RSS

அங்காடி தெரு...பையா &.....



அங்காடி தெரு என்ற படம்.சுத்தி சுத்தி ஒரே தெரு.அதிலும் ஒரே பில்டிங்.சில மனிதர்கள் சில வாழ்க்கை. கலக்கி விட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் சில முகங்கள் மனதை விட்டு அகலவில்லையாதலால் இந்தப் படத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

1. இவ்வளவு பெரிய சென்னையில் அந்த தெருவை விட்டால் அவர்களுக்கு வேறு கதியே இல்லையா? ப்லஸ் டூ படித்தவர்களுக்கு ஹுண்டாயிலும் நோக்கியாவிலுமே வேலை கிடைக்கிறதே..!

2. உண்மையிலேயே அவர்கள் சாப்பிடும் இடமும் சாப்பிடும் முறையும்   அவ்வளவு கோரமானதாகவா இருக்கும்?

3. விக்ரமன் படங்களில் யாருக்கும் கெட்டதே நடக்காது..வசந்தபாலன் சார்..உங்கள் படங்களில் யாருக்கும் நல்லதே நடக்காதா?

4. அந்தக் கடையின் சூப்பர்வைசர் கஸ்டமர்கள் முன்னால் நாயகியையும் மற்றவர்களையும் அடிக்கடி அடித்துக் கொண்டே இருக்கிறார். இது கொஞ்சம் அதீதமாகப் படவில்லை?

5. இந்த படம் பார்த்த பின் தி.நகர் கடக்கும்போதெல்லாம் இந்தப் படமே ஞாபகத்துக்கு வந்து தொலைகிறதே... அது நம் எல்லோருடைய தோல்வியா இல்லை உங்கள் இயக்கத்தின் வெற்றியா?

சில மிகையான காட்சிகளை தவிர்த்துவிட்டால் அங்காடிதெரு ஒரு அரக்கத்தனமான அற்புதமான படம். இது மாதிரியான ஒரு குறிப்பிட்ட பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிற படங்களே விருதுகளை வெல்லும் என தோன்றுகிறது. குறிப்பாக அஞ்சலியின் எக்ஸ்பிரஷன்களும் நடிப்பும் நம் நாயகிகள் இன்னும் வெறும் அழகான பேக்குகள் இல்லை என காட்டுகிறது.

நாட்டின் அதிமுக்கியமான பிரச்சினைகளை பேசும் படங்களை விட நாம் கவனிக்க மறந்த ஒரு கடை சார்ந்த அரசியலையும் வாழ்க்கையையும் சொல்லும் அங்காடி தெரு நேராக நெஞ்சில் கடப்பாரையைக் கொண்டு குத்துகிறது. ஒருவிதமான எரிச்சல் கலந்த வலி அது.


வலி கூட தேவைதான் சில சமயங்களில், விருதுகளுக்காகவேனும்.

பையா

இந்தப் படத்தின் கதையை டைரக்டர் எந்த ஆங்கில படத்திலோ அல்லது ஹிந்தியிலோ அல்லது வேறு எந்த மொழிகளிலும் இருந்தோ எடுத்திருக்கவே முடியாது.காரணம் வேறொன்றுமில்லை ஜென்டில்மென்.... படத்தில் கதையே கிடையாது.இன்டர்வியூ போகும் ஹீரோவை தாதா சீண்ட அவரை ஹீரோ அடித்துவிட பதிலுக்கு தாதா துரத்த என்று பதினோராம் நூற்றாண்டில் வந்திருக்க வேண்டிய படம். இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வில்லன்கள் எவ்வளவு பெரிய இரும்புத் தடி கொண்டு அடித்தாலும் ஹீரோக்களுக்கு காயமே படாது....கஷ்டம்!

சமீபத்தில் நானும் நண்பரும் ஒரு ஏ.சி. பஸ்ஸில் வந்துகொண்டிருந்தோம். பயணிகள் சலசலவென்று பேசிக்கொண்டும் நெளிந்து கொண்டுமிருந்தார்கள். ஏதோ புது படம் போல.அருண்விஜய் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய எல்லாரும் மேல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். பயணிகளின் எரிச்சலைப் பார்த்து கண்டக்டர் படத்தை மாற்றினார். எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் எல்லோரும் அமைதியாகி படத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்தப் படம் - கரகாட்டக்காரன். தமிழ் ரசனை!
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, April 08, 2010

    அய்.. இங்கேயும் நாந்தான் 1st..

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, April 08, 2010

    என்னடா..வாலை..கொஞ்ச நாளா காணலனு யோசிச்சேன்..
    இப்பத்தான் புரியுது..
    இரண்டு படத்தையும், வெறுத்து போயி பார்த்திருக்க போலிருக்கு..

    பேசாம, என்னோட பாலிசிய பாலோ பண்ணு ரெட்டை..
    எந்த படத்தையும், ரிமோட் வச்சு, அரைமணி நேரத்தில பார்த்துடு..
    அதுல பாஸ் ஆனா, இன்னொருமுறை, ரிலாக்ஸ்டா பாரு..


    அப்படி நான் கடைசியா பார்த்தபடம்..ஹி..ஹி..இம்சை அரசன் 23ஆம் bla..bla..
    ஹா..ஹா..
    ( பின்குறிப்பு.. இன்னும் விண்ணை தாண்டி வருவாயா.. பார்க்கவில்லை..)

  1. ஜெயந்த் கிருஷ்ணா

    Thursday, April 08, 2010

    நன்றி சகோதரா, என் பணத்தை மிச்சப்படுத்தியதற்கு
    (பையா படம் இன்னும் பார்க்கவில்லை)

  1. Unknown

    Thursday, April 08, 2010

    வித்தியாசமான விமர்சனம்.

  1. நாடோடி

    Thursday, April 08, 2010

    அங்காடி தெரு விம‌ர்ச‌ன‌ம்(கேள்விக‌ள்) அருமை...

  1. ரோஸ்விக்

    Thursday, April 08, 2010

    "பையா" தமிழ் படமா...?? நான் ஹிந்தி படம்னு நினைச்சேன்.. ;-)

    ரெண்டும் பாக்கணும்...

    வித்தியாசமா எழுதப்பட்டிருக்கு ரெட்டை...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, April 08, 2010

    //வித்தியாசமா எழுதப்பட்டிருக்கு ரெட்டை...//

    யோவ்.. ரோஸ்விக்கு.. படிக்கும்போது, எழுத்துப்பட்டைனு படிச்சுட்டேன்.. ஏதாவது தெய்வ குத்தம் வந்துருமாய்யா?

  1. Rettaival's Blog

    Thursday, April 08, 2010

    யோவ் பட்டு... கொஞ்சம் பொறு...விஜய் படம் ஒன்னு வருது...வெளியூர்காரனை விட்டு உனக்கு டிக்கெட் எடுத்து அதைப் பாக்க வச்சி உன்னை டார்ச்சர் பண்ணலை...நான் ரெட்டை இல்லவே...

  1. Rettaival's Blog

    Friday, April 09, 2010

    நன்றி நாடோடி மற்றும் முகிலன்.
    ரோஸ்விக்கு... பையா சூப்பர் படம்லே..சிங்கப்பூர்ல வந்த உடனே பிளாக் எடுத்தாவது பாத்திரு..(இல்லாட்டி சாமிக் குத்தம் ஆயிடும்..கழுதை ஒரு பய போக மாட்டறானைய்யா...)

    பட்டு..சாமிக்குத்தத்துக்கு அஞ்சுர ஆளா நீயி!

  1. பின்னோக்கி

    Saturday, April 10, 2010

    மாஞ்சா வேலுவுக்கு... கரகாட்டக்காரன் நல்ல படந்தாங்க :)

  1. Rettaival's Blog

    Saturday, April 10, 2010

    அதே தான் பின்னோக்கி சார்..இன்னும் கரகாட்டக்காரன் மக்களை வசீகரிப்பதன் காரணம் புரியவில்லை

  1. MUTHU

    Sunday, April 11, 2010

    மன்னா எனக்கு ஒரு சந்தேகம்?

    என் மனைவி ஊருக்கு போகும் போதல்லாம், அங்காடி தெருவில் காட்டபட்டிருக்கும் ஏரியாவில் சென்று கையில் இருக்கும் பணத்தை காலி செய்து விடுவார்கள்,இப்போது அந்த படத்தை பார்த்த பின் அந்த பக்கமே போக மாட்டேன் என்று சத்தியம் செய்து உள்ளார்,இது அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியா,தோல்வியா?
    (அங்கே போக வில்லை என்றாலும் வேறு எங்கையாவது சென்று பர்சை காலி செய்து விடுவார்கள்)

  1. Anonymous

    Monday, April 12, 2010

    its boring yaa

  1. venkatx5

    Monday, May 03, 2010

    மச்சி.. சேம் பீலிங்.. நேரம் இருந்த வந்து பாருங்க..
    http://vsmovi.blogspot.com/
    படிச்சுட்டு மறந்துடாம கும்மி அடிச்சுட்டு போங்க சாமியலா..

  1. indian voice

    Friday, May 14, 2010

    nalla vela neeinum sura parkala ooooooou

Post a Comment