வெத்து டோமர்,வேகாத டாபர் என்றெல்லாம் பொது மக்கள் அன்புடன் அழைப்பது யாரை?எல்லா ஃபிகர்களும் ரசிப்பதற்கே என்று டயலாக் விடும் ஆஸ்கார் நாயகன் யார்? விஜய் படம் வந்தாலும் அஜித் படம் வந்தாலும் விமர்சனம் செய்து சகட்டுமேனிக்கு அடி வாங்குவது யார்?கோரஸாக நீங்கள் கத்துவது கேட்கிறது...
இவருடைய பதிவுகளை படித்து விட்டு இப்படியொரு பீஸை நாங்கள் கண்டதில்லை என மரியா ஷரபோவாக்களும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்களும் ஏன் வியாசர்பாடி முட்டு சந்தில் இட்லி விற்கும் ஆயாக்களும் கூட இனி எங்கள் ச்சோ ச்வீட் லவ்வர் பாய் வெளியூர்காரன் தான் என்று சத்தியம் செய்துள்ளனர்
களைப்பில் இருந்த மாவீரன் வெளியூர்காரனை பேட்டி எடுக்கலாமானு கேட்டேன். டைம்ஸ் பத்திரிக்கை கேட்டும் மறுத்த வெளியூர்காரன் (ச்ச..என்ன கருமம் டா!) ரெட்டைவால்ஸுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
( நானும் எல்லா பேட்டிகள்லையும் பார்த்திருக்கேன்..முழு பகுதியை எங்க காயலான் கடைக்குப் போட்ருவானுங்களா)...சரி ஓகே..ஒவர் டூ வெளியூர்!
ரெட்டைவால்ஸ் : "வெளியூர்காரன்"ற பேர்ல எழுதுறீங்களே..இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?
வெளியூர்காரன் :நான் முத முதல்ல மெட்ராஸ் வந்தப்போ எங்க போனாலும் வெளியூர்காரனா நீ?னு கேட்டு டார்ச்சர் பண்ணானுங்க. இதையே ஏன் புனை பெயரா வச்சுக்கக் கூடாதுன்னு யோசிச்சேன்.
ரெ.வா:எங்க எல்லாம் இந்த மாதிரி பல்ப் வாங்கினீங்க?
வெ.கா:டீ கடைல, துணிக்கடைல, தியேட்டர்ல அப்புறம் நான் போன எல்லா எடத்திலயும்! பய புள்ளைக பார்த்தவுடனே கண்டுபுடிச்சிடறானுங்க.
ரெ.வா: ரொம்ப நல்லது! எழுதணும்னு உங்களை யார் கட்டாயப் படுத்தினா?
வெ.கா: சுஜாதா இறந்தப்போ ரொம்ப கஷ்டமாயிருந்தது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்பப் போறான்னு யோசிச்சப்போ சட்டுனு இந்த முடிவெடுத்துட்டேன்.
ரெ.வா:இதனால மக்கள் பாதிக்கப்படுவாங்கங்கறதை நீங்க யோசிச்சுப் பார்க்கலையா?
வெ.கா:அவனவன் அசல் படம் பாக்கறதுக்கு லைன் கட்டி நிக்கிறான்..நான் என்ன அப்படியா சாவடிச்சுடப் போறேன்!
ரெ.வா: சரி வெளியூர்காரன் உங்க பார்வைல தமிழ் சமூகம் எப்படி இருக்கு?
வெ.கா: வெளங்காது
ரெ.வா: என்னது வெளங்காதா?
வெ.கா:ரொம்ப கஷ்டம் சார்!(பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்குகிறது....) ஃபிரண்ட்ஸ் கிட்ட பெட் கட்டினேன் சார்.. வேட்டைக்காரன் படம் 200 நாள் ஓடப் போவுது... தலைவர் அரசியல்ல கலக்கப் போறார்..பார்லிமெண்ட்ல பஞ்ச் டயலாக் பேசுவார்..அதைக் கேட்டு சோனியா காந்தியே பயப்படுவாங்கன்னு என்னென்னமோ கனவு கண்டேன் ..எல்லாம் பாழாப் போயிடுச்சு! நேத்து கூட ஒருத்தன் ஃபோன் பண்ணான். மாப்ள..போண்டா மணி ரசிகர் மன்றம் திறக்கறாங்களாம்.தலைவர் பதவி எடுத்துக்கிறியான்னு நக்கல் பண்ணான் சார். ஆனா நாங்க அசர மாட்டோம். சுறாவை விட்டு எல்லாரையும் கடிக்கலைன்னா பாருங்க...தலைவரை கிண்டல் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பியே என்னை நோகடிக்கிறானுங்க... இந்த தமிழ் சமூகம் உருப்படுமா சார் நீங்களே சொல்லுங்க!
இளைய தளபதி வாழ்க
இளைய தளபதி தகப்பனார் வாழ்க..சாரி சார் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்!
ரெ.வா: நீங்க நிறைய சினிமா விமர்சனம் பண்றீங்களே.. அடூர் கோபால கிருஷ்ணன் மதுர் பண்டார்கர் படங்களை பத்தியெல்லாம் ஏன் எழுத மாட்றீங்க?
வெ.கா : பண்டார்கரா..எதுனா புது டைப் பிரியாணிங்களா! ஏன்யா யோவ்..வேட்டைக்காரன் பாக்குற முட்டாப் பயகிட்ட பேரலல் சினிமா..அவார்ட் சினிமான்னு உளறிட்டு இருக்க...நாங்க எல்லாம் ஒரு தடவை முடிவு பண்ணோம்னா.. எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் யா..
இளைய தளபதி வாழ்க
சஞ்சய் வாழ்க சந்திரசேகர் வாழ்க சங்கீதா வாழ்க...
சாரி சார் மறுபடி எமோஷனல் ஆயிட்டேன்...
ரெ.வா : ஏன் இவ்வளோ எமொஷன் ஆவுறீங்க!
வெ.கா : அது அப்படி தாங்க. தலைவரை பத்தி பேசும் போது யூரின் வந்துடுது..வாமிட்டிங் வந்துடுது..பிளட் பிரஷர் ஏறுது..(மனசுக்குள்... சுறாவாவது ஓடுமா...) நீங்க அடுத்த கேள்வியை கேளுங்க சார்
ரெ.வா: ரீமேக் படங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
வெ.கா : ரொம்ப நல்ல விஷயம். வெறும் டைட்டில மட்டும் சுட்டு என்ன பிரயோஜனம்? கதையோட அல்லேக்கா தூக்கினாதான எடுபடும்! இவனுங்களுக்கு பிரஸண்டேஷன் வரலை.. ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க என்ற அதி முக்கியமான கேள்வியை நீங்க இன்னும் கேக்கலைங்கறதை நினைவு படுத்த விரும்புறேன் ரெட்டைவால்ஸ்!
தளபதி வாழ்க.
ஸாரி பா...மறுக்கா டென்ஷன் ஆயிட்டேன்...
ரெ.வா :சரி சொல்லுங்க ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க?
(சோனா ஏன் ஆஸ்திரேலியா போனங்க என்பது பற்றியும்,,மேலும் பதிவுலகம், தமிழக அரசியல் , 2011 ல் யார் முதல்வர், தான் ஒரு லவ்வர் பாய் ஆனது பற்றியும் மனம் (மற்றும் கண்டதையும் )திறந்த வெளியூர்காரனின் பதில்கள் ...அடுத்த பதிவில்!)
About Me
Archives
-
▼
2010
(38)
-
▼
February
(12)
- சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!
- Repair almost Anything
- வெளியூர்காரனிடம் ஒரு அசல் பேட்டி!
- தனிமையுடன் ஒரு தனிமை
- அகல்யாவுக்கு- A Letter from Constant Lover
- My name is Khan & கலைஞரின் பன்ச் சாங்
- கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Fut...
- பதிவுலகிற்கு ஒரு நற்செய்தி! வாங்க அரசியல் பண்ணலாம்...
- ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்
- ரெட்டைவால்ஸின் பிரஸ் மீட்.
- ப.மு.க தலைவர் பட்டாபட்டி கைது.
- வெளியூர்காரனும் வெத்து ஃபிகருங்களும்
-
▼
February
(12)
Linkbar
My Blog List
-
Man Of Steel - சமீப காலமாய் சூப்பர் ஹீரோ படங்களை பார்ப்பதற்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் தான் சூப்பர் ஹீரோ என்ற விஷயத்தை மீறி...7 hours ago
-
The Kalam Effect - P.M.Nair - வேலையை ராஜினாமா செய்பவர்கள், தங்கள் நிறுவனத்தை பிடிக்காமல் விடுவதில்லை. தங்கள் மேலாளருடனான பிரச்னைகளினாலேயே வேலையை விடுகிறார்கள் என்று பொதுவாக சொல்வார்கள்....9 hours ago
-
தீயா வேலை செய்யனும் குமாரு/பான்மசாலா/விழிப்புணர்வு/ இந்தியா/உலகசினிமா/ - ஹாலிவுட் சூழலில் படம் எடுத்து தமிழில் கலக்குபவர் சுந்தர்.சி. அவர் இயக்கிய இந்தியன் படத்திற்கு பிறகு நான் எந்த பட்த்தையும் தியேட்டருக்கு போய் பார்ப்பதில்ல...18 hours ago
-
சூது கவ்வும்: அபத்த நகைச்சுவையும் திரைக்கதை நுணுக்கங்களும் - தமிழில் இருவகையான நல்ல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஒன்று எந்த சினிமா மொழி ஆளுமையோ கலையுணர்வோ இல்லாதவர்களால் வாழ்வில் ஒருமுறை எடுக்கப்படுபவை. இன்னொன்று பு...21 hours ago
-
Listen Ambikapathy (Raanjhanaa Tamil) songs - Listen Ambikapathy all 9 songs @ Dhingana . Buy Audio CD @ 86 only Infibeam.com1 day ago
-
மீண்டு மீண்டும் வா! - அண்ணன் @mayavarathaan இன்று ஒரு அருமையான வெண்பாம் எழுதினார். வள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் வெண்பாம் இது. முதலில் வெண்பாமை...3 days ago
-
South of the border, West of the sun - மழையோடு வரும் மங்கை….. - [image: south of border] இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஹஜிமேவுக்கு தன் இளவயதில் நிராசையாகிப் போன கனவு மத்திமவயதில் நிறைவேறும் வாய்ப்பு கிடைக்கிறத...3 days ago
-
நல்லதா நாலு வார்த்தை.... - 9 - ‘அப்படியொன்றும் அவதியல்ல வாழ்க்கை, அதிலிருந்தொரு கவிதை வெளிவருகையில்.’ . - A. L. Rowse (‘Life isn’t all misery when out of it comes poetry.’) * ‘வெல...3 days ago
-
எஸ்.ராஜகோபாலன் - எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் வியாழன் நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூ...4 days ago
-
பகல் உறவுகள் - ஜெயந்தன் - காலை மணி ஒன்பது.கதவைப் பூட்டிக்கொண்டு அவர்கள் இருவரும் தெருவில்இறங்கினார்கள்.அந்தக் கனம் அவர்கள் இருவருக்குமிடையேயுள்ள அந்த ஒப்பந்தம் அமலுக்குவந்தது. அது...1 week ago
-
பதினைந்து வயதினிலே..! - நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, வெங்கிடேசன் என்கிற சக மாணவன் சதா சிகரெட் பிடிப்பான்; வகுப்புக்கு ஒழுங்காக வரமாட்டான். பல ஆசிரியர்களும் அவனைக் கண்டித்த...1 week ago
-
ஜாஸ் மெய்னார் - *எந்த *அறிமுகமும் எதிர்பார்ப்பும் இல்லாது பக்கங்களை புரட்ட ஆரம்பிக்கும் காமிக்ஸானது கதை ஆரம்பித்த நான்கு பக்கங்களில் தீப்பற்றும் வேகம் பிடிப்பது என்பது அர...1 week ago
-
அவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன் - அவளின் அப்பா இறந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிப்போயிருந்தது. அந்த டியூசன் வகுப்பில் நாங்கள் இணைந்து ஆறு மாதங்கள் ஆகியிருப்பினும், ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்ப...1 week ago
-
Make way to the prince of Rap: Kendrick Lamar - ராப் இசை என்பது, வெறும் fuck – bitch – போன்ற வார்த்தைகள் நிரம்பியது, துள்ளல் இசை – அவ்வளவே, அமெரிக்க இசைக்கு இவ்ளோ அர்பாட்டமா, இத்யாதிகள்…… என்ற கற்பிதம் உ...2 weeks ago
-
மொண்ணைகளைப்பற்றி கூர்மையின் பார்வை - Love Meter! calculate your relationship success percentage. SMS FLM (Your Name) (Space) (Partners Name) to 56060 eg: FLM Jeyamohini Arivalagan. Rs 3 per SM...3 weeks ago
-
சுழலும் கேள்விகளும் பதில்களும் - நீங்கள் யார் நான் யாரோ யாரோ என்றால் யாரோ என்றால் யாரோதான் சரிதான் தெரியாத ஒன்று உங்களுக்கு எப்படித் தெரியும் தெரிந்தால் வந்து சொல்கிறேன் ஆம...4 weeks ago
-
அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ? - இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு "சிந்தனை செய் மனமே " என்னும் தொடர் நிகழ்வை திருப்பூர் கருவம்பாளையத...5 weeks ago
-
சென்றுவிட்டாயே தோழா! - நமது மதிப்பிற்குறிய நண்பர் பட்டாபட்டி நேற்று(12.05.2013) சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். வாழும் வரை அடுக்குமுறைக்கு எதிராகவும் தீவிர பார்பனீய எதிர்பாளர...5 weeks ago
-
கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி - சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நே...1 month ago
-
தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது? - * * *த*மிழர்அல்லாதநண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒருகேள்வி: தமிழர்களின் குரல்முக்கியமான விஷயங்களில்கூட ஒருசேரஒலிப்பதில்லையே...3 months ago
-
ஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா? - "இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ராணுவம் மனிதாபிமான உதவிகளை...3 months ago
-
'மஹானி'ன் 'உயிரில்' கலந்த 'சில்லு' - முன் குறிப்பு: சுஜாதா இந்த தலைப்பை படித்திருந்தால், "எதற்கு இத்தனை நாடகத்தனமான, நீளமான தலைப்பு" என்று நினைத்திருப்பார். முதுகலை படித்து கொண்டிருந்த காலத்தி...3 months ago
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி3 months ago
-
The Children Are Watching Us (1944) - சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்ல...3 months ago
-
பக்கத்து உறவு - உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு பிடிக்காதுன்னு சுமி சொன்னதை கேட்டு எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. வெளியே வந்து வானத்தை பார்த்தேன். கா...4 months ago
-
டென்ஸல் வாஷிங்டனின் FLIGHT - FLIGHT என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் குடிகாரர்களின் மனசாட்சியை உலுக்கும் படம். விவாகரத்தாகி மனைவி மகனுடன் தொடர்பற்று மனம் போனபடி குடித...4 months ago
-
மழையின் விழுதுகள்.. - *தென்றலை துணைக்கழைத்து சா**ள**ரம் திறந்து * *மெதுவாய் மெலிதாய் உள்நுழைகின்றன மழையின் விழுதுகள் * * * *இவர்களெப்படித்தான் * *அறிகிறார்களோ * *அவள் * *என...4 months ago
-
பின் நவீன இலக்கிய கருத்தியல்கள் - <*>பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள்<>*எம்.ஜி.சுரேஷ் பின் நவீன இலக்கியக் கருத்தியல்கள் என்பதைப் பற்றிப் பேசும் முன் பின்நவீன சிந்தனைகள் பற்றிப் பேசுவது முக...6 months ago
-
Blog Moved - இந்த வலைப்பூவை என் சொந்தத் தளமான - www.pithatralkal.com க்கு மாற்றிவிட்டேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். இந்தத் தளத்தில் உள்ள அத்தனை படைப்புகளும் அங்கேயும் ...6 months ago
-
வித்யாரம்பம் கரிஷ்யாமி - தேவி `வித்யாரம்பம் கரிஷ்யாமி`….. ஆம் மா, ஆரம்பிக்கத்தான் போகிறேன் கற்றுக் கொள்ள. கையளவு, கடுகளவு, மலையளவு என்றெல்லாம் என்னையே சுயதராசில் நிர்ணயிக்க விரும்...7 months ago
-
பேச்சு என்பது... - மனிதன் எப்படி பேசுகிறான் என்பது முக்கியமல்ல அவன் என்ன பேச வருகிறான் என்பதே முக்கியம்.8 months ago
-
திரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...8 months ago
-
தாண்டவம் - தடை கோரி வழக்கு - நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அ...8 months ago
-
ரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...! - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...8 months ago
-
முகமூடி - சரியா மூடாத ஒரு மொக்கை மூடி - முகு : இந்த பதிவை பதிவுலக ஜெமினி இரட்டையர்களில் ஒருவரும், கிரிஸ்டோபர் நோலனின் பேரனுமான அதிஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன். இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்...9 months ago
-
Resume - வேண்டா பத்து - சமீபத்தில் நண்பர் ஒருவர் "அண்ணே, ஸ்டீவ் ஜாப்ஸ் போயிட்டார்ண்ணே, அந்த வேலைக்கு என்னிய ரெக்கெமெண்டு பண்ணுங்கங்கண்ணேன்னு, ஆபிஸ்லயே ipadலாம் குடுக்கிறாய்ங்களாம்ன்...9 months ago
-
சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்! - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...10 months ago
-
கரை - காதல் கரையில் கவிதை எழுதுபவர்கள் பெரும்பாலும் தோற்றவர்களே.. எங்களுக்கு வெற்றி எட்டாக்கனி தோல்வி தூரத்து உறவு நெகிழ்வே நிலையான நண்பன்...10 months ago
-
ப்ளாட் படும் பாடு....!! - ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட...1 year ago
-
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் - தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வா...1 year ago
-
Easy MP3 Downloader 4.3.8.6 - [image: Easy MP3 Downloader 4.3.8.6] [image: 'Easy] Easy MP3 Downloader 4.3.8.6 | 8.12 MB Easy MP3 Downloader, a revolutionary new program, provides you...1 year ago
-
நானும் இப்போ ஃபேஸ்புக்கில்..! - ஹாய்... ஹாய்... ஹாய்... எல்லாருக்கும் வணக்கம். நான் இப்ப ஃபேஸ்புக்லயும் வந்துட்டேன். என் பிளாக் நண்பர்கள் ஃபேஸ்புக்ல இருக்காங்களான்னு எப்படிக் கண்டுபிடிக்க...1 year ago
-
-
காய் கறி ...?? - வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே இது குறைவு . நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும் நினைக...1 year ago
-
"ஆல்மோஸ்ட் அனாதை" : - முத்தமிழ் அறிஞர் என்று எல்லோராலும் (என்னைத் தவிர) போற்றப்படுகின்ற கருணாநிதி அவர்கள் ஒரு கருப்பு ஐயர் ஆவார்.ஏனெனில் அவர் கொள்கைகள் நீங்கள் பார்த்தால் அவர் ...1 year ago
-
ஏழாம் அரிப்பு - தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார். புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அ...1 year ago
-
பெயரில்லா என் கவிதைகளிலிருந்து..... - 14 - என்னைப் பற்றி ஒரு வரிக்கூட கவிதை எழுதாத உன்னை என்ன செய்யலாம் என்கிறாய் பசி பொறுக்கா பூனை குட்டிகளை கொண்டு என் பிளசர் மூக்கை கடிக்கவிடலாம் மறுபடி மறுப...1 year ago
-
மௌனி – இன்னும் சில புகைப்படங்கள் - மௌனி, வெ.சா மேலும் சில : மௌனியின் அபூர்வ புகைப்படங்கள் புகைப்படங்கள் உதவி :ஹரன் பிரசன்னா1 year ago
-
யாவர்க்கும் ஆம் - என் பைத்தியத்தனங்கள் என்னை வாழத் தூண்டுகின்றன . அப்படி நான் செய்யும் பைத்தியத்தனங்கள் தாம் என்ன ? எளிய அன்பு செலுத்துவது ; எத்தனை ருசி வாழ்தல் என எண்ணிக் கொ...1 year ago
-
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...2 years ago
-
பின்பனிக் கால்கள் - நீங்களும் நீயுமாக ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்! உங்களுக்குப் பாந்தமாகவே வழியெங்கும் பூக்களும் வட்டமாய் நிலவும் கூட. இலகுவாய் இறங்கும் பியானோ க...2 years ago
-
சமகால எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இல்லை-நாஞ்சில் நாடன் - ‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை...2 years ago
-
நவநீதகிருஷ்ணனின் காதல் கதை - நவநீதகிருஷ்ணன் யாருடனும் அவ்வளவாகப் பேசமாட்டான். மரப்பாச்சியின் செதுக்கல்களையொத்த அவன் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.எனக்கென்னவோ அவன் அப்படி இருப...2 years ago
-
-
Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று...இரண்டாம் இடத்த...2 years ago
-
-
Introducing Zinmag Tribune 2 - Hive Leader cheers: Hi I am Alvaris Falcon from the Falcon Hive. I would like to demo this Zinmag Tribune 2 Blogger template to you! Check out more featu...4 years ago
-
மிகவும் பிடித்த சினிமா -1 - *Perfume*: *The Story of a Murderer* *Directed by *Tom Tykwer Produced by Bernd Eichinger Written by Patrick Süskind (novel)Andrew BirkinBernd EichingerTom ...4 years ago
Popular Posts
-
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகம...
-
அன்பு உடன்பிறப்பே., மு க எழுதுவது.. தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...! என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே... நாம் எ...
-
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்...
-
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெ...
-
மானங்கெட்ட தொண்டனுக்கு, நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..! டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங...
-
வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்...
-
(மானங்கெட்ட) உடன்பிறப்பே ! ஆசையில் ஓர் கடிதம் ... என் உடலும் , என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள் .. நின்னின் நலம் விழைய அவ...
-
மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழ...
-
ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்க...
-
அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்...


யோவ்.. பாவமையா இந்த வெளியூரு.. குகைய விட்டு வெளிய
வர மாட்டிங்குது நம்ம சிங்கக் குட்டி...
நானு, ஏதோ வெளியூரு கல்யாணம் பண்ணிணா, அதைச்சொல்லிட்டு ,
இந்தியா வரலாமுனு பார்த்தா , பய புள்ள அசரமாட்டிங்குது..
அப்படியே , பேட்டியிலே, அதைப்பற்றியும் ஒரு கேள்வி கேளுமையா...
இல்ல.. அருவா முனையிலதான் கல்யாணம் பண்ணுவேனு வேண்டுதல் இருந்தா,
அதையும் நிறைவேற்றிப்படலாம்..
தமிழ்ல வஞ்ச புகழ்ச்சி அப்படின்னு ஒன்னு இருக்கு அதை பதிவுல இப்போதான் பார்க்குறேன்
""இளைய தளபதி வாழ்க
இளைய தளபதி தகப்பனார் வாழ்க..சாரி சார் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்!""
இதுக்கு பேரு கவுண்டர் குரும்புன்னு சொல்வாங்க
வாழ்க வளர்க உங்கள் குறும்பு பதிவுகள்
யோவ் பட்டாபட்டி...என்ன பண்ணியும் ஆள் வெளில வர மாட்றானே... ஒன்னு பண்ணு..நீ உன் மகளிர் அணியை அவனுக்கு தாரை வார்த்துரு...அப்போவாவது மீன் சிக்குதான்னு பாப்போம்!
என்னாச்சு அப்பு நம்ம வெளியூரானுக்கு?..
ரெட்டைவால்ஸ் சார்..இப்டியெல்லாம் என்னைய கலாய்ச்சிங்கன்னா அப்பறம் நடிகை சோனா ஏன் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆஸ்த்ரேலியா போனான்னு சொல்லமாட்டேன்...அந்த ரகசியம் உலகத்துக்கு தெரியாமையே போய்டும்...அப்பறம் உங்க இஷ்டம்.... :)
வெளியூரு... அந்த ரகசியத்தை மட்டும் நீ சொல்லலைன்னா பட்டாபி 15 வது முறையா தீக்குளிக்கப் போறதா ஃப்ளாஷ் நியூஸ் ஓடுது மாமே...
மச்சான் பீச உடனே கொளுத்தரமா..,இல்ல., பயமுறுத்தி ஓட விட்டு கொழுத்துவமா ....(தக்காளி பட்டாப்பட்டி உயிரா இல்ல நடிகை சோனாவான்னு கேட்டா தமிழ்நாட்டு மக்கள் சோனாவதான் சொல்லுவாங்க...பட்டாப்பட்டி தீக்குளிக்காம நான் அந்த ரகசியத்த சொல்ல மாட்டேன்...இத்தோட முடிக்கறோம் பீச....பட்டாப்பட்டி கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.....)
பட்டு...உயிரோட இருந்து இப்போ என்ன சாதிச்சுட்ட..மிஞ்சிப் போனா டிஷ்யூ பேப்பரை வச்சி மில்லியனராக்கறேம்ப...இப்போ அது ரொம்ப அவசியமா..? எங்களுக்கு சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்கன்னு தான் தெரிஞ்சிக்கனும்..சட்டு புட்டுனு எரிஞ்சி போயிடு!
@ரெட்டைவால் ' ஸ் said...
பட்டு...உயிரோட இருந்து இப்போ என்ன சாதிச்சுட்ட..மிஞ்சிப் போனா டிஷ்யூ பேப்பரை வச்சி மில்லியனராக்கறேம்ப...இப்போ அது ரொம்ப அவசியமா..? எங்களுக்கு சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்கன்னு தான் தெரிஞ்சிக்கனும்..சட்டு புட்டுனு எரிஞ்சி போயிடு!
//
அடப்பாவிகளா..
அட்டு பிகருக்கு இவ்வளவு ஆர்பாட்டமா?
அந்த ரகசியம் ஊருக்கே தெரியுமே...
வெளியூரு..
பாவம்முனு வெள்ளக்காரியப் பாத்தா, நம்மளை தீ குளிக்க வைக்கப் போறியா?..
பட்டாபட்டி.. திங்க் பண்ணு..
நாளைக்கு நல்ல ப்ளான் போட்டு இவங்களை முடிக்கனும்..
( சே.. இலுமி , ரோஸ்விக் எல்லாம் எங்க போயி தொலைஞ்சாங்க..)
@Rettaivaals :
மச்சான் ஓ.பன்னீர்செல்வத்த எல்லாம் கேட்டுகிட்டா சி.எம் ஆக்குனாங்க...அந்த மாதிரி இந்த ஆட்டையும் இழுத்து போட்டு வெட்டவேண்டியதுதான்...தக்காளி பட்டாப்பட்டி மறைவுக்கு அனுதாபம் தெரிவிச்சு ஒரு அறிக்கை ரெடி பண்ணி வெச்சுக்க...பீச நாளைக்கு நான் போடறேன்... :)
யோவ் பட்டாபட்டி..இந்த ரெட்டைய நம்பியும் ஏதும் செய்யமுடியாது..உன்ன கொன்னத சாக்கா வெச்சு சரத் பொன்சேகா மாதிரி ஆக்குனாலும் ஆக்கிருவான் என்ன...அதனால டென்சன் ஆகி நீனே தீக்குளிச்சிரு...(யோவ் யோவ்...நாம ரெண்டு பெரும் எப்டி ஒன்னுக்குள்ள ஒண்ணா பழகிருக்கோம்...தயவு செஞ்சு தீக்குளிச்சிருயா ப்ளீஸ்...ப்ளீஸ்...)
மச்சி...நம்ம மரணதண்டனை கைதி பட்டாபட்டிய நடிகை சோனா ஏன் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆஸ்திரேலியா போனான்னு யோசிச்சு ஒரு பதிவ போட சொல்லு..கரெக்டான பதிலா இருந்துச்சுன்னா அவர கொளுத்தாம விட்டறலாம்..தூக்குல மட்டும் போட்டு வீட்டுக்கு அனுபிட்லாம்...அவரு அந்த பதிவ போடலைனா நானும் சொல்ல மாட்டேன்...கம் ஆன்..ஆடியேன்ஸ்...சோனா..சோனா..சோனா..சோனா..சோனா..சோனா..சோனா..... :)
வெளியூரு..நமக்கு ஒன்னுன்னா பட்டுவால தாங்க முடியாது! கவலை படாத..அவன் குளிச்சுப்பான்..(மவனே உன்னை நினைச்சாதான்டா எனக்கு திகிலா இருக்கு...நைட்டு ராஜபக்ஷ அண்ணனுக்கு ஃபோன் பண்ணனும்..)
ரெட்டை..
தீக்குளிச்சுட்டு , தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சாச்சு..
நாமதான் சாகாவரம் வாங்கினவனாச்சே..
பட்டு மாம்ஸ்...நீ என்ன தமிழ்பட ஹீரோவா...சாகவே மாட்டியாலே நீ!
பட்டாபட்டி.. said...
ரெட்டை..தீக்குளிச்சுட்டு , தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சாச்சு..நாமதான் சாகாவரம் வாங்கினவனாச்சே../
ஹா ஹா மச்சான் செம குசும்பன்டா பட்டாபி...எவ்ளோ நெக்கலா பதில பாரு...தீக்குளிச்சிட்டு என்னை தேய்ச்சு குளிசிட்டாகலாம்..இவனுக நக்கலுக்கு கொசு கடிச்சா கூட சாக மாட்டானுக போல...!!.
//தீக்குளிச்சுட்டு , தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சாச்சு..
நாமதான் சாகாவரம் வாங்கினவனாச்சே..//
அட சும்மா காமெடி பன்னதீரும் ஓய்.நீரு குளிச்சதாவே சரித்திரம் கெடயாது.இதுல இவரு தீக்குளிச்சாரம்ல.....
எலேய் இலுமி ... உன்னையெல்லாம் வெளியுறவு துறைல வச்சிக்கிட்டதுக்கு நான் தான்யா தீக்குளிக்கனும்... ஆமா..ஊருக்குள்ள பல்லு போன கிழவியையெல்லாம் காமிக்ஸ் படி காமிக்ஸ் படின்னு டார்ச்சர் பண்றியாமே...?
//நீ மேல போயும்..எமனை காமிக்ஸ் படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவியே//
அட,கொஞ்சம் யோசியும் மன்னரே!வரலாற்றில் “எமனையே வெற்றிகண்ட ரெட்டையின் அரசாங்கம்” என்று வர வேண்டாமா?வரலாறு மிகவும் முக்கியம் மன்னரே!(இப்படியும் ஒரு மன்னன்.இந்தாளு டயலாக் எல்லாம் நான் சொல்ல வேண்டியதா இருக்குது)
அட,அதை விடும்.பட்டுவின் கிழவிக் கோஷ்டிகளில்(அதாம்பா மகளிர் அணி) இருக்கும் மகா அட்டான கிழவியிடம் லந்து பண்ணி மன்னர் செருப்படி வாங்கியதாக கேள்விப்பட்டேன்.அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.அதுவும் போக,நீரு ப்ளாக் எழுதி சாம்ரஜ்ஜியத்து மக்களை சாகடிக்கீறு.என் பங்குக்கு நானும் ஏதாவது பண்ண வேண்டாம்?
//ஆமா..ஊருக்குள்ள பல்லு போன கிழவியையெல்லாம் காமிக்ஸ் படி காமிக்ஸ் படின்னு டார்ச்சர் பண்றியாமே...?//
அட,நான் எமன் ரேஞ்சுக்கு தினக் பண்றேன்.நீரு கிழவி மேலேயே கண்ணா இருக்கீறே?
//back means..,,டிக்கியா//
இதுக்கு தான் சொல்றது.கேளவிங்க பின்னாடி சுத்தாதிங்கன்னு.எப்போ பார்த்தாலும் இதே நெனப்பு தானா?வெளியூரே பரவா இல்ல போல இருக்கே.
ரெட்டைவால் ' ஸ் said...
எலேய் இலுமி ... உன்னையெல்லாம் வெளியுறவு துறைல வச்சிக்கிட்டதுக்கு நான் தான்யா தீக்குளிக்கனும்... ஆமா..ஊருக்குள்ள பல்லு போன கிழவியையெல்லாம் காமிக்ஸ் படி காமிக்ஸ் படின்னு டார்ச்சர் பண்றியாமே...?///
எவனாச்சும் ஒருத்தன் தீக்குளிச்சு தொலைங்கடா...நான் வீடியோ எடுத்து அத யு டியுப்ள அப்டேட் பண்றேன்னு என் கேர்ல் பிரெண்ட்கிட்ட வாக்கு குடுத்துட்டேன்...என்னால நாக்கு தவறி வாழ முடியாது...எலேய் இலுமி..நீதான் போய் தீக்குளியன்யா...காமிக்ஸ் படிக்க சொல்லி ஊர்ல உள்ளவனா தொந்தரவு பண்ணாத விட நீ வேற என்ன உருப்புடியா பண்ணிருக்க...பேசாம போய் சேர்ந்துடு...(எலேய் ரெட்டை..இத புல்லா காபி பண்ணி இதுக்கு ரிப்ளை போடுவான் பாரு இலுமு.இந்த ஸ்டைல எப்பதான் விட போறானோ தெரியல வாப்பா....)
@மகா அட்டான கிழவியிடம் லந்து பண்ணி மன்னர் செருப்படி வாங்கியதாக கேள்விப்பட்டேன்.///
எலேய் ரெட்டை உன் படம் போட்டு முட்டை போடலைன்னு ஊர்ல உள்ள கோழிகெல்லாம் குடும்ப கட்டுப்பாடு பண்ணே இல்ல..அந்த கோழிங்க சாபம் உன்ன சும்மா விடாதுடி....தக்காளி இப்ப சாவு..இந்த ஒரு விசயத்த வெச்சே பட்டாப்பட்டி உன் ஆட்சிய கவுத்துருவான்...அதுக்கப்றம் பட்டாப்பட்டி இந்தியாவோட முதலாளி..மகளிர் அணி என் கட்டுப்பாட்ல...பிளான் சூப்பர்டா வெளியூரு..கலக்கற மச்சி...!!!
மகளிர் அணிக்காக மன்னரையே காவு குடுக்க துணிஞ்சிட்டியா நீயி...(தக்காளி...இவனை எப்படியும் பட்டாபட்டி வாழவும் விடமாட்டான்..சாகவும் விடமாட்டான்...அதுக்கு நம்மளே கோர்த்து விட்ருவோம்..) தளபதி சார்...அந்த டாபர் உங்களுக்குப் பொண்ணு பாக்கறான்னு ஏமாந்துடாதீங்க..கொஞ்ச நாள் முன்னாடி தியாகராஜன் சார் (ம.மம்பட்டியான்) கிட்ட பையனுக்கு எப்படி பொன்னு பாக்கறதுன்னு ஐடியா கேட்டுட்டு இருந்தான்,,,அநேகமா உங்களுக்கு செவெண்த் அல்லது எயிட்த் ஹான்டா தான் இருக்கும்னு நினைக்கிறேன்...இதுக்கு அந்த முத்துவும் இலுமியும் உடந்தை... (ஹப்பாடா... ஒரே நூலுல எல்லாரையும் கோர்க்கிறது எவ்வளோ கஷ்டம்!)
ஆகா..அப்படியா சேதி..மன்னா உத்தரவிடுங்கோல்..(பார்த்திபன் மாதிரி ட்ரை பண்றேன்..அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க மன்னா...)...அந்த டோமர் பதர்களை அழித்து உங்கள் காலடியில் கொண்டு வந்து சமர்பிக்கிறேன்..(உன்ன போட்டு தள்னா கூட எனக்கு இவ்ளோ கோவம் வராது ரெட்டை.. ஆனா எனக்கு பொண்ணு பார்க்கற விசயத்துல எதாச்சும் கோல்மால் நடந்துச்சு...தக்காளி மக்க..கொலைதான்..புரட்சிதான்...)
பட்டுவை நம்பி எனக்கு துரோகம் செய்ய நினைத்தாயே வெளியூரு.. உன் தலையில் ஒரு அட்டு டாமன்கோலி பீஸை கட்டப் போகிறார்கள் என்று எனக்கு எப்படி தெரியும் என்று நினைத்தாயா...? (உளவுத்துறை டா டோமர் ! ) அதனால் தான் நான் மன்னராக இருக்கிறேன். உன் தலையில் அந்த பூசணிக்காயை ஏற்றிவிடப் பார்க்கிறார்கள். அதுவும் அந்த இலுமி பய இருக்கானே,, செம டாபர் அது! வாசாபியை காமிக்ஸ்ல பார்க்கனும்னு சொல்லாம விட்டானே...
என்ன அந்த உளவுத்துறை டோமருங்க உங்ககிட்ட ரிப்போர்ட் பன்றானுங்கள...அவனுக என் கண்ட்ரோல்ல இல்ல இருந்தானுக...ஆகா என்னமோ சூழ்ச்சி நடக்குது என்ன சுத்தி..உசாரா இருடா வெளியூர்காரா..!!!
//சும்மா சோக்கா இன்ட்ரோ குடுத்தய்யா! //
mannar entha intro pathi pesureeru? antha rajini matterra? :)
//நாங்கெல்லாம் வெள்ளைக்காரன்கிட்டயே சுதந்திரம் வேண்டாம் லெமன் ஜூஸ் குடுத்தாப் போதும்னு சொன்ன வீரனுங்கலே...!//
ada aakkam kettavanungala....
என்ன அந்த உளவுத்துறை டோமருங்க உங்ககிட்ட ரிப்போர்ட் பன்றானுங்கள...அவனுக என் கண்ட்ரோல்ல இல்ல இருந்தானுக...ஆகா என்னமோ சூழ்ச்சி நடக்குது என்ன சுத்தி..உசாரா இருடா வெளியூர்காரா..!!!
/////////////////
வெளியூரு..இலுமி, ரோசா தலையன்(நம்ம ரோஸ்விக்கு...), பட்டாபி எல்லோருமே உளவு துறையின் கண்காணிப்பில் இருக்கிறீர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் டாபர் வேலைகளை உளவுத்துறை சி.டி.யாக பதிவு செய்யப் பட்டுள்ளது.உளவுத்துறையின் சிறப்பு சி.டி பின்னர் வெளியிடப்படும் என்று மன்னர் தெரிவித்துக் கொள்கிறார்.
அப்படா.ஒரு வழியா வெளி எத்தன பொண்ணுங்க கிட்ட அடி வாங்கி இருக்குன்ற உண்மைய தெரியப்போகுது.பயபுள்ள,கேக்குரப்ப எல்லாம் பெரிய மன்மதன் ரேஞ்சுக்கு சலம்புது.இப்பயாவது உண்மை வெளிய வந்தா சரி.
பெரும்பாலும் சென்னையில் இருப்போர் அனைவரும் வெளியூர் தானே பாஸ்.வெளியூர்காரன் வித்தியாசமான பெயர்
மின்னல் said...
பெரும்பாலும் சென்னையில் இருப்போர் அனைவரும் வெளியூர் தானே பாஸ்.வெளியூர்காரன் வித்தியாசமான பெயர்
///////////////////////
அட... இந்த டாபர் எதுக்குடா சென்னைக்கு வந்து சேந்தன்னு கேட்டப்போ.. இங்க தான மச்சி மீரா ஜாஸ்மின் இருப்பான்னு சொன்னவனுங்க... அவன் வாழ்க்கை லட்சியம் என்னனு அவன் கிட்ட கேளுங்க.. அந்து போன செருப்பைக் கழட்டி என்னை அடிக்க வரலைன்னா என் பேரை மாத்திக்கிறேன்..( ஈ.ஸி யா மாத்திக்க முடியறது அது மட்டும் தான் பாஸ்)
@ரெட்டைவால் ' ஸ் said...
மின்னல் said...
பெரும்பாலும் சென்னையில் இருப்போர் அனைவரும் வெளியூர் தானே பாஸ்.வெளியூர்காரன் வித்தியாசமான பெயர்
///////////////////////
அட... இந்த டாபர் எதுக்குடா சென்னைக்கு வந்து சேந்தன்னு கேட்டப்போ.. இங்க தான மச்சி மீரா ஜாஸ்மின் இருப்பான்னு சொன்னவனுங்க... அவன் வாழ்க்கை லட்சியம் என்னனு அவன் கிட்ட கேளுங்க.
//
இதுல என்ன உங்களுக்கெல்லாம் சந்தேகம்...நான் மெட்ராஸ் வந்தது மீரா ஜாஸ்மின பார்க்கத்தான்...ஆமாம் அது என்ன ப்ளாக் பேரு இயல்பானவன்...நாங்கல்லாம் அஜித் மாதிரி ஓவர் ஆக்டிங் பண்ணிகிட்டா திரியறோம்.....(இயல்பானவன் அண்ணன் சார் முதலாளி...(அம்புட்டு மரியாதை புது ஆளுகளுக்கு குடுப்போம்.ரெட்டையோட அரசாங்கத்துல..வழி தவறி இந்த பக்கம் வந்துடீங்கன்னு நெனைக்கறேன்...இங்க கொஞ்சம் கன்னாபின்னான்னு கலாய்ப்பாங்கே..பதறி போய் பயந்துடாதீங்க...இது நெஜமாவே கலவர பூமி...)
ஏனப்பா இந்த கடைய எப்ப மூடுவிங்க (டாஸ்மாக் 10 மணிக்கு தெறந்துடுவான் அதுக்குள்ள மூடிடுங்க இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கும் சீக்கிரம் போய் இடம்புடிகனும் ஆமா சொல்லிபுட்டேன் )
மங்குனி அமைச்சர் said...
ஏனப்பா இந்த கடைய எப்ப மூடுவிங்க (டாஸ்மாக் 10 மணிக்கு தெறந்துடுவான் அதுக்குள்ள மூடிடுங்க இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கும் சீக்கிரம் போய் இடம்புடிகனும் ஆமா சொல்லிபுட்டேன் )
////////////////////////////////////
கவர்மெண்டுக்கு ரெவன்யூ தர்ற கோஷ்டியா நீ? ஆரம்பிங்கடே காலங்கார்த்தால.. உங்களுக்கெல்லாம் எல்லா சைட் டிஷும் கரெக்டா கிடைச்சுடும்... மிக்சிங்லாம் கரெக்டா இருக்கும்...வாந்தியே வராது! நல்லாவே இருப்பீங்கலே,,,!
கவர்மெண்டுக்கு ரெவன்யூ தர்ற கோஷ்டியா நீ? ஆரம்பிங்கடே காலங்கார்த்தால.. உங்களுக்கெல்லாம் எல்லா சைட் டிஷும் கரெக்டா கிடைச்சுடும்... மிக்சிங்லாம் கரெக்டா இருக்கும்...வாந்தியே வராது! நல்லாவே இருப்பீங்கலே,,,!///////////
அப்ப ரெட்ட சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? இன்னைக்கு வெளியூர்காரன் பார்ட்டி உங்கள கூப்பிடலையா (அய்யய்யோ உளறிட்டனா, உளறிட்டனா, உளறிட்டனா )
பார்ட்டியா..படுவாக்களா...மன்னரோட சோம பானம் எங்கேடா?
யாரங்கே, யாரங்கே, .... யாரடா அங்கே மன்னருக்கே சோமபானம் இல்லையா ,என்னது வெளியூர்காரன் அவனோட சைட்க்கு குடுக்க சொல்லிட்டானா (ஏம்பா வெறும் லெமன் ஜூஸ் தானே குடுதுருங்கப்பா பாரு மன்னர் அழுறாரு)
@@ரெட்டைவால் ' ஸ் said...
பார்ட்டியா..படுவாக்களா...மன்னரோட சோம பானம் எங்கேடா?////
அலையாதடா லொட்ட...நானே பிச்ச எடுத்து ஒரு ஆப உஷார் பண்ணி வெச்சினுக்கிறேன்...அத்த நீ உஷார் பண்ணலாம்னு பார்க்ரியா...மன்னரா லட்சணமா நடந்துக்கடா டோமர்நாயே...மன்னிக்கணும் மன்னா..சரக்கு போய்டபோகுதுன்கர பதட்டத்துல கொஞ்சம் கோவபட்டுடேன்...மை அபாலஜைஸ்...!!
@@@@மங்குனி அமைச்சர் said...
யாரங்கே, யாரங்கே, .... யாரடா அங்கே மன்னருக்கே சோமபானம் இல்லையா ,என்னது வெளியூர்காரன் அவனோட சைட்க்கு குடுக்க சொல்லிட்டானா (ஏம்பா வெறும் லெமன் ஜூஸ் தானே குடுதுருங்கப்பா பாரு மன்னர் அழுறாரு)///
/////////////////////////////////////////
மன்னா அந்த விஷ ஊசி எங்க வெச்சுருகீங்க...ங்கோயாள, இந்த மங்குனி பீச இத்தோட போட்டு தள்ளிடறேன்..நானே பிகர் கெடைக்காத காண்டுல திரியறேன்...இது வேற குறுக்க பூந்து ஒரு புரளிய கெளப்புது..சொல்லி வைங்க..வெளியூர்க்காரன் பிகர பத்தி பேசுனா மெர்சலைடுவான்னு....!!!
மன்னா என்னையபோய் தப்பா நினைசுட்டின்களே , இது ஒரு ராஜ தந்திரம் மன்னா (ஆமா இதல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது ) நம்ம பட்டாபட்டியும் , வெளியூர்காரனும் சேந்து உங்கள அரெஸ்ட் பன்னபோறதா கேள்விபட்டேன் அதுதான் சும்மா போட்டு வாங்கினேன்.(ஹி ஹி ஹி......... அப்புறம் எனோட சேலரி இன்கிரிமென்ட் )
இது ஒரு ராஜ தந்திரம் மன்னா (ஆமா இதல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது ) நம்ம பட்டாபட்டியும் , வெளியூர்காரனும் சேந்து உங்கள அரெஸ்ட் பன்னபோறதா கேள்விபட்டேன் அதுதான் சும்மா போட்டு வாங்கினேன்.(ஹி ஹி ஹி......... அப்புறம் எனோட சேலரி இன்கிரிமென்ட் )
/////////////////////////////////////
வேணாம் தம்பி... நீ யாரோ என்னவோ...ஒரு சேலரி இன்கிரிமென்டுக்கு ஆசப்பட்டு உயிரை விட்டுடாத... இந்த வெளியூர்காரனையும் பட்டாபியயும் உனக்குத் தெரியாது...மகளிர் அணி கையை விட்டுப் போகுதுன்னு தெரிஞ்சா நேரா ஒசாமாகிட்ட போய் வெப்பன்ஸ் வாங்கிட்டு வந்து போட்ருவான்.. அப்புறம் இந்த வெளியூர்காரனையும் சாதாரணமா நினைக்காத... ஒரு ஃபிகர் போட்டிங் போகனும்னு சொன்னதுக்கு கப்பல் படைய கொடைக்கானலுக்குக் கொண்டுவந்தவன்! அப்புறம் நீ நமீதாவை வேற கணக்குப் பண்ற மாதிரி தெரியுது! நமீதாவுக்காக அமெரிக்கத் தூதரகத்தைக் கொளுத்துன சம்பவம்லாம் நடந்த இடம் இது. உன்னைக் கொளுத்தறது இவனுகளுக்கு பீடி பத்த வைக்கிற மாதிரி!
ஓகே பிரண்ட்ஸ் சும்மா ஜாலிக்குதான். அப்புறம் இன்னைக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம். சார் உங்க சாட்டிங் ரொம்ப நல்லா இருந்தது நாளை பார்க்கலாம் குட் நைட் (சீக்கிரம் போகலேன்னா ஓசி சரக்கு கிடைக்கதுப்பா) இந்த வெளியூரானையும் பட்டாபட்டியும் நினைச்சா கொஞ்சம் மிரசலத்தான் இருக்கு
தல நம்ம நேத்து பண்ண சாட்டிங்க என் blog -ல தொகுத்து போட்டு இருக்கேன் கொஞ்சம் பார்த்திட்டு சரியா இருக்கானு சொல்லுங்க
ரெட்டை..
மலேசியா போயிருந்த போது ,
வெளியூர் சாயல ஒரு பையனைப் பார்த்தேன்..
பயலக் கேட்டா , அப்பா சிங்கப்பூர்ல வேலை செய்யறாருனு சத்தியம் பண்றான்..
என்னய்யா நடக்குது...
எந்த ஊருக்குப் போனாலும் இவனோட இதே தொல்லையா போச்சு! போய் வெப்பன்ஸ் வாங்கிட்டு வாடான்னா, ஜெராக்ஸ் பண்ணிட்டு வருது ..என்ன பண்ணித் தொலைக்கிறது? (ஆமா பட்டு... என்னை மாதிரி ஒன்னும் கண்ல தட்டுப் படலையே?)
ரொம்ப நன்றி மக்கா, சாரி மக்கா நான் இன்னைக்கு கொஞ்சம் அவசரமா வெளியில போறேன் நாளைக்கு வந்து எல்லாத்துக்கும் மரியாத செயிறேன்
//
(ஆமா பட்டு... என்னை மாதிரி ஒன்னும் கண்ல தட்டுப் படலையே?)
//
அதுவரை இல்ல..
எதுக்கும் அடுத்த வாரம் இந்தோனேசியால பார்க்கிறேன்
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
கலாய்க்கரதில உங்களையும் பட்டாபட்டியையும் உட்டாதான் உண்டு..