K'naan - Waving Flag - Road to South Africa!
பொதுவாகவே ரஹ்மானின் வருகைக்குப் பிறகு ஆஃப்ரோ பீட் இசையெல்லாம் கூட அவ்வளவு அன்னியமாகத் தெரிவதில்லை. உலகமயமாக்கம் சாதாரண இசை ரசிகர்களின் ரசனையில் கூட புகுந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.ம்யூசிக் கான்சர்ட்டுகளில் கேட்பதை விட ஒரு விளையாட்டு நிகழ்வின் ஓபனிங் செரிமனிக்காக அமைக்கப் படும் இசையை கேட்பது ஒன்றும் பிரமாதமானதாக இருக்காது. அங்கே விளையாட்டு பற்றிய உற்சாகமும் ஆர்வமுமே மிகுந்திருக்கும்.ஆனால் அதையும் தாண்டி சில பாடல்கள் நம்மைக் கட்டிப் போட்டு முணுமுணுக்க வைத்து விடும், ரிக்கி மார்ட்டினின் Cup of Life போல , க்வீனின் We will Rock you போல. இன்றைக்கும் ஒரு ஸ்டேடியத்தில் நீங்கள் பல்லாயிரக்கணக்கான ரசிர்களுடன் சேர்ந்து வீ வில் வீ வில் ராக் யூ என்று கத்திப் பாருங்கள். நிச்சயமாக ஜிவ்வென்றிருக்கும்.
மேலே குறிப்பிட்டது கே'னான் வார்சேம் எனும் சோமாலிய - கனடிய ராப் பாடகரின் பாடல் . இந்த பாடலின் ஸ்பெஷல் இதன் உலகத்தன்மை. உலகத்தன்மை என்றால் அமெரிக்கதன்மையுடன் இந்தியத்தன்மையும் ஆஸ்திரேலிய , ஐரோப்பிய ஆப்பிரிக்கத்தன்மையுடன் கூடிய ஒரு உலகத்தன்மை. இந்தப் பாடலில் வலி இருக்கிறது ;எதிர்பார்ப்பு இருக்கிறது;கிண்டலுடன் சேர்ந்த ஏதோ ஒரு மறுக்கப்பட்ட உயிரின் கதறல் இருக்கிறது. எழுநூறு பக்க நாவல்களில் வரையறுக்க முடியாத வலியை பதினைந்து வரிகளில் இசையால் இவ்வளவு அழகாக கதறி அழ முடியும் போல.
ஆனால் இதே பாடலை வரிகளில் லேசான மாற்றங்களுடன் செலிப்ரேஷன் மிக்ஸ் என உலகக்கோப்பை கால்பந்துக்கான தீம் பாடலாகக் கேட்கையில் அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. ஒரே பாடல் எப்படி சோகத்தையும் சந்தோஷத்தையும் தர முடிகிறது? யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கை முறைக்கும் செயல்பாடுகளுக்கும் சோமாலியா போன்ற ஒரு தேசத்தின் வறுமைக்கும் சச்சரவுகளுக்கும் நூலிழையில் ஒரு தொடர்பு இருக்கிறது.அந்த தொடர்புகளை இசை வெளிப்படுத்துகிறது. இசைக்கு ஒரே ஒரு பாஷைதான் இருக்கிறதென மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.அது தான் - வாழ்க்கை!
அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் தொடக்க விழாவில் கே'னான் வார்சேம் இந்தப் பாடலை பாடவிருக்கிறார். நீங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்தால் நேரில் அனுபவியுங்கள். இல்லையெனில் செட் மேக்ஸிலாவது தவற விடாதீர்கள்.
K'naan's Waving Flag
Celebration Mix
MUTHU
Friday, May 07, 2010
மியூசிக் நல்லா தான் இருக்கு,ஏன் எனக்கு மட்டும் ஒரு வார்த்தை கூட புரியவில்லை