RSS

(மானங்கெட்ட) கூட்டணி கட்சி தலைவர்களுக்கு


அன்பு சகோதரி எழுதுவது!


எதற்காக திடீரென இவ்வளவு கூச்சலும் குழப்பமும்? நீங்கள் கேட்கும் தொகுதிகளெல்லாம் கொடுப்போம் என்று எப்படி உங்களால் நம்பமுடிந்தது? மைனாரிட்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால் இந்த வாக்காள மடையர்களுக்கு என்னை விட்டால் வேறு கதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?

வழக்கமாக தேர்தலுக்கு பின்பு உங்களை துரத்திவிடுவேன் என்பது தெரிந்து தானே எங்களுடன் கூட்டணி வைக்க சம்மதித்தீர்கள்.ஏதோ ரொம்ப நாள் ஆட்சியில் இல்லாததால் போர் அடிக்கிறதே என்று நானும் சசியும் தொகுதி பங்கீடு , பேச்சுவார்த்தை என்று பொழுதைப் போக்கினோம். அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வதா? தேர்தல் நெருங்கிவிட்டதே..பிரசாரத்துக்குப் போக வேன்டுமே என்ற அக்கறை இல்லாமல்...இப்படியா காமெடி பண்ணிக்கொண்டே இருப்பது?

சரி..உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் வந்துதான் என்ன கிழித்துவிட போகிறார்கள். நான் நியமிக்கும் ஏதோ ஒரு மடையன் வாசிக்கும் பட்ஜெட் உரைக்கு மேஜையை தட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள். அதை அங்கே செய்தால் என்ன...வீட்டில் இருந்து செய்தால் என்ன?

எம்.ஜி.ஆர் போல என்னைப்போல சிவப்பான நடிகர் நடிகைககளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன என் கட்சிக்காரர்களுக்கு திடீரென மேக்கப் இல்லாமல் விஜயகாந்த் வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் பயப்படமாட்டார்களா? வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?

இந்த முறை என்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை தேர்தலுக்கு பின் தடை பண்ணலாமா என்று கூட ஒரு யோசனை உள்ளது.

அப்பாவி தலைவர்களாகிய உங்களிடம் சொல்வதற்கென்ன? சோ ராமசாமி பேச்சைக்கேட்டு நான் இப்படி அதிரடியாக முடிவுகள் எடுப்பதாக மீடியாக்கள் அலறுகின்றன, என் ஆஸ்தான ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் சோ ராமசாமியிடமே பேசுவேன் என்பது உங்களுக்குப் புரியாமல் போனதில் ஆச்சர்யமே இல்லை?

மானங்கெட்டுப் போய் திரும்பவும் என் காலிலேயே விழுந்து நான் போடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு வந்தீர்களானால் பிரசார மேடையில் சந்திப்போம். ஒரே நார்காலிதான் போடப்பட்டிருக்கும்.அதற்கும் முரண்டு பிடித்து மூன்றாவது அணி அது இது என்று பினாத்தாதீர்கள்!

விஜயகாந்துக்கு போட்ட நாமம் வாழ்க! வைகோவுக்கு போட்ட பட்டை நாமம் வாழ்க!


இப்படிக்கு

உங்கள் அன்பு சகோதரி


பின் குறிப்பு :

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

-- கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதாக உங்களிடம் நான் சொல்லவிரும்புவதாக என்னிடம் சோ ராமசாமி சொன்னது!

***********************************************************************************
 1. VJR

  Friday, March 18, 2011

  தொடர்ந்து உங்க வலைப்பதிவைப் படித்ததில் எனக்கும் வரும் வசனம், “ டேய் எங்க போட்டாலும் அடிக்கிறாண்டா”. வெல்டன். தொடர்ந்து சிக்சரா வெலுத்துங்கள்.

 1. Jey

  Friday, March 18, 2011

  அடிச்சி ஆடுங்க மாப்ளகளா...., நல்ல ஃபார்ம்லதான் இருக்கீங்க.... சிக்சரா அடிங்க....
  நம்ம கிரிக்கெட் பசங்கதா 19 ரன்னுக்கு 9 விக்கெட் .... அந்த சோகத்த போக்க நீங்களாவது அடிங்க சிக்சரா...

 1. Jey

  Friday, March 18, 2011

  //வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?///

  இந்தாளு இன்னும் திருந்துனாமாறி தெரியலையே....., நாளைக்கி என்ன முடிவெட்ராருன்னு பாக்கலாம்...

 1. Jey

  Friday, March 18, 2011

  ///No matter who I am...What matters is How I am! //

  முக்காடு போட்டுகிட்டு அம்சமாத்தான்யா இருக்குறே...( பட்டாபட்டிதான் இப்படி கமென்ஸ் போடச் சொன்னான்....)

 1. ரோஸ்விக்

  Friday, March 18, 2011

  நீ அடி மச்சி... எல்லாம் சிச்சர் தான்... பட்டையை கெளப்புற.. :-))

 1. திருவாரூர்காரன்

  Friday, March 18, 2011

  @@@என்னைப்போல சிவப்பான நடிகர் நடிகைககளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன என் கட்சிக்காரர்களுக்கு திடீரென மேக்கப் இல்லாமல் விஜயகாந்த் வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் பயப்படமாட்டார்களா?///


  கருவாப்பய இப்டிதாண்டா ஊர் ஊரா போய் மக்களையும் பயமுருத்துறான்..!:)

 1. திருவாரூர்காரன்

  Friday, March 18, 2011

  @@@வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?///

  ஹா...ஹா...மரண கலாய்...! :)

 1. வானம்

  Friday, March 18, 2011

  கேப்புட்டன்:
  கேட்ட 41ம் கொடுத்தா அம்மா முந்தானைக்குள்ள பம்முவோம்.
  கொடுக்கலன்னா மூணாவது அணின்னு தும்முவோம்.
  ஆங்ங்ங்ங்..........

  வைக்க்க்க்கோஓஓஓஓ:
  எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா. இந்த வைகோ ரொம்ம்ம்ப நல்லவன்ன்ன்னு சொல்லிடுச்சுடா அந்த அம்மா. நானும் எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?

 1. வானம்

  Friday, March 18, 2011

  பதிவை படித்தேன், ஆகா,ஓகோ,சூப்பர்னு கமெண்டு போடனுமா?

 1. Anonymous

  Friday, March 18, 2011

  நீங்கள் ஒன்றும் மிகையாக எழுதியதாக எனக்கு படவில்லை. இன்னொரு 5 வருடம் தமிழக வாக்காள கபோதிகள்(மக்கள்) இன்னொரு பாடாவதி ஆட்சியை சகித்துக்கொண்டு உண்டு உறங்கி வாழ்ந்து சாகும். உலகத்தில் எந்த பகுதியிலும் இப்படியொரு கேடுகெட்ட ஜனக்கூட்டத்தை பார்க்கமுடியாது. வெட்படுகிறேன்...

 1. பட்டாபட்டி....

  Saturday, March 19, 2011

  ஏய்யா.. இப்படி எல்லா காக்கும் கடவுளையும், துப்பு துப்புனு துப்புறியே..
  போற போக்கைப் பார்த்தா, நீயும் நானும் தான் ஒழுக்கம் போல இருக்கு..

  பேசாம முதல்வர் ஆகிடு.. என்னை.. தொலைதொடர்புக்கு மினிஸ்டரா ஆக்கிடு..
  நாட்டை விளங்க வெச்சிடலாம்.. இன்னா நினைக்கிற?..

  (ஹி..ஹி.. நீரா நாடியா கூட இங்கிலூசு பேசனுமுனு ஆசையா இருக்குயா..)

 1. பட்டாபட்டி....

  Saturday, March 19, 2011

  ஏய்யா.. இப்படி வெக்கமில்லாம பேசுறீயே..

  நாளைக்கே அந்தம்மா, உனக்கும் எனக்கும் சீட் கொடுத்தா..வெளியூரான் நாண்டுக்கமாட்டானா?...

 1. Anonymous

  Sunday, March 20, 2011

  வழக்கமாக தேர்தலுக்கு பின்பு உங்களை துரத்திவிடுவேன் என்பது தெரிந்து தானே எங்களுடன் கூட்டணி வைக்க சம்மதித்தீர்கள்.ஏதோ ரொம்ப நாள் ஆட்சியில் இல்லாததால் போர் அடிக்கிறதே என்று நானும் சசியும் தொகுதி பங்கீடு , பேச்சுவார்த்தை என்று பொழுதைப் போக்கினோம். அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வதா? தேர்தல் நெருங்கிவிட்டதே..பிரசாரத்துக்குப் போக வேன்டுமே என்ற அக்கறை இல்லாமல்...இப்படியா காமெடி பண்ணிக்கொண்டே இருப்பத

  electionukku munnadiye ennama comedy pandrangappa...neenga article podave venam sattasabaikkule ponale comedy darbarthan next five years jeya rocks... full entertaintment and engage many comedy programmes

  senthil

 1. ganga

  Saturday, February 18, 2012

  மானங்கெட்ட pathiver neegal

Post a Comment