(மானங்கெட்ட)தங்கபாலு ஸ்பீக்கிங்- A பட்டாபட்டி Article
இது வரை அவர்கள் எழுதிய பதிவுகள், விஜய், கேப்டன் மற்றும் தற்போதைய முதல்வர் பற்றி படித்ததும், ஆம்... அவர்கள் சரியான பாதையில் பயணிக்கின்றனர், என்று என்அன்னை சோனியா மீது ஆணையாக,அடக்கமாகக் கூற கடமைப்பட்டுள்ளேன்
நான் பலசில வருடங்களாக, தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருவது, பலருக்கு உறுத்துகிறது. ஏன்?. எனக்கே அவ்வப்போது உறுத்துகிறது! அதையெல்லாம் பார்த்தால் தொழில் பண்ணமுடியுமா?தமிழர்களின் நலனுக்காக, பிறந்த நாட்டை விட்டு, இங்கு வந்து ரத்தம் சிந்தும்(?) என் அன்னைக்கு, உயிரைவிடத்தயாராக இருக்கும் நான் ஏன் தலைவனாக இருக்ககூடாது?..!
காங்கிரஸில் ஏழெட்டு கோஷ்டிகள் இருப்பதாக மீடியாக்கள் கூவுகின்றன.அவர்களுக்கு நான் ஒன்று கூற கடமைப்பட்டுள்ளேன்.
"நீங்கள் கூறுவது சுத்தப் பொய்!
உண்மையில் எங்களுக்கே தெரியாமல் ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கின்றன. அதை கணக்கெடுக்கத்தான் நாங்கள் உட்கட்சி தேர்தல் நடத்தினோம். ஆனால் ஓட்டுப் போடும் தொண்டர்களை விட போட்டியிட்ட நபர்கள் அதிகமாக இருந்ததால் வழக்கம் போல டெல்லி சொல்வதையே கேட்டுக்கொண்டோம்.இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக டெல்லி மேலிடத்தில் கோள்மூட்டி விடுவதற்கென்றே தனி கோஷ்டி ஒன்றை உருவாக்கி அதில் எல்லாக் கோஷ்டியை சேர்ந்தவர்களும் இடம்பெற செய்ய முயற்சி செய்தேன்,
உங்களுக்குப் புரியவில்லை இல்லையா? எனக்கும் புரியவில்லை ..அதனால்தான் நானே தலைவராக தொடர்கிறேன்!
சரி இன்னொன்று கேட்கிறேன்!
தமிழகமுதல்வரின் கட்சியில் கோஷ்டிகள் இல்லையா? , அதிமுக-வில் கோஷ்டிகள் இல்லையா?. எங்களை மட்டும் ஏன் இப்படி பிரிக்கிறீர்கள்? எங்களின் குறிக்கோள், ’தமிழர்களுக்கு பணி செய்துகிடப்பதே’ என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?
சமீபத்தில் ஒருவர், என் விளையாநிலத்தை, பாகம் பிரித்து விற்பதற்கு முயற்சித்தது என் அன்னைக்குத் தெரியும்.
ஆனால், அதில் தோல்வி அடைந்ததைக்கண்டு மனம் வருந்திய மகான்(?)களில் நானும் ஒருவன்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ்...மாநிலத்தில் ஏன் இல்லை?. இதை நான் கேட்கவில்லை.. மக்கள் கேட்கிறார்கள்!
வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம் ...தெரிந்தால் சொல்லமாட்டோமா?
மக்களுக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள் அற்பர்கள். என்ன செய்யவில்லை நாங்கள்?.
ஈழத்தமிழரை கொன்றொழிக்க, ஆயுதங்கள் விற்ற வகையில், அந்நியச்செலவாணி ஈட்டவில்லையா?.
அயல்நாட்டு உறவை பேணிக்காக்க, குட்டாச்சி.. சாரிப்பா.. குஷ்டாச்சி..சே.. விடுங்க..அவரை விடுவிக்கவில்லையா?.
அமெரிக்காவின் அறிவுரைப்படி, போபால் மக்களுக்கு வாய்கரிசி கொடுக்கவில்லையா?.
வரலாற்றை மறக்கக்கூடாது. மேலும் , இந்துமுஸ்லீம் உறவுக்காக, ’கான்-ஐ காந்தி-யாக்கவில்லையா’?.
கேட்கிறார்கள் கேள்வி.
ஏன் இந்த கூட்டணி?. இது உங்கள் மனதில் தோன்றும். அன்னையின் புதல்வனுக்கு அஷ்டசனி நடப்பதால், கலைஞருடன் கூட்டு சேர்ந்தோம். அதையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஆறறிவு அற்றவர்கள்.
கூட்டணி பேச, என் மகனை அழைத்துச்சென்றேனாம்?. இதில் என்ன தவறு?. பாங்கில பணம் பெறும்போது, பாதுகாப்புடன் செல்வதில்லையா?. 60 வருட ஆட்சிக்கட்டிலில், இந்தியா எப்படி முன்னேறி உள்ளது?. சிந்தியுங்கள்..
வரும் தேர்தலில், மனைவிக்கு சீட் ஒதுக்கியதாக சிலர் கூவல்.
விலைவாசி கன்னாபின்னா என்று உயர்ந்து, நடுத்தரமக்கள் , பிச்சைக்காரார்கள் ஆகிவருகின்றனர். அந்த வளர்ச்சி என்னையும் பாதிக்காதா?. மக்களுக்குக்காக, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அரசியலில் புகுந்த எனக்கு மனைவியைத்தவிர யார் துணை(?)புரிவார்? ஒரு குடும்பதில், கணவன் மற்றும் மனைவி வேலைக்குப்போவது தவறா?.. கேட்கிறேன். மனசாட்சிப்படி பேசுங்கள் மனிதர்களே.
எங்கள் தலைவர் ராகுல்ஜீக்கு பெண் பார்த்து, அடுத்த காந்தியை, நாடு பெறும் வரை, மகன் மற்றும் மனைவியுடன், எங்கள் தலைவி சோனியாவுக்கு உழைப்பதே என் கடமை. இந்தக் கூட்டத்தில், சிலர் சங்கு கூதுகிறார்கள். இதற்கெல்லாம் பயந்தவர்களா, காங்கிரஸ்காரர்கள்? நாங்கள் ஊதாத சங்கா?.
ஆகவே, ஒவ்வொரு வாக்காளரும், உங்கள் பொன்னான ஓட்டை, காங்கிரஸ்-க்கு அதாவது.. தங்கபாலு காங்கிரஸ்க்கு போட்டு, வெற்றிபெறச்செய்யுங்கள். உங்களுக்கு சேவைசெய்ய நாங்கள் இருக்கிறோம்.
வாழ்க அன்னை.. வளர்க தங்கபாலு கோஷ்டி!
( யோவ்.. போட்டோ.. மகனையும் அப்படியே எடுயா.... தக்காளி.. அடுத்த அஞ்சு வருஷம்.. ம். கு^%$@#ஞ்சவெச்சு, தண்ணி குடிச்சாவது, பதவியை விட்டு இறங்ககூடாது.. ஏழுமலை வெங்கடேசா.. தேர்தல் முடிஞ்சதும் உனக்கு முடி(?) காணிக்கை செலுத்துகிறேன். அதுவரை, மக்களை.... அப்படியே வெச்சிருய்யா பெருமாளே.. )
Written By Pattapatti
*************************************************************
Veliyoorkaran
Thursday, March 17, 2011
என்னது தங்கபாலு தண்ணிலாரி மோதி செத்துட்டாரா...?
என்னய்யா பட்டாப்பட்டி சொல்ற...? :)