RSS

K'naan - Waving Flag - Road to South Africa!


மிகப் பெரிய அரங்கத்தின் அலறும் ஸ்பீக்கர்களில் வீறிட்டு வரும் இசைக் கோர்வைகளில் தன்னை மறந்து ஜன்னி கண்டு ஆனந்தக் கண்ணீர் விடும் ரசிகர்களைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். பலநூறு டெசிபல் சத்தத்தில் இரையும் டிரம்ஸ்களிலும் கிடார்களிலும் வரும் இசையில் அப்படி என்னதான் இருக்கிறதென அவ்வப்போது யோசித்து யோசித்து தோற்றிருக்கிறேன். சில நாட்கள் முன்பு ஒரு பின்னிரவில் "Wavin' Flag" என்ற பாடல் கேட்ட போது தான் புரிந்தது , இசைக்கு வறண்ட பாலைவனத்திலும் பனிக்கட்டிகளை உருவாக்கும் சக்தி இருக்கிறதென.நமது பாரம்பரிய இசை என்பது மாஸ் அப்பீல் வகைக்குள் அடங்காது.கொஞ்சம் விதிகளை மீறாமல் தான் விளையாடுவார்கள்.விதிகளையெல்லாம் துவம்சம் செய்து மக்களை வசியப் படுத்தும் மாஸ் அப்பீல் பாடல்களிலும் கூட எப்பொழுதேனும் ஒரு ஜீவன் இருக்கும்.மேலும் ஜனங்களின் வலியை சொல்லும் பாடல் விதிகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். குறிப்பாக இந்த "Wavin' Flag"என்ற பாடலின் வரிகள் , பின்னிரவு கேட்டீர்களானால் உங்கள் சில மணி நேர தூக்கத்தை ஒத்திப் போட வைக்க வல்லது.


பொதுவாகவே ரஹ்மானின் வருகைக்குப் பிறகு ஆஃப்ரோ பீட் இசையெல்லாம் கூட அவ்வளவு அன்னியமாகத் தெரிவதில்லை. உலகமயமாக்கம் சாதாரண இசை ரசிகர்களின் ரசனையில் கூட புகுந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.ம்யூசிக் கான்சர்ட்டுகளில் கேட்பதை விட ஒரு விளையாட்டு நிகழ்வின் ஓபனிங் செரிமனிக்காக அமைக்கப் படும் இசையை கேட்பது ஒன்றும் பிரமாதமானதாக இருக்காது. அங்கே விளையாட்டு பற்றிய உற்சாகமும் ஆர்வமுமே மிகுந்திருக்கும்.ஆனால் அதையும் தாண்டி சில பாடல்கள் நம்மைக் கட்டிப் போட்டு முணுமுணுக்க வைத்து விடும், ரிக்கி மார்ட்டினின் Cup of Life போல , க்வீனின் We will Rock you போல. இன்றைக்கும் ஒரு ஸ்டேடியத்தில் நீங்கள் பல்லாயிரக்கணக்கான ரசிர்களுடன் சேர்ந்து வீ வில் வீ வில் ராக் யூ என்று கத்திப் பாருங்கள். நிச்சயமாக ஜிவ்வென்றிருக்கும்.

மேலே குறிப்பிட்டது கே'னான் வார்சேம் எனும் சோமாலிய - கனடிய ராப் பாடகரின் பாடல் . இந்த பாடலின் ஸ்பெஷல் இதன் உலகத்தன்மை. உலகத்தன்மை என்றால் அமெரிக்கதன்மையுடன் இந்தியத்தன்மையும் ஆஸ்திரேலிய , ஐரோப்பிய ஆப்பிரிக்கத்தன்மையுடன் கூடிய ஒரு உலகத்தன்மை. இந்தப் பாடலில் வலி இருக்கிறது ;எதிர்பார்ப்பு இருக்கிறது;கிண்டலுடன் சேர்ந்த ஏதோ ஒரு மறுக்கப்பட்ட உயிரின் கதறல் இருக்கிறது. எழுநூறு பக்க நாவல்களில் வரையறுக்க முடியாத வலியை பதினைந்து வரிகளில் இசையால் இவ்வளவு அழகாக கதறி அழ முடியும் போல.

ஆனால் இதே பாடலை வரிகளில் லேசான மாற்றங்களுடன் செலிப்ரேஷன் மிக்ஸ் என உலகக்கோப்பை கால்பந்துக்கான தீம் பாடலாகக் கேட்கையில் அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. ஒரே பாடல் எப்படி சோகத்தையும் சந்தோஷத்தையும் தர முடிகிறது? யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கை முறைக்கும் செயல்பாடுகளுக்கும் சோமாலியா போன்ற ஒரு தேசத்தின் வறுமைக்கும் சச்சரவுகளுக்கும் நூலிழையில் ஒரு தொடர்பு இருக்கிறது.அந்த தொடர்புகளை இசை வெளிப்படுத்துகிறது. இசைக்கு ஒரே ஒரு பாஷைதான் இருக்கிறதென மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.அது தான் -  வாழ்க்கை!

அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் தொடக்க விழாவில் கே'னான் வார்சேம் இந்தப் பாடலை பாடவிருக்கிறார். நீங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்தால் நேரில் அனுபவியுங்கள். இல்லையெனில் செட் மேக்ஸிலாவது தவற விடாதீர்கள்.

K'naan's Waving Flag



Celebration Mix

  1. MUTHU

    Friday, May 07, 2010

    மியூசிக் நல்லா தான் இருக்கு,ஏன் எனக்கு மட்டும் ஒரு வார்த்தை கூட புரியவில்லை

  1. ஜெய்லானி

    Friday, May 07, 2010

    பொருமையா பாக்கிறேன் அப்பதான் சரியா விளங்கும்,

  1. ஜெய்லானி

    Saturday, May 08, 2010

    ரெட்டை , முதலுக்கும் கடைசிக்கும் நடுவில மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுது, நம்பவே முடியல.

  1. ILLUMINATI

    Saturday, May 08, 2010

    மனிதனை இசை மாதிரி புரட்டிப்போட முடிஞ்ச விஷயம் கெடயாது.இது அதுல ஒண்ணு.நீங்க சொன்னது சரி.என்றைக்காவது இரவுல கேட்டா,தூக்கம் வர நிச்சயம் சிரமப்படும்.youth of the nation பாட்டு கேட்டு இருக்கிங்களா?

    http://www.youtube.com/watch?v=3oz4xFBKIpc&feature=related

  1. Veliyoorkaran

    Saturday, May 08, 2010

    Fantastic...!

    (யோவ் பட்டாப்பட்டி..நீனும் இதே மாதிரி எதையாச்சும் போட்டுட்டு தப்பிசிக்க..இல்லைனா இவனுக என்ன பேசிக்கரானுகன்னே நமக்கு புரியலங்கறது இவனுகளுக்கு தெரிஞ்சிரபோகுது...)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Saturday, May 08, 2010

    ரெட்டை.. என்னமோ சொல்ல வர.. என்னோட அறிவுக்கு.. ஹி..ஹி..
    எட்டலயப்பா.. நல்லா ”வெயிட் வெயிட்டா ”வார்த்தைகளை போட்டு அழகாத்தான் இருக்கு..

    எனக்கும் புரியமாறி எழுது..அப்பத்தானே ஏதாவது சொல்லமுடியும்..( ஏய்யா.. சமீபத்தில டோமர் இல்லாட்டி சாரு..எதையாவது பார்த்து பயந்துட்டியா?...சொல்லு.. ஓட்ட நான் வாரேன்...
    சாணிய சொல்லலே சாமி.. பேய சொன்னேன்..)
    .
    .
    .

  1. ஜெய்லானி

    Saturday, May 08, 2010

    //யோவ் பட்டாப்பட்டி..நீனும் இதே மாதிரி எதையாச்சும் போட்டுட்டு தப்பிசிக்க..இல்லைனா இவனுக என்ன பேசிக்கரானுகன்னே நமக்கு புரியலங்கறது இவனுகளுக்கு தெரிஞ்சிரபோகுது...)//

    அந்த ஸூஃபி கல்ம் அனா மாஃபீ மாலும்.

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Sunday, May 09, 2010

    @ரெட்டை
    .
    .
    .
    ஒரு வேளை.. நீர் பிரபல பதிவர் ஆகிவிட்டீரோ?..
    போட்ட கமென்ஸ்க்கு பதிலைக் காணோம்.. அதனால் எழுந்த சந்தேகம்..ஹா.ஹா


    .
    .
    .
    .

  1. Rettaival's Blog

    Sunday, May 09, 2010

    யோவ் என்ன பதில் போடறதுன்னு தெரியலைய்யா....

    இருடி மாப்ள...உன் பிளாகுல வந்து ஃபார்மாலிட்டி கமென்டா போட்டு உன்னை கொல்றேன்!

  1. jillthanni

    Monday, May 10, 2010

    அருமயான இசை நண்பா
    இப்பத்தான் கேட்டேன்
    நன்றி

  1. MUTHU

    Monday, May 10, 2010

    ரெட்டை நேற்று நான் தமிளிஷ் படிக்கும் போது கேபிள் ஷங்கர் சாரின்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் விமர்சனத்தில் முத்து என்ற I.D யில் ஒரு கமெண்ட் வந்து இருக்கிறது,ஆனால் அது நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் இதற்க்கு ஒரு வழி சொல்லவும்

  1. MUTHU

    Wednesday, May 12, 2010

    உங்கள் பதிவு அருமை

  1. MUTHU

    Wednesday, May 12, 2010

    சான்சே இல்லை

  1. MUTHU

    Wednesday, May 12, 2010

    எப்படி இப்படி எல்லாம்

  1. MUTHU

    Wednesday, May 12, 2010

    உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் தோணுது

  1. MUTHU

    Wednesday, May 12, 2010

    பார்மாலிட்டி நல்லா செய்து இருக்கிறேனா ரெட்டை

Post a Comment