RSS

அதிரடி கருத்து கணிப்பு...பங்கேற்க கடைசி வாய்ப்பு..!


தேர்தல் நேரத்தில் கருத்து கணிப்புகளின் தாக்கம் அசாத்தியமானது. கேள்விகள் அனைத்தும் கவனமாகத் தொகுக்கப்பட்டு விஞ்ஞான முறைப்படி அலசி ஆராய்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள், அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முதல் இலவசத்திட்டங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நடத்தப்படும் ஒரு நடுநிலைமையான கருத்துக் கணிப்பு...இதோ உங்கள் பங்களிப்புக்கு...!


குஷ்பூ மாதிரி குழந்தை பிறக்கவேண்டுமென்றால்

1.திமுகவுக்கு ஓட்டுப் போடணும்

2.குலசாமிக்குப் பொங்கல் வைக்கணும்

3.சுந்தர்.சி ஒத்துக்கணும்

வண்டு முருகனின் தேர்தல் பிரசாரம்

1.ஊத்திக்கும்

2.திமுகவுக்கு உபயோகமா இருக்கும்

3.இதுவரையில சிரிப்பொலில வராத காமெடி

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது ஏன்?

1.விஜயகாந்துக்கு செல்வாக்கு கூடிடும்னு பயம்

2.விஜயகாந்த் அடிச்சிருவாரு

3.கேப்டன் குடிச்சுட்டு வந்து பேசும்போது மேல வாந்தி எடுத்துட்டாருன்னா!

வைகோ என்ன பண்ணிட்டு இருப்பார்?

1.நாஞ்சில் சம்பத்தோட சீட்டு விளையாடிட்டு இருப்பார்

2.வாலிபால் ஆடிட்டு இருப்பார்

3.சன் டி.வி சீரியல் பார்த்துட்டு இருப்பார்

கார்த்திக்கின் பிரசாரம் ஏன் டி.வி யில் காண்பிக்கப்படுவதில்லை

1.ஏற்கெனவே ரெண்டு காமெடி சானல்கள் இருக்கின்றன

2.கார்த்திக் கட்சிக்காரங்களே சேனல் ஆஃபீசை அடிச்சு நொறுக்கிடுவாங்க

3.தற்கொலைக்கு தூண்டும் வழக்கில் மாட்டிக்கொள்வோம் என டிவி சேனல்கள் அஞ்சுவதால்

தங்கபாலு என்பவர்

1.மயிலாப்பூரில் டீக்கடை நடத்துபவர்

2.கொளுத்துவேலை செய்பவர்

3.தானே உட்காரும் தானைத் தலைவன்

கருணாநிதி முதல்வரானால்,ஜெயலலிதா செல்லப் போவது

1.கொடநாடு

2.திராட்சைத்தோட்டம்

3.சிறுதாவூர்

ஜெயலலிதா முதல்வரானால், கருணாநிதி செல்லப்போவது

1.பாளையங்கோட்டை

2.புழல்

3.வேலூர்

காங்கிரஸை தோற்கடிக்க வேலை செய்வது

1.சீமான்

2.திமுக

3.அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்

2016 ல் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும்?

1.வீட்டுக்கு வீடு மெடிக்கல் காலேஜ் சீட்

2.வீட்டுக்கு வீடு கார்

3.எல்லோருக்கும் தினம் ஒரு லிட்டர் பெட்ரோல்முடிவுகள்

.

.

.எவன் கருத்துகணிப்பு நடத்தினாலும் எதையாவது கிழிக்கப் போறமாதிரி கருத்து சொல்ல வந்த டுபாகூர்களுக்கும் , எவன் ஜெயிச்சாலும் ஆப்படிப்பான் என்று தெரிந்தே அஞ்சு வருஷத்துக்கொரு முறை வாயில் வென்ணயடித்துக்கொள்ளும் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் ,மேலும் இதையும் ஒரு கருத்துகணிப்பு என்று நம்பி வேலையை விட்டு வாசித்த அனைத்து வாக்காள மடையர்களுக்கும் நன்றி.
 1. பட்டாபட்டி....

  Friday, April 08, 2011

  முதல் கேள்வில மூணாவது ஆப்ஷன் , ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா சார்?

 1. கக்கு - மாணிக்கம்

  Friday, April 08, 2011

  /// முதல் கேள்வில மூணாவது ஆப்ஷன் , ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா சார்?///

  ----பட்டாப்பட்டி.

  என்னைய்யா இது சின்னபுள்ள தனமாவுள்ள இருக்கு.

  நீங்கள் வாசித்தவர்களை கிண்டலாக திட்டினாலும் சரி.
  அது என்ன "வாயில் வென்ணயடித்துக்கொள்ளும் நல்ல உள்ளம் " புதுசா இருக்கே?

 1. அஞ்சா சிங்கம்

  Friday, April 08, 2011

  அட கொலைகார பாவிகளா?
  இப்படியா ஒருத்தன் கொல்லுவான்...........
  நம்பி வந்தேன் .................

 1. Villavarayens

  Friday, April 08, 2011

  இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..

  ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தத்தெடுக்கப்போவது...

  அ) வளர்ப்புமகள்
  ஆ) வளர்ப்புமகன்
  இ) திருநங்கை (இப்படிக்கு ரோஸ்)(9 ம் நம்பர் அம்மாவுக்கு ராசியாமே)

 1. பெயர் சொல்ல விருப்பமில்லை

  Wednesday, April 13, 2011

  எல்லா கேள்விக்கும் மூணாவது ஆப்ஷன் செலக்ட் பண்ணினேன், சரிதானா?

 1. Rettaival's

  Thursday, April 14, 2011

  பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  எல்லா கேள்விக்கும் மூணாவது ஆப்ஷன் செலக்ட் பண்ணினேன், சரிதானா?
  *******************************************************
  நீ தமிழக அரசியலை கூர்ந்து கவனிச்சுட்டு இருக்க போல...மூளைக்கு ஆகாது ராஜா...! பார்த்து இருந்துக்க!

 1. அருள்

  Saturday, April 16, 2011

  அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

Post a Comment