RSS

ஹோசான்னா ! விண்ணைத் தாண்டி வந்தாச்சே


தமிழ் சினிமாவுக்கு நல்ல பேய் ஏதாவது பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறதா என தெரியவில்லை. வித்தியாசமான Genre படங்கள் வெளிவந்து எல்லாரையும் தியேட்டருக்குள் இழுக்கின்றன. ஒரு ஃபான்டஸி ஃபிக்ஷன், ஒரு வங்கி கொள்ளை, ஒரு spoof ,கோவா என படங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை! சமீபத்தில் அப்படி ஆச்சர்யப் படுத்தியது விண்ணை தாண்டி வருவாயா என்னும் ஒரு புதுக்கவிதை.

மழை நேரத்தில் ஸ்பென்ஸர் பிளாசா வாசலில் உட்கார்ந்து கொண்டு காதலியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல படம் நெடுக ஒரு சாரல் அடித்துக் கொண்டே இருந்தது. கௌதம் நல்ல படம் எடுக்கிறாரோ இல்லையோ , காதலை வெறி கொண்டு ரசித்திருக்கிறார். காதலின் தோல்வியை படு எதார்த்தமாக திரையில் சித்திரம் வரைந்திருக்கிறார்.

கௌதம் நிச்சயமாக ஏதோ ஒரு கேட்டில் நின்று கொண்டு ரசிக்க ரசிக்க சைட் அடித்திருக்க வேண்டும்! அவரது முதல் காதல் அமெரிக்கா பறந்திருக்க வேண்டும். ஏதோ ஒன்று..நமக்கு நல்ல படம் கிடைக்கிறதே! இரண்டே கேரக்டர்கள்..பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் சலிப்பு தட்டவில்லை. காதலும் காதல் சார்ந்த இடங்கள் மட்டுமே லொகேஷன்களாக வருகின்றன.சொட்டச் சொட்டக் காதல், பொங்கி வழிகிற காதல் என ... கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் பல இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார்கள்.ஒரு சில இடங்களில் டக் அவுட் ஆகியிருக்கிறார்கள்.

எங்கெல்லாம் படம் கிண்டலடிக்கப் படும் சூழ்நிலை இருக்கிறதோ அங்கு கௌதமே கிண்டல் செய்து கொள்வது புத்திசாலித்தனம். த்ரிஷாவின் funny walk ... த்ரிஷா கல்யாண சீன்கள் ...கடைசியில் படத்தின் ரிசல்ட் பற்றி பேசும் சீன்கள் எல்லாம் ஜாலி கேலிகள்.

மிகவும் ஆச்சர்யம் சிம்பு! குறிப்பாக அமெரிக்காவில் பார்க்கில் உட்கார்ந்து த்ரிஷாவிடம் பேசும் காட்சி.உங்களுக்கு இவ்வளவு நடிக்க வருமா சிம்பு? இதே போல நாலு படம் நடித்தீர்களானால் உங்களை ரசிப்பவன் என்று தைரியமாக வெளியில் கூறிக்கொள்ளலாம் உங்கள் ரசிகர்கள். அதே போல் ஒரே எக்ஸ்பிரஷனை வைத்துக்கொண்டு ஒப்பேற்றி வந்த த்ரிஷா மற்ற டைரக்டர்களுக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். வெறுமனே டூயட் பாட மட்டும் கூப்பிடாதீர்கள் என்பதே அது!

ஒளிப்பதிவும், காஸ்ட்யூம்ஸும் இசையும் பொருந்தியிருக்கிறது படத்துடன். ஆனால் , அமெரிக்கா , அந்த டான்ஸர்கள், கைகோர்த்துக் கொண்டு ஊர்சுற்றும் ஒரு டூயட் பாடல் என பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் தவிர்த்துவிடுங்கள் கௌதம்.சலிக்கிறது!

படத்தில் ஒரு விரசம் இல்லை, ஒரு முகம் சுழிக்கவைக்கிற காட்சிகள் இல்லை.இந்த படத்துக்கு ஏன் யூ/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் என தெரியவில்லை. சில முத்தக் காட்சிகள்..அதுவும் ராணி 6 ராஜா யாரு பார்க்கும் தமிழ் நெஞ்சங்களுக்கெல்லாம் இது ஜுஜுபி. நம் சென்சார் அதிகாரிகளுக்கு வரலாற்று ரீதியாகவே ஏதோ பிரச்சினை போல.

எத்தனையோ ரயில் கிளைமாக்ஸ் படங்களை ஆதரித்த தமிழ் ரசிகர்கள் இந்த படத்தின் கிளைமேக்ஸுக்காகவும் நிச்சயம் ஆதரிப்பார்கள்.

Congrats to Karthik, Jessy and Gowtham!
  1. Unknown

    Monday, March 01, 2010

    நல்லா எழுதியிருக்கீங்க பாஸ். உங்க விமர்சனத்துக்காகவே படம் பாக்கலாம் போலயே..

    எனக்கும் சிம்புவை கொஞ்சம் பிடிக்கும். ஆனா இத்தனை நாள் அதைப் பத்தி வெளிய சொல்ல யோசிச்சிட்டு தான் இருந்தேன்.

  1. Veliyoorkaran

    Monday, March 01, 2010

    @@@எங்கெல்லாம் படம் கிண்டலடிக்கப் படும் சூழ்நிலை இருக்கிறதோ அங்கு கௌதமே கிண்டல் செய்து கொள்வது புத்திசாலித்தனம்.//

    Exactly...!..He is smart..:)

    @@த்ரிஷாவின் funny walk.///

    Yep...nice to watch that... :) :)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Monday, March 01, 2010

    ரெட்டை..
    உம்மை நம்பி , தியேட்டர்ல படம் பார்க்க போறேன்..

  1. Rettaival's Blog

    Tuesday, March 02, 2010

    யெஸ் முகிலன்.. ! சிம்பு இப்போதாவது தமிழ் ரசனையை புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன்! ஒரு மௌன ராகம் அலைபாயுதே ரேஞ்சுக்கு எதிர்பார்த்துப் போகாதீர்கள்! நிச்சயம் ஏமாற மாட்டீர்கள்!

  1. Rettaival's Blog

    Tuesday, March 02, 2010

    பட்டாபட்டி.. said...
    ரெட்டை..
    உம்மை நம்பி , தியேட்டர்ல படம் பார்க்க போறேன்..
    //////////////////////////////////////////
    போச்சுடா..பட்டாபட்டி எதிர்பாக்குற எந்த விஷயமும் அந்த படத்துல இல்ல.. இவன் வந்து என்ன கிழி கிழிக்கப்போறானோ! இல்லாட்டி... ஒரு வேளை அடுத்தகேள்வி பதில் பகுதி நம்மளை வச்சு எழுதிருவானோ...(வெளி தற்காப்புக்கு எதுனா சொல்லி வை!)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, March 02, 2010

    @ரெட்டைவால் ' ஸ் said...
    போச்சுடா..பட்டாபட்டி எதிர்பாக்குற எந்த விஷயமும் அந்த படத்துல இல்ல.. இவன் வந்து என்ன கிழி கிழிக்கப்போறானோ! இல்லாட்டி... ஒரு வேளை அடுத்தகேள்வி பதில் பகுதி நம்மளை வச்சு எழுதிருவானோ...(வெளி தற்காப்புக்கு எதுனா சொல்லி வை!)
    //

    சே.சே....அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்...
    என்ன.. அப்பன் பண்ணிய தப்பு மகனுக்கு..
    மகன் பண்ணிய தப்பு அப்பனுக்கு என்ற பாலிசிய அமுல்படுத்தி
    ,
    வீராசாமி சீடீ-ய 10 தடவை, 'உன்னைய + வெளியூரையும்' பார்க்க வைப்பேன்..
    அவ்வளவுதான்..

  1. Rettaival's Blog

    Wednesday, March 03, 2010

    வீராசாமி...இந்த நூற்றாண்டின் இணையற்ற காதல் காவியம் பத்திப் பேசாதீங்க பட்டு சார்! வீராசாமி கதையை இங்கிலீஷ்ல எடுக்க ஜேம்ஸ்கேமரூன் கேட்டிருக்காராம். இலுமி தான் வசனமாம்!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, March 03, 2010

    @ரெட்டைவால் ' ஸ் said...
    வீராசாமி...இந்த நூற்றாண்டின் இணையற்ற காதல் காவியம் பத்திப் பேசாதீங்க பட்டு சார்! வீராசாமி கதையை இங்கிலீஷ்ல எடுக்க ஜேம்ஸ்கேமரூன் கேட்டிருக்காராம். இலுமி தான் வசனமாம்!
    //

    என்னா ரெட்டை..
    காலையில இப்படி ஒரு ஷாக் நியூஸ் கொடுக்கிறீங்க..?

    வீராசாமிய, இங்கிலீஸ் படமுனு நெனச்சு , டிக்ஸ்னரி எல்லாம் வெச்சு படத்த
    பார்த்தனேயா..

    ஆமா.. அப்ப , அது எந்த மொழிப் படமுனு எனக்கு மட்டம் சொல்லுய்யா..ப்ளீஸ்..

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, March 03, 2010

    @ILLUMINATI said...
    //நீரு லேட்டு.. பிரகாசு கண்டுபுடிச்சு , 1 லட்சம் வாங்கிட்டாரு//
    யோவ்.. நான் வந்ததே இன்னைக்குத்தானயா....
    //

    வேளியூரு..
    என்னையா ஆச்சு இந்த இலுமிக்கி...?
    என்னமோ , ராமராஜன் , எம்.ஜி.ஆர் கிட்ட , 'மாடு ஒண்ணுக்குப் போச்சு சார் ' சொல்றமாறி ,
    நேத்து தான் வந்தேன... இன்னைக்குதான் வந்தேனு சொல்லிட்டு இருக்கு...

    ஆமா. Internet கனெக் ஷன் இல்லாத ஊரு, இன்னுமாயா இருக்கு..
    ஒரு வேளை , நிலாக்கு போயிட்டு வந்திருக்குமோ?
    //


    இந்த இலுமியா?.. இது படம் எடுத்தா விளங்குமா?...
    நானே, இலுமிக்கு , மார்கழி மாசம் ,அது கழுத்துல மாலையப் போட்டு,
    கத்தி வெக்கலாமானு யோசனையில இருக்கேன்..
    பார்த்துக்கோ அப்பு..

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, March 03, 2010

    ரெட்டை.. உன்னைய
    நினைக்கறப்ப , கண்ல தண்ணியா கொட்டுதய்யா..
    நீ எம் மேல வெச்சிருக்கிற அக்கறையப் பார்த்துட்டு ,
    .
    .
    பார்த்தையா..
    .
    .
    வார்ர்ர்ர்ர்த்தையே வர மாட்டிங்குதுய்யா..
    .
    .
    .
    நான் இன்னைக்கு உன்னோட ப்ளாக்ல ரெண்டு கமெண்ட் போட்டேன்.( 3 மார்ச்). ஆனா, நேத்தைக்கு
    போட்ட மாறி காமிக்குது..( 2 மார்ச்)
    இதே ரேஞ்சில போனா, என்னோட வயசு குறைஞ்சுகிட்டே போகுமேயா..
    அப்புறம் என்னைய ப்ளாக் எழுத விடுவானுகாளா? ( 18 வயசுக்கு கீழன சொல்லி எங்காவது சிறுவர் சீர்திருத்த
    பள்ளிக்கு அனுப்பிடப்போறாங்க..)

    ..
    யோவ்.. முதல்ல Time zone செட்டிங்க மாத்துய்யா..

  1. Rettaival's Blog

    Wednesday, March 03, 2010

    பட்டாபட்டியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டது!வயசை கூட்டியாச்சுய்யா...சந்தோசமா!

  1. Rettaival's Blog

    Wednesday, March 03, 2010

    ஆமா. Internet கனெக் ஷன் இல்லாத ஊரு, இன்னுமாயா இருக்கு..
    ஒரு வேளை , நிலாக்கு போயிட்டு வந்திருக்குமோ?

    *******************************************

    எவனாவது இவன் பிளாகை படிச்சுட்டு காமிக்ஸ்னா என்ன பாஸ்னு சிக்கியிருப்பான்.. பய..ஒரு வாரத்துக்கு மேலா நிக்கவச்சு போட்ருக்கும்!இங்க வந்து இப்பொதான் வந்தேன் அப்பொதான் வந்தேன்னு கதை விடுது! இலுமி..அரசாங்கத்துக்கேவா..!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, March 03, 2010

    @ரெட்டைவால் ' ஸ் said...
    எவனாவது இவன் பிளாகை படிச்சுட்டு காமிக்ஸ்னா என்ன பாஸ்னு சிக்கியிருப்பான்.. பய..ஒரு வாரத்துக்கு மேலா நிக்கவச்சு போட்ருக்கும்!இங்க வந்து இப்பொதான் வந்தேன் அப்பொதான் வந்தேன்னு கதை விடுது! இலுமி..அரசாங்கத்துக்கேவா..!
    //

    அதுசரி.. நடந்தாலும் நடந்திருக்கும்..

    அப்பாவி மாறி மூஞ்சிய வெச்சுட்டு , உள்ள வந்த போதே நினைச்சேன்..

  1. ரோஸ்விக்

    Thursday, March 04, 2010

    நானும் ரசிச்சு பார்த்தேன் ரெட்டை... நல்லா இருந்தது... அந்த படத்துல வருகிற கேமெரா மேன்... மிக அருமையாக நகைச்சுவையை தெளித்திருக்கிறார்...

    அப்பறம் உதவி இயக்குனரா வருகிற அந்த பொண்ணு... அதுவும் எனக்கு புடிச்சிருந்துச்சு... :-)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, March 04, 2010

    @ரோஸ்விக் said...
    நானும் ரசிச்சு பார்த்தேன் ரெட்டை... நல்லா இருந்தது... அந்த படத்துல வருகிற கேமெரா மேன்... மிக அருமையாக நகைச்சுவையை தெளித்திருக்கிறார்...
    அப்பறம் உதவி இயக்குனரா வருகிற அந்த பொண்ணு... அதுவும் எனக்கு புடிச்சிருந்துச்சு... :-)
    //

    யோவ்.. ரோஸ்விக்கு.. தலைப்ப போட்டுட்டு , கமெண்ட் போடுயா..

    பதறி அடுச்சுட்டு ஓடி வந்தேன்.. ( ரஞ்சினைய சொல்றேனு.. ஹி..ஹி..)

  1. Rettaival's Blog

    Thursday, March 04, 2010

    அப்பறம் உதவி இயக்குனரா வருகிற அந்த பொண்ணு... அதுவும் எனக்கு புடிச்சிருந்துச்சு... :-)
    ******************************************

    இது வரைக்கும் எவனாச்சும் அந்த ஃபிகர் பத்தி பேசுனானா? நம்ம கும்பல் ல சட்டம் மட்டும் தான் கொஞ்சம் டீசன்ட்டுன்னு நினைச்சேன்....ம்கூம்!

  1. Rettaival's Blog

    Thursday, March 04, 2010

    பட்டாபட்டி.. said...

    @ரோஸ்விக் said...
    நானும் ரசிச்சு பார்த்தேன் ரெட்டை... நல்லா இருந்தது... அந்த படத்துல வருகிற கேமெரா மேன்... மிக அருமையாக நகைச்சுவையை தெளித்திருக்கிறார்...
    அப்பறம் உதவி இயக்குனரா வருகிற அந்த பொண்ணு... அதுவும் எனக்கு புடிச்சிருந்துச்சு... :-)
    //

    யோவ்.. ரோஸ்விக்கு.. தலைப்ப போட்டுட்டு , கமெண்ட் போடுயா..

    பதறி அடுச்சுட்டு ஓடி வந்தேன்.. ( ரஞ்சினைய சொல்றேனு.. ஹி..ஹி..)
    /////////////////////////////////////////////

    ha ha ha... inime ilumi maathiri try pannungka rosewig!

  1. Muthu

    Thursday, March 04, 2010

    neenga sonnathu pol muthal pahivu pottuviten vanthu kumuravum http://lollutharbar.blogspot.com/2010/03/blog-post.html

  1. ரோஸ்விக்

    Friday, March 05, 2010

    //இது வரைக்கும் எவனாச்சும் அந்த ஃபிகர் பத்தி பேசுனானா? நம்ம கும்பல் ல சட்டம் மட்டும் தான் கொஞ்சம் டீசன்ட்டுன்னு நினைச்சேன்....ம்கூம்!//

    எல்லா கலைஞர்களையும் வளரவிடனும் ரெட்டை...

    ஒரே கலைஞரை வளர்த்து விடக்கூடாது... (யோவ், நான் பெருசுகளை எல்லாம் வம்பிழுக்க மாட்டேன்...) நான் சொன்னது சினிமா கலைஞர்களை...

    என்னோட அந்த கமெண்ட்ட அந்த பொண்ணு மட்டும் படிச்சு பார்த்தா எவ்வளவு சந்தோசப்படும் அந்த பொண்ணு...

  1. ரோஸ்விக்

    Friday, March 05, 2010

    நான் எதையும் மனசுக்குள்ள வச்சுக்கிற மாட்டேன்யா... (புரியுதுடி... அப்ப என்ன பக்கத்து வீட்டுல வச்சுக்கிருவியா-னு கேக்குறது... அப்புடி எல்லாம் பேசக்கூடாது இது பொண்ணு மேட்டரு...)

  1. Veliyoorkaran

    Friday, March 05, 2010

    @@@ரோஸ்விக் said...
    என்னோட அந்த கமெண்ட்ட அந்த பொண்ணு மட்டும் படிச்சு பார்த்தா எவ்வளவு சந்தோசப்படும் அந்த பொண்ணு.../////

    சட்டம் நக்கல் புடிச்ச எசகேடு அப்டீன்னு மட்டும்தான் எனக்கு தெரியும்...ஆனா, அதுக்குள்ளார இப்டி ஒரு பூ மனசா...நீ நல்லா இருக்கணும் ரோஸு...அந்த பிகரும் நல்லா இருக்கணும்...!!..பிகர சப்போர்ட் பண்ணி பேசுற எல்லா டோமருங்களுக்கும் இனிமேல் ராணுவ பாதுகாப்பு அதிகபடுத்தபடும் என இந்த அறிய தருணத்திலே அறிவித்து கொள்கிறேன்...!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, March 05, 2010

    @Veliyoorkaran said...
    சட்டம் நக்கல் புடிச்ச எசகேடு அப்டீன்னு மட்டும்தான் எனக்கு தெரியும்...ஆனா, அதுக்குள்ளார இப்டி ஒரு பூ மனசா...நீ நல்லா இருக்கணும் ரோஸு...அந்த பிகரும் நல்லா இருக்கணும்...!!..பிகர சப்போர்ட் பண்ணி பேசுற எல்லா டோமருங்களுக்கும் இனிமேல் ராணுவ பாதுகாப்பு அதிகபடுத்தபடும் என இந்த அறிய தருணத்திலே அறிவித்து கொள்கிறேன்...!
    //

    ரைட்.. பர்ஸ்ட் அசைன்மெண்ட் ...
    ஹரிதுவாருக்கு( எங்கள் சுவாமிஜிக்கு) படை அனுப்பு...
    பாவம்..

  1. MUTHU

    Friday, March 05, 2010

    ரெட்டைவால் ' ஸ் said...
    இது வரைக்கும் எவனாச்சும் அந்த ஃபிகர் பத்தி பேசுனானா? நம்ம கும்பல் ல சட்டம் மட்டும் தான் கொஞ்சம் டீசன்ட்டுன்னு நினைச்சேன்....ம்கூம்!///


    டீசன்ட்டு அப்படினா! மன்னா நம்ம அரண்மனையில் அப்படி யாருமில்லை.(நேற்று நீங்கள் நித்தி c.d.யை 100 தடவை பார்த்ததை என்ன வென்று சொல்வது)

  1. பித்தனின் வாக்கு

    Thursday, March 11, 2010

    நல்ல விமர்சனம். அதை வீட கும்மி நல்லா இருக்குங்கேவ்.

  1. சாமக்கோடங்கி

    Tuesday, March 16, 2010

    சூப்பரா எழுதி இருக்கீங்க..

    நிஜமாகவே சாரலில் நனைந்தது போன்ற ஒரு உணர்வுதான்..

    வாழ்க.. நன்றி..

  1. Veliyoorkaran

    Wednesday, March 17, 2010

    மாப்ள இந்த படம் வந்து ரொம்ப வருஷம் ஆச்சுடா..சட்டுபுட்டுன்னு அடுத்த பதிவ போட்ரு..இல்லைனா பயலுக உன்ன போட ஆரம்பிச்சிருவானுக..!!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, March 17, 2010

    யோவ்..வெளியூரு..
    உனக்கு நக்கல் ஜாஸ்தியா.. இதுவே போன வருசம் வந்த படமுனா..
    அண்ணன் பித்தம் உருகி..உருகி வர்ணித்த சில்க் படம், சுதந்திரத்துக்கு முன்னாடி வந்ததா?..

    அவருக்கு யாருமில்லனு மட்டும் நெனைக்காதே.... உயிரக் கொடுப்பான் இந்த பட்டாபட்டி..
    ( பித்தன் சார்.. கொஞ்சம் திரும்பின வாக்கில நில்லுங்க சார்.
    கண்ணு கூசினா , .முன்னாடி , அந்த நாதாரிக இருக்கானுகளானு தெரியாது சார்..)

  1. ILLUMINATI

    Wednesday, March 17, 2010

    //பித்தன் சார்.. கொஞ்சம் திரும்பின வாக்கில நில்லுங்க சார்.
    கண்ணு கூசினா , .முன்னாடி , அந்த நாதாரிக இருக்கானுகளானு தெரியாது சார்..//

    கேப்ல ஆட்ட வெட்டிட்டியே பட்டு........:)

  1. ஆர். அபிலாஷ்

    Friday, April 09, 2010

    நல்ல சரளமான எழுத்து.

  1. Rettaival's Blog

    Saturday, April 10, 2010

    உங்கள் பாராட்டுக்கு நன்றி அபிலாஷ்! எறும்பின் தலைகீழ் சுவடுகள் அவ்வப்போது ஆச்சர்யப் படுத்துகின்றன...

  1. Raaazz...

    Saturday, April 17, 2010

    Sir i would like to update here..when I saw this movie i remebered "Before sunset" almost the same genre....i think gautham would have got inspired seeing that movie..i would recommend you to see..ur writings are really making stuff here..all the best!

Post a Comment