அங்காடி தெரு...பையா &.....
அங்காடி தெரு என்ற படம்.சுத்தி சுத்தி ஒரே தெரு.அதிலும் ஒரே பில்டிங்.சில மனிதர்கள் சில வாழ்க்கை. கலக்கி விட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. இந்த படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் சில முகங்கள் மனதை விட்டு அகலவில்லையாதலால் இந்தப் படத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
1. இவ்வளவு பெரிய சென்னையில் அந்த தெருவை விட்டால் அவர்களுக்கு வேறு கதியே இல்லையா? ப்லஸ் டூ படித்தவர்களுக்கு ஹுண்டாயிலும் நோக்கியாவிலுமே வேலை கிடைக்கிறதே..!
2. உண்மையிலேயே அவர்கள் சாப்பிடும் இடமும் சாப்பிடும் முறையும் அவ்வளவு கோரமானதாகவா இருக்கும்?
3. விக்ரமன் படங்களில் யாருக்கும் கெட்டதே நடக்காது..வசந்தபாலன் சார்..உங்கள் படங்களில் யாருக்கும் நல்லதே நடக்காதா?
4. அந்தக் கடையின் சூப்பர்வைசர் கஸ்டமர்கள் முன்னால் நாயகியையும் மற்றவர்களையும் அடிக்கடி அடித்துக் கொண்டே இருக்கிறார். இது கொஞ்சம் அதீதமாகப் படவில்லை?
5. இந்த படம் பார்த்த பின் தி.நகர் கடக்கும்போதெல்லாம் இந்தப் படமே ஞாபகத்துக்கு வந்து தொலைகிறதே... அது நம் எல்லோருடைய தோல்வியா இல்லை உங்கள் இயக்கத்தின் வெற்றியா?
சில மிகையான காட்சிகளை தவிர்த்துவிட்டால் அங்காடிதெரு ஒரு அரக்கத்தனமான அற்புதமான படம். இது மாதிரியான ஒரு குறிப்பிட்ட பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துகிற படங்களே விருதுகளை வெல்லும் என தோன்றுகிறது. குறிப்பாக அஞ்சலியின் எக்ஸ்பிரஷன்களும் நடிப்பும் நம் நாயகிகள் இன்னும் வெறும் அழகான பேக்குகள் இல்லை என காட்டுகிறது.
நாட்டின் அதிமுக்கியமான பிரச்சினைகளை பேசும் படங்களை விட நாம் கவனிக்க மறந்த ஒரு கடை சார்ந்த அரசியலையும் வாழ்க்கையையும் சொல்லும் அங்காடி தெரு நேராக நெஞ்சில் கடப்பாரையைக் கொண்டு குத்துகிறது. ஒருவிதமான எரிச்சல் கலந்த வலி அது.
வலி கூட தேவைதான் சில சமயங்களில், விருதுகளுக்காகவேனும்.
பையா
இந்தப் படத்தின் கதையை டைரக்டர் எந்த ஆங்கில படத்திலோ அல்லது ஹிந்தியிலோ அல்லது வேறு எந்த மொழிகளிலும் இருந்தோ எடுத்திருக்கவே முடியாது.காரணம் வேறொன்றுமில்லை ஜென்டில்மென்.... படத்தில் கதையே கிடையாது.இன்டர்வியூ போகும் ஹீரோவை தாதா சீண்ட அவரை ஹீரோ அடித்துவிட பதிலுக்கு தாதா துரத்த என்று பதினோராம் நூற்றாண்டில் வந்திருக்க வேண்டிய படம். இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வில்லன்கள் எவ்வளவு பெரிய இரும்புத் தடி கொண்டு அடித்தாலும் ஹீரோக்களுக்கு காயமே படாது....கஷ்டம்!
சமீபத்தில் நானும் நண்பரும் ஒரு ஏ.சி. பஸ்ஸில் வந்துகொண்டிருந்தோம். பயணிகள் சலசலவென்று பேசிக்கொண்டும் நெளிந்து கொண்டுமிருந்தார்கள். ஏதோ புது படம் போல.அருண்விஜய் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய எல்லாரும் மேல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். பயணிகளின் எரிச்சலைப் பார்த்து கண்டக்டர் படத்தை மாற்றினார். எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் எல்லோரும் அமைதியாகி படத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்தப் படம் - கரகாட்டக்காரன். தமிழ் ரசனை!
முனைவ்வ்வர் பட்டாபட்டி....
Thursday, April 08, 2010
அய்.. இங்கேயும் நாந்தான் 1st..