் படுத்தினால் அவர்கள் சங்கு, சச்சின் சத்தியமா அறுக்கப்படும்....இப்படிக்கு கடவுள் சச்சினின் சாதுவான பூசாரிகள்)//////

  அப்டியா சொல்ற...சரி விடு அருத்துட்லாம்...

  அறுத்துடலாம் அறுத்துடலாம் ஆமா எதை என்று

 1. Muthu

  Thursday, February 25, 2010

  ரமேஷ் said...

  யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்

  டேய் பனங்காய் மண்டையா அதை நீ சொல்லாதே

 1. Muthu

  Thursday, February 25, 2010

  பட்டாபட்டி.. said...

  அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
  எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு..

  பட்டு சார் me to coming

 1. Muthu

  Thursday, February 25, 2010

  //இப்படிக்கு என்றுமே ஜட்டி விளம்பரம் கிடைக்காத கோபத்துடன்//

  ஜட்டி என்ன பெரிய ஜட்டி தல உமக்கு பட்டாபட்டி இருக்கு

 1. வால்பையன்

  Thursday, February 25, 2010

  சுடர்மணி ஜட்டி விளம்பரத்துக்கு ஆள் வேணுமாம், வர்றிங்களா, மவுன்ரோட்ல கட்அவுட் உறுதி!

 1. Dr.Rudhran

  Thursday, February 25, 2010

  interesting way of writing. keep going.

 1. ஜெய்லானி

  Thursday, February 25, 2010

  ///என்னை இப்படி பதிவு போட்டு அழவைக்க வேண்டியது?///

  பாத்தா தெரியலயே அப்பு !!!!!

 1. புலவன் புலிகேசி

  Thursday, February 25, 2010

  நல்லாக் கலாய்ச்சிட்டீங்க...சூப்பர்

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 26, 2010

  வால்பையன் said...
  சுடர்மணி ஜட்டி விளம்பரத்துக்கு ஆள் வேணுமாம், வர்றிங்களா, மவுன்ரோட்ல கட்அவுட் உறுதி!
  *****************************************
  மவுண்ட் ரோடில் கட் அவுட்டா...அப்புறம் பாராட்டு விழா நடத்துவாங்க...மிரட்டுவாங்க...நமக்கு எதுக்குங்ணா இதெல்லாம்...சின்னப் பையனை மன்னிச்சு விட்ருங்க!

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 26, 2010

  புலவன் புலிகேசி சார்...மிக்க நன்றி...
  உங்க பதிவை படிச்சதும்தான் வெறி ஏறிச்சு!

  ****************************************

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 26, 2010

  Muthu said...
  பட்டாபட்டி.. said...

  அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
  எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு..

  பட்டு சார் me to coming
  ********************************************
  முத்து...கவலையே படாத...பட்டுவும் வெளியூரும் நல்ல மீனா சிக்கினா அங்க போய் வறுத்தெடுப்பானுங்க...அப்ப சேந்து பாத்துக்கலாம்..இதெல்லாம் டம்மி...சுறா மீனைப் போடனும்யா...ஜெடிக்ஸ் சேனல் பாக்கறவனைப் போட்டுக்கிட்டு...(யோவ் பட்டு...நீ செய்யிற அளும்புக்கு உன்னை சத்தியமூர்த்தி பவன் ல வச்சு டிங்கரிங் பாக்கப் போறாய்ங்கன்னு நினைக்கிறேன்!)

 1. TechShankar

  Friday, February 26, 2010

  Hi. I love Your post. I love Sachin the Master.
  Have a look @ here too.

  Anjali Tendulkar Rare Photos

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  @ரெட்டை
  யோவ் பட்டு...நீ செய்யிற அளும்புக்கு உன்னை சத்தியமூர்த்தி பவன் ல வச்சு டிங்கரிங் பாக்கப் போறாய்ங்கன்னு நினைக்கிறேன்!
  //

  ஹா...ஹா..
  எனக்கு என்னையா பயம்..
  உனக்குதான் கணக்கு தெரியுமே....( ஆமா.. தெரியுமுல்ல..!!!)

  A=B
  B=A

  அப்படினு ஒரு நல்லவன் சொல்லியிருக்காப்பல..
  அதனால , நான் அவன் இல்லைனு சொல்லிகிட்டு ,
  ஷட்டரைப் போட்டுட்டு போயிட்டேயிருப்பேன்..

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  @புலவன் புலிகேசி said...
  நல்லாக் கலாய்ச்சிட்டீங்க...சூப்பர்
  //

  அய்யா புலவன் புலிகேசி அவர்களே..
  நாங்க எதுக்கு இருக்கோம்..எல்லாம் பார்த்துக்குறோம்..

  ( எங்களுக்கு புலின்னா ரொம்ம புடிக்கும் வாத்தியாரே.)

 1. ரோஸ்விக்

  Friday, February 26, 2010

  அஹா... அமைதியா இருந்த இவனுகள உசுப்பேத்திவிட்டாய்ங்களே.... இன்னும் எத்தனை கொலை பழி ஊருக்குள்ளே விழுகப்போகுதோ... (அடியே... டயலாக் தான் கைப்புள்ளையோடது... ஆனா இவங்க கட்டத்துரை)

  சிக்குனா சிதச்சிருவாய்ங்க... உஷாரா இருங்க...

 1. ரோஸ்விக்

  Friday, February 26, 2010

  வெளியூரு பாத்தியா... ரெட்டை என்ன சொல்லுதுன்னு..."சுறா" சிக்குனா போட்டுருவம்குதுயா... புரியுதா...

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@வால்பையன் said...
  சுடர்மணி ஜட்டி விளம்பரத்துக்கு ஆள் வேணுமாம், வர்றிங்களா, மவுன்ரோட்ல கட்அவுட் உறுதி!///

  இங்க மூணாவதா கம்மென்ட் போட்ருக்க ரமேஷ் அண்ணன் கூட்டிட்டு போங்க..அவருக்கு பதிவு எழுதறதுதான் புடிக்காது..ஜட்டி விளம்பரதுல எல்லாம் விரும்பி நடிப்பாப்டி...!!

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@@@Muthu said...
  Veliyoorkaran said...
  அப்டியா சொல்ற...சரி விடு அருத்துட்லாம்...//
  அறுத்துடலாம் அறுத்துடலாம் ஆமா எதை..??////

  முத்து எது கைல கெடைக்குதோ அத புடிச்சு அறுத்துர வேண்டியதுதான்...அறுக்கனும்னு முடிவு பண்ணிட்டா அருவருப்பு பார்க்ககூடாது..அறுக்கறத தவம் மாதிரி பண்ணனும்..(நன்றி திரு ப்ரியமுடன் வசந்த் அவர்கள்..)

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@@Muthu said...
  ரமேஷ் said...
  யோவ் நீர்யெல்லாம் எதுக்கையா பதிவு எழுததீர்
  டேய் பனங்காய் மண்டையா அதை நீ சொல்லாதே.///

  முத்து சார்...ரமேஷ் சார போட்டு கொல்லாததுக்கு காரணம்..சார் டிசெண்டா அவர் பேர் போட்டு போட்ருகாறு..அனானிங்கற பேர்ல வராம..ரமேஷ் சாருக்கு நாம மரியாத குடுக்கணும்...ரமேஷ் சார் நாங்க கிண்டல் பண்றத மன்னிச்சிருங்க..!!!!

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@பட்டாபட்டி.. said...
  அங்க போயி ஒரு கேம் போடலாமா ரெட்டை..
  எங்க வந்து என்ன பேச்சு இது.. படவா ராஸ்கோலு.//

  ஹா ஹா...யோவ் பட்டாப்பட்டி என் மேல நீ எதோ கோவமா இருக்கேன்னு நெனைக்கறேன்..அது எதுக்குன்னு தெரியல..ஆனா இங்க எல்லார் முன்னாடியும் வெளியூர்காரன் பட்டாபட்டிகிட்ட மன்னிப்பு கேட்டுகறான்...பட்டாப்பட்டி சார் மன்னிச்சிடுங்க...பட்டாப்பட்டி இல்லாம வெளியூர்காரன் இல்ல...நீங்க மட்டும்தான் நக்கல் உலகத்தின் மகாராஜா...நாங்கல்லாம் உங்க அல்லகைங்க...மன்னிச்சு சிஷ்யன ஏத்துக்கங்க....!!!!

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@@Dr.Rudhran said...
  interesting way of writing. keep going.///
  @@@@@Rettaivaals...//////
  You are rocking dude...I am very happy to see this...Keep rocking..Vicky kalakaraan.. :)

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  This comment has been removed by the author.
 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@@பட்டாபட்டி.. said...
  அய்யா புலவன் புலிகேசி அவர்களே..
  நாங்க எதுக்கு இருக்கோம்..எல்லாம் பார்த்துக்குறோம்..///

  சிக்கியவர்களை கலாய்த்து சிதைக்கும் இந்த ஆன்மீக பணியில் ராணுவமும் ராணுவ அமைச்சரும் பட்டாபட்டியின் தலைமையில் இனி செயல்படுவார்கள் என அரசாங்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது...எங்கேனும் அக்கிரமமோ வன்முறையோ தென்பட்டால் உடனே ஒரு விசில் அடிக்குமாரும் அடுத்த ரெண்டாவது நிமிடம் வெளியூர்க்காரன் ஸ்பாட்ல எறங்கி கோதால நிப்பான் எனவும், பெரிய பதிவர் சின்ன பதிவர் என்ற வித்யாசம் இல்லாமல் பட்டாபட்டியின் ராணுவம் தாக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது...அனானிகளை இந்த கூட்டணி மயிரா கூட மதிக்காது எனவும் குறிபிடப்பட்டுள்ளது...!!!

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  @வெளியூரு
  ஹா ஹா...யோவ் பட்டாப்பட்டி என் மேல நீ எதோ கோவமா இருக்கேன்னு நெனைக்கறேன்..அது எதுக்குன்னு தெரியல..ஆனா இங்க எல்லார் முன்னாடியும் வெளியூர்காரன் பட்டாபட்டிகிட்ட மன்னிப்பு கேட்டுகறான்...பட்டாப்பட்டி சார் மன்னிச்சிடுங்க...பட்டாப்பட்டி இல்லாம வெளியூர்காரன் இல்ல...நீங்க மட்டும்தான் நக்கல் உலகத்தின் மகாராஜா...நாங்கல்லாம் உங்க அல்லகைங்க...மன்னிச்சு சிஷ்யன ஏத்துக்கங்க....!!!!
  //

  யோவ்.. உம்மேல எனக்கென்யா கோவம்..
  என்ன பிரச்சனைன ,திடீருனு , உனக்கு பட்டாபட்டி யாருனு தெரியாது....
  திருப்பவும் சொல்றேன்.. நான் ஒரு பெரிய ம%$^#$$ கிடையாது...

  நான் என்ன Professional Blogger -னு நினைச்சயா?..
  சும்மா டமாசுக்கு ஆணியடுச்சுட்டு இருக்கேன்...

  எப்படா கடைய மூடலாமுனு இருக்கேன்..
  என்னோட ப்ளாக்குக்கு வங்க்து , மூடிட்டு Negative ஓட்டு போட்டுட்டு போயிடு...
  முடிஞ்சா , உன்னோட பிரண்டுகிட்ட சொல்லியெல்லாம் குத்த சொல்லுய்யா...


  (நிசமாவே ப்ளாக் ஒரு போதைய்யா...நான் எவ்வளவு ப்ளான் பண்ணியிருக்கேன் தெரியுமா?..
  Java , SQL , ASP எல்லாம் கரைச்சு குடிக்கனும்..


  ஏதோ பார்த்து பண்ணுயா...)

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@@@@ரோஸ்விக் said...
  அஹா... அமைதியா இருந்த இவனுகள உசுப்பேத்திவிட்டாய்ங்களே.... இன்னும் எத்தனை கொலை பழி ஊருக்குள்ளே விழுகப்போகுதோ... (அடியே... டயலாக் தான் கைப்புள்ளையோடது... ஆனா இவங்க கட்டத்துரை)
  சிக்குனா சிதச்சிருவாய்ங்க... உஷாரா இருங்க.///
  ////////////////////
  ஏற்கனவே வெறி புடிச்சு திரியறோம்...இதுல இந்த பீஸ் வேற உள்ள பூந்து வெறி ஏத்தி விடுது...பட்டாப்பட்டி இனிமே அனானிகளோட தாக்குதல் அதிகமா இருக்கும்னு எதிர்பார்க்றேன்..இங்க அனானிகளோட கமெண்டுக்கும் கெட்ட வார்த்தைலையே பதில் சொல்லப்படும் அப்டிங்கறத மகளிர் அணில அறிவிச்சிடு...!!

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@@@பட்டாபட்டி.. said...
  (நிசமாவே ப்ளாக் ஒரு போதைய்யா...நான் எவ்வளவு ப்ளான் பண்ணியிருக்கேன் தெரியுமா?..
  Java , SQL , ASP எல்லாம் கரைச்சு குடிக்கனும்..///
  //////////

  ஜானி வாக்கரையே ராவா குடிக்கற..இந்த பய ஜாவாவ குடிக்க மாட்டியா..என்னையா பிக்காளிதனமா பேசற...(என்ன இந்த பீஸ் திடீர்னு கேரெக்டர் ரோல் பண்ணுது..செட் ஆகலையே....ரெட்டை என்னான்னு பாரு...!!!.) :)

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  @Veliyoorkaran said...
  ஜானி வாக்கரையே ராவா குடிக்கற..இந்த பய ஜாவாவ குடிக்க மாட்டியா..என்னையா பிக்காளிதனமா பேசற...(என்ன இந்த பீஸ் திடீர்னு கேரெக்டர் ரோல் பண்ணுது..செட் ஆகலையே....ரெட்டை என்னான்னு பாரு...!!!.)
  //


  யோவ்.. இந்த மாசம் ஏதோ புரமோஷன் கிடைக்குமானு
  வேலை செய்யற மாறி நடிச்சுட்டேயிருக்கேன்..
  நீ வேற டமாசு பண்ணிட்டு..வாழ்க்கைப்பிரச்சனையா இது

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@@பட்டாபட்டி.. said...
  யோவ்.. இந்த மாசம் ஏதோ புரமோஷன் கிடைக்குமானு
  வேலை செய்யற மாறி நடிச்சுட்டேயிருக்கேன்..
  நீ வேற டமாசு பண்ணிட்டு..வாழ்க்கைப்பிரச்சனையா இது.////

  பட்டாப்பட்டி சார் ...நான் மறுபடியும் சொல்றேன்...உங்களுக்கு கேரக்டர் ரோல் செட் ஆகல..பட்டாபட்டினா ராவா கலாய்ப்பான்...ஆனா இந்த பட்டாப்பட்டி சொங்கி மாதிரி பேசறான்..அப்பறம் உங்க இஷ்டம்..சொல்றத சொல்லிட்டேன்...!!!..(யோவ் நீ சீரியசா பேசறது நெஜமாவே நல்ல இல்லையா...நாமெல்லாம் ரெட்டை சொன்ன மாதிரி சர்வாதிகாரிங்க...நாம பீல் பண்ணவே கூடாது..முடியாத பட்சத்துல ஹிட்லர் மாதிரி சூசைட் பண்ணிக்கணும்..அது வரைக்கும் அடுத்தவன ஏறி மெதிச்சிக்கிட்டுதான் இருக்கணும்..)

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  @Veliyoorkaran said...
  பட்டாப்பட்டி சார் ...நான் மறுபடியும் சொல்றேன்...உங்களுக்கு கேரக்டர் ரோல் செட் ஆகல..பட்டாபட்டினா ராவா கலாய்ப்பான்...ஆனா இந்த பட்டாப்பட்டி சொங்கி மாதிரி பேசறான்..அப்பறம் உங்க இஷ்டம்..சொல்றத சொல்லிட்டேன்...!!!..(யோவ் நீ சீரியசா பேசறது நெஜமாவே நல்ல இல்லையா...நாமெல்லாம் ரெட்டை சொன்ன மாதிரி சர்வாதிகாரிங்க...நாம பீல் பண்ணவே கூடாது..முடியாத பட்சத்துல ஹிட்லர் மாதிரி சூசைட் பண்ணிக்கணும்..அது வரைக்கும் அடுத்தவன ஏறி மெதிச்சிக்கிட்டுதான் இருக்கணும்..)
  //


  முடியலேனா , நாம எதுக்கையா சூசைட் பண்ணிக்கனும்..?
  அது ஜென்மத்தில நடக்காது.. வேணா , அடுத்தவன் எப்படி சூசைட் பண்ணனுமுனு சொல்லிக்
  கொடுத்துட்டு வெளியாயிருவேன்.. ஹி..ஹி..

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@ரோஸ்விக் said...
  வெளியூரு பாத்தியா... ரெட்டை என்ன சொல்லுதுன்னு..."சுறா" சிக்குனா போட்டுருவம்குதுயா... புரியுதா...////

  ஆகா ஆமாய்யா...கேப்ல இளைய தளபதிய போட பார்க்கராணுக...டேய் வேணாம்டா...சொன்னா கேளுங்கடா...சுறா நல்லா இல்லைனா அத நான் மட்டும்தான் கலாய்ப்பேன்...வேற யாரோட வெரலும் என் தளபதி மேல பட விட மாட்டேன்...!!!

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@@பட்டாபட்டி.. said...
  முடியலேனா , நாம எதுக்கையா சூசைட் பண்ணிக்கனும்..?அது ஜென்மத்தில நடக்காது.. வேணா அடுத்தவன் எப்படி சூசைட் பண்ணனுமுனு சொல்லிக்
  கொடுத்துட்டு வெளியாயிருவேன்.. ஹி..ஹி..///

  ஹா ஹா ....தீக்குளிச்சிட்டு எண்ணெய் தேச்சு குளிக்கற மாதிரியா...வெசம்யா நீ..!!! :)

 1. மங்குனி அமைச்சர்

  Friday, February 26, 2010

  நல்லா இருக்கு ரெட்டை சார்

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  @ரெட்டை..

  நேத்து என்னமோ முக்கியமான வேலையாப் போயிட்டு வரேனு போன..
  இன்னுமாயா முக்கற..வேலை...

  நீ முக்கறதுக்கு எடுத்துகிட்ட நேரத்தப் பார்த்தா.. இன்னேரம் கீழிருந்து பெட் ரோலே வந்திருக்குமேயா...

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@பட்டாபட்டி.. said...
  @ரெட்டை..நீ முக்கறதுக்கு எடுத்துகிட்ட நேரத்தப் பார்த்தா.. இன்னேரம் கீழிருந்து பெட் ரோலே வந்திருக்குமேயா.../////

  டேய் ரெட்டை..சீக்கிரம் வந்துரு..இங்க உன்ன ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்கே...நீ வர லேட் ஆனுச்சு இங்க உன் பட்டாப்பட்டி இங்க கிழிஞ்சிரும்..!!

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  வெளியூரு..
  ஆமா.. இந்த அடி அடிச்சிக்கிறாங்களே..
  யாருய்யா இந்த சச்சின்/ ரஹ்மானு...?

  கட்சிக்காரனுகளா?..

  சீக்கிரம் சொல்லித்தொலையா, அடுத்த ஆட்ட வெட்டறதுக்குள்ள..

 1. Veliyoorkaran

  Friday, February 26, 2010

  @@@பட்டாபட்டி.. said...
  ஆமா.. இந்த அடி அடிச்சிக்கிறாங்களே..
  யாருய்யா இந்த சச்சின்/ ரஹ்மானு...?//

  என்னாய்யா..ஜெனரல் நாலேஜே இல்லாம வளந்துருக்க...சொல்றேன் கேட்டுக்க..ரஹ்மான்கறது நம்ம கறி கடை பாய்...சச்சின்கறது அவரோட சித்தப்பா பையன்...அவங்ககுள்ள எதோ பங்காளி தகராறாம்...அத நம்மதான் தீர்த்து வெக்கணும்னு ஒரே அடம்...அதான்..தீத்துக்கிட்டு இருக்கோம்...!

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  அதுக்குத்தான் உன்னக் கேக்குறது..
  எனக்கே புரியமாறி சொன்ன பாரு ..
  நீ மனுசனையா..

  ஆமா . இவனுக பெரியப்பன், மாமன் மகனுக யாராவது இருக்கானுகளா?..

  சொல்லுயா.. ஒரே பஞ்சாயத்தில தீர்திடலாம்..
  வேற ஆடு எதுவும் மாட்ட மாட்டிங்க்குதே...

  என்னய்யா பண்ணாலாம்..?

  What about மங்குனி ?

 1. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

  Friday, February 26, 2010

  நல்ல கலாய்ப்பு..

  சம்பந்தப் பட்டவர்கள் யோசிக்கட்டும்..

  அவருக்கு ஆஹா சொல்லவும் ஒரு கூட்டம் உள்ளது.. அதுதான் பரிதாபம்..

  நன்றி..

 1. Muthu

  Friday, February 26, 2010

  பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

  நல்ல கலாய்ப்பு..

  சம்பந்தப் பட்டவர்கள் யோசிக்கட்டும்..

  அவருக்கு ஆஹா சொல்லவும் ஒரு கூட்டம் உள்ளது.. அதுதான் பரிதாபம்..

  நன்றி..///  கூட்டம் இல்லை மந்தை

 1. Muthu

  Friday, February 26, 2010

  பட்டாபட்டி.. said...
  சொல்லுயா.. ஒரே பஞ்சாயத்தில தீர்திடலாம்..
  வேற ஆடு எதுவும் மாட்ட மாட்டிங்க்குதே...

  என்னய்யா பண்ணாலாம்..?

  What about மங்குனி ?

  சீக்கிரம் போட்டுதல்லுங்க அப்பு. அப்போ தான் எனக்கு அந்த போஸ்ட் கிடைக்கும்

 1. பட்டாபட்டி..

  Friday, February 26, 2010

  @Muthu said...

  சீக்கிரம் போட்டுதல்லுங்க அப்பு. அப்போ தான் எனக்கு அந்த போஸ்ட் கிடைக்கும்
  //

  அடப்பாவி..
  நீரு தூங்கியாச்சுனு நினைத்து , இங்க வந்தா,
  வேற கதை ஓடிட்டு இருக்கு...

  நடக்கட்டும்..நடக்கட்டும்..
  ஆனா நம்ம கமிஷன் 10% மறந்துடாதீங்க..

 1. Muthu

  Friday, February 26, 2010

  பட்டாபட்டி.. said...
  அடப்பாவி..
  நீரு தூங்கியாச்சுனு நினைத்து , இங்க வந்தா,
  வேற கதை ஓடிட்டு இருக்கு...

  நடக்கட்டும்..நடக்கட்டும்..
  ஆனா நம்ம கமிஷன் 10% மறந்துடாதீங்க..


  தூங்குகிறதா இனி மேல் தான் johny திறக்க வேண்டும்

 1. ஜெய்லானி

  Saturday, February 27, 2010

  ///தூங்குகிறதா இனி மேல் தான் johny திறக்க வேண்டும்///
  johny யாரு நடப்பவரா ?

 1. ரெட்டைவால் ' ஸ்

  Saturday, February 27, 2010

  Thank u prakash@********** ஆமா சாமக்கோடாங்கிக்கு இங்கிலீஷ்ல என்னண்ணே?

  பிரகாஷ் ...அந்த பதிவு என்னைப் பொறுத்தவரை வக்கிரத்தின் உச்சம்!

 1. ரெட்டைவால் ' ஸ்

  Saturday, February 27, 2010

  வந்துட்டியா ஜெய்லானி... ஜானிங்கறவர் நெப்போலியனுக்கு அண்ணன் முறை... வாக்கரோட பையன்! அவர் தான்யா..வீக் என்ட் கடவுள்!

 1. Hussain Muthalif

  Saturday, February 27, 2010

  ஆமா ரெட்டைவால்'ஸ்,
  நான் சொல்ல நெனைச்சதை சொல்லிருகீறு,

  இந்த பய புள்ளைங்களுக்கு, ... பெரிய ஹேர்-னு நெனப்பு..... தக்காளி....தானும் எந்த சாதனையும் பண்ண மாட்டானுங்க.....பண்றவங்கள...திட்டி பப்ளிசிட்டி தேடுவானுங்க..

 1. Veliyoorkaran

  Saturday, February 27, 2010

  @@@Muthu said...
  கூட்டம் இல்லை மந்தை.///

  அந்த மந்தைல எந்தெந்த ஆடு இருக்குனு ப்ரீயா இருக்கசொல்ல போய் பார்த்துட்டு வா மாமேய்...சிந்தாம சிதராம இனிமே மந்தயோட வெச்சு அடிப்போம்..தனி மனித தாக்குதல் போர் அடிக்குது....!!!

 1. Veliyoorkaran

  Saturday, February 27, 2010

  @@@ரெட்டைவால் ' ஸ் said...
  பிரகாஷ் ...அந்த பதிவு என்னைப் பொறுத்தவரை வக்கிரத்தின் உச்சம்!////

  ஆமாம்..அந்த மாதிரி வக்கிரமான விசயத்த எல்லாம் நாங்க மட்டும்தான் பண்ணுவோம்..அடுத்தவன் பண்ணா கொந்தளிச்சிருவோம்.!.(ஒருத்தன ஒரே பதிவுல பதிவுலகத்த விட்டு வெரட்டிட்டு இது பேசுற டையலாக பாரு...நீங்க பண்றதுதாண்ட வன்முறை...வக்கிரம் எல்லாமே...)

 1. Veliyoorkaran

  Saturday, February 27, 2010

  @@@@Hussain Muthalif said...
  இந்த பய புள்ளைங்களுக்கு, ... பெரிய ஹேர்-னு நெனப்பு..... தக்காளி....தானும் எந்த சாதனையும் பண்ண மாட்டானுங்க.....பண்றவங்கள...திட்டி பப்ளிசிட்டி தேடுவானுங்க..///


  ரெட்டை யாரு இந்த பீசு...கேப்ல நம்மள போடற மாதிரி தெரியுது...இல்லையே...எனக்கே எதோ டௌட்டாவே இருக்கு..விளக்கம் கேட்டு இந்த பீசுக்கு ஒரு சம்மன் அனுப்பிரு...!

 1. பட்டாபட்டி..

  Saturday, February 27, 2010

  @வெளியூரு
  !.(ஒருத்தன ஒரே பதிவுல பதிவுலகத்த விட்டு வெரட்டிட்டு இது பேசுற டையலாக பாரு...நீங்க பண்றதுதாண்ட வன்முறை...வக்கிரம் எல்லாமே...)
  //

  யாரையா அந்தப் பதிவர்..?
  சொல்லவேயில்லை

 1. ரெட்டைவால் ' ஸ்

  Saturday, February 27, 2010

  பட்டாபி... அதான் தலைப்புல போட்ருக்கேன்ல வொயிட் நைட்ஸ்னு... தமிழ்படுத்தி படிச்சுக்கோயா

 1. பட்டாபட்டி..

  Saturday, February 27, 2010

  சில நேரம் , மூளை வேலை செய்யரதில்லை..
  என்னானு பார்க்கனும் ரெட்டை..

 1. ஹுசைன்

  Sunday, February 28, 2010

  @@@@Hussain Muthalif said...
  இந்த பய புள்ளைங்களுக்கு, ... பெரிய ஹேர்-னு நெனப்பு..... தக்காளி....தானும் எந்த சாதனையும் பண்ண மாட்டானுங்க.....பண்றவங்கள...திட்டி பப்ளிசிட்டி தேடுவானுங்க..///


  ரெட்டை யாரு இந்த பீசு...கேப்ல நம்மள போடற மாதிரி தெரியுது...இல்லையே...எனக்கே எதோ டௌட்டாவே இருக்கு..விளக்கம் கேட்டு இந்த பீசுக்கு ஒரு சம்மன் அனுப்பிரு...!///

  மப்பூ' ஸ் மேர்சலாகதீங்கோ....நானு உங்க கட்சி (இந்த தலைவர், ராணுவ தளபதி, மாதிரி பதவி எல்லாம் வாணாம்.....) வெளியில் இருந்து ஆதரவு தரேன்....
  (அகில உலக தலைவர் பதவி இருந்தா....consider பண்றத பத்தி பெரிய மனசு பண்ணி யோசிக்கிறேன்)...

  நான் திட்டினது மொதல்ல ஜட்டி விளம்பரம் போட்ட அந்த பதிவர.....

 1. ரெட்டைவால் ' ஸ்

  Sunday, February 28, 2010

  வெளியிலிருந்து ஆதரவா..இந்த ஏரியால இது ரொம்ப புதுசா இருக்கே.. வெளியூர் அன்ட் பட்டாபட்டி... இதுவரைக்கும் நமக்கு யாருனா வெளியிலிருந்து ஆதரவு குடுத்துருக்காங்க? பயபுள்ள யோசிக்க வைக்குதேடா...

 1. Veliyoorkaran

  Sunday, February 28, 2010

  @@@ரெட்டைவால் ' ஸ் said...
  வெளியிலிருந்து ஆதரவா..இந்த ஏரியால இது ரொம்ப புதுசா இருக்கே.. வெளியூர் அன்ட் பட்டாபட்டி... இதுவரைக்கும் நமக்கு யாருனா வெளியிலிருந்து ஆதரவு குடுத்துருக்காங்க? பயபுள்ள யோசிக்க வைக்குதேடா...///
  ///////////////////////////////////////////////
  ரெட்டை முலாயம் சிங்கும் அமருமே பிரிஞ்சிட்டாங்க...இங்க வெளியிலிருந்து ஆதரவெல்லாம் ஒத்து வராது..அதுவும் இல்லாம நம்ம அரசாங்கமே ஒரு எச்ச்சகல அரசாங்கம்...உள்ள இருக்கவனையே எவனும் மதிக்காம மாத்தி மாத்தி கலாய்ச்சிபாணுக...அதனால ஒரு பதவில இருக்கறதுதான் இங்க உயிருக்கு பாதுகாப்பு..அந்த பீஸ் எந்த நாட்ல இருக்குன்னு பார்த்து அந்த நாட்டு தூதரா அறிவிச்சிடு...(அது மேல ஒரு கண்ண வெச்சுக்க..வந்துதுலேர்ந்து டபுள் மீனிங்க்லையே பேசுது..எப்பிஐ ஆளா கூட இருக்கலாம்..நம்மள உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிருக்கவும் வாய்ப்பு இருக்கு..) .

 1. பின்னோக்கி

  Monday, March 08, 2010

  என்னவோ நடந்திருக்கு. இருங்க. புலவன் போய் படிச்சுட்டு வர்றேன்

 1. kanavugal

  Saturday, March 20, 2010

  ஏன் பாஸ்... புலவன் புலிகேசி இப்படி கோவபடுறாரு.... நீங்க சொன்னதுல என்ன தப்பு... சச்சின் ௨00 அடுச்சதுல என்ன இருக்கு.. அதுனால நாட்டுல எதாச்சும் மாறி இருக்கா ..... இல்ல ஒரு ௨00 பேரு பசி தீந்துருக்கா... நீங்க அத பத்தி எல்லாம் கவலைபடாதீங்க .... உங்க வேலைய நீங்க பாருங்க... அவரால ferari
  காருக்கு வரவேண்டிய வரிதான் நஷ்டம்...

 1. வெண்ணிற இரவுகள்....!

  Saturday, March 27, 2010

  உங்களுக்கு பயந்து எல்லாம் இல்லை ரெட்டை வால்.................எங்கள் நெருங்கிய உறவினர் இறந்திருந்தார்
  நான் உடைந்து போய் தான் delete செய்தேன் ..............சரி சச்சின் என்றால் வரும் நீங்கள் ஏன் விதர்பா பதிவு
  போட்டேன் வரவில்லை .........................! ஏன் ஜட்டி என்ற வார்த்தை மட்டும் தெரிகிறது உங்களுக்கு சச்சின் விதர்பா விவசாயிகள் பற்றி சொல்லவில்லை ...............தாஜ் ஹோட்டல் குண்டு வைத்தால் சொல்கிறார் ......

 1. வெண்ணிற இரவுகள்....!

  Saturday, March 27, 2010

  கலைஞர் அழகிரி எல்லாம் விமர்சனம் செய்து இருக்கிறேன் உனக்கு ஏன் பயப்பட வேண்டும் ரெட்டை வால்

 1. வெண்ணிற இரவுகள்....!

  Saturday, March 27, 2010

  நீங்கள் பதில் பதிவு போட்டது கூட தெரியாது இது உண்மை ரெட்டை வால் ..........சரி நீங்கள் பைசாக்கு பிரயோஜனமாய் எதை எழுதினீர்கள் ......................!சொல்லுங்கள் ......!!!உங்களுக்காய் நான் delete செய்தேன் என்று
  நீங்களாய் நினைத்து கொண்டது ................நீங்கள் என் வலைப்பக்கத்திற்கு வாருங்கள் விவாதம் செய்வோம் ........!!!!ஏன் சச்சின் மட்டுமே உலக விடயமா வேற விடயங்கள் பற்றி எழுதி இருக்கிறேன் வாருங்கள் ................................!!!

  உண்மையில் உங்களை எல்லாம் பார்த்தால் கோபம் வர வில்லை அழுகை தான் வருகிறது ............தனிநபர் பற்றி பேசும் பொழுது ஏன் என் வலை பூவிற்கு வரவில்லை பயமா ????

 1. வெண்ணிற இரவுகள்....!

  Saturday, March 27, 2010

  இங்கே ஆக்ரோஷமாய் இருக்கும் பதிவர்களே .............உங்களுக்கு சச்சின் தெரியும் விதர்பா
  தெரியுமா ............இதற்க்கு இவளவு கோபம் படுகிறீர்கள் .................................?????
  உங்கள் வீரத்தை சச்சினிடம் மட்டும் தான் காட்டுவீர்களா ??????????????????விதர்பா என்ன என்பது
  கூட இந்த புலிகேசிக்கு தெரியாது ................அவர் சொல்கிறாராம் இவர் பதிவு செய்கிறாராம் ...........
  என்ன கொடுமை ???

 1. வெண்ணிற இரவுகள்....!

  Saturday, March 27, 2010

  GOD என்ற படம் வைத்துள்ளீர்கள் ............ கடவுளா சச்சின் அவரின் சமூக மதிப்பீடு என்ன ..........
  ???????? கட்டாயம் விளம்பரம் மட்டுமே குறிக்கோள் ?????? ஏன் மாடு போல IPL கிரிக்கெட் ஏலம்
  போனார்???????? ஏன் மட்டையில் பாரத மாத போடுகிறாரா இல்லை MRF போடுகிறாரா ?????????
  ஏன் T SHIRT சூ எல்லா இடத்துலயும் விளம்பரம் வைக்கும் சச்சின் அதற்க்கு கடவுள் பிம்பம் வேறு .......

 1. ரெட்டைவால் ' ஸ்

  Saturday, March 27, 2010

  சச்சின் ஒன்றும் கட்சி நடத்துபவரல்ல. நமது அடிப்படை பிரச்சினை இது தான்! யார் என்ன வேலை செய்கிறார்களோ அவர்களை செய்ய விடாமல் தடுப்பது! அரசியலையும் மற்றவைகளையும் போட்டுக் குழப்பிக்கொள்வது. ரஜினிகாந்திடம் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று இறைஞ்சி நிற்பது போல் உள்ளது , விதர்பா படுகொலைகளுக்கு சச்சினிடமிருந்து குரல் வருமா என்று எதிர்பார்ப்பது.

  சச்சின் ஒரு கிரிக்கெட் வீரர் அவ்வளவே! அவர் கிரிக்கெட் ஒழுங்காக நாட்டுக்கு விளையாடுகிறாரா என்று பார்த்தால் மட்டும் போதுமானது. அதில் அவர் சாதனை செய்யும்போது ஏன் தூற்றுகிறீர்கள்? அதுவும் அம்புக்குறி எல்லாம் போட்டு? விதர்பா படுகொலைகளுக்குக் குரல் கொடுப்பாரா, காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைப்பாரா , ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருப்பாரா என்றெல்லாம் எதிர்பார்ப்பதற்கு மக்கள் என்ன பைத்தியங்களா?

  உங்களுக்கு நீங்கள் சுயமரியாதையாகவும் கோபமாகவும் இருப்பதாக கூறிக்கொள்வது எனக்கு உங்களின் மனப் பிறழ்வாகக் காட்சியளிக்கிறது!

 1. ரெட்டைவால் ' ஸ்

  Saturday, March 27, 2010

  வெண்ணிற இரவுகள்....! said...

  .................எங்கள் நெருங்கிய உறவினர் இறந்திருந்தார்
  நான் உடைந்து போய் தான் delete செய்தேன்

  /////////////////////////////////////////////
  உங்கள் உறவினரின் மரணத்துக்கு அனுதாபங்கள்!

  அதை சொல்லிவிட்டு டெலீட் செய்ய வேண்டியது தானே... யாராவது உங்கள் மேல் கேஸ் போட்டு விடுவார்களா என்ன? என்னய்யா காமெடி பண்ணுகிறீர்கள்? சச்சினுக்கு விளம்பரம் மட்டுமே குறிக்கோள் என்றால் உங்களுக்கு அவரை இழுத்துப்போட்டு பதிவு எழுதி விளம்பரம் தேடுவது தான் குறிக்கோளா?

Post a Comment