ராவணன் பாடல்கள் மற்றும் மணிரத்னத்துக்கு ஒரு வார்த்தை!
மீண்டும் மணிரத்னம்..ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து! இந்த மூன்று பெயர்களைப் போஸ்டரில் பார்த்ததும் பாடல்கள் வெளியீட்டன்று காலை முதல் வேலையாக கீஷ்டு கானத்தில் போய் காஸட் வாங்கி வந்து தீரத் தீர கேட்ட ஞாபகங்கள் வந்து தொலைக்கிறது. பதினைந்து வருடங்கள் கழித்தும் எதிர்பார்க்க வைக்கும் கூட்டணி என்பதே சின்ன ஆச்சரியம் தான். ஏனோ சமீபத்திய வரவான ராவணனில் சின்னதாக ஒரு சலிப்பு எட்டிப்பார்ப்பது போல் முதலில் தோன்றியது. ஆனால் எப்போதும் போல கேட்க கேட்க வாக்மேன் முழுக்க ராவணனின் ஆக்கிரமிப்பு தான்!
ரஹ்மான் லேசான முனகல் ஹம்மிங்கோடு ஆரம்பித்து வைக்க தொடர்ந்து வீரா வீரா என அதிரடியாக விஜய் பிரகாஷுக்கு ஒரு பாடல். மனுஷனை இன்னும் கொஞ்ச காலம் எல்லோரும் குத்தகைக்கு எடுத்து விடுவார்கள். காட்டு சிறுக்கி என அனுராதாவும் ஷங்கர் மகாதேவனும் பாடுவதை விட ஹிந்தியில் ரேகா பரத்வாஜும் ஜாவித்தும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள்.
ஒரே ஒரு மெலடியான கள்வரே பாடலில் ஷ்ரேயா கோஷலுடன் பார்ட்னர்ஷிப் போட்டிருப்பது ரஹ்மான் அல்ல...வைரமுத்து. "வலி மிகும் இடங்கள்...வலி மிகா இடங்கள்" என்கிற வரியில் தன் சமகால பாடலாசிரியர்களுக்கு மீண்டும் ஒரு முறை ட்யூஷன் எடுத்திருக்கிறார்.அதிலும் ஷ்ரேயாவின் குரல் அக்னி வெயில் ஜிகர்தண்டா. இந்த ஆல்பத்தில் க்றிஸ் கெய்ல் சிக்ஸர் போல ஆடியன்ஸ் மத்தியில் விழுவது கார்த்திக் பாடியிருக்கும் உசுரே போகுதே பாடல்தான். இப்போதே நான் அழைக்கும் பலரின் மொபைல் காலர் ட்யூன் இந்த பாடல் தான். பாய்ஸ் படத்தில் வரும் சென்ட்ரல் ஜெயிலே பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாவிட்டாலும் பாடல் வரிகளால் மனதில் நிற்கிறது ! கோடு போட்டா மற்றும் கெடாக்கறி பாடலை எல்லாம் நன்றாக படமாக்கியிருப்பார்கள் என்று நம்புவோமாக.
வைரமுத்துவுக்கு :- கலைஞருடன் தொலைபேசுவதை பெருமையடிப்பதை விட்டு கள்வரே மாதிரி நாலு பாடல் எழுதுங்கள் ! புண்ணியமாகப் போகும்.
ரஹ்மானுக்கு :- என்னென்னவோ பரீட்சார்த்த முயற்சியெல்லாம் செய்கிறீர்கள். பலவிதமான சத்தங்களை அறிமுகம் செய்கிறீர்கள்! நல்லது தான்...ஆனால் உங்களுக்குப் பிறகு வந்த ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன் பாடல்களில் கூட சத்தங்கள் குறைந்து பாடல் கேட்கிறது.ஆனால் நீங்கள் இன்னும் பாடல் வரிகளை முழுவதுமாக ரசிக்க விட மாட்டேன் என்கிறீர்கள். ஒரு வேளை இது தான் உங்கள் சக்ஸஸ் ஃபார்முலாவா?
மணிரத்னத்துக்கு : எப்படிப்பட்ட பாடல்களையும் படமாக்குவதில் தமிழிலேயே நீங்கள் தான் கில்லாடி. இந்த மாதிரி ஆல்பம் உங்கள் கையில் கிடைத்தால் சும்மாவா விடப் போகிறீர்கள். ஆனால் இந்த தலைமுறை ரசிகர்கள் விரும்புவது உங்கள் இயக்கத்தில் "The Pianist" , "A Beautiful Mind"மாதிரியான படங்களை. ராவணன் போன்ற படங்களில் கூட இன்னும் எத்தனை காலத்துக்கு உங்கள் இயக்கத்தில் டூயட்டுகளையே பார்த்துக் கொண்டிருப்பது?
ரசிகர்களுக்கு : பயப்படாதீர்கள்! ராவணன் பாடல்கள் தமிழ் "குரு" போல டப்பிங் பாடல்கள் இல்லை.தைரியமாக கேட்கலாம் , தமிழிலும்!
*************************************************************************************
ஹாய் அரும்பாவூர்
Tuesday, May 18, 2010
நிச்சயம் பாடல்கள் கேட்க்க கேட்க்க கேட்டுக்கொண்டே இருக்கேன் .இன்னும் சிறபபா இருக்கு
விண்ணை தாண்டி வருவாயா பாடலே இன்னும் சலிப்பு தட்ட வில்லை அதற்குள் ராவணா பாடல் சூப்பர் பாட்டு