எல்லாம் ஒரு விளம்பரம் தான்...
உலகில் முதன் முதலில் விளம்பரங்கள் செய்ய பாப்பிரஸ் என்ற தாவரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.பண்டைய ரோமனிய கிரேக்கர் காலத்திலேயே போஸ்டர் எல்லாம் ஒட்டி ஓட்டுக் கேட்டு அதகளப் படுத்தியிருக்கிறார்கள். அப்புறமா மெல்ல சிந்து வழியா இந்தியா வந்து தமிழ்நாட்டுக்குள்ள எட்டிப் பார்த்த விளம்பரங்களை, அதுக்குன்னு ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி எங்கேயோ கொண்டு போய்ட்டாங்க நம்ம மக்கள்.
ஆனா முக்கியமான இடங்கள்ல இப்போ போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு கார்ப்பரேஷன் தன் சொந்த(?) செலவில ஓவியங்களை வரைஞ்சு தமிழ்நாட்டு லியானார்டோ டாவின்சிக்களையும் பிக்காஸோக்களையும் பதற வச்சிக்கிட்டுருக்கு. மெட்ராஸ்ல ஹோர்டிங்குகளை எடுத்தாலும் எடுத்தானுங்க..என்டெர்டெய்ன்மெண்டே போச்சு பாஸ். முன்னெல்லாம் வண்டி ஒட்டும் போது வேடிக்கை பாத்தாலே ஒரு பக்கம் நயன் தாரா இடுப்பைக் காட்டும்..இன்னொரு பக்கம் த்ரிஷா பல்லைக் காட்டும்..ஷ்ரியா எதை எதையோ காட்டும்.மெட்ராஸ் காரனுங்களுக்கு அந்த குடுப்பினை எல்லாம் இல்லங்க. சரி! சொந்த சோகம் உங்களுக்கு எதுக்கு?
ஆனா போஸ்டரை பார்த்து உச் கொட்டலைன்னா நம்ம கண்ணு கெட்டுப் போய்டும் இல்லையா...அதனால சில ஹோர்டிங்குகள் நெட்ல இருந்து சுட்டது ..உங்களுக்காக
butterfly Surya
Monday, October 12, 2009
hahaha..
அருமை.