RSS

நெட்ல சுட்டது (part 2)


இது வரைக்கும் 3டி படம்,,லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்,ஹாரி
பாட்டர்,ராமநாராயனனோட அம்மன் க்ராஃபிக்ஸ் கலக்கல்னு எவ்வளாவோ பார்த்திருப்போம்.ஆனா உட்கார்ந்த எடத்துல,ஒரே ஃபோட்டோல ரெண்டு பேர் ஒரு உட்டாலக்கடி வேலை பண்ணியிருக்கானுங்க .


இதுல என்ன பெருசா விசேஷம்ங்கிறீங்களா! லெஃப்டுக்கா கிளைமாக்ஸ்ல வர்ற அஜீத் கணக்கா சும்மா முறைச்சிட்டு இருக்காரா.ரைட்டுக்கா ஒரு அம்மா சின்ன வயசு பண்டரி பாய் மாதிரி சாஃப்டா இருக்குதா...இப்போ அப்டியே ஒரு 12 அடி தள்ளி அதே ஃபோட்டோவைப் பாருங்க...


என்ன தெரியுது?
 
நீங்க நகர்ந்தா அவங்க ஏன் எடத்தை மாத்திக்கிறாங்க பாஸ்!

 

வாரே வா! வாட் எ இங்கிலீஷ்...வாட் எ டெரர்


சில நேரம் ரொம்ம்ம்ப மனசு சரியில்லைனா என்ன பண்றதுன்னே புரியாது,கைல காசு இல்லைனா..,வீட்ல சன்டை போட்டுட்டா..யாராவது திட்டினா மனசு சங்கடமா இருக்கும்.எதுலயுமே கவனம் இருக்காது.ஆனா அதையும் மீறி நம்ம கான்ஸன்ட்ரேஷனை வேற பக்கம் திருப்பினாலும் மூளை கேக்காது. அந்த மாதிரி நேரத்துல என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா இருக்கு.சட்டு புட்டுனு காமெடி பக்கம் தலையை திருப்பிடனும். ஆதித்யா , சிரிப்பொலினு போனாலும் போட்ட ஜோக்கையே போடறாங்களா..கவலையை விடுங்க...தமிழ்நாடு மாதிரி ஒரு புண்ணிய பூமில காமெடிக்கா பஞ்சம்?

அன்னிக்கும் இப்படிதான்..வாடகை குடுத்தது, கரண்ட் பில் கட்டினது, கிரடிட் கார்ட் ஈ.எம்.ஐ,வண்டி லோன்,எல்லாம் போக மூணாம் தேதியே பாங்க் பாலன்ஸ் 5 டிஜிட் ல இருந்து 3 டிஜிட்டுக்கு வந்துடுச்சு. நம்ம தலைவிதியை நொந்துகிட்டே டி.வி. பார்த்துட்டு இருந்தேன்.பளிச்சுனு ஒரு புத்துணர்ச்சி.மன்டைக்குள்ள பல்ப் எரிய அப்படியே கூகுளாண்டவருக்கு ஒரு சலாம் போட்டு யூட்யூபை திறந்தேன். ஒரு அரை மணி நேரம்..நாமெல்லாம் எவ்வளவோ தங்கம்டான்னு தோணிச்சு.எவ்வலவு பெரிய பிரச்சினை வந்தாலும் சமாளிக்கிற தைரியம் வந்தது.அவரோட பேட்டிகள் சாதாரணமானது இல்லைங்க...இவரை மட்டும் ஒண்டியா இலங்கைக்கு அனுப்பியிருந்தா ராஜபக்ஷே பதறியடிச்சுட்டு தனி ஈழம் குடுத்திருப்பார்.இவர் அகிரோ குரசவோ படம் பாத்திருப்பாரான்னு தெரியாது.ஆனா குரசவோ இவர் படம் பார்த்திருந்தார்னா நாமெல்லாம் என்ன படம் எடுக்கறோம்னு ஃபீல் பண்ணியிருப்பார்.சும்மா சொல்லலைங்க.ஸ்பீல்பெர்க் கண்டி இவர் படம் பாத்திருந்தார்னா ஈ.டி எடுத்தப்பவே ஃபீல்ட விட்டு ஓடியிருப்பார். நம்ம ஜனங்க குடுத்து வச்சவங்க...இந்த மாதிரி ஒருத்தர் ரத்தமும் சதையுமா நாம வாழற காலத்துலயே வாழறார்னா..எவ்வளவு பெரிய விஷயம்.

இவர் மட்டும் இல்லைங்க...இவர் பையனும் இவரை போலவேதான்...எனர்ஜி டானிக். அவர் நடிக்கிற படங்கள் எல்லாம் இளைஞர்களுக்கு ஒரு க்ளூக்கோன் - டி. அவர் பாட்டும் டான்ஸும் நடிப்பும்... ஆஸ்கார் ஜூரிங்கள்லாம் திணறப் போறாங்க.

சுய முன்னேற்ற புஸ்தகம் எழுதறவங்க எல்லாம் இந்த ஃபேமிலியை பாருங்கப்பா...

என்ன ரொம்ப சஸ்பன்ஸ் வச்சுக் கொல்றேனா...

அவரு யாரு.... அவருதான் டி.ஆரு!

என்ன டக்குனு சிரிப்பு ராஸ்கல்...! இவர மாதிரி படம் எடுத்தோ பேட்டி கொடுத்தோ உங்களால நொந்து போன மனசுங்களுக்கெல்லாம் பான்ட் எய்ட் போட முடியுமா?

எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் புரியலை..இவனுங்க தன்னைத்தானே புத்திசாலினு நினைசிக்கிறாங்களா.இல்லை நம்மளை முட்டள்னு நினைச்சுகிறாங்களா..

என்னவோ பா...இதெல்லாம் பார்த்தா நம்ம எவ்வளவோ தேவலைனு தோணுது பாத்தீங்களா..அதன் மேட்டரு
 
இது அந்தர் பல்டிடா சாமி....!
 


இந்த பேட்டியை எடுத்த நிருபர் நிலைமையை யோசிச்சுப் பாருங்க...சிரிக்காம கேக்கனும்னா...மவனே நீ தெய்வம் டா!
வாரே வா! வாட் எ இங்கிலீஷ்...வாட் எ டெரர்.
என்னா ஆக் ஷன்...?என்னதான்யா சொல்ல வர்ற...?இதெல்லாம் என்ன சும்மா ட்ரெய்லரு...மெய்ன் பிக்சர் பாக்கனுமா...!


http://www.kuraltvinfo.com/         போங்க   மெர்ஸலாயிடுவீங்க

ஃப்ளாஷ் நியூஸ்:


இவரோட இன்னொரு மகனும் நடிக்க வர்றாராம்...எப்பவாச்சும் பாக்கற ஒன்னு ரெண்டு தமிழ் படத்தையும் பாக்க விடாம பண்ணிருவானுங்க போல...


நெட்ல சுட்டது (பார்ட் 1)நாமெல்லாம் காஃபி குடிச்சுட்டு கிளாஸ் கூட கழுவி வைக்காத பார்ட்டிங்க...ஆனா வெட்டிப் பசங்க ஆறின காஃபியை வச்சிக்கிட்டு என்ன காட்டு காட்டிருக்கானுங்க!


      
          

    


.
விண்டோஸ் 7 இலவசமாக டவுண்லோட் செய்ய..

                                                  என்ன..? ஏழு விண்டோஸ் (ஜன்னல்) ம் பார்த்து டவுண்லோட்பண்ணிட்டீங்களா...இத மாதிரி வேற ஏதாவது சிக்கிச்சுன்னா சொல்றேன்...அப்புறமா பார்க்கலாம்!