RSS

ராவணன் பாடல்கள் மற்றும் மணிரத்னத்துக்கு ஒரு வார்த்தை!


 
மீண்டும் மணிரத்னம்..ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து! இந்த மூன்று பெயர்களைப் போஸ்டரில் பார்த்ததும்  பாடல்கள் வெளியீட்டன்று காலை முதல் வேலையாக கீஷ்டு கானத்தில் போய் காஸட் வாங்கி வந்து தீரத் தீர கேட்ட ஞாபகங்கள் வந்து தொலைக்கிறது. பதினைந்து வருடங்கள் கழித்தும் எதிர்பார்க்க வைக்கும் கூட்டணி என்பதே சின்ன ஆச்சரியம் தான். ஏனோ சமீபத்திய வரவான ராவணனில்  சின்னதாக ஒரு சலிப்பு எட்டிப்பார்ப்பது போல் முதலில் தோன்றியது. ஆனால் எப்போதும் போல கேட்க கேட்க வாக்மேன் முழுக்க ராவணனின் ஆக்கிரமிப்பு தான்!

 ரஹ்மான் லேசான முனகல் ஹம்மிங்கோடு ஆரம்பித்து வைக்க தொடர்ந்து வீரா வீரா என அதிரடியாக  விஜய் பிரகாஷுக்கு ஒரு பாடல். மனுஷனை இன்னும் கொஞ்ச காலம் எல்லோரும் குத்தகைக்கு  எடுத்து விடுவார்கள். காட்டு சிறுக்கி என அனுராதாவும் ஷங்கர் மகாதேவனும் பாடுவதை விட ஹிந்தியில் ரேகா பரத்வாஜும் ஜாவித்தும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.

 ஒரே ஒரு மெலடியான கள்வரே பாடலில் ஷ்ரேயா கோஷலுடன் பார்ட்னர்ஷிப் போட்டிருப்பது ரஹ்மான் அல்ல...வைரமுத்து. "வலி மிகும் இடங்கள்...வலி மிகா இடங்கள்" என்கிற வரியில் தன் சமகால பாடலாசிரியர்களுக்கு மீண்டும் ஒரு முறை ட்யூஷன் எடுத்திருக்கிறார்.அதிலும் ஷ்ரேயாவின் குரல் அக்னி வெயில் ஜிகர்தண்டா. இந்த ஆல்பத்தில் க்றிஸ் கெய்ல் சிக்ஸர் போல ஆடியன்ஸ் மத்தியில் விழுவது கார்த்திக் பாடியிருக்கும் உசுரே போகுதே பாடல்தான். இப்போதே நான் அழைக்கும் பலரின் மொபைல் காலர் ட்யூன் இந்த பாடல் தான். பாய்ஸ் படத்தில் வரும் சென்ட்ரல் ஜெயிலே பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாவிட்டாலும் பாடல் வரிகளால் மனதில் நிற்கிறது ! கோடு போட்டா மற்றும் கெடாக்கறி பாடலை எல்லாம் நன்றாக படமாக்கியிருப்பார்கள் என்று நம்புவோமாக.

வைரமுத்துவுக்கு :- கலைஞருடன் தொலைபேசுவதை பெருமையடிப்பதை விட்டு கள்வரே மாதிரி நாலு பாடல் எழுதுங்கள் ! புண்ணியமாகப் போகும். 

ரஹ்மானுக்கு :- என்னென்னவோ பரீட்சார்த்த முயற்சியெல்லாம் செய்கிறீர்கள். பலவிதமான சத்தங்களை அறிமுகம் செய்கிறீர்கள்! நல்லது தான்...ஆனால் உங்களுக்குப் பிறகு வந்த ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன் பாடல்களில் கூட சத்தங்கள் குறைந்து பாடல் கேட்கிறது.ஆனால் நீங்கள் இன்னும் பாடல் வரிகளை முழுவதுமாக ரசிக்க விட மாட்டேன் என்கிறீர்கள். ஒரு வேளை இது தான் உங்கள் சக்ஸஸ் ஃபார்முலாவா?

மணிரத்னத்துக்கு : எப்படிப்பட்ட பாடல்களையும்  படமாக்குவதில் தமிழிலேயே நீங்கள் தான் கில்லாடி. இந்த மாதிரி ஆல்பம் உங்கள் கையில் கிடைத்தால் சும்மாவா விடப் போகிறீர்கள். ஆனால்  இந்த தலைமுறை ரசிகர்கள் விரும்புவது உங்கள் இயக்கத்தில் "The Pianist" , "A Beautiful Mind"மாதிரியான படங்களை. ராவணன் போன்ற படங்களில் கூட இன்னும் எத்தனை காலத்துக்கு உங்கள் இயக்கத்தில் டூயட்டுகளையே பார்த்துக் கொண்டிருப்பது?

  
ரசிகர்களுக்கு : பயப்படாதீர்கள்! ராவணன் பாடல்கள் தமிழ் "குரு" போல டப்பிங் பாடல்கள் இல்லை.தைரியமாக கேட்கலாம் ,  தமிழிலும்!
*************************************************************************************
 1. ஹாய் அரும்பாவூர்

  Tuesday, May 18, 2010

  நிச்சயம் பாடல்கள் கேட்க்க கேட்க்க கேட்டுக்கொண்டே இருக்கேன் .இன்னும் சிறபபா இருக்கு

  விண்ணை தாண்டி வருவாயா பாடலே இன்னும் சலிப்பு தட்ட வில்லை அதற்குள் ராவணா பாடல் சூப்பர் பாட்டு

 1. ILLUMINATI

  Tuesday, May 18, 2010

  உண்மையை சொல்லப் போனால்,ராவணன் பாடல்கள் நன்றாக இருந்தாலும்,தமிழில் ஏதோ ஒன்று குறைகிறது. உசுரே போகுதே....வாவ்.என்ன வரிகள்!!வீரா வீரா,ஹிந்தி நெடி...

 1. கே.ஆர்.பி.செந்தில்

  Tuesday, May 18, 2010

  பாட்டும், விமர்சனமும் நன்று ....

 1. முகிலன்

  Tuesday, May 18, 2010

  கீஷ்டு கானம்? மதுரையா நீங்க??

  ராவணன் பாட்டை இண்டர்நெட்ல போட்டப்பறம் தான் கேக்கணும்.. :(((

 1. பட்டாபட்டி..

  Tuesday, May 18, 2010

  .
  .
  .
  நல்ல நடை.. நல்ல கருத்து..
  இந்த பாடல்கள் எந்த லிங்கில் கிடைக்கும் என சொன்னால், நன்றி உள்ளவனாகவும்,
  சான்றோனாகவும், சமூக நீதிக்காக உயிர் கொடுக்கும் நல்லோனாகவும்
  இருப்பேன் என இத் தருணத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...
  .
  .
  .

 1. ரெட்டைவால் ' ஸ்

  Tuesday, May 18, 2010

  நிச்சயம் பாடல்கள் கேட்க்க கேட்க்க கேட்டுக்கொண்டே இருக்கேன் .இன்னும் சிறபபா இருக்கு

  *************************************************
  யெஸ் அரும்பாவூர்!

 1. ரெட்டைவால் ' ஸ்

  Tuesday, May 18, 2010

  என்ன குறைஞ்சுதுன்னு கண்டுபுடிச்சு சொல்லு இலுமி...நானும் கொஞ்ச நாளா தலைய பிச்சுக்கிர்றேன்!

 1. ரெட்டைவால் ' ஸ்

  Tuesday, May 18, 2010

  கே.ஆர்.பி.செந்தில் said...

  பாட்டும், விமர்சனமும் நன்று ....
  ***********************************************
  Thanks KRP

 1. ரெட்டைவால் ' ஸ்

  Tuesday, May 18, 2010

  This comment has been removed by the author.
 1. ரெட்டைவால் ' ஸ்

  Tuesday, May 18, 2010

  பட்டு ...நீ பாட்டு கேக்கற ரகமில்லைன்னு இந்த மொத்த பதிவுலகத்துக்கே தெரியும்! பாட்டு பாடற ரகம்..(உன் பதிவுகளை சொன்னேன்..ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு ராகம்...(தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே..)பதிவு எழுதியே சிங்கப்பூர்ல பல நோயாளிகளை குணப்படுத்துறியாமே...கேள்விப்பட்டேன்!)2011 ல ஆட்சியை பிடிக்கிறதுக்கு பார்ப்பியா...அதை விட்டு எங்களை மாதிரி சின்னப் பசங்களோட சேர்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு!

 1. பட்டாபட்டி..

  Tuesday, May 18, 2010

  @ரெட்டைவால் ' ஸ் said...
  அதை விட்டு எங்களை மாதிரி சின்னப் பசங்களோட சேர்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு!

  //

  அப்ப அடுத்த பதிவுல, டோமர்ஸ்சும், பட்டாபட்டியும் உள்ளே வரக்கூடாதுனு , Take Diversion போர்ட் வைய்யி..

  அதுவரைக்கும் கும்மி தொடரும்..

 1. மோகன் குமார்

  Tuesday, May 18, 2010

  அட நான் கூட இப்ப தாங்க ராவணன் இசை விமர்சனம் எழுதிருக்கேன்..பாடல் வரிகள் புரியாத அளவு இசை ஆக்கிரமிப்பது பற்றி நீங்க சொன்னது சரி தான்

 1. ஜெய்

  Tuesday, May 18, 2010

  அடடா.. விக்னேஷ்.. ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டென்.. நான் என் நண்பர்கள்கிட்ட சொல்லற எல்ல விஷயங்களையும் எழுதி இருக்கீங்க.. கலக்கறீங்க.. ரஹ்மான் இசையை இவ்வளவு புரிஞ்சுக்கவே ரொம்பவே பொறுமையும் ஆர்வமும் வேணும்..

  // சின்னதாக ஒரு சலிப்பு எட்டிப்பார்ப்பது போல் முதலில் தோன்றியது. ஆனால் எப்போதும் போல கேட்க கேட்க வாக்மேன் முழுக்க ராவணனின் ஆக்கிரமிப்பு தான் //
  சமீபத்திய ரஹ்மான் இசையேல்லாமே இப்படிதான் இருக்குன்னு நினைக்கிறேன்.. அதுவும் ஒரு கலைதான்..

  // வலி மிகும் இடங்கள்...வலி மிகா இடங்கள்" என்கிற வரியில் தன் சமகால பாடலாசிரியர்களுக்கு மீண்டும் ஒரு முறை ட்யூஷன் எடுத்திருக்கிறார் //
  exactly

  // பாய்ஸ் படத்தில் வரும் சென்ட்ரல் ஜெயிலே பாடல் நினைவுக்கு வருவதை //
  எனக்கும் அதுவே தோன்றியது..

 1. ரெட்டைவால் ' ஸ்

  Tuesday, May 18, 2010

  ஜெய்...கருத்துக்கள் ஒத்துப்போவதில் மகிழ்ச்சி ! ஒவ்வொரு பாடலிலும் இன்னும் வெரைட்டி காட்டிக்கொண்டிருப்பது ரஹ்மான் தான்...!

 1. MUTHU

  Wednesday, May 19, 2010

  http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Raavanan.html

  பட்டு உனக்கு லிங்க்

 1. MUTHU

  Wednesday, May 19, 2010

  வைரமுத்துவுக்கு :- கலைஞருடன் தொலைபேசுவதை பெருமையடிப்பதை விட்டு கள்வரே மாதிரி நாலு பாடல் எழுதுங்கள் ! புண்ணியமாகப் போகும்.///

  அதே

 1. றமேஸ்-Ramesh

  Wednesday, May 19, 2010

  மிக நல்லா இருக்கு இடுக்கை.. ரஃமான் யோசிக்கணும் வைரவரிகள் இன்னும் மெருகேறணும் ...

 1. ரெட்டைவால் ' ஸ்

  Thursday, May 20, 2010

  நன்றி றமேஸ்..ஆமா தலைவா ...ரமேஷ் என்று எழுதினா சாமி கண்ணைக் குத்திடுமா...ஹி..ஹி...சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்...

 1. பட்டாபட்டி..

  Saturday, May 22, 2010

  அடப்போய்யா. ராமாயணத்தில வரும் ராவணன்னு நினைச்சு, குளிச்சு, சுத்தபத்தமா, முத்து கொடுத்த லிங்க் போனா.....சே..சினிமா பாட்டு..

  ( இனிமேல சொல்லிட்டு செய்...ஹி..ஹி)

 1. senthilkumar

  Tuesday, May 25, 2010

  where he{mani} found the broken statue {behind vikram}? its remembers kannatmil mutthamittal buddha statue ?

  ur views about the album makes everyone to listen.....

  bcos its meaningful overview

 1. Anonymous

  Tuesday, May 25, 2010

  //உங்களுக்குப் பிறகு வந்த ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன் பாடல்களில் கூட சத்தங்கள் குறைந்து பாடல் கேட்கிறது.ஆனால் நீங்கள் இன்னும் பாடல் வரிகளை முழுவதுமாக ரசிக்க விட மாட்டேன் என்கிறீர்கள்.//

  எனக்கும் இதே சந்தேகம் தான்..

  முதல் முறை வருகிறேன்..
  உங்கள் பதிவுகள் நன்றாகவும்
  சொல்ல வந்த கருத்துக்கள் தெளிவானதாகவும் உள்ளது.
  வாழ்த்துக்கள்.
  நம்ம பக்கமும் வரலாமே..

 1. ரெட்டைவால் ' ஸ்

  Wednesday, May 26, 2010

  நிச்சயம் பார்க்கிறேன் இந்திரா...!

 1. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

  Sunday, May 30, 2010

  பாட்டுகள் முதலில் கேட்கப் பிடிக்கவில்லை.. ஆனால் இப்போது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.. அதுவும் கள்வரே பாடல், ஸ்ரேயா கோஷல் குரலில், வைரமுத்துவின் வைர வரிகளில் மிளிர்கிறது.. வைரமுத்து மீண்டும் பெரிய கவிஞன் என்று நிரூபித்து விட்டார்.. ரஹ்மான் படத்துக்குப் படம் காட்டும் வித்தியாசம் அவரின் தொழில்பக்தியைக் காட்டுகிறது..

  நன்றி..

 1. ரெட்டைவால் ' ஸ்

  Sunday, May 30, 2010

  வருகைக்கு நன்றி பிரகாஷ்..வைரமுத்து நல்ல பாடலாசிரியர் மட்டுமே..கவிஞர் அல்ல என்பதே எனது கருத்து!

 1. venkatx5

  Tuesday, June 01, 2010

  நான் முதல் தடவை பாடல் கேட்டதை வச்சு பிளாக் எழுதிட்டேன்..
  http://vsmovi.blogspot.com/2010/05/blog-post_06.html

  ஆனா கேட்க கேட்க நல்லா இருக்கு..

 1. MUTHU

  Friday, June 04, 2010

  புது போஸ்ட் போடவில்லை என்றால் உன் ப்ளாக் hack செய்யப்படும்

Post a Comment