My name is Khan & கலைஞரின் பன்ச் சாங்
கரண் ஜோஹர் டைரக்ஷனில் ஷாருக் நடித்தால் பாடல்கள் எப்படி இருக்கும் என்று ஒரு உங்களுக்கே ஒரு யூகம் இருக்கும். அதில் இம்மி பிசகாமல் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள் ஷங்கர்- எசான் - லாய். குச் குச் ஹோதா ஹையில் வரும் துஜே யாத்ன மேரி போல் இங்கே சஜ்டா என்றொரு பாடல். ஜோதா அக்பரில் வரும் க்வாஜா பாடலை கொஞ்சம் தொட்டு சென்றிருக்கிறார்கள்.ரஹத் ஃபதே அலி கான் பாடியிருக்கிறார்.பிரபல நஸ்ரத் ஃபதே அலி கானின் மருமகனாம். தேரெ நெய்னா என்ற பாடலை வேறு எந்த ஷாருக் படத்துக்குள்ளும் நுழைத்து விடலாம். அவரும் அதே போல் தலையை ஆட்டி ஆட்டி ஆடப் போகிறார்.
அட்னன் சாமியும் ஷங்கர் மகாதேவனும் பாடியிருக்கும் நூர்-ஏ-குதா என்ற பாடல் தான் கிளாஸ்.இரண்டாவது முறை கேட்கும் போதே உருக்குகிறது. அட்னான் சாமி குரலில் என்னத்தைத் தடவி பாடுகிறார் என்று தெரியவில்லை. இவரை அதிகமாக தமிழில் பயன்படுத்த மாட்டேன்கிறார்கள். பிறகு அல்லா ஹி ரஹெம் என்று ரஷீத் கான் பாடிய பாடல். படத்தோடு பார்த்தால் ரசிக்க முடியும். சூரஜ் பாடலின் ஸ்டைலயும் பீட்டுகளையும் நிறைய ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்க முடியும்.ஸ்ட்ரிங்ஸில் குழையும் தீம் ம்யூசிக் அருமை. எல்லாமே அக்மார்க் ஷாருக் பட பாடல்கள்.
ஷாருக் கஜோல் கரண் என்று மெகா வசூல் படங்களை கொடுத்த கூட்டணி.சாதாரணமாவே ஷாருக் கொன்சம் உணர்ச்சி குவியல்.இதில் ஆட்டிஸம் வந்தவராக வேறு நடிக்கிறார். படத்தின் ஸ்டில்களையும் ட்ரெய்லரையும் பார்த்தால் சென்டிமென்ட் கடலில் மூழ்கடித்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.லேசாக Forrest Gump வாடையும் அடிக்கிறது. My name is khan தீவிர ஷாருக் கஜோல் ரசிகர்களுக்காக ஷங்கர் எசான் லாய் கொடுத்திருக்கும் கஸாட்டா ஐஸ்கிரீம்.
***************************************************************************************
வா வா தலைவா என்றொரு பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. உன்னி மேனன் ஹரி சரண் என்று வழக்கமாக ஹாரீஸின் இசையில் கௌதம் மெனன் படத்தில் பாடுவது போல் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.மைக்கேல் ஜாக்ஸன் விஜயலக்ஷ்மி நவனீதகிருஷ்ணன் பாடல்களைப் பாடினால் எப்படி இருக்கும் ? அப்படி முதல்வரை வாழ்த்தி ஒரு பாடல் . விஜய் அஜித் எல்லாம் தோற்றுப் போவர்கள். அப்படியொரு ஓபனிங் சாங் நம் முதல்வருக்கு.கருமம் நம் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. ஒரு மனிதருக்கு எவ்வளவுதான் பாராட்டுதல்கள் பிடிக்கும். அவருக்கே சலிப்பு தட்டாதா.. இல்லை புகழ்பவர்களுக்குதான் கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா? உங்களுக்குப் பாராட்டு விழாவும் பஞ்ச் பாடல்களும் போட்டுக் குஷிப்படுத்தினால் தான் வேலைக்கு ஆகுமென்றால் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் கலைஞரே?
Anonymous
Friday, February 12, 2010
எங்க தலைவர எல்லாரும் புகழ்ந்து பாடினாத்தான் அவரு இளமை நல்ல முறையில் கழிந்து.... இன்னும் பல ஆண்டுகாலம் வாழ்வாராம். இது அவரின் குடும்ப மருத்துவர் சொல்லியது... எந்த குடும்ப மருத்துவர் என்று கேட்ககூடாது.
அவருக்கு இருக்குற வியாதிகளுக்கெல்லாம் இது தான் மருந்து. இவங்க புகழ்ந்து பாடலையினா, எங்க மதுரை அண்ணன் சினிமாக்காரங்களுக்கு ரெண்டு கையும் இல்லாம் பாத்துடுவாறு...