யாவுமாலான இவ்வுலகம்
வேதியியல் படிப்பித்தவர் அணுக்களாலானது என்றார்
இயற்பியல் ஆசிரியர் கதிர்களாலானது என்றார்
தமிழ் கற்பித்தவர் வார்த்தைகளாலானது என்றார்
வரலாறு பயிற்றுவித்தவர் சம்பவங்களானது என்றார்
புவியியல் போதித்தவர் கற்களாலானது என்றார்
கணிதம் கற்பித்தவர் எண்களாலானது என்றார்
தத்துவம் பேசியவர் எண்ணங்களாலானது என்றார்
நாடகம் கற்பித்தவர் காட்சிகளாலானது எனவும்
மதத்தைப் போதித்தவர் விதியாலனதெனவும் உரைத்தனர்.
நேற்றிரவு உலகம் கனவில் வந்தது.
எதனாலானதென கேட்டபொழுது
நகைத்தபடி கனவிலிருந்து அகன்றது உலகம்.
யாவுமாலான இவ்வுலகம் பொய்களாலும் ஆனது
*************************************************************************
முனைவ்வ்வர் பட்டாபட்டி....
Thursday, May 13, 2010
ரெட்டை, நமக்கு திருப்பி கிடச்சுட்டான்லே..
அதை கொண்டாட்டி, பதிவுலகம் நம்மளை மதிக்காது மக்கா..
எனவே..வரும் சனிக்கிழமை, சிங்கை மற்றும் சென்னையை சேர்ந்த
மாபெரும் பதிவர்கள்..கண்ணகி சிலை முன்,
கும்மியடிக்க கூடலாம் என பொதுக்குழு முடிவு செய்துள்ளது..