RSS

Repair almost Anything


My name is Khan and am not a Terrorist என்று முதல் காட்சியில் ஏர்போர்ட் அதிகாரிகளிடம் ஷாருக் கான் சீறும் போது நமக்குள் லேசாக ஒரு அதிர்வு ! மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்யும் கொலைகாரர்களை விட அதிகம் துன்பங்களை தினமும் சின்ன சின்ன அவமானங்களை சந்திக்கும் அதே மதத்தின் சாமானியர்களின் வலி துயரமானது. ஒரு பாஸ்போர்ட் எடுக்கும்போதும் நண்பர்கள் மத்தியில் கேஷுவலாக அரசியல் பற்றியோ பேசும் போதும் அவர்கள் நிச்சயமாக வெளியில் சொல்ல முடியாத அசௌகரியத்தை உணர்வார்கள்.ஆனால் அதை திரைப்படமாக எடுப்பது கொஞ்சம் சிக்கல் தான்.அதுவும் பெரிய ஸ்டார்களை வைத்துக் கொண்டு.


Asperger's Syndromeல் பாதிக்கப் பட்ட ரிஸ்வான் கான்(ஷாருக்) ஒரு சில விஷயங்களில் புத்திசாலி.எந்தப் பொருளையும் ரிப்பேர் செய்யும் அளவுக்கு புத்திசாலி.தம்பியின் நிறுவனத்தில் அழகுப் பொருட்கள் விற்கும் சேல்ஸ்மேன் வேலை கிடைக்கிறது.பியூட்டி ஷாப்பில் வேலை செய்யும் மந்திராவிடம் (கஜோல்)காதல் கொள்கிறார்.டைவர்ஸ் ஆகி மகனுடன் தனியே வாழும் மந்திராவுடன் நெருக்கம் ஏற்பட்டு கல்யாணமும் செய்து கொள்கிறார்.வாழ்க்கை ஜாலியாகப் போகிறது 9/11 சம்பவம் வரை. அதுவரை நன்பனாகப் பார்த்த மந்திராவின் மகனை அவனுடைய பள்ளியிலும் வெளியிலும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். ஒரு சின்ன தகராறில் அவனை கொன்றும் விடுகிறார்கள்.

 தன் மகனுக்கு ஒரு முஸ்லிம் தகப்பனாக வந்ததால்தான் அவனை இழந்தோம் என்ற விரக்தியில் ரிஸ்வான் கானிடம் கோபம் கொள்கிறாள். ரிஸ்வான் சமாதானம் செய்ய முயல்கையில் "போ..போய் நாங்கள் தீவிரவாதியில்லை என அதிபரிடம் சொல்லிவிட்டு வா.."என துரத்தி விடுகிறார். ரிஸ்வானின் பயணம் துவங்குகிறது. போலீஸில் மாட்டிக் கொள்வது, தீவிரவாதத்தை எதிர்ப்பது..ஹரிகேன் புயலில் சிக்கியவர்களை மீட்பது தேசத்தின் ஹீரோ ஆவது என பிற்பகுதி முழுக்க ஃபாரஸ்ட் கம்ப்.

டாம் ஹேங்ஸில் ஐம்பது சதவீதமாவது செய்து விடவேண்டும் என்கிற முனைப்பு ஷாருக்கிடம் தெரிகிறது. கஜோல் குச் குச் ஹோத்தா ஹை போல துறு துறுவென நடிக்க முயல்கிறார். பாவம் வயது ஒத்துழைக்க மறுக்கிறது போலும்.சோக காட்சிகளில் அசத்தல்.

கரன் ஜோஹருக்கு ஒரு வார்த்தை.. இது போன்ற சென்சிடிவான படங்களில் உங்கள் டிரேட் மார்க் காட்சிகளை ஒதுக்கி விடுங்கள். படத்தின் ஆதார செய்தி அடிபட்டு விடுகிறது.ஆனால் சில காட்சிகள் மனசை உருக்குகிறது. ஆஃப்ரிக்க மக்களுக்கு நிதி சேர்க்கும் காட்சி, 9/11க்கு பிறகு நடக்கும் அஞ்சலிக் கூட்டம் என சில காட்சிகள் அற்புதம். ஹம் ஹை விஷ்வாஸ் என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பாடுவது கரன் ஜோஹர் படத்தில் மட்டுமே நடக்கும்.
 
ரவி.கே.சந்திரன் , ஷங்கர் எசான் லாய், தீபா எல்லாரும் இந்த கதைக்கு என்ன தேவையோ அதைவிட அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள்.

Religion was man's emotional response to unknown என்றார் Marret. எல்லா முஸ்லிம்களும் தீவிர வாதி அல்ல என்பதை சொல்ல வந்த ஷாருக் கரண் கூட்டணி ஹரிகேன் புயல் , Asperger's சின்ட்ரோம் , ஃபாரஸ்ட் கம்ப் என எங்கெங்கோ போய் சொல்ல வந்ததை கோட்டை விட்டு விட்டார்கள்.

மணிரத்தினத்தின் அஞ்சலி ஸ்பீல்பெர்கின் ஈ.டி(Extra Terrestrial) படத்தின் பிரமாதமான இன்ஸ்பிரேஷன் என்றால் MNIK , Forrest Gump ன் மிதமான இன்ஸ்பிரேஷன்.
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 23, 2010

    அதுக்குள்ள படம் பார்த்தாச்சா ரெட்டை..
    படம் பார்த்துட்டு திருப்பி வரேன்..

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 23, 2010

    யோவ்.. Recent comments Font -ய மாத்துய்யா..
    கண்ணக் கட்டுது..

  1. Rettaival's Blog

    Tuesday, February 23, 2010

    பட்டா...தெரிஞ்சா பண்ணமாட்டமா...!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 23, 2010

    தமாசு பண்ணாதே அப்பு..
    நம்ம ரோஸ்விக்க எதுக்கு அமைச்சரா வெச்சுருக்கிறது..
    பய புள்ள நல்ல மெக்கானிக்..
    இந்த விசயமெல்லாம் அதுக்கு அத்துப்படி

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 23, 2010

    @ரோஸ்விக்..
    என்னா பிரச்சனைனு பாருமையா..

  1. Veliyoorkaran

    Tuesday, February 23, 2010

    என்னா பிரச்சன இங்க..ஏன் கூட்டம் போட்டுட்டு இருக்கீங்க..மன்னர் அந்தப்புறத்துக்கு போறதுக்கு ரௌண்டிங் வர்ற நேரத்துல இந்த மாதிரி எல்லாம் பண்ண கூடாது ராசா...அப்பறம் புவனேஸ்வரி தடுப்பு சட்டம் பாயும்..!!

  1. Veliyoorkaran

    Tuesday, February 23, 2010

    @@ஆனால் அதை திரைப்படமாக எடுப்பது கொஞ்சம் சிக்கல் தான்.அதுவும் பெரிய ஸ்டார்களை வைத்துக் கொண்டு.////

    செம ரிஸ்க்கான மேட்டர் மச்சி இது..கரணம் தப்புனா பால் தாக்ரேக்கு கொண்டாட்டம் ஆய்ரும்...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 23, 2010

    ...
    வெளியூரு.. இருக்கையா..
    இன்னைக்கு ஆணி அதிகமோ?

  1. மங்குனி அமைச்சர்

    Wednesday, February 24, 2010

    ஏன்பா நம்ம மன்னருக்கு பல மொழிகள் தெரியும் போல இருக்கு
    ஏன்பா ராணுவம் அது மன்னர் தாம்பா மாறுவேஷத்தில் இருக்கிறார். இது கூட தெரியல நீயெல்லாம் ஒரு ராணுவ அமைசர். (ஆமா அது ஏன்னா புவனேஸ்வரி தடுப்பு சட்டம் )

  1. ரோஸ்விக்

    Friday, February 26, 2010

    தல "Recent comments" அலுவலகத்துல இருந்து பாக்க முடியல... எதுவும் display ஆகல... வீட்டுல இருந்து பாத்துட்டு சரி பண்ணிடலாம்... :-)

  1. Rettaival's Blog

    Friday, February 26, 2010

    ரோஸ்விக் said...
    தல "Recent comments" அலுவலகத்துல இருந்து பாக்க முடியல... எதுவும் display ஆகல... வீட்டுல இருந்து பாத்துட்டு சரி பண்ணிடலாம்... :-)

    OK BOSS!

  1. Anonymous

    Wednesday, March 03, 2010

    My name is Khan- film Super, Mid Blowing... Everyone must see this film, Even american too.

Post a Comment