ப.மு.க தலைவர் பட்டாபட்டி கைது.
(அள்ளித்தந்த வானம் விவேக் ஸ்டைலில் படிக்கவும்...)
ப.மு.க ரெண்டாக உடையுமா...தமிழக மக்கள் துக்க்க்க்க்கம்...!
பட்டாபட்டி நாடாவை கழட்டுனது நாங்கதானுங்கோஓஓஒ...மார் தட்டுகிறார்கள் வெளியூர்காரனும் ரெட்டைவால்ஸும்...
ப.மு.க, தேர்தலுக்கு வாக்காளர்களுக்குக் கொடுத்த நிதியில் கள்ளநோட்டைக் கலந்து விட்டது யார்? கட்சித் தொண்டர்கள் தலைவரிடம் வீராவேசம்.
மகளிர் அணித் தலைவிக்காக சண்டை போட்ட ப.மு.க தலைவர்கள். பட்டாபட்டி உள்ளே நுழைந்ததால் அடிதடி. இரு தலைவர்கள் உயிர் ஊஊஊஊஊசல்....!
ப.மு.க வின் சின்னம் பட்டாபட்டி யாருக்குக் கிடைக்கும்... சோழி உருட்டி தேர்தல் ஆணையம் தேர்வு.
கடைசியாக வந்த தகவலின் படி ரெட்டைவால்ஸின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இருப்பதால் ப.மு.க நிறுவனரும் தலைவருமான பட்டாபட்டி அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.வராமல் அடம்பிடித்த பட்டாபட்டியை போலிஸார் அடித்து துவைத்துத் தொங்கப் போட்டனர்.இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்
இந்தக் கைது சம்பவத்தை முன்னின்று நடத்திய டி.ஜி.பி.க்கு தங்கப் பதக்கம் வழங்குவதாக பிரதமர் ரெட்டைவால்ஸ் அறிவிப்பு. இந்தக் கைது சம்பவத்தைப் பற்றிப் பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள்.
அயனாவரம் அம்புஜம்: பட்டாபட்டிய தூக்கி ஜெயில்ல மட்டும் போடாதீங்கோ..அப்டியே என்ணைக் கொப்பரைல வறுத்து ..அன்னியன் படத்துல காட்டுவாளே அந்த மாதிரியெல்லாம் செய்துடுங்கோ..கடன்காரன்! தேர்தலப்போ அவன் சின்னத்தை வரைஞ்சு வீட்டு காம்பவுண்ட் சுவரையே நாறடிச்சுட்டான்.
கூடுவாஞ்சேரி கோயிந்த சாமி : நாட்டுல ஜனநாயகம் செத்துப் போச்சு...ராணுவ ஆட்சி வரணும்.
மாம்பலம் மன்னாரு : அய்யோ ராசா போய்ட்டியே...(மேற்கொண்டு அந்த ஒப்பாரியைக் காதுகளால் கேட்க முடியவில்லை)
சாந்தோம் சின்னசாமி : குவார்ட்டர் குடு சொல்றேன்!
கல்பாக்கம் கல்பனா: யாரது பட்டாபட்டி? ஆதித்யா டி.வி.காம்பியரா?
நுங்கம்பாக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி : Actually..This is a great tragedy you know...and...I luvvvv shah rukh.... when is his new release........?
.
.
.
முக்கியச் செய்தி : நாடா இல்லாத பட்டாபட்டியை இன்றிரவு 8.30 செய்திகளில் காணத்தவறாதீர்கள்
மிலிட்டரி ஹோட்டலில் வெட்டு வெட்டென்று வெட்டிக் கொண்டிருந்த வெளியூர்காரன் ராணுவ தளபதியாகவும் செயல் படுவார் என்று நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவனுகளெல்லாம் யாருன்னு தெரியனுமா..அப்போ முதலில் நீங்க இதைப் படிச்சிருக்கணும்.
முனைவ்வ்வர் பட்டாபட்டி....
Wednesday, February 03, 2010
கைது செய்யப்பட்ட பட்டாபட்டியார் தப்பி ஓட்டமா?
திடுக்கிடும் தகவல்..
வாங்கத் தவறாதீர் "தினக் குசும்பு "..
பட்டாபட்டி தப்பியோடியதை தொடர்ந்து , வெளியூர் மற்றும்
ரெட்டை , திருப்பதியில் தலைமறைவு..
( சுட சுட செய்திகள்.. பட்டாபட்டியார் தப்பி ஓடியதால் இன்னுமுதல்
பேப்பர் விலை 28 ரூபாயக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
பங்க் -ல பெட் ரோல் தட்டுப்பாடு.. மக்கள் அவதி...)