RSS

நாங்க எல்லாம் அந்த காலத்துல- By A.R. Rahman,Mandela,Indira,Jackson,Sachin and...


Genius are inborn , not made என்பார்கள். அப்படி சில ரியல் ஜீனியஸ்களின் ஆரம்ப கால டி.வி பேட்டிகள்.

சச்சின் வெஸ்ட் இண்டீஸ் டூர் செல்வதற்கு முன்பு அளித்தது

நெல்சன் மண்டேலாவின் முதல் டெலிவிஷன் பேட்டி!இந்திரா காந்தியின் பி.பி.சி பேட்டிஒரிஜினல் காட்ஃபாதர் மார்லன் பிராண்டோபுரூஸ் லீமைக்கேல் ஜாக்ஸன்ரஹ்மானின் தூர்தர்ஷன் பேட்டி- தேசிய விருது பெற்ற பின்னர்...
ம்ம்ம்! கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஜீனியஸ்னா அப்படி இப்படி தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்க தலைவா!

காஸ்ட்லியான வேஸ்டுகள்! (இடையில் வரும் தேர்தல்களும் தான்)
ஒருவேளை தனக்குக் கிடைக்காததனால சொல்றானோன்னு நினைக்க வேணாம்!உண்மையிலேயே இது உலக தண்டங்களின் தொகுப்பு.


முதலில் கின்ஸா ஹேன்ட் பேக். வைரம் , பிளாட்டினம் பதித்த இதனுடைய விலை ஜஸ்ட் 1.63 மில்லியன் டாலர்.
 
 இந்த வைர ஹெட் ஃபோன்களின் விலை 15000 டாலர் தான்.


இந்த பீட்ஸாவின் விலை  2800 டாலர்.

காரணம்...இதன் மேல் தூவப் பட்டிருக்கும் 24 காரட் தங்க இலைகள்!
 
 
செம காம்ப்ளிகேட்டட் ஆன கடிகாரம் இது.எப்பவுமே 5 நிமிஷம் லேட்டாதான் காட்டுமாம்.


இந்தக் கடிகாரம் 300000 டாலராம்.


ஓகே பா...இதெல்லாம் அசலூர்க்காரனுக பண்ற கிறுக்குத்தனங்கள்ல சிலதுன்னு விட்டுடலாம். நம்ம ஊர்ல காஸ்ட்லியான பொருளே இல்லையா...அதை நம்ம தண்டமாக்கறதே இல்லையான்னு யோசிச்சுப் பாருங்க!


இருக்கு...இதான் அது.இந்த மை பெரிசா ஒன்னும் விலையில்லைன்னாலும் கண்ணுக்குத் தெரிஞ்சு நம்ம வேஸ்ட் பண்ற, மேல பார்த்ததைவிட காஸ்ட்லியானது.


ரூவாய்க்கு சுயமரியாதை கிடைக்கிற புண்ணிய பூமி சார் நம்மளோடது.

சிம்பு & டி.ஆர் இணைந்து கலக்கும் "எப்பா..."(கண்ணீர் சிந்த வைக்கும் ஒரு ஹாரர் மூவி)


சுனாமிக்குப் பிறகு சென்னை மக்களை பீதியடைய வைக்கும் சில விஷயங்களில் டி.ஆர் படமும் சிம்பு படமும் ஒன்று.ரெண்டு பேரும் சேர்ந்து "பா" படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார்கள் என்று பி.பீ.சி(பிரிட்டிஷ் பீலா கார்ப்பரேஷன் )வெளியிட்ட செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,


"எப்பா..." படத்தைப் பற்றிக் கேட்டதற்கு அமிதாபுக்குத் தான் எந்த விதத்தில் குறைந்தவனென்றும், என் படங்களைக் கண்டு அன்றைக்கு அமிதாப்,தர்மேந்திரா,ராஜேஷ் கண்ணா போன்றவர்களே அலறினார்கள் என்றும் என் படங்கள் சரமாரியாக வசூலை அள்ளுவதைக் கண்டு பயப்படாத இந்தி நடிகர்களே இல்லை என்றும் டி.ஆர் கூறினார்.


மேலும் படத்தைப் பற்றி சிம்பு கூறும் போது படத்தின் மேக்கப் செலவு,அதாவது ஷேவிங் செலவு 25 லட்சம் என்றும் செட் போட்டு வீணடித்த செலவு மட்டுமே 2 கோடி என்றும் கூறினார்.மேலும் படத்தைப் பற்றிக் கூறிய செய்திகளைக் கேட்ட நிருபர் அங்கேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து விட்டதால் "எப்பா..." படத்தைப் பற்றிய அரிய தகவல்கள் கிடைக்காமல் போயின. ஆனாலும் ரசிகர்களின் உணர்வுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதோ "எப்பா படத்தின் ஸ்டில்.
 
பின் குறிப்பு :


ஜாக்கிரதை...ஒரு வேளை இந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஆகலாம்...! அருகிலிருக்கும் ஆஸ்பத்திரியில் இடம் போட்டு வைக்கவும்

முக்கிய குறிப்பு : ஃபோட்டோவை எடிட் செய்தது திரு.ஆயில்யன்.(தகவல் தந்த பெனாத்தல் சுரேஷுக்கும் ஆயில்யனுக்கும் நிறைய நன்றிகள்)

விளையாட்டா சில ஃபோட்டோக்கள்


சில ஜாலி புகைப்படங்கள் விளையாட்டுகளிலிருந்து....

லலித் மோடி தான்யா கிங்... ( ப்ரீத்தி ஜிந்தா பின்னாடி என்னயா ஆராய்ச்சி...?)

மாப்ள...பவுலர் மேல அப்படி என்ன கோபம்...?சென்ற வார உலகம் (ஒரு தற்கொலை! ஒரு கரடி ஜோக்! ஒரு தில்லாலங்கடி!)


மத்திய மதுரையில் "மத்திய சென்னை"

பிறந்து வளர்ந்த ஊருக்குப் போய் ரொம்ப நாளாச்சேன்னு ஒரு கல்யாணத்தை சாக்கா வச்சு ரயிலேறியாச்சு.கல்யாணம் வழக்கம் போல ரொம்ப போர் அடிச்சதால அப்படியே டவுன் ஹால் ரோடுக்குள்ள வண்டியை விட்டோம். தங்க ரீகல் தியேட்டருக்கு முன்னெல்லாம் உலக சினிமா பார்க்கறதுக்குப் போனது.சென்னை ல உலக சினிமா அப்பப்போ அக்கம் பக்கத்துலயே நடக்கறதால பரங்கி மலை போற இண்ட்ரெஸ்ட் இல்லை.ரீகல் ல "மத்திய சென்னை " படம் ரிலீஸ் ஆகியிருந்தது. போஸ்டரில் பிரகாஷ்ராஜ் படம், சங்கீதா படம் எல்லாம் போட்டிருந்தது.எல்லாத்துக்கும் மேல இசை இசைஞானி.ஹீரோ மூஞ்சியைப் பார்த்தாவது சுதாரிச்சிருக்கனும்.2012 எஃபெக்டுல ஒருத்தன் மூஞ்சியை வச்சுக்கிட்டு கவுண்ட்டர்ல 80 ரூவா டிக்கெட்டுன்னான்.ஒரு நிமிஷம் நம்ம ரீகல் தானான்னு கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். அதையும் மீறி உள்ள போனா மொத்தமா ஒரு 22 பேரு.படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம் இருக்கும். டைரக்டர் டச் ஒன்னு வச்சார் பாருங்க..மார்ட்டின் ஸ்கார்சிஸி தற்கொலை பண்ணிக்கனும். சாவடிக்கறதுக்குன்னே படம் எடுப்பானுங்க போல.கஷ்டப்பட்டு முழிச்சு முழிச்சுப் பார்த்தேன்..முடியல! சரின்னு தூங்கிட்டேன். எழுந்து பார்த்தா இன்னும் இடைவேளையே விடலை.இதுக்கு மேல தாங்காதுன்னு எந்திரிச்சு வந்துட்டேன். இப்படியெல்லாம் படம் எடுத்தா ஏன்டா நக்ஸலைட்டுகள் உருவாக மாட்டானுங்க..? வரும் போது வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு வந்தேன் - "பாஸ்! மதுரைக்கும் 2012 வரும்"

நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஏதாவது நடந்தாகனுமே...எதிர்வினை வேறொன்னுமில்லை - ரெண்டு நாள் கக்கா வரலையப்பா!கரடி கதை

ஒரு காட்டுல கரடி ஒண்ணு முயலை துரத்திட்டு வந்தது.பயந்த முயல் ஏரிக்கரை ஓரமா ஒதுங்கிச்சு. அப்போ ஏரிக்கடியில இருந்த தேவதை"சண்டை போட்டுக்காதீங்கப்பா! ஆளுக்கு மூனு வரம் கொடுக்கறேன்..சந்தோசமா இருங்க"ன்னுச்சு. முதலில் கரடி கேட்டது."இந்தக் காட்டில் என்னைத் தவிர எல்லாக் கரடியையும் பொம்பளைக் கரடியா மாத்திடு".முயலோ"எனக்கு வேகமா ஒடறதுக்கு ஒரு கிழியவே கிழியத ஷூ வேணும்னது.நக்கலா சிரிச்ச கரடி "இந்த நாட்டில இருக்கிற எல்லாக் கரடியயும்பொம்பளைக் கரடியா மாத்திடு"ன்னது. முயல் தன் பாட்டுக்கு "ஓடி களைச்சேன்னா போறதுக்கு எனக்கு அதி நவீன ரேஸ் பைக் வேணும்னுட்டுது.அட முட்டாள் முயலேன்னு சிரிச்ச கரடி ரொம்ப யோசனைக்கப்புறம் என்னைத் தவிர இந்த உலகத்துல இருக்கிற அத்தனைக் கரடிங்களயும் பொம்பளைக் கரடிங்களா மாத்திடுன்னுட்டு ஜபர்தஸ்தா நின்னு முயலை ஏளனமா பார்த்தது.முயல் மூனாவது வரம் என்ன கேக்கலாம்னு யோசிச்சு "இந்தக் கரடியை ஹோமோசெக்ஷுவலாக்கிடு"ன்னுச்சாம்.GOOGLE ன் தில்லாலங்கடி வேலை.

மனிதத்துக்கு எல்லைகள் கிடையாது தான். ஆனால் நாம் எவ்வளவு நாள் தான் சுரனை இல்லாமலேயே இருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஏற்கெனவே என்று உலக வரைபடத்தில் பாதி காஷ்மீரைக் காணோம்.இப்போ இந்த சைடுல சைனாக் காரனுங்க ஏழரையை கூட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. அதற்கு கூகுள் போன்ற ஜாம்பவான்களும் ஒத்தூதுகிறது என்றால் வியாபரத்துக்கும் எல்லைகள் வச்சே ஆகணும் போல. கீழே இருக்கும் மூன்று படங்களையும் பாருங்களேன் (மெய்ல் அனுப்பிய நல்லவனுக்கு நன்றி)
 
                                                 இது நமக்கு
 இது ஒபாமாவுக்கு
இது ஏதோ ச்சிங் சங் மிங் குகளுக்கு
வலது ஓரமா அருணாச்சலப் பிரதேசம் பகுதியை மூனு படத்துலையும் உத்துப் பாருங்க!


Google Guys! எங்க ஊரு ராமதாஸ், வைகோவையெல்லாம் மிஞ்சிட்டீங்கடா!

"பா" உருவாகிய விதம்...(மேக்கப் புகைப்படங்கள்)


என்ன பண்றது அமிதாப் ஜி! இன்னும் எங்க ஊர்ல பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டே பேத்திங்களோட டூயட் பாடிட்டிருக்கானுங்க...

நெட்ல சுட்டது (part 2)


இது வரைக்கும் 3டி படம்,,லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்,ஹாரி
பாட்டர்,ராமநாராயனனோட அம்மன் க்ராஃபிக்ஸ் கலக்கல்னு எவ்வளாவோ பார்த்திருப்போம்.ஆனா உட்கார்ந்த எடத்துல,ஒரே ஃபோட்டோல ரெண்டு பேர் ஒரு உட்டாலக்கடி வேலை பண்ணியிருக்கானுங்க .


இதுல என்ன பெருசா விசேஷம்ங்கிறீங்களா! லெஃப்டுக்கா கிளைமாக்ஸ்ல வர்ற அஜீத் கணக்கா சும்மா முறைச்சிட்டு இருக்காரா.ரைட்டுக்கா ஒரு அம்மா சின்ன வயசு பண்டரி பாய் மாதிரி சாஃப்டா இருக்குதா...இப்போ அப்டியே ஒரு 12 அடி தள்ளி அதே ஃபோட்டோவைப் பாருங்க...


என்ன தெரியுது?
 
நீங்க நகர்ந்தா அவங்க ஏன் எடத்தை மாத்திக்கிறாங்க பாஸ்!

 

வாரே வா! வாட் எ இங்கிலீஷ்...வாட் எ டெரர்


சில நேரம் ரொம்ம்ம்ப மனசு சரியில்லைனா என்ன பண்றதுன்னே புரியாது,கைல காசு இல்லைனா..,வீட்ல சன்டை போட்டுட்டா..யாராவது திட்டினா மனசு சங்கடமா இருக்கும்.எதுலயுமே கவனம் இருக்காது.ஆனா அதையும் மீறி நம்ம கான்ஸன்ட்ரேஷனை வேற பக்கம் திருப்பினாலும் மூளை கேக்காது. அந்த மாதிரி நேரத்துல என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா இருக்கு.சட்டு புட்டுனு காமெடி பக்கம் தலையை திருப்பிடனும். ஆதித்யா , சிரிப்பொலினு போனாலும் போட்ட ஜோக்கையே போடறாங்களா..கவலையை விடுங்க...தமிழ்நாடு மாதிரி ஒரு புண்ணிய பூமில காமெடிக்கா பஞ்சம்?

அன்னிக்கும் இப்படிதான்..வாடகை குடுத்தது, கரண்ட் பில் கட்டினது, கிரடிட் கார்ட் ஈ.எம்.ஐ,வண்டி லோன்,எல்லாம் போக மூணாம் தேதியே பாங்க் பாலன்ஸ் 5 டிஜிட் ல இருந்து 3 டிஜிட்டுக்கு வந்துடுச்சு. நம்ம தலைவிதியை நொந்துகிட்டே டி.வி. பார்த்துட்டு இருந்தேன்.பளிச்சுனு ஒரு புத்துணர்ச்சி.மன்டைக்குள்ள பல்ப் எரிய அப்படியே கூகுளாண்டவருக்கு ஒரு சலாம் போட்டு யூட்யூபை திறந்தேன். ஒரு அரை மணி நேரம்..நாமெல்லாம் எவ்வளவோ தங்கம்டான்னு தோணிச்சு.எவ்வலவு பெரிய பிரச்சினை வந்தாலும் சமாளிக்கிற தைரியம் வந்தது.அவரோட பேட்டிகள் சாதாரணமானது இல்லைங்க...இவரை மட்டும் ஒண்டியா இலங்கைக்கு அனுப்பியிருந்தா ராஜபக்ஷே பதறியடிச்சுட்டு தனி ஈழம் குடுத்திருப்பார்.இவர் அகிரோ குரசவோ படம் பாத்திருப்பாரான்னு தெரியாது.ஆனா குரசவோ இவர் படம் பார்த்திருந்தார்னா நாமெல்லாம் என்ன படம் எடுக்கறோம்னு ஃபீல் பண்ணியிருப்பார்.சும்மா சொல்லலைங்க.ஸ்பீல்பெர்க் கண்டி இவர் படம் பாத்திருந்தார்னா ஈ.டி எடுத்தப்பவே ஃபீல்ட விட்டு ஓடியிருப்பார். நம்ம ஜனங்க குடுத்து வச்சவங்க...இந்த மாதிரி ஒருத்தர் ரத்தமும் சதையுமா நாம வாழற காலத்துலயே வாழறார்னா..எவ்வளவு பெரிய விஷயம்.

இவர் மட்டும் இல்லைங்க...இவர் பையனும் இவரை போலவேதான்...எனர்ஜி டானிக். அவர் நடிக்கிற படங்கள் எல்லாம் இளைஞர்களுக்கு ஒரு க்ளூக்கோன் - டி. அவர் பாட்டும் டான்ஸும் நடிப்பும்... ஆஸ்கார் ஜூரிங்கள்லாம் திணறப் போறாங்க.

சுய முன்னேற்ற புஸ்தகம் எழுதறவங்க எல்லாம் இந்த ஃபேமிலியை பாருங்கப்பா...

என்ன ரொம்ப சஸ்பன்ஸ் வச்சுக் கொல்றேனா...

அவரு யாரு.... அவருதான் டி.ஆரு!

என்ன டக்குனு சிரிப்பு ராஸ்கல்...! இவர மாதிரி படம் எடுத்தோ பேட்டி கொடுத்தோ உங்களால நொந்து போன மனசுங்களுக்கெல்லாம் பான்ட் எய்ட் போட முடியுமா?

எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் புரியலை..இவனுங்க தன்னைத்தானே புத்திசாலினு நினைசிக்கிறாங்களா.இல்லை நம்மளை முட்டள்னு நினைச்சுகிறாங்களா..

என்னவோ பா...இதெல்லாம் பார்த்தா நம்ம எவ்வளவோ தேவலைனு தோணுது பாத்தீங்களா..அதன் மேட்டரு
 
இது அந்தர் பல்டிடா சாமி....!
 


இந்த பேட்டியை எடுத்த நிருபர் நிலைமையை யோசிச்சுப் பாருங்க...சிரிக்காம கேக்கனும்னா...மவனே நீ தெய்வம் டா!
வாரே வா! வாட் எ இங்கிலீஷ்...வாட் எ டெரர்.
என்னா ஆக் ஷன்...?என்னதான்யா சொல்ல வர்ற...?இதெல்லாம் என்ன சும்மா ட்ரெய்லரு...மெய்ன் பிக்சர் பாக்கனுமா...!


http://www.kuraltvinfo.com/         போங்க   மெர்ஸலாயிடுவீங்க

ஃப்ளாஷ் நியூஸ்:


இவரோட இன்னொரு மகனும் நடிக்க வர்றாராம்...எப்பவாச்சும் பாக்கற ஒன்னு ரெண்டு தமிழ் படத்தையும் பாக்க விடாம பண்ணிருவானுங்க போல...


நெட்ல சுட்டது (பார்ட் 1)நாமெல்லாம் காஃபி குடிச்சுட்டு கிளாஸ் கூட கழுவி வைக்காத பார்ட்டிங்க...ஆனா வெட்டிப் பசங்க ஆறின காஃபியை வச்சிக்கிட்டு என்ன காட்டு காட்டிருக்கானுங்க!


      
          

    


.
விண்டோஸ் 7 இலவசமாக டவுண்லோட் செய்ய..

                                                  என்ன..? ஏழு விண்டோஸ் (ஜன்னல்) ம் பார்த்து டவுண்லோட்பண்ணிட்டீங்களா...இத மாதிரி வேற ஏதாவது சிக்கிச்சுன்னா சொல்றேன்...அப்புறமா பார்க்கலாம்!

ஒரு குட்டிப் புதிர்!


ஒருத்தனுக்கு 1990 ல் 15 வயசாகுது. அதே பையனுக்கு 1995 ல் 10 வயசு. எப்படி?


இந்த மாதிரி சட்டி கேள்விக்கே மண்டைய உடைச்சுக்கிறீங்களா? அப்போ அவசியம் இலவசக் கொத்தனார் பக்கத்துக்குப் போங்க....தலை கலைஞர் மாதிரி ஆயிடும்...

வாவ்! ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றும் வெள்ளைப் பூக்கள் பாடல்


ரஹ்மானின் வெள்ளைப் பூக்கள் பாடல் கன்னத்தில் முத்தமிட்டால் (2002) என்னும் மனிரத்னம் திரைப்படத்தில் இடம்பெற்றது.ரஹ்மானைப் பிடிக்காதவர்கள் கூட சிலாகித்த பாடல் இது. இந்தப் பாடலை ரஹ்மானே தோன்றிப் பாடினால் எவ்வளவு அழகாக இருக்கும்.இதோ... நீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அழகான சிறுவர்களுடன் ரஹ்மான் தோன்றும் வீடியோDude...You are a Genius!

கொஞ்சம் ஹிஸ்டரி..கொஞ்சம் புவனேஸ்வரி!அதிகாலையில் காஃபியோட பேப்பர் படிக்கிற சுகம் சத்தியமா லாப்டாப் லயும் டெஸ்க்டாப் லயும் நியூஸ் வாசிக்கறப்போ கிடைக்காது. பேப்பரிலும் புதுசா ஒண்ணும் இருக்கப் போறதில்லை. அதே..."தீவிரவாதத்தை வேரறுப்போம் என பிரதமர் கூறினார்"," மைனாரிட்டி அரசு பதவி விலக வேண்டும் என ஜெயலலிதா கூறினார்".ங்கிற ஜல்லிகள்.அப்புறம் அரைப் பக்கத்துக்கு சரவணா ஸ்டோர் விளம்பரங்கள். சில சமயம் பேப்பரைப் பார்க்காமலேயே என்னென்ன நியூஸ்னு யூகிச்சுட்டுப் போயிடலாம்.எப்பவாவது பரபரப்பா நடந்தா அதுவும் அடுத்த நிமிடங்களிலேயே பிரேக்கிங் நியூஸாக டி.வி.யில் வந்துவிடுகிறது.அப்புறம் மறுநாள் பேப்பர்ல புதுசா என்ன போட்டிருக்கப் போறான்னு அலட்சியமா ஸ்போர்ட்ஸ் சினிமான்னு தாவிடுவோம்.

ஆனா சி.என்.என்கள், என்.டி.டி.விக்கள் இல்லாத காலத்தில் நியூஸ்பேப்பர் முதல் பக்கத்துக்கு எவ்வளோ மவுஸ் இருந்திருக்கும்.
அப்படி அந்த நியூஸ்பேப்பர்கள் இப்போ வாசிக்கக் கிடைச்சா எப்படி இருக்கும்.?சரி..இந்தியாவுல வந்த முக்கியமான பேப்பர்கள் கூகிள் பண்ணிப் பார்த்தா..ம்ஹும்.. சரித்திரத்தை பத்திரப் படுத்த நம்மாளுங்களுக்கு இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைப்படும்.கிடைச்ச மட்டில சிலதை நம்மளாவது இப்போவே பதிவு பண்ணிடுவோம்.

 
    டைட்டானிக் மூழ்கியபோது....
 
ஹிட்லர் இறந்த மறுநாள்...
ஆர்ம்"ஸ்ட்ராங்"காக நிலாவில் இறங்கிய பொழுது

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில்...
அறுபத்திரண்டு வருஷங்கள் முன்பு... இந்தியாவில்

படு பாதாளத்தில் வால் ஸ்ட்ரீட்...

உலகத்தின் மோசமான ஒரு நாள்...

இவிங்க எப்பவுமே கொஞ்சம் ஓவர் தான்...
சுனாமி..!(நாம போகிற போக்கைப் பாத்தா இன்னொரு காட்டு காட்டும் போலிருக்கே)


 கடைசியா... யாரும் தப்பா எடுத்துக்காதீங்க.
தமிழன் வாழ்க்கையையே மாற்றி அமைத்த வரலாற்று சம்பவம் இல்லையா இது...!
பின்குறிப்பு : 

உலகத்தையே புரட்டிப் போட்ட சம்பவங்கள் நம்ம வாழ்நாளில் ஒண்ணோ ரெண்டோ நடந்திருக்கலாம்.அதனால சில தாத்தாக்கள் இதைப் படித்திருக்கிறீர்கள் (அ) பார்த்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் அனுபவங்களை பின்னூட்டமிடவும்.