RSS

மில்லியன் டாலர் கேள்வியும்...சில குட்டிக் கேள்விகளும்..!சில கேள்விகள் உலகத்தையே மாத்திடும்! ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்ற ஒரு கேள்வி விஞ்ஞானத்தின் திசையையே திருப்பியது.அது போல சில கேள்விகளுக்கு பதிலே கிடையாது.நான் யார்? பிரபஞ்சத்தின் எல்லை எது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் கடவுள் தான் வந்து பதில் சொல்லனும். மிகப்பெரிய ஆன்மீகவாதிகளும், அறிவு ஜீவிகளூம்,நாத்திகர்களும் அதைப் பற்றிக் கவலைப் பட்டுக்கட்டும்.

நம்மோட கேள்விகள் அதுவல்ல.தினசரி அலுவல்களில் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்வது இவைகள்.பதில் தெரிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க.இல்லாட்டி உங்க ஃப்ரண்ட்ஸ்களை இம்சை பண்ணுங்க.

கேள்விகள் இது தான்...!

1. ஒரு காய்ன்ல ஹெட்ஸ்(Heads) தலைன்னா டெய்ல்(Tails) "வால்"னு தானே சொல்லனும்.ஏன் "பூ"ன்னு சொல்றாங்க?


2. எப்போதும் கையில் ஏன் பச்சை மட்டும் குத்திக்கிறாங்க? ப்ளூ, ஆரஞ்சு, வயலெட்னு ஏன் குத்திக்கிறதில்லை?


3. (-) * (-)= + கரெக்ட்தான்.ஆனா ஏன்?


4. நாலு பேருக்கு நல்லது செஞ்சா தப்பில்லைன்றாங்களே...யார் அந்த நாலு பேர்?


5.இருக்கிறதா நெனைச்சிக்கிட்டு சாமி கும்பிடறதுக்கு எல்லாரும் கோவிலுக்குப் போறாங்க."நான் சாமியைப் பார்த்தேன்"னு ஒருத்தர் சொன்னா சட்டுனு யாரும் நம்ப மாட்றாங்களே ஏன்?


6."Never Say Never Again" - பிரபலமான ஜேம்ஸ்பான்ட் படம் இது. டைட்டிலை கொஞ்சம் தமிழ்ப்படுத்துங்களேன்.


7. பரீட்சையில் ஃபெயில் ஆனா கோட் அடிச்சுட்டான்றாங்களே அந்த கோட் எங்கே,எந்தத் துணிக்கடையில கிடைக்கும்?


8. எல்லாருக்கும் புரிகிற மாதிரி ஒரு தடவையாவது கமல் பேட்டி குடுப்பாரா மாட்டாரா?


9.சில பேர் பேட்டி குடுக்கும் போது " நான் ஒரு வீட்டுப் பறவை"ங்கறாங்களே.அவங்களுக்கு றெக்கை இருக்குமா?


10. கடைசியாக...இந்த மில்லியன் டாலர் கேள்வி,பில்லியன் டாலர் கேள்வினு ஒன்னு அடிக்கடி பத்திரிக்கைல வருதே..அந்த கேள்விக்குப் பதில் சொன்னா உண்மையிலேயே மில்லியன் டாலர் தருவாங்களா?

பதில் தெரிஞ்சா சொல்லுங்க இல்லைனா விட்டுடுங்க.வீட்டுக்கு ஆட்டோவெல்லாம் அனுப்பாதீங்க ப்ளீஸ்...!

முந்தைய பதிவின் முடிவு: ஜே.கே.ரித்தீஷ் விருது யாருக்கு?.நடிக்க வருதுன்னு நெனைச்சிக்கிட்டு இன்னும் நம்மளை கொன்னுக்கிட்டிருக்கிற அண்ணன் சேரன் தான்
 1. மஞ்சூர் ராசா

  Sunday, October 04, 2009

  அசத்தலான கேள்விகள்!

  உங்கள் மூளையே மூளை

  நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவர்.

  பதில்தான் தெரியலெ

 1. ரெட்டைவால்ஸ்

  Sunday, October 04, 2009

  கரெக்டா சொல்லுங்க ராசா...ஏதும் வாரி விடற வேலை இல்லையே

 1. Anonymous

  Sunday, October 04, 2009

  answer for 6th question...
  சொல்லாத..நைனா சொல்லிடவே சொல்லிடாத...

 1. பின்னோக்கி

  Sunday, October 04, 2009

  ஐய்யோ என்ன ஒரு ஆராய்ச்சி... பதிலே தெரியாம எப்படி கேள்வி கேட்குறதுன்னு உங்களத்தான் கேட்க்கனும் :)

 1. வம்பளந்தான்முக்கு

  Sunday, October 04, 2009

  கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யார் வச்சிருக்காங்க? (கரகாட்டகாரன்)

 1. Anonymous

  Monday, October 05, 2009

  உங்களையெல்லாம் சுனாமி தூக்காம விட்ருச்சே....

 1. senthil

  Thursday, October 15, 2009

  unnudaiya ezhutthukkalil mudhan muraiyaga pala varieties theriyuthuthu. unnudaiya ezhuthu alumaiyai vida oru kavarichhi theriyuthu. thodarnthu valattuvai ena ethirparkiren.

 1. UNGALODU NAAN

  Friday, October 23, 2009

  நாலு பேருக்கு நல்லது செஞ்சா தப்பில்லைன்றாங்களே...யார் அந்த நாலு பேர்


  namma cm familya parthum indha kelviya ketkringale neyayama

 1. Seyon

  Tuesday, March 09, 2010

  6 கேள்விக்குப் பதில் இதோ....

  "எப்போதும் வேண்டாம் என இனி எப்போதும் சொல்லவேண்டாம்"

  எப்புடீ, நாமெல்லாம் தமிழில MSc (!?!?) செய்தவங்களாச்சே சும்மாவா?

 1. Seyon

  Tuesday, March 09, 2010

  This comment has been removed by the author.
 1. Seyon

  Tuesday, March 09, 2010

  நாலாவதுக்குப் பதில்:

  ஏன்னா நாப்பது வருகம பால்குடம் துக்கி முதுகு முறிஞ்ச நம்மாலையே பாக்க முடியாத சாமிய இந்தப் பயல் பாத்ததாவது அப்பிடின்னு நாமே நினச்சுக்குவோம்.

  இப்போ எட்டு:

  அப்புடிப் பேட்டி குடுத்தா அவரு தான் கமல் அப்பிடின்னு நாம யாரும் நம்பமாட்டோமே!

Post a Comment