கொஞ்சம் ஹிஸ்டரி..கொஞ்சம் புவனேஸ்வரி!
அதிகாலையில் காஃபியோட பேப்பர் படிக்கிற சுகம் சத்தியமா லாப்டாப் லயும் டெஸ்க்டாப் லயும் நியூஸ் வாசிக்கறப்போ கிடைக்காது. பேப்பரிலும் புதுசா ஒண்ணும் இருக்கப் போறதில்லை. அதே..."தீவிரவாதத்தை வேரறுப்போம் என பிரதமர் கூறினார்"," மைனாரிட்டி அரசு பதவி விலக வேண்டும் என ஜெயலலிதா கூறினார்".ங்கிற ஜல்லிகள்.அப்புறம் அரைப் பக்கத்துக்கு சரவணா ஸ்டோர் விளம்பரங்கள். சில சமயம் பேப்பரைப் பார்க்காமலேயே என்னென்ன நியூஸ்னு யூகிச்சுட்டுப் போயிடலாம்.எப்பவாவது பரபரப்பா நடந்தா அதுவும் அடுத்த நிமிடங்களிலேயே பிரேக்கிங் நியூஸாக டி.வி.யில் வந்துவிடுகிறது.அப்புறம் மறுநாள் பேப்பர்ல புதுசா என்ன போட்டிருக்கப் போறான்னு அலட்சியமா ஸ்போர்ட்ஸ் சினிமான்னு தாவிடுவோம்.
ஆனா சி.என்.என்கள், என்.டி.டி.விக்கள் இல்லாத காலத்தில் நியூஸ்பேப்பர் முதல் பக்கத்துக்கு எவ்வளோ மவுஸ் இருந்திருக்கும்.
அப்படி அந்த நியூஸ்பேப்பர்கள் இப்போ வாசிக்கக் கிடைச்சா எப்படி இருக்கும்.?சரி..இந்தியாவுல வந்த முக்கியமான பேப்பர்கள் கூகிள் பண்ணிப் பார்த்தா..ம்ஹும்.. சரித்திரத்தை பத்திரப் படுத்த நம்மாளுங்களுக்கு இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைப்படும்.கிடைச்ச மட்டில சிலதை நம்மளாவது இப்போவே பதிவு பண்ணிடுவோம்.
டைட்டானிக் மூழ்கியபோது....
ஹிட்லர் இறந்த மறுநாள்...
ஆர்ம்"ஸ்ட்ராங்"காக நிலாவில் இறங்கிய பொழுது
இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில்...
அறுபத்திரண்டு வருஷங்கள் முன்பு... இந்தியாவில்
படு பாதாளத்தில் வால் ஸ்ட்ரீட்...
உலகத்தின் மோசமான ஒரு நாள்...
இவிங்க எப்பவுமே கொஞ்சம் ஓவர் தான்...
சுனாமி..!(நாம போகிற போக்கைப் பாத்தா இன்னொரு காட்டு காட்டும் போலிருக்கே)
கடைசியா... யாரும் தப்பா எடுத்துக்காதீங்க.
தமிழன் வாழ்க்கையையே மாற்றி அமைத்த வரலாற்று சம்பவம் இல்லையா இது...!பின்குறிப்பு :
உலகத்தையே புரட்டிப் போட்ட சம்பவங்கள் நம்ம வாழ்நாளில் ஒண்ணோ ரெண்டோ நடந்திருக்கலாம்.அதனால சில தாத்தாக்கள் இதைப் படித்திருக்கிறீர்கள் (அ) பார்த்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் அனுபவங்களை பின்னூட்டமிடவும்.
உலகத்தையே புரட்டிப் போட்ட சம்பவங்கள் நம்ம வாழ்நாளில் ஒண்ணோ ரெண்டோ நடந்திருக்கலாம்.அதனால சில தாத்தாக்கள் இதைப் படித்திருக்கிறீர்கள் (அ) பார்த்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் அனுபவங்களை பின்னூட்டமிடவும்.
பின்னோக்கி
Thursday, October 22, 2009
தலைப்பு, கடைசி செய்திகள்லயும் உங்க வாலுத்தனத்த காட்டிட்டீங்க.
ராஜீவ் காந்தி இறந்தது/இந்திரா காந்தி இறந்த நியூஸ் பேப்பர் முக்கியத்துவமா இருக்கும்.
நல்ல சர்ச் பண்ணி எல்லாத்தயும் புடிச்சிருக்கீங்க...
ஆமா..லிஸ்ட் எப்ப வரும் ? :)