RSS

பதிவுலகிற்கு ஒரு நற்செய்தி! வாங்க அரசியல் பண்ணலாம்...யாரு இவனுக....


இவந்தாங்க இந்த மூனு பேர்ல முக்கியமான ஆளு..பேரு பட்டாபட்டி..பேருதான் பட்டாபட்டி..செய்யறதெல்லாம் முறுக்கு விக்கற பட்டாபி மதிரி இருக்கும்...ரொம்ப சொல்ல முடியாது..ஆனா கொஞ்சம் காமெடி பீசு...ப.மு.கனு ஒரு கட்சியோட மாநில தலைவர்,தேசிய தலைவரும் இவந்தான்..எது தொண்டர்களா...சரியான காமெடி சார் நீங்க..ஆனா ஒன்னு....இவன் கட்சியோட மிகப் பெரிய சக்தி இவனோட மகளிர் அணி..தி மு க வே இவன்கிட்ட இருக்கற மகளிர் அணி கூட்டத்தப் பார்த்துட்டு இவனோட கூட்டணி வச்சிறலாமானு யோசிச்சிட்டிருக்குன்ன பார்த்துக்கோங்க..ஒபாமாலருந்து பக்கத்து வீட்டு மாமா வரைக்கும் இவன் வாய்ல விழாதவங்களே கெடயாதுங்க.எதாச்சும் லொடலொடன்னு பேசிக்கிட்டே இருப்பான்..ப்லாக்ல கலர் கலரா எழுதிக்குவான்....இவனோட மைனஸ் பாயின்ட் மூனு ரூவாவும் ஒரு மசாலா பாலும் வாங்கி குடுத்தா..ப மு க வை உங்களோடதுன்னு பொதுக்குழுவ கூட்டி அறிவிச்சிடுவான்..ஆனா மகளிர் அணில இருக்கற ஒரு பொன்னோட மயிர் போனாலும் இவனுக்கு உயிர் போயிரும்..துடிச்சு போயிருவான்..ஒபாமாவே வந்தாலும் தன்னோட மகளிர் அணிக்காக எதிர்த்துப் பொராடுவான் இந்த பட்டபட்டி.. சுருக்கமா சொன்னா..இவன் பக்கா அரசியல்வாதி சார்...

இவன் வெளியூர்காரன்..டிகிரில அரியர் வெச்சுட்டு எத்திராஜ் காலேஜ் வாசல்ல நின்னு ஃபிகர் தும்மிக்கிட்டு இருக்கிற அழகை பார்த்து ஜொள்ளு விட்டு கவிதை எழுதிட்டிருந்தவனை கூட பழகின பாவத்துக்கு பால்கோவா வாங்கித் தர்றேன்னுக் கூட்டிட்டு வந்து தளபதி ஆக்கி வெச்சுருக்கான் இந்த ரெட்டைவால்ஸ்...இப்போதைய ரெட்டைவால்ஸோட ஆட்சில ரெட்டைக்கு எல்லாமே இந்த வெளியூர்கார பயதான்..சுருக்கமா சொன்னா எடுப்பு..இல்ல அல்லக்கை..இவனும் லேசுப்பட்டவன் இல்லைங்க...முழு Knot Taker. புரியல..முடிச்சவிக்கி.தனக்கு பதவி கெடைக்கும்னு தெரிஞ்சா உங்கள புடிச்சு என்கிட்ட வித்துட்டு பட்டாபட்டிகிட்ட காசு வங்கிட்டு போய்ருவான்...இவன கரெக்டா யூஸ் பண்ணா இன்னும் ரெண்டு வருஷத்துல பாகிஸ்தான புடிச்சு பர்மாகிட்ட விக்கிற அளவுக்கு ஃப்ராடு.....ஆன என்ன ரெட்டைகிட்டையும் பட்டாபட்டிகிட்டையும் எதிரா அரசியல் பண்ணத்தெரியாம பண்ணி அடிக்கடி மாட்டிக்குவான்...இன்னொரு முக்கியமான விஷயம் இவன் விஜயோட தீவிர ரசிகன்...சுறாவுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி தர்றேனு யாராச்சும் சொன்னா தளபதி பதவிய அவங்களுக்கு எழுதி குடுத்துட்டு இவன் படத்துக்கு போய்டுவான்.நெறைய சினிமா பைத்தியம்...இவனோட ரொம்ப முக்கியமான வீக் பாயின்ட்..பொன்னுங்ககிட்ட அசிங்கப்பட்டு பல்பு வாங்கறது....பக்கத்து தெருவுல ஒரு பொன்னு என்னா அழகா கொட்டாவி விட்டுட்டுருக்குடானு யாராச்சும் சொன்னா போர்ல இருந்தாலும் துப்பாக்கிய தூக்கி போட்டுட்டு ஓடிப் போய் பராக்கு பார்த்துட்டு நிப்பான் இந்த பன்னாடை..மொத்தத்துல இவனும் அரசியல்வாதி..ஆன தனியா நின்னு அரசியல் பண்ணத் தெரியாத அரசியல்வாதி..இவன் ஒன்னு பட்டாபட்டியோட இருப்பான்..இல்ல ரெட்டைவால்ஸோட இருப்பான்...

இவன் ரெட்டைவால்ஸ்ங்க..அவனுக ரெண்டு பேர்கிட்டயும் இல்லாத ஒரு விஷயம்...இவன்ட்ட இருக்குன்னா அது மூளை...இந்த பய கொஞ்சம் புத்திசாலி..அரசியல்வாதிலயே கொஞ்சம் ஹை கிளாஸ் அரசியல்வாதி.இவனுக்கு ரோடு போடறதுல காசு அடிக்கற டீல் எல்லாம் புடிக்காது...ஒயின் சாப்பிட்டுக்கிட்டே ஏ.சி ரூம்ல வெள்ளைக்கரனோட கையெழுத்துப் போட்டு Cல காசு அடிக்கனும்னு யோசிக்கற கிரிமினல் ..ஆனா இவன்ட்டயும் ஒரு வீக் பாயின்ட் இருக்குங்க..இவன் தூங்கிட்டுருக்கும்போது யாராச்சும் வந்து எழுப்பி என்கூட வா லெமன் ஜூஸ் வாங்கித் தர்றேனு சொன்னா போதும்....எச்ச பக்கி சட்டை கூட போடாம கூடவே போயிரும்..ஆனா அரசியல்ல சூரப்புலி...அதனாலதான் இப்போ இவன் ஆட்சில இருக்கான்..

இவன் வெளியூர்காரன் பட்டபட்டி இவனுக மூனு பேரும் பண்ணப்போற அரசியல் கூத்தைத்தான் இனி ப்லாக் உலகம் பார்க்கப் போவுது...இவனுக மூனு பேர்கிட்டயும் உள்ள ஒத்துமை..மூனு பேருமே மொள்ளமாரிங்க..ஃபர்ஸ்ட் கிளாஸ் முடிச்சவிக்கிங்க...மாறி மாறி கூட்டு சேர்ந்துக்குவானுங்க...திடீர்னு ஒரு டீக்காக எச்ச மாதிரி அடிச்சிக்குவானுங்க....

தெலுங்கானா பிரச்சினைல ஆரம்பிச்சு அஃபிரிடி பந்தை சாப்பிட்டதில இருந்து ராகுல் காந்தி பார்லிமெண்ட்ல உளறிகொட்டறது வரைக்கும் எல்லாமே இவனுகளுக்கு ஜாலிதான். இங்க நடக்கப் போற WWFல இப்போதைக்கு மன்னர் ரெட்டைவால்ஸ். கொஞ்ச நாளைக்கு முன்னால பட்டாபட்டியை சதி பண்ணி மகளிர் அணிக்கு மட்டும் தலைவராக்கிட்டு ப.மு.க வை எழுதி வாங்கிட்டானுங்க வெளியூர்காரனும் ரெட்டைவால்ஸும்.மன்னர் ரெட்டைவால்ஸோட ராணுவ தளபதியா இருக்கான் வெளியூர்காரன்.( இளைய தளபதி மாதிரி இருக்குன்னு அவனே கேட்டு வாங்கிக்கிட்ட போஸ்டிங் இந்த ராணுவ தளபதி). இந்த மூனு அயோக்கியப் பயலுவ பண்ற அரசியல் கூத்தைத்தான் இனிமே பார்க்க போறீங்க.

அப்புறம்...ஃபாண்டசி காமெடி பிடிக்காதவங்க இந்த இடத்தை ஃபிரீயா விடுங்க...வேற எங்கயாவது போய்ட்டு உங்க பேரப் புள்ளைங்களை இங்க அனுப்பி விட்ருங்க.

பின்னூட்டம்ங்கற பேர்ல நீங்க என்ன வேணுமனாலும் எழுதலாம் (இவனுங்களே பதிவை விட பின்னூட்டம் தான் அதிகமா எழுதுவானுங்க ) நீங்களும் அரசியல் பண்ணலாம்.

இனி புது கூட்டணிகள் உருவாகலாம் புது கட்சிகள் உருவாகலாம் ... ஏன் இந்த மூனு பேருமே இல்லாம போகலாம் ...ஆனா இந்த அரசியல் தீ அணையாது!

இப்படிக்கு

கொளுத்திப் போட்ட நிம்மதியுடன்

இந்திய தேசத்தின் நிரந்தர மன்னர்

சர். டாக்டர்.ரெட்டைவால்ஸ்

(சர் மற்றும் டாக்டர் பட்டங்கள் சென்னை பல்கலைக் கழகங்களில் சகாய விலையில் கிடைக்கின்றன... தள்ளுபடி ஸ்டாக் உள்ளவரை மட்டுமே)
 1. பட்டாபட்டி..

  Friday, February 05, 2010

  மன்னா .. சலாமு...
  நாமும் எவ்வளவு நாள , ஏதாவது அவார்ட் கொடுப்பானுகானு வெயிட்
  பண்றது.. எந்த நாதாரியும் கொடுக்கற மாறியில்லை..

  உடுங்க மன்னா..
  உங்களுக்கு ஒரு "ஜக்குபாய் அவார்டு.."
  வெளியூரானுக்கு "ஜொள்ளின் செல்வன் "
  எனக்கு "பூவையர் காவலன் " அவார்ட் செய்யசொல்லி
  மன்னாருகிட்ட சொல்லியிருக்கேன்...

  அவனுக்கும் ஒரு அவார்ட் கொடுத்தா ,
  டீ-கடையில, நம்ம போட்டோ பக்கத்தில, மாட்டி
  பிஸ்னஸ்ச பிகப அப் பண்ணிக்குவேனு ஒரே அழுகை..

  மன்னா.. கஜானாவில இருந்து ஒரு தங்ககட்டிய கூரியர்ல அனுப்பிங்க...
  காசு கொடுத்தா தான், டெலிவரி பண்ணுவேனு அலட்டரானுகோ...

  சே..சே..இதுக்குப்போயி , தளபதியெல்லாம் வேண்டாம் மன்னா..
  அவரு லிப்டுல ஏறி , இறங்கி டயர்டாயிருக்குனு நேத்து எனக்கு SMS அனுப்பியிருந்தார்...

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  வெளியூர்காரன் இன்ட்ரோ:-
  நாங்க மூணு பேரு..எங்களுக்கு பயமே கெடயாது..(ஆமாம் சார்...காரணம் இல்லாம நாங்க என் பயப்படனும்...)...அதே மாதிரி சூடு சொரணையும் கெடயாது...இதுக்கு மேல நீங்க படிக்க உங்களுக்கு அனுமதியும் கெடயாது...இது மன்னர் உத்தரவு...வெளியூர்க்காரன்...ராணுவ தளபதி...இந்திய ராணுவம்..

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  மன்னா நான் அப்பவே சொன்னேன்..இந்த பட்டாபட்டிக்கு பாயசத்துல பாய்சன் வெச்சு சோலிய முடிச்சர்லாம்னு..இப்ப பாருங்க, கேப் விடாம நொய்யா நொயான்னு பேசி பேசி காலிலேயே மூட் அவுட் பண்றான்..பேசாம இவனோட மகளிர் அணிய கலைச்சிட்டு அந்த பிகருங்கள இந்திய ராணுவத்துல சேர்த்துடுங்க மன்னரே...பசங்க எக்ஸ்சர்சைஸ் பண்றது பார்த்து போர் அடிக்குது...!

 1. பட்டாபட்டி..

  Friday, February 05, 2010

  யோவ்.. கேப்புல பூந்து தலைவர் பதவிய பறிச்சிட்ட..
  சரி.. ஏதோ மகளிர் அணியிருக்கேனு நான் அமைதியாயிருந்தேன்..

  ங்கொய்யா.. அதுக்கும் அப்பு வெக்க பார்த்த , நான் மனுசன இருக்கமாட்டேண்டி செல்லம்..

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 05, 2010

  யோவ் தளபதி...போய் பாகிஸ்தானோட பேச்சுவார்த்தை நடத்துயான்னா..இந்த பட்டாபட்டியோட உக்காந்து மக்ளிர் அணிக்கு பிட் போட்டுட்டு இருக்கியா...ஏற்கெனெவே நம்மை நாட்டை சுத்தி நல்லவனுகளா இருக்கானுங்க..போ..போய் நாட்டை கவனி...மகளிர் அணிக்குதான் நாங்க இருக்கம்ல...ஹி ஹி

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  @ரெட்டைவால் ' ஸ் said...//போ..போய் நாட்டை கவனி...மகளிர் அணிக்குதான் நாங்க இருக்கம்ல...ஹி ஹி..///
  உத்தரவு மன்னா.மகளிர் அணி உமக்கே....(ஆனா, அந்த மகளிர் அணில, ஊதா கலர் சுடிதார் போட்ருகர கல்பனாங்கர பிகர மட்டும் எனக்கு உஷார் பண்ணி குடுத்தீங்கன்னா..அடுத்த வருஷம் பாகிஸ்தான் நம்மலோடத இருக்கும்...அத நான் பார்த்துக்கறேன்..இந்த பட்டாபட்டிகிட்ட கேட்டா அந்த பிகரோட செருப்ப கூட குடுக்கமாட்றான் மன்னா.பார்த்து எதாச்சும் செய்ங்க...!!..)

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 05, 2010

  பட்டாபட்டி ஒரு வெத்துத் தீப்பெட்டி ... கல்பனாவா இருந்தாலும் சரி பல் போன கிழவியா இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் மன்னரின் சொத்து என்பதை நினைவில் கொள்க... ஊதா கலருக்கே பாகிஸ்தானை பிடிச்சுடுவன்னா உனக்கு மட்டும் ரீமா சென்னை குடுத்தா நீ எங்கெல்லாம் புடிப்ப...சாரி...என்னவெல்லாம் புடிப்ப...

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  @ரெட்டைவால் ' ஸ் said...//ஊதா கலருக்கே பாகிஸ்தானை பிடிச்சுடுவன்னா உனக்கு மட்டும் ரீமா சென்னை குடுத்தா நீ எங்கெல்லாம் புடிப்ப...சாரி...என்னவெல்லாம் புடிப்ப...//
  மன்னரோட வார்த்தைகள் ரொம்ப ரோலிங் ஆகி வெண்ணிற ஆடை மூர்த்தியை நினைவுபடுத்துவதை மக்கள் கவனித்து கொண்டிரிகிறார்கள் என்பதை மன்னருக்கு நினைவுபடுத்த கடமைபட்டிருக்கிறேன்...(ரீமா சென் கெடைச்சா நான் ஏன்டா நாயே உன்ட்ட வேலை பார்க்கறேன்...இந்நேரம் திருத்துரைபூண்டில ரெண்டு ஏக்கர் நிலத்த வாங்கிட்டு., ரீமாவ கூட்டிட்டு போய் வெவசாயம் பண்ணி போளைசுக்குவேண்டா..)

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 05, 2010

  ரீமா சென் கிடைச்சாலும் நீ விவசாயம் தான் பார்ப்பேங்கறதனால தான் நீ இன்னும் தளபதியா இருக்க... பட்டாபட்டியை பார்! அவன் இன்னிக்கு டேட்டிங் போன கெழவிக்கு 58 வயசு..ரிட்டயர்மென்ட் டே அன்னிக்கு டேட்டிங் போன ஒரே ஃபிகர் பட்டாபட்டி ஃபிகர் தான்

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  @ரெட்டைவால் ' ஸ் said..ரீமா சென் கிடைச்சாலும் நீ விவசாயம் தான் பார்ப்பேங்கறதனால தான் நீ இன்னும் தளபதியா இருக்க...///.
  அட ஆமாம்..வடை போச்சே...கூட்டத்துல அசிங்கப்பட்டமே.!...விடாம மெய்ண்டைன் பண்றா வெளியூர்காரா...மாமன்னர் வாழ்க...மாமன்னரின் மாமா வாழ்க..ஜெய் ஹிந்த்...இது சற்று முன் வந்த தகவல்...பட்டாபட்டியார் தவற நடந்துக்கிட்டதா அந்த பாட்டி ராயபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்துருக்கு மன்னா....அந்த ஸ்டேஷன் வாசல்ல பட்டாப்பட்டி இன்னிக்கு காலைல புதுசா போட்டு போன பட்டாப்பட்டி கிழிந்த நிலையில் கிடப்பதாகவும் ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...தங்கள் தலையிட்டால் மட்டுமே அவரையும் அவருடைய .... மீட்க முடியும் எனவும் இல்லையேல் எல்லாமே போலீஸ் அடிக்கற அடியில் உருக்குலைந்து போய்விடும் எனவும் ப மு க மகளிர் அணி தலைவி அந்த குண்டு மூக்கி உங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்...

 1. பட்டாபட்டி..

  Friday, February 05, 2010

  ( சே.. ராணுவத் தளபதி இவ்வளவு மங்கா இருக்குமுனு தெரியாம போச்சே..
  பட்டாபட்டியப் போட்டவனெல்லாம் பட்டபட்டி-னு நினச்சுட்டு இருக்கு..)

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  @பட்டாபட்டி.. said.பட்டாபட்டியப் போட்டவனெல்லாம் பட்டபட்டி-னு நினச்சுட்டு இருக்கு..//
  அய்யோயோ மன்னா...தப்பு நடந்து போச்சு...ராயபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல நாம பொய் கேஸ்ல உள்ள தூக்கி உதைக்க சொன்ன ஆள் பட்டாப்பட்டி இல்லையாம்..பட்டாபட்டி இங்க இருக்கான்..அதே அழுக்கு பட்டாபட்டியோட.இப்ப என்ன பண்ணட்டும்..அந்த கெளவிய என்ன பண்றது....???

 1. பட்டாபட்டி..

  Friday, February 05, 2010

  வெச்சுட்டு என்னையா பண்ணப் போற.. தூக்கி கடாசு.. தொலையட்டும் கிள்வி

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 05, 2010

  அந்தப்புர கிழவிகள்ல ...சாரி அழகிகள்ல ஒண்ணா இருந்துட்டு போகட்டும்...இந்த பட்டாபட்டியை உடனே ரிலீஸ் பண்ணிடுங்க..இல்லாட்டி பக்கி அனுதாப அலை தேடிக்கும்

 1. பட்டாபட்டி..

  Friday, February 05, 2010

  மன்னா.. உங்களுக்கு போய் உள்குத்து வேலை செய்வேனா?..
  உடனே அந்த கிழவியை... உங்களுடனே வைத்துக்கொள்ளவும்..
  மேலும் எனது மச்சான் "துணை மன்னராக" ஆசைபடுகிறான்..

  வெளியூரு உங்களுக்கு ரெக்கமண்டேஷ்சன் லெட்டர் அனுப்புவதாக உறுது அளித்துள்ளார்.
  என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  யோவ் பட்டாப்பட்டி..நான் லெட்டர் குடுத்தால்லாம் ரெட்டை மதிக்கமட்டான்யா..அந்த கேளவிகிட்ட சொல்லி சொல்ல சொல்லு..லெமன் ஜூஸ் வாங்கி தரேன்னு..எருமை உடனே பதவிய தூக்கி குடுத்துரும் உன் மச்சானுக்கு...!!!

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 05, 2010

  லெமன் ஜூஸா..பட்டாபட்டி..உன் மச்சான் என்ன உன் தாத்தாவைக் கூட்டி வா...ராஜ குரு பதவி ஒன்று தர சொல்கிறேன்...

 1. பட்டாபட்டி..

  Friday, February 05, 2010

  என்ன மன்னா..மதியம் ஆபிஸ்ல தூங்கலையா...

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 05, 2010

  யாரங்கே...இந்த பட்டாபட்டிக்கு முதுகில் புலிப் படம் வரைந்து படகிலேற்றி பார்த்திபனிடம் அனுப்புங்கள்...ரொம்ப பேசுகிறான் (போய் அவனுங்களையாவது கூட்டிட்டு வா! அங்க போய் காட்டுவாசி ஃபிகருங்க கிட்ட ஜொள்ளு விட்டுத் திரியாத!)

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  ரெட்டைவால் ' ஸ் said...//
  மன்னா இவன நம்பி அங்க அனுப்பாதீங்க..அதும் ஆண்ட்ரியா மாதிரி ஒரு அழகு ஆண்ட்டிய இவன்கூட அனுப்பறத தேச நலனை முன்னிட்டு வன்மையா கண்டிக்கிறான் இந்த வெளியூர்காரன்..இவன் பேச்சு தாங்காம பார்த்திபன் இவன வாயிலையே கடிச்சு வெச்சிடுவான்..அப்றம் இவன் வேஷம் அங்க பாய்ஞ்சு ராஜா ராஜா சோழன் இனமே இல்லாம போய்டும்..அந்த நல்லேன்னதுலதான் மன்னா சொல்றேன்..வேண்ணா ஆண்ட்ரியா, ரீமா சென்னோட பிரதாப் போத்தன கண்டுபுடிக்க நான் போயிட்டு வர்றேன்..எனக்கு ஒரு ஒரு மாசம் மெடிக்கல் லீவ் சேலரியோட குடுங்க.உங்க உத்தரவுக்காக காத்திருக்கிறேன்....

 1. பட்டாபட்டி..

  Friday, February 05, 2010

  இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
  வெளியூருக்கு மட்டும் சம்பளத்தோட லீவு கொடுத்த, அப்புறம்
  மன்னருனு கூட பாக்க மாட்டான் இந்த பட்டாபட்டி...
  போட்டு தள்ளிட்டு போயிட்டேயிருப்பேன் நம்ம ஆண்ர்ரியா கூட ..

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  பட்டாபட்டி.. said..போட்டு தள்ளிட்டு போயிட்டேயிருப்பேன் நம்ம ஆண்ர்ரியா கூட ...///
  யோவ் பட்டாபி...மன்னர போட்டு தள்றத பத்தி எந்த ஆட்சேபனையும் இல்ல...நான் வேணா பிளான் போட்டு தர்றேன்..ஆனா,ஆண்ட்ரியா மேல ஒரு சின்ன கீறல் விழுந்துச்சு தக்காளி க்ளோஸ் பண்ணிபுடுவண்டி க்ளோசு...

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 05, 2010

  ஆண்ட்ரியாவும் ரீமா சென்னும் வர்றாங்கன்னு நான் சொல்லவே இல்லையேடா பாவிங்களா..நான் ஹின்ட் தானடா குடுத்தேன் அதுக்குள்ள ராஜ ராஜ சோழன் வரைக்கும் போய்ட்டீங்களேடா...ஆண்ட்ரியாவும் ரீமா வும் இனி அந்தப்புரத்திலேயே சேவை செய்வார்கள்..உங்களுக்குத் துணையாக அந்த கெழவியை அனுப்புமாறு உத்தரவிடுகிறேன்,

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  ரெட்டைவால் ' ஸ் said...//
  கெளவிய பட்டாபிகிட்டயே குடுத்துருங்க மன்னரே..நான் போய் உடற்பயற்சி செய்றேன்.ரொம்ப நாள் ஆச்சு...(தளபதிக்கு கிட்னி பெய்லியர்னு என் ராணுவத்துல புரளிய கெளப்பி விட்டுட்டு இருக்கானுக சில மொள்ளமாரிங்க...போய் அவனுகள வேற கவனிக்கணும்...)

 1. ரோஸ்விக்

  Friday, February 05, 2010

  கலக்குங்க மன்னா... உங்க ஆட்டம் பெரிய ஆட்டமா இருக்கு... நான் அப்படி ஓரமா உக்காந்து வேடிக்கை பாக்குறேன். ஒரு நாள் உங்க அமைச்சரவையில் வந்து சந்திக்கிறேன். :-)

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  ரோஸ்விக் said...///
  யோவ் ரோசு..சட்ட அமைச்சரா லட்சணமா எனக்கு எதாச்சும் ஐடியா குடுயா...இவனுக ரெண்டு பேரையும் போட்டு தள்ளிட்டு நான் ஆட்சிய புடிக்கறதுக்கு..எவ்ளோ நாளா ராணுவத்துல பரேடையே பார்த்து நூடுல்ஸ் ஆகறது...எதாச்சும் ஆட்டைய கலைக்க ஐடியா கொடும் ஒய்...!..உம்ம ஜனாதிபதி ஆக்கறேன்....!

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, February 05, 2010

  பட்டாபட்டியை எங்க அனுப்புனாலும் பயமா இருக்கு...விலங்குகள் கிட்ட விட்டா மேனகா காந்தியை ஏழரை இழுத்துட்டு வந்துடுவானோன்னு ஒரு சின்ன கிலி. நடிகைகள் கிட்ட இருந்து மக்களை காப்பாத்தற வாரியம்னு வேணா ஒன்னு அமைக்கலாம்..அதுக்கும் நான் தான் தலைவர்னு பட்டாபட்டி சண்டைக்கு வந்துடுவான்.

  சட்ட அமைச்சர் டயர்டாகி ஓரமா சாய்ஞ்சிட்டாரு..

  தளபதிக்கு ஆர்மியை தவிர மத்த எல்லாமே கண்ணுல படுது.//( பேசாம எல்லாவனையும் தூக்கி உள்ள போட்றலாமா...அப்படிப் போட்டா நாட்டுல சட்டம் ஒழுங்கு நல்லாயிடும்..நம்ம ஆட்சி பண்ண முடியாது. ஷ்ஷ்ஷ்ஷூஷுஷு........இவனுங்களை வச்சி அரசாங்கம் நடத்த முடியாது போலயே

 1. வெளியூர்க்காரன்

  Friday, February 05, 2010

  ரெட்டைவால் ' ஸ் said.அப்படிப் போட்டா நாட்டுல சட்டம் ஒழுங்கு நல்லாயிடும்..நம்ம ஆட்சி பண்ண முடியாது. ஷ்ஷ்ஷ்ஷூஷுஷு...இவனுங்களை வச்சி அரசாங்கம் நடத்த முடியாது போலயே..//
  Haa..Haa..Good one buddy... :)

 1. ILLUMINATI

  Sunday, February 07, 2010

  தல...நீங்க சொன்ன மாதிரி அந்த ‘நாத்தம் புடிச்ச ‘ ப்ளாக் போனேன்.கமெண்ட் போஸ்ட் பண்ணவே முடியலையே.....
  ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க மன்னரே....

 1. ILLUMINATI

  Sunday, February 07, 2010

  கொள்ள கமெண்ட் இருக்கு வெளியூருக்கு...நீங்க ஒண்ணும் பயந்துட வேணாம்....எல்லாம் கிண்டல் பண்ணி தான்......

 1. ILLUMINATI

  Sunday, February 07, 2010

  மன்னரவர்களின் உத்தரவிற்கு இணங்க template மாற்றப்பட்டு விட்டது.
  //யாரங்கே..! இவனுக்கு கொஞ்ச நேரம் மெகா டி.வி.யும் வசந்த் டி.வி.யும் அப்புறம் ரொம்ப நேரம் மக்கள் டி.வி.யும் காட்டு!//
  அப்டியே கொஞ்ச நேரம் பொதிகை டிவியும் காட்ட சொல்லுங்க...சத்தமில்லாம கொல்ல அது தான் சிறந்த வழி....

  // சே! ஒரு ஃப்ளோ ல என்னவெல்லாம் வருது//
  மன்னரே!கள்ள சாராயம் அடித்தால் அப்டி தான் நாக்கு கண்டது கழுதைய எல்லாம் உளரும்னு கேள்வி பட்டு இருக்கேன்.இப்போ தான் பாக்குறேன்...

  //நம் கூட்டம் அரை கிளாஸ் எச்ச பீருக்காக ஆளையே தூக்கும் கூட்டம் என்று அந்த சதி காரருக்குப் புரிய வில்லை//
  ஆகா!என்ன ஒரு உயர்ந்த கொள்கை?கட்சி கொள்கையே இது தானா?இல்ல வேற முத்தான கொள்கைகள் எல்லாம் இருக்கா?

 1. ரெட்டைவால் ' ஸ்

  Monday, February 08, 2010

  ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்த உத்தேசித்திருக்கும்போது எவனவன் கொள்கைகளைப் பற்றிக் கேட்பது...? இல்லுமினாட்டி நீயா? சரி கேட்டுக்கொள்!

  முதலில் மன்னராட்சி என்பதை நினைவில் கொள்ளவும்.

  இந்த நாதாரிகளை கஷ்டப்பட்டு கண்காணித்து கண்ட கருமத்தையும் அனுசரித்து நான் இன்னும் மன்னராக இருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ளவும்

  எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் எங்களை வளர்த்துக் கொள்ளவே என்பதையும் நினைவில் கொள்ளவும்.


  அரசாங்க தண்டனைகள்


  முதலில் ரைட்டு! மீ த ஃபர்ஸ்ட்டு ! ஓட்டு போட்டாச்சு என்ற ஃபார்மாலிட்டி செய்கிறவர்களுக்கு சிம்பு படம் காண்பிக்கப்படும்.

  அவ்வ்வ்வ் என்று பின்னூட்டமிடுபவர்களுக்கு வேட்டைக்காரனும் அசலும் விளம்பர இடைவேளை இல்லாமல் காண்பிக்கப்படும்.

  இந்த மாதிரி கொள்கை என்ன என்று கேட்பவர்களுக்கு (இல்லுமினாட்டி நீதான்!) "வீராசாமி" தனியாக காண்பிக்கப்படும்

 1. பட்டாபட்டி..

  Monday, February 08, 2010

  I am Back-க்கு எனத் தெரிவித்துக் கொள்கிறான்
  இந்த பட்டாபட்டி...

  சொல்லாமா போனத்துக்கு பதவிய பறிச்சே , அப்புறம்
  நான் மனிதனாக இருக்கமாட்டேன் என இந்த நேரத்தில்
  நினைவுப்படுதுகிறான் இந்த பட்டாபட்டி

 1. ILLUMINATI

  Tuesday, February 09, 2010

  நான் தூத்துக்குடிகாரன்யா.இப்போ சென்னைல தான் இருக்கேன்.இந்த சலம்பலு அங்க இருந்து வந்தது தான்.

  //அதே மாதிரி நம்ம பயலையும் உள்ள புடிச்சுப் போட்ருவோம் என்ன சொல்லுத?//

  இதை நான் வழிமொழிகிறேன்.அட்லீஸ்ட் பதினாலாம் தேதி மட்டுமாவது அந்த பன்னாடைய உள்ள தூக்கி போடும் மன்னரே.....
  கழுத,பிகுரே இல்லாம அது பண்ற அலும்பு தாங்கல...

Post a Comment