ஜே.கே ரித்தீஷ் விருது யாருக்கு ?
சகிக்கவே முடியாத ஒரு விஷயத்தை ஜஸ்ட் லைக் தட்னு எடுத்துப்பான். ஆனா முந்தாநேத்து மறக்க வேண்டிய விஷயத்தை அடுத்த எலெக்ஷன் வரை ஞாபகம் வச்சிருப்பான்.இப்படிதான் ஒரு அவார்ட் ஃபங்ஷன் நடந்தது நேத்து. அப்படியே காஞ்சிபுரம் வரைக்கும் போய் கை தட்டி கரகோஷம் எழுப்பி தன்னோட தனித்தன்மையை நிரூபிச்சு புல்லரிக்க வச்சுட்டான் தமிழன்.அண்ணா விருது கலைஞருக்காம்,பெரியார் விருது கி.வீரமணிக்காம்.
அடடா...நாட்டுக்கு இப்போ ரொம்ப அவசியமானது இந்த அவார்ட் ஃபங்ஷன் தான். இதை ரெண்டு பேரும் வாங்கிக்கலைன்னா சரித்திரம் மாறிடுமா இல்ல அண்ணாவும் பெரியாரும் கோவிச்சுக்கப்போறாங்களா?தீர்க்கறதுக்கு நாட்டுல நூறு பிரச்சினை இருக்கு சி.எம் சார்!சரி விடுங்க..! இந்த மாதிரி ஏதாவது கேட்டா இதனால காவிரிப் பிரச்சினை தீர்ந்துடுமான்னு எங்களையே திருப்பிக் கேப்பீங்க.ஆனா உங்களைப் பாத்து ஒவ்வொருத்தரும் இந்த டைப்புல அவார்டுகளை அள்ளி வீச (வாங்கிக்க) ஆரம்பிச்சா எப்படி இருக்கும்???
சாம்பிளுக்கு சில கீழே...
1. சோனியா காந்தி விருது : ராகுல் காந்திக்கு...ராகுல் காந்தி விருது : மன்மோகன் சிங்குக்கு. மன்மோகன் விருது : வேறு யாருக்கு ?சோனியா காந்திக்குத்தான்
2. விஜயகாந்த் விருது : பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷுக்கு( குடும்ப அரசியலை எதிர்த்துப் போராடுவதற்காக...(அட கலைஞர் குடும்பம்ங்க)
3. ஜெயலலிதா விருது : சசிகலாவுக்கு(காரணம் வேற சொல்லனுமா?)
4. ஜின்னா விருது : ஜஸ்வந்த் சிங்குக்கு
5.விஜய் விருது : எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ( உலகத்துல எந்த தகப்பனும் செய்யாத துரோகத்தை மகனுக்கு செய்யத் துணிந்ததற்காக)
6.விஜய டி.ராஜேந்தர் விருது : சிம்புவுக்கு ( இனிமேல் படம் எடுக்காமல் இருந்தால் டி.ஆருக்கும் விருது கொடுப்பதாக தகவல்)
7. ஞாநி விருது : சு.சி கணேசனுக்கு (இனிமே குப்புசாமி கந்தசாமின்னு படம் எடுத்துக் கொல்லாம இருந்தால்)
8. ஜே.கே ரித்தீஷ் விருது : அது சஸ்பென்ஸ்....!
gulf-tamilan
Sunday, September 27, 2009
8. ஜே.கே ரித்தீஷ் விருது : அது சஸ்பென்ஸ்....!
யாருக்கு கலைஞருக்கா ???