ஆம்லெட் போடுவது எப்படி?
முக்கிய குறிப்பு: ஆம்லெட் வட்ட வடிவில் தான் இருக்க வேண்டும் என்று காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயத்தை உடைக்கும் மன நிலை ரொம்பவும் அவசியம்.
தேவையான பொருட்கள்: ஒரு பிளாஸ்டிக் கிளாஸ், வாட்டர் பாக்கெட் 2, ஊறுகாய் பாக்கெட் 1 மிதமாக கெட்டுப் போன சுண்டல் பாக்கெட் 1, கடைசியாக நீங்கள் மிகவும் விரும்பும் ஓல்ட் மாங்க் அல்லது வி.எஸ்.ஒ.பி அல்லது எம்.சி ஒரு குவார்ட்டர்
செயல் முறை : தனியாக நின்று போராடுவதை விட யாரையாவது கூட வைத்துக் கொள்வது உத்தமம்.
முதலில் பாட்டிலை கீழே ரெண்டு தட்டு தட்டி மூடியை லாகவமாக திறக்கவும். பின்பு சரக்கை கிளாஸில் ஊற்றவும்.
பின்பு வாட்டர் பாக்கெட்டின் ஓரமாகக் கடித்து கிளாஸில் சர்ர்ர்ரென்று தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கவும்.
நுரை வடியும் வரை காத்திருக்காமல் " மகிழ்ச்சி"..( அட !சியர்ஸ் தாங்க தமிழ் ல மகிழ்ச்சி) என்று கூட இருப்பவரின் கிளாஸில் அடித்து அவர் சரக்கைக் கொஞ்சம் கீழே சிந்த விட்டு மடக் மடக்கென்று முடித்து விடவும். சிறிது நேரம் கழித்து ஊறுகாய் ஒன்றை எடுத்து நக்கிக் கொள்ளவும். நக்கியவுடன் ஸ்...ஆஆஆ என்ற சத்தம் மிகவும் அவசியம்.
கையில் இருக்கும் சுண்டலைப் பிரித்து ஒவ்வொன்றாக வாயில் போடவும். இப்படியாக ஒரு குவார்ட்டரை முடித்தவுடன் அடுத்த குவார்ட்டருக்குக் காசு இருக்கா என்று பர்ஸில் தேடவும். காசு இருக்காது. நண்பரைக் கேட்கவும். அவரும் இல்லை என்பார்.
பிறகு நம் மொக்கையை ஆரம்பிக்க இதுவே சரியான சமயம்.
நீங்கள் : மச்சி..உனக்கு சர்ரியலிசம்னா என்னன்னு தெரியுமா?
நண்பர் : என்னது ஷகீலாவா?
நீங்கள் : இல்லைடா ... சர்ரியலிசம். இது ஒரு வகையான கலை உத்தி.நவீன இலக்கியத்தில
நண்பர் : உங்க ஆயா..இன்னொரு குவார்ட்டர் வாங்க காசு வச்சிருக்கியா
நீங்கள் : இல்லை... முந்தா நேத்து NO MANS LAND னு ஒரு படம் பார்த்தேன்டா..டைரக்டர் என்னமா...
நண்பர் : கந்தசாமி பாத்தியா...என்னா கருத்து மச்சி...படம் பம்பர் ஹிட்.
( நீங்கள் சினிமா பற்றி பேச வேண்டாம் என முடிவு செய்து விடுவீர்கள் ).
நீங்கள் : சரி அப்போ பார்ப்போம் மச்சி...! அடுத்த சனிக்கிழமை மீட் பண்ணுவோம்.
நண்பர்: அடுத்த சனிக்கிழமை தீபாவளி டா. வேட்டைக்காரன் டிக்கெட் புக் பண்ணிடறேன்.
வேட்டைக்காரன் என்ற பெயரைக் கேட்டதும் உங்களுக்கு தலையெல்லாம் கிர்ர்ர்ரென்று சுத்தி உவ்வ்வ்வ்வே...என்று ஒன்று போடுவீர்கள் இல்லையா..அது தான் ஆம்லெட்
Rettaival's Blog
Tuesday, October 13, 2009