RSS

இப்படிக்கு சைந்தவி, W/O சிபி ( இன்னும் சில நூறு ஜென்மங்களுக்கு)
சைந்தவி புருஷனுக்கு,

சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்தையுமே உன் கிட்ட காண்பிச்சதில்ல. எழுதி எழுதி கிழிச்சுப்போட்டு மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டே அழறதுலையும் அப்படி ஒரு அல்ப சந்தோஷம்! தவிர நான் எழுதினா நீ கிண்டல் பண்ணி அழவைப்பேன்னும் தெரியும்!

என்னை எப்படிடா கண்டுபுடிச்ச நீ? மேட்சிங்கா டிரஸ் கூட பண்ணிக்கத் தெரியாத என்னை எப்படியெல்லாம் நீ மாத்தின தெரியுமா? நீ வந்து பொன்னு பார்த்துட்டுப் போன பின்னாடி தான் எனக்கே தெரியும் நானும் கொஞ்சம் அழகாதான் இருந்திருக்கேன்னு. பொன்னுங்களோட உள்ளுணர்வு ஒன்னு இருக்கு. கடவுளைவிட சரியா சொல்லிடும். உன்னைப் பார்த்தப்போ தோணுச்சுடா அது, நான் இந்த உலகத்துலயே ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு! அது பொய்யே ஆகலை , இந்த நிமிஷம் வரைக்கும்!

கல்யாணம் ஆன புதுசுல நான் எப்ப சண்டை போட வந்தாலும் விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து என்னை ஜெயிச்சிருக்க.என் மேல உனக்குக் கோபமே வராதாடா திருடா! உன் கூட ஒரு சண்டையாவது போடனும்னு மல்லுக்கட்டி நின்னப்பக் கூட பதிலுக்கு முத்தமாக் கொடுத்து என்னை காலி பண்ணிட்டியேடா ராஸ்கல்! என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எங்க எங்கயோ ஃபாரின்ல செட்டில் ஆனாங்க. ஆனா சொர்க்கத்துல செட்டில் ஆனது நான் மட்டும் தான்னு நினைக்கிறேன்!

எல்லாப் பொண்ணுங்களைப் போல பையன் தான் பொறக்கனும்னு பிடிவாதமா இருந்தேன். எல்லாப் புருஷனுங்க மாதிரி பொன்னுதான் பொறக்கனும்னு நீயும் பிடிவாதமா இருந்த. நான் தோத்துப் போனாலும் உன்னை ஏமாத்தலைடா! பாப்பு வந்தப்புறம் நீ கொஞ்சம் மாறிதான் போயிட்ட. வேலை முடிஞ்சு வந்ததும் முன்னெல்லாம் என் புடவைல முகத்தை துடைச்சிப்ப , வேர்வை இல்லைன்னாலும்.. பாப்பு வந்தப்புறம் வேலை முடிஞ்சு வந்ததும் நேரா அவளைக் கொஞ்சப் போயிடுவ! என் பொண்ணா இருந்தாலும் அவ மேல ஒரு சின்ன பொறாமையே இருந்துச்சு. இதை நான் என் அம்மக்கிட்ட சொன்னப்போ "ரெண்டு குழந்தைகளை வச்சு உன் புருஷன் எப்படி சமாளிக்கிறார்?"னு விஷமத்தனமா கேட்டா. அப்பாவும் பொன்னும் சேந்து கொஞ்ச நஞ்ச லூட்டியாடா அடிச்சீங்க. நீ ஆஃபீஸை கட் அடிச்சுட்டு அவளை ஸ்கூலை கட் அடிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் சினிமா பார்க்கப் போனீங்களே..எங்கயாவது உலகத்துல இந்தக் கூத்து நடக்குமா?

சமையல் பண்ணும்போது எத்தனை தடவை பின்னாடி பூனை மாதிரி வந்து இடுப்பைக் கிள்ளி சாம்பாரைக் கொட்ட வச்சுருப்ப! எத்தனை தடவ  சமையல்கட்டை  வெக்கப்பட வச்சிருப்ப! ஆனா அதுக்கெல்லாம் பதிலுக்கு உன்னை எப்படி பழி வாங்கிருக்கேன் தெரியுமா? பட்டுப்புடவை சரசரக்க மல்லிகைப்பூவோட உன் முன்னால குறுக்கும் நெடுக்கும் போய் இன்னிக்கு "அது" வேணாம்னு சொல்றப்போ உன் மூஞ்சி ஒரு தினுசா போகும் பாரு...அடடா...அதுக்காகவே இன்னும் நூறு குழந்தை பெத்துக்கலாம் போல இருக்கும். நீயும் என்னை சும்மாவா விட்ட? அதுக்காக பாவி என்னை எத்தனை முறை கெஞ்ச விட்டுருப்ப.. ராட்சஸா!

ஆமா ஹனி மூன்ல எனக்கு ஒரு ஒரு கிஃப்ட் கொடுத்தியே... இதுவரைக்கும் எந்த புருஷனாவது தன் புது பொண்டாட்டிக்கு அப்படி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பான்னு நினைக்கிற? அதை பிரிச்சுப் பார்த்ததும் என் முகத்துல வந்த நூறு கிலோ வெக்கம் என்னை விட்டு போறதுக்கு மூனு மாசம் ஆச்சுடா! நம்ம பாப்புவுக்கு விஷ்வா அந்த மாதிரி ஒரு கிஃப்ட் கொடுத்திருப்பானாடா. எனக்கு கிடைச்ச மாதிரி அவளுக்கும் அவன் சிபியா இருப்பானா ... தெரியல.. !

ஆரம்பத்துல நீ எங்கப்பாவை கிண்டல் பண்ணப்பயெல்லாம் எனக்கு அழுகையா வரும். கொஞ்ச நாள் கழிச்சு லேசா சிரிப்பு வந்தது..அப்புறமா பாப்பு கிட்ட அவ புருஷன் உன்னைக் கை காண்பிச்சு சிர்ச்சுக்கிட்டிருந்தப்போ நீ பார்த்துக்கிட்டுருந்த பார்வைல தான் எவ்வளோ பெருமிதம். எங்கப்பாவுக்கும் அன்னிக்கு அப்படிதானே இருந்திருக்கும். சே! அதுக்குப் போய் அழுதிருக்கேனே! யோசிச்சுப் பார்த்தா... கல்யாணம் ஆகி ஒரு நாலஞ்சு வருஷத்துல என்னை சேர்ந்தவங்க எல்லாரும் எனக்கு அன்னியமா தெரிய ஆரம்பிச்சாங்க. அந்தளவுக்கு நீ என்னை ஆக்கிரமிச்சிருந்த! நான் உனக்கு அப்படி என்னடா பண்ணினேன்? எதுக்காகடா என் மேல அவ்வளோ பாசத்தைக் கொட்டுன நீ? உலகத்துல இவ்வளவு சந்தோஷமா ஒரு மனைவி இருப்பாளாடா?

இத்தனையும் இப்ப எதுக்குன்னு கேக்கறியா?முதல்லயே சொன்னேனே "உள்ளுணர்வு". இதுவரைக்கும் என் உள்ளுணர்வு தவறினதே இல்லை. எனக்கு என்னமோ பயமாவே இருக்குடா. உனக்கு ஏதோ ஆயிட்டுருக்கு.எதையோ என் கிட்ட இருந்து மறைக்கிற. எதை என்கிட்ட இருந்து மறைக்க நினைச்சாலும் உன் கண்ணு காட்டிக் கொடுத்துடும். இன்னைக்குக் காலைல இருந்து உன் கண்ணு என் கிட்ட பொய் சொல்லத் திணறுது. உனக்கு ஏதாவது ஒன்னுன்னா அதுக்கப்புறம் இந்த உலகம் எப்படி சுத்தும்ங்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கில்லை. எப்பவும் கிழிச்சுப் போடுற லெட்டரை இந்த முறை கிழிச்சுப் போடணும்னு தோணலை.

இன்னும் என்னென்னவோ எழுத தோனுதுடா... நாம போன ஆல் இண்டியா டூர்..ஒரு தடவை நீ ரேடியோல ப்ரோகிராம் பண்ணது... நான் டைஃபாய்ட்ல கிடந்தது.. ஏதேதோ ஞாபகத்துக்கு வருது..அதெல்லாம் அப்படியே எழுதினா , அழுது லெட்டர் ஈரமாகிடும்.வேண்டாம்!

இப்போ என்னோட இந்த நினைவுகளை டேபிள் மேல வச்சிடறேன். ஒரு வேளை நாளைக்கு உனக்கு இதை படிக்கிற சந்தர்ப்பம் இருந்து என்னைக் கிண்டல் பண்ணாலும் பரவாயில்லை.

இப்போ உன்னைக் கட்டிப்புடிச்சுத் தூங்கணும் போல இருக்கு. உன்கிட்ட சொன்னா "போடி கெழவி..."ன்னு கிண்டல் பண்ணுவ. அதனால ஹனிமூன்ல நீ எனக்குக் குடுத்த கிஃப்டை கட்டிப் புடிச்சுத் தூங்க போறேன்.

இப்படிக்கு

உன் செல்ல பொண்டாட்டி

சைந்தவி

**************************************************************************************

இன்றைக்கு தான் எல்லா சடங்கும் முடிந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது இந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.அங்கிள் கடிதம் எழுதும்போது இந்தக் கடிதம் டேபிள் மேல்தான் இருந்திருக்கவேண்டும்.இதை அங்கிள் வாசித்திருப்பாரா?...தெரியவில்லை.என்ன மாதிரி அடர்த்தியான காதல் இது. வாழ்க்கையில் எதையும் நாம மிஸ் பண்ணிடக் கூடாது பாப்பு.இவங்களை நெனைச்சா சந்தோஷமா இருக்கு. ஆனா இப்பொ மனசு முழுக்க வெறுமையா இருக்கிறது நிஜம்.அழுது வீங்கின கண்களுடன் பாப்பு என் நெஞ்சில் முகம் புதைத்து தூங்கிக் கிட்டிருக்கா. இவளை நான் எப்படி காதலிக்கப் போறேன்? யெஸ்... ஆன்ட்டி கட்டிப்புடிச்சுத் தூங்கின அந்த ஹனிமூன் கிஃப்ட். அது என்னவாயிருக்கும்? "


கனத்த இதயத்துடன் தன் டைரியை மூடிய படி, பாப்புவை தலையணையில் கிடத்திவிட்டு , அரை வெளிச்சத்தில் அந்த கிஃப்டை தேடத்துவங்கினான் விஷ்வா.

பின் குறிப்பு : இது வெளியூர்காரன் எழுதிய மீ டூ சைந்தவி யின் தொடர்ச்சி. அவனைக் கேட்காமலே அவனுடைய சைந்தவி பற்றி எழுதியதற்கு அவன் என்னை மன்னிக்க வேண்டும். தொடர் பதிவு , தொடர் சிறுகதை என்றெல்லாம் சொல்லி உங்களை துன்புறுத்த விரும்பவில்லை. நண்பனின் மேலும் அவனுடைய படைப்பின் மேலும் உள்ள உரிமையில் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் செய்திருக்கிறேன். இந்தக் கதையையும் யார் வேண்டுமானாலும் தொடரலாம் வெளியூர்காரனின் அனுமதியோடு
 1. தோழி

  Saturday, March 20, 2010

  sainthavi kalakkaraanga ella idathulaiyum. super

 1. பட்டாபட்டி..

  Saturday, March 20, 2010

  ரெட்டை..
  நிசமா என்ன சொல்றதுனு தெரியலையா..
  கேரக்டர்ஸ், நேரில் பேச்ற மாறியிருக்கையா..

  சாரி.. எந்த வார்த்தைகள் போட்டு , உன்னையும் , வெளியூரையும்
  பாராட்டனுமுனு தெரியல..

  வெளியூரு, ரெட்டை............கலக்கிட்டீங்கலே................

 1. Veliyoorkaran

  Saturday, March 20, 2010

  மச்சான்..அப்போ சைந்தவி இப்போ உயிரோட இல்லையா..?...மனச கனமாக்கிட்டடா...!...

  சைந்தவி.....ப்ச்..!

 1. Veliyoorkaran

  Saturday, March 20, 2010

  நண்பர்கள்ல நெறைய பேரு சைந்தவியோட அடுத்த கடிதத்த எங்கிட்ட எழுத சொல்லி பின்னூட்டம் போட்டப்போ நான் மறுத்துருந்தேன்...காரணம் எழுத முடியாம இல்ல..எழுத விரும்பல..அவங்க ரெண்டு பெரும் சந்தோசமா இருந்தத மட்டுமே கற்பன பண்ண முடிஞ்ச என்னால அவங்க ஒருத்தர ஒருத்தர் இழந்து கஷ்ட்டபடரத பத்தி யோசிக்க முடியல.உண்மைய சொல்லனும்னா யோசிக்க தெரியல...ஆனா மச்சான், ரொம்ப அழகா கொண்டு போய் முடிச்சிருக்கடா..இப்பவும் நீ நேரடியா சொல்லல..ஆனா, நான் உருவாக்குன சைந்தவி கேரக்டர பத்தி என்ன விட அழகா உன்னால எழுத முடியுதுன்னு நெனைக்கரப்போ பொறாமையா இருக்கு..இன்னொரு விசயமும் தெளிவா புரியுது...

  எல்லா ஆண்களோட சைந்தவிக்களும் ஒரே மாதிரிதான் இருக்காங்க...!!

 1. Veliyoorkaran

  Saturday, March 20, 2010

  நண்பா ஒரு வாசகனா சில கேள்விகள்..

  *சிபி சைந்தவிக்கு குடுத்த அந்த ஹனிமூன் கிப்ட் என்ன...?
  *டைரில உள்ள வரிகள்ள விஷ்வா ரொம்ப சீரியஸ் கேரக்டர் போல சித்தரிக்கபட்ருக்கு...சைந்தவி சிபி காதல் தம்பதியரின் பொண்ணு எவ்ளோ ரொமாண்டிகா இருப்பா...விஷ்வா - பாப்பு .இவங்க ரெண்டு பெரும் நெஜமாவே சந்தோசமாதான் வாழ்றாங்களா...?
  *உன் கதைப்படி ரெண்டு பேர் இறந்ததும் ரெண்டு பேருக்கும் தெரியாதுன்னா..சைந்தவி எழுதுன லெட்டெர, சிபியும் சிபி எழுதுன லெட்டெர சைந்தவியும் கடைசி வரை படிக்கலையா...?
  *கடைசியா சைந்தவி சிபிய அன்னிக்கு நைட் கட்டிபுடிச்சுகிட்டாளா..?

  அவ கடைசி ஆசைப்படி...!!

 1. Veliyoorkaran

  Saturday, March 20, 2010

  @@@@இது வெளியூர்காரன் எழுதிய மீ டூ சைந்தவி யின் தொடர்ச்சி. அவனைக் கேட்காமலே அவனுடைய சைந்தவி பற்றி எழுதியதற்கு அவன் என்னை மன்னிக்க வேண்டும்.////


  நான் எழுத வந்ததே உன் எழுத்துக்களையும் கவிதைகளையும் வாசிச்சிட்டுதான் மச்சி...நீ சைந்தவிய பத்தி எழுதி உன்ன அறியாம என்ன நல்ல எழுத்தாளன்னு அங்கீகரிச்சிட்ட...ரொம்ப நன்றி நண்பா...இது எனக்கு கிடைத்த அங்கீஹாரம்..
  குருகிடேர்ந்து சிஷ்யனுக்கு..!!

 1. Veliyoorkaran

  Saturday, March 20, 2010

  @@@இந்தக் கதையையும் யார் வேண்டுமானாலும் தொடரலாம் வெளியூர்காரனின் அனுமதியோடு../////

  விஷ்வா - பாப்பு கதைய யாரு வேணாலும் எழுதுங்க..இன்னும் சொல்ல போனா தயவு செஞ்சு எழுதுங்க...இந்த கதைல வர்ற சைந்தவி சிபி பாப்பு விஷ்வா இவங்க எல்லாரும் எல்லாருக்கும் சொந்தம்..என் அனுமதி எல்லாம் தேவை இல்ல..அப்டி நீங்க எழுதுனீங்கன்னா சந்தோஷபடற மொதோ ஆள் நான்தான் இருப்பேன்..

  ஏன்னா பாப்பு....

  என் சைந்தவியோட பொண்ணு...!!

 1. பட்டாபட்டி..

  Saturday, March 20, 2010

  என்னாச்சுபா.. சனிக்கிழமை மார்னிங் ஷோ, செண்டிமண்ட் படமா ஓடிட்டு இருக்கு..

 1. Veliyoorkaran

  Saturday, March 20, 2010

  விடுயா பட்டாப்பட்டி..கொஞ்சம் எமோசன் ஆய்ட்டேன்..(இந்த பதிவ கலாய் ப்ரீ பதிவா அறிவிச்சிட்டா என்ன..)

 1. பட்டாபட்டி..

  Saturday, March 20, 2010

  ரைட்..
  நம்ம கூட்டாளிகளுக்கு சொல்ல வேண்டியது இல்ல..
  எதுக்கு எப்ப கலாய்க்கனுமுனு, நமக்கே சொல்லிக்
  கொடுக்கிற நிலையில, போயிட்டு இருக்காங்க..

 1. ரெட்டைவால் ' ஸ்

  Saturday, March 20, 2010

  தோழி said...
  sainthavi kalakkaraanga ella idathulaiyum. super
  ************************************************
  Thanks தோழி! சைந்தவி இன்னும் கொஞ்சம் எல்லா எடத்துலையும் கலக்கட்டும்!

 1. கண்ணகி

  Saturday, March 20, 2010

  இரண்டில் எது ...எதைவிடவும்....சொல்லமுடியவில்லை..

 1. புதுகைத் தென்றல்

  Saturday, March 20, 2010

  எழுத்து நடை நல்லாயிருந்தது.

  வாழ்த்துக்கள்

 1. பட்டாபட்டி..

  Saturday, March 20, 2010

  This comment has been removed by the author.
 1. பட்டாபட்டி..

  Saturday, March 20, 2010

  @கண்ணகி said...
  இரண்டில் எது ...எதைவிடவும்....சொல்லமுடியவில்லை..
  //

  புதுகைத் தென்றல் said...
  எழுத்து நடை நல்லாயிருந்தது.
  வாழ்த்துக்கள்
  //


  கண்ணகி மேடம் & புதுகை தென்றல்..
  வருகைக்கு நன்றி..வெளியூரு மற்றும் ரெட்டை நல்லா எழுதுவாங்க..
  என்ன.. சில சமயம் தமாசுக்கு கலாய்பார்கள்..( சீரியசா எடுத்துக்கொள்ள வேண்டாம்..)

  மீண்டும் சொல்கிறோம்...வருகைக்கும் , மறுமொழிக்கும் நன்றி..

 1. மங்குனி அமைச்சர்

  Saturday, March 20, 2010

  ஆஹா................... , ரெட்ட, வெளியூரு ஆள்லாளுக்கு போட்டி போட்டு கலகுரின்களே ......

 1. பிரியமுடன்...வசந்த்

  Saturday, March 20, 2010

  ரெட்டை வால் சார் க்ளாஸ்...

  மாப்ள அங்க பட்டைய கெளப்பிருந்தான்

  நீங்க இன்னும் சூப்பரா எழுதியிருக்கீங்க

  சீக்கிரம் மேரேஜ் பண்ணிட்டு சீக்கிரம் புள்ளை குட்டிகளை பெத்துட்டு சீக்கிரம் கிழவன் கிழவியா ஆகணும்போல இருக்கு பாஸ்.. கிளாஸிக்...

 1. ஆரபி

  Saturday, March 20, 2010

  Simply amazing... Keep on writing friends. Looking forward to see more articles... :)

  //இன்றைக்கு தான் எல்லா சடங்கும் முடிந்தது. வீட்டை சுத்தம் செய்யும் போது இந்தக் கடிதம் என் கைக்குக் கிடைத்தது.//

  True love never dies...
  They will be living in heaven happily now....

 1. ஆரபி

  Saturday, March 20, 2010

  This comment has been removed by the author.
 1. பிரியமுடன்...வசந்த்

  Saturday, March 20, 2010

  தொடர் கதைன்னா இதுதான் ரொம்பவும் நேச்சரா வெளிய்யுரும் நீங்களும் எழுதுனது ஒத்துப்போகுது கதாபாத்திரம் ஸ்டைல் எல்லாத்திலயும்...

  அப்பிடியே பட்டாப்பட்டியாரையும் புடிச்சு உள்ளார போடுங்க...காமெடியில் பட்டய கெளப்புறவரு இது மாதிரியும் எழுதி பட்டய கெளப்பட்டும் வாழ்த்துக்கள்...

 1. Veliyoorkaran

  Saturday, March 20, 2010

  @@@@ஆரபி said...
  True love never dies...
  They will be living in heaven happily now....///

  சைந்தவி - சிபி வாழ்ந்தத நீனும் நானும் நெஜம்னு நம்புன மாதிரி இப்போ எல்லாரும் நம்பறாங்க..அதுக்கு ஆதாரம் ஆரபியோட இந்த வரிகள்.

  ரொம்ப நெகிழ்வா இருக்குடா..!

 1. kanavugal

  Saturday, March 20, 2010

  எப்பே.. இப்படி ரெண்டு பெரும் சேர்ந்து எங்கள பாடாபடுத்துறீங்களே.... இதுக்கு எப்படி பின்னூட்டம் எழுதுறதுன்னே புரியலப்பே... அருமையா இருக்கு... சீக்கிரம் யாராவது தொடருங்க... தொடரட்டும் உங்க ரெண்டு பேரோட சேட்டையும்.....

 1. முகிலன்

  Saturday, March 20, 2010

  இது ரெட்டை வால்ஸ் எழுதின மாதிரியே இல்ல. வெளியூரே ரெட்டை ப்ளாக்ல வந்து எழுதின மாதிரி இருக்கு..

  ரொம்ப நல்லாருக்கு. தொடரலாமான்னு யோசிச்சாலும், நல்ல இருக்குற ஒரு கதை(?!)யை கெடுத்துராதடா இடியட் உள்ள என்னவோ இடிக்குது.. :))

 1. பட்டாபட்டி..

  Saturday, March 20, 2010

  @பிரியமுடன்...வசந்த் said...
  தொடர் கதைன்னா இதுதான் ரொம்பவும் நேச்சரா வெளிய்யுரும் நீங்களும் எழுதுனது ஒத்துப்போகுது கதாபாத்திரம் ஸ்டைல் எல்லாத்திலயும்...
  அப்பிடியே பட்டாப்பட்டியாரையும் புடிச்சு உள்ளார போடுங்க...காமெடியில் பட்டய கெளப்புறவரு இது மாதிரியும் எழுதி பட்டய கெளப்பட்டும் வாழ்த்துக்கள்...
  //

  அண்ணே.. எல்லோரையும் சும்மா டமாசுக்கு கலாய்க்கிறவன் நானு..
  கதையோட கருத்து கெட்டுடக்கூடாதுனு எவ்வளவு அழகா, அமைதியா இருக்கேன்..
  என்னைய வேணா உள்ள போடுங்க.. ஆனா, இதுல வேணானே..
  வருகைக்கு நன்றிங்கண்ணே..

 1. பட்டாபட்டி..

  Saturday, March 20, 2010

  @ரெட்டை
  @வெளியூரு..

  யோவ்.. இன்னக்கு பூரா யோசிச்சேனய்யா..
  என்னானு கமெண்ட் போடுவதுனு..?


  “எல்லாரையும் சலம்பல் பண்ணிகிட்டு இருந்த என்னை..ரெண்டு பேரும் சேர்ந்து , கையக் கட்டிப்போட்டீங்க பாரு..
  அங்கதான்லே நிக்கிறீங்க... “


  உங்களுக்கு பட்டாபட்டியின் சல்யூட்..
  மற்றும் மனமார்ந்த நன்றி ....
  ஆனா அடுத்த பதிவுல கண்டிப்பா வருவேன்..


  ( இது எனக்கே நான் பாடிக்கிட்டது..ஹி..ஹி..)
  தென் பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலெ
  மான் போல வந்தவனை யார் அடிச்சாரோ.. யார் அடிச்சாரோ..
  .

 1. Veliyoorkaran

  Saturday, March 20, 2010

  @@@முகிலன் said...
  இது ரெட்டை வால்ஸ் எழுதின மாதிரியே இல்ல. வெளியூரே ரெட்டை ப்ளாக்ல வந்து எழுதின மாதிரி இருக்கு..///

  மன்னிக்கணும்..சைந்தவி எழுதற மாதிரியே இருக்கறதால அது என் ஸ்டைல்ல இருக்கற மாதிரி உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்...இத ரெட்டைவால்சுக்கு கிடைத்த பாராட்டா நான் எடுத்துக்கறேன்....காம்ப்ரமைஸ் பண்ணிக்காம சைந்தவிய சைந்தவியாவே விட்டதுக்கு நன்றி ரெட்டைவால்ஸ்..!!

 1. ஜெய்லானி

  Saturday, March 20, 2010

  //( இது எனக்கே நான் பாடிக்கிட்டது..ஹி..ஹி..)
  தென் பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலெ
  மான் போல வந்தவனை யார் அடிச்சாரோ.. யார் அடிச்சாரோ..//

  ச்சொ...ச்சொ..........ச்சொ

 1. ரோஸ்விக்

  Saturday, March 20, 2010

  போங்கடா படவாக்களா...
  காமெடிலையும், காதல்லையும், கலாய்க்கிரதுலையும் இவ்வளவு பெரிய ராட்சசன்களா இருப்பீங்கன்னு தெரியாதுடா...

  பட்டாப்பட்டி நானும் கையை கட்டிக்கிட்டு உம்ம கூட சேர்ந்து உட்காருகிறேன்...

 1. ரோஸ்விக்

  Saturday, March 20, 2010

  இப்படி ஒரு புருஷன்....
  இப்படி ஒரு பொண்டாட்டி நமக்கு இல்லையேன்னு வீடுகள்ல சண்டைய உருவாக்கி விட்டுருவீங்க போலையே...

  (ஆண்கள் எல்லாம் சிபியா வாழ முயற்சிப்போம்... பெண்கள் எல்லாம் சைந்தவியா வாழ முயற்சியுங்கள்...)

 1. VARO

  Saturday, March 20, 2010

  அண்ணாச்சி பட்டை அண்ணாச்சி! கலக்கல் இலங்கையில் சைந்தவி ஜுரம் சுழட்டி சுழட்டி அடிக்குது...

 1. Thinks Why Not

  Saturday, March 20, 2010

  என்ன வெளியூர்காரரே எல்லாருடைய வலையிலயும் போய் ரெட்டைவாலுக்கு அட்வர்டஸ்மன்ட் பண்ணுறீங்க போல...

  ரெட்டைவால் ஓரே வார்த்தை சூப்பருங்கோ...

 1. கன்கொன் || Kangon

  Saturday, March 20, 2010

  கலக்கல்....
  வெளியூர்க்காரன் இதை வாசித்து சந்தோசப் பட்டிருப்பார்...

  கலக்கல்...
  உண்மையான காதல் உணர்வுகளை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்...
  சொல்ல வார்த்தைகள் இல்லை....
  கலக்கல்....

 1. கன்கொன் || Kangon

  Saturday, March 20, 2010

  //(ஆண்கள் எல்லாம் சிபியா வாழ முயற்சிப்போம்... பெண்கள் எல்லாம் சைந்தவியா வாழ முயற்சியுங்கள்...) //

  அப்படியே வழிமொழிகிறேன்....

 1. ILLUMINATI

  Saturday, March 20, 2010

  ரொம்ப நன்றாக இருந்தது ரெட்டை.......
  உங்களோட அகல்யா பதிவுக்கு அடுத்து எனக்கு பிடிச்சது இது தான்.இதுக்கு அடுத்தது என்னவா?வெளியோட sparkling personality பத்தி நீங்க எழுதுன அந்த பதிவே தான்.ஏன் பாஸு,இதுக்கு எழுதுன மாதிரி அதுக்கு அடுத்த பார்ட் எழுத முடியுமா? :)

  யய்யா ரோசு,பட்டு, உங்களோட நானும் வந்து ஓரத்துல குந்திக்கிறேன் ராசாக்களா.......

 1. Anonymous

  Saturday, March 20, 2010

  thoezhaa !
  nee ezuthuvaay enRu theriyum - athai unnO sutrithirinhtha naatkaLil paarththu irukkiRaen
  aanaal inRu - nhii en nhaNpan enpathil perumai

  inhtha - katitham - enum pataippu en mana aaLaththil ottikkondathu..

  anputan
  sangiith

  §¾¡Æ¡ !
  ¿£ ±ØÐÅ¡ö ±ýÚ ¦¾¡¢Ôõ - «¨¾ ¯ý§É¡ ÍüÈ¢¾¢¡¢ó¾ ¿¡ð¸Ç¢ø À¡÷òÐ þÕ츢§Èý
  ¬É¡ø þýÚ - ¿£ ±ý ¿ñÀý ±ýÀ¾¢ø ¦ÀÕ¨Á

  þó¾ - ¸Ê¾õ - ±Ûõ À¨¼ôÒ ±ý ÁÉ ¬Çò¾¢ø ´ðÊ즸¡ñ¼Ð..

  «ýÒ¼ý
  ºí¸£ò

 1. VARO

  Sunday, March 21, 2010

  I love u so much… சைந்தவி பொண்ணே! (A/U)

  http://shayan2613.blogspot.com/2010/03/i-love-u-so-much-au.html

  வாங்க வாத்தியாரே, படிச்சுப்பாருங்க… ஏதோ என்னால முடிஞ்சது.

 1. senthilkumar

  Sunday, March 21, 2010

  from this story u and velliyurkaran tie a beautiful rettai jadai. many questions are arising from this story so continue..... another letter but don't tell the segret of gift.finally two bachlors made a touching wonderful end part of couple's life.

  thambi kaditha illakkiyethuleyum pinni pedal edukkareda.i like verasality in your writing

 1. ரெட்டைவால் ' ஸ்

  Sunday, March 21, 2010

  வந்து படித்து மறுமொழியிட்ட அனைத்து வலை நண்பர்களுக்கும் எனது சாத்வீகமான நன்றிகள். எனக்கும் என் தூக்கத்தைக் கெடுக்கிற அஞ்சலி என்கிற கேரக்டர் பற்றி நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது.அவள் முற்றிலும் வேறானவள்.அவளும் கற்பனை தான்.அவளைப் பற்றியக் குறிப்புகளை பிறகு விரிவாக எழுத உத்தேசம்.

  அவளுக்கும் சைந்தவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. சைந்தவி என்ற பெயரும் அவளும் வெளியூர்காரனின் கற்பனை.அதனாலேயே சைந்தவி என்கிற கேரக்டரை நான் வெளியிலிருந்து பார்த்தேன். தவிர இது ஒரு கதையின் நடு அத்தியாயம் போல எழுத வேண்டும் என்கிற ஆசையினால் எழுதப் பட்டது. ஏனெனில் இதை யாராவது தொடர்வார்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. அதனால் இதில் கொஞ்சம் வெளியூர்காரனின் சாயல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து இதை எழுதி பாதிக்கு மேல் வெட்டி விட்டேன்.

  பதிவெழுத வந்த பிறகு தொடர் பதிவு என்கிற விஷயம் என்னை அரித்துக்கொண்டே இருந்தது. வெறுமனே நண்ப்வர்களை மட்டும் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு படைப்பின் மேல் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ எல்லோரும் அதை தொடர வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. இன்றைக்கு வரோ என்பவர் என்னைத் தொடர்ந்திருக்கிறார். இதில் ஒரு நல்ல விஷயம் , கருவை ஒவ்வொருவர் கையாளும்போது அதற்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. அது அந்தக் கருவை முதன் முதலில் எழுதியவருக்கு செய்யப் படும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.

  நன்றி
  வசந்த்
  புதுகை தென்றல்
  ஆரபி
  கண்ணகி
  முகிலன்
  கனவுகள்
  கன்கொண்
  Thinks y not
  பட்டு, இலுமி , ரோஸ்விக் , மங்குனி ஜெய்லானி மற்றும் எல்லாருக்கும்!

  என்னுடைய ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் வரோதயன்!

 1. Veliyoorkaran

  Sunday, March 21, 2010

  @@@@ரெட்டைவால் ' ஸ் said...
  பதிவெழுத வந்த பிறகு தொடர் பதிவு என்கிற விஷயம் என்னை அரித்துக்கொண்டே இருந்தது. வெறுமனே நண்ப்வர்களை மட்டும் அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு படைப்பின் மேல் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ எல்லோரும் அதை தொடர வேண்டும்..///

  Beautifulll..! I too feel the same..!..

  வரோவோட பதிவ படிச்ச்சப்ரம் தெரிஞ்சது...
  எல்லோரோட சைந்தவிக்களும் வேற வேற மாதிரியானவங்க...என்னோட முந்தய கருத்து தப்புன்னு...சைந்தவிகாக ஒரு எழுத்தாளனா நீ ரொம்ப காம்ப்ரமைஸ் பண்ணிருக்க... ரொம்ப நன்றி ரெட்டைவால்ஸ்..!!.இவன் --
  சைந்தவியிலிருந்து முற்றிலும் வேறு விதமான அஞ்சலியின் காதலை ரெட்டைவால்சின் தளத்தில் வாசிப்பதற்கு காத்திருக்கும் முதல் வாசகன்...!!

 1. அப்பாவி

  Sunday, March 21, 2010

  wow .. wonderful,you have a wonderful place in the world with your unique writing.i read all the writers book,every one will carry some stereo material in all their creations.but you , i found every thing is a unique one , and with a different flow. you have a bright full future in your life.
  congrats.

 1. ரெட்டைவால் ' ஸ்

  Monday, March 22, 2010

  இதை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்! Thank you so much appavi!

 1. potkody

  Wednesday, March 24, 2010

  superunka....
  thaankavae mudiyalai

 1. ஜெய்லானி

  Sunday, March 28, 2010

  #####
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

  ########

 1. Muthu

  Sunday, March 28, 2010

  மிகவும் அருமையான பதிவு.என் மனதை மிகவும் கவர்ந்த அருமையான எழுத்து நடை,நண்பா நீ மென் மேலும் வளர இறைவனை வேண்டி கொள்கின்றேன்

 1. indian voice

  Monday, March 29, 2010

  rettai ,enna solrathune thriyalada kallkiteengada

 1. பட்டாபட்டி..

  Tuesday, March 30, 2010

  @Muthu said...
  மிகவும் அருமையான பதிவு.என் மனதை மிகவும் கவர்ந்த அருமையான எழுத்து நடை,நண்பா நீ மென் மேலும் வளர இறைவனை வேண்டி கொள்கின்றேன்
  //

  நல்ல வேளை.. முத்து.. கொஞ்சம் ஸ்பீடா படிச்சுபுட்டு.. ஏன் ’முத்து இறைவவனடி சேர வேண்டுகிறாரு’னு?.. யோசிச்சேன்..

  இதுல வேற..இவ்வளவு பழகிட்டு.. இந்த உதவி கூட செய்யாட்டி, நாங்க என்னய்யா மனுச ஜாதினு நினைச்சுட்டு, வெளியூருக்கு போனைப்போட டயல் பண்றேன்..’மனசு ஸ்டாப்னு சொல்லுது..’

  அப்புறம் நிதானமா படிச்சா, வேண்டுகிறேனு இருக்கு.. நல்ல வேளையப்பா...

 1. அஷீதா

  Friday, April 02, 2010

  மிகவும் அருமையான கதை...என் மனதை மிகவும் நெகிழ வைத்தது உங்களின் எழுத்து நடை...உங்கள் கதையின் காட்சிகள் என் கண் முன் விரிகின்றது.

  வாழ்த்துக்கள்!

 1. வெறும்பய

  Saturday, April 03, 2010

  மனதை தொட்ட பதிவு.
  வாழ்த்துக்கள்......

 1. பனங்காட்டான்

  Tuesday, April 06, 2010

  எழுத்தும் கற்பனையும் முதல் தரம். நீங்கள் இதுவரை முன்னணிப் பத்திரிக்கைகளில் எழுதாதது ஆச்சரியமே (ஒருவேளை எழுதி இருக்கிறீர்களோ என்று தெரியவில்லை)..வாழ்த்துக்கள் மற்றும் நன்றி! (ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்ததற்கு)

 1. Muthu

  Tuesday, April 06, 2010

  பட்டுவை சொல்லி புட்டு நீயும் இன்னும் பதிவை மாற்றவில்லையா!!

 1. மைனர் குஞ்சு

  Wednesday, April 07, 2010

  This comment has been removed by the author.
 1. Zero to Infinity

  Sunday, April 25, 2010

  GREAT.....GREAT..........GREAT.

 1. கிறிச்சான்

  Sunday, May 30, 2010

  கதைக்கு தொடர்ச்சி எழுதி ஆளாளுக்கு நெஞ்ச நக்குறாங்கயா...Nice stories

 1. varmajiny

  Thursday, June 17, 2010

  superb..

 1. எம்.ஞானசேகரன் / Gnanasekaran.M

  Tuesday, February 21, 2012

  மிகவும் ரசித்துப் படித்த பதிவு! வாழ்த்துக்கள்

Post a Comment