RSS

தூர்தர்ஷனுக்கு வயசு 50


செல்லமா டி.டி ! ஆனா இன்னிக்கு யாருக்காவது தூர்தர்ஷன் செல்லமா இருக்குமான்னு யோசிச்சா, நிச்சயமா இருக்காது. ஆனா 25 வயசுக்கு மேல இருக்குற எல்லாருக்கும் தூர்தர்ஷன்னா ஒரு தனி பாசம் இருக்கும்.ராமாயணம், மகாபாரதம், ஸ்பைடர்மேன்,திரை மலர், வயலும் வாழ்வும்(யாருமே பாக்கமாட்டங்கன்னாலும் விடாம போடுவாங்க),சந்திரகாந்தா,வேர்ல்ட் திஸ் வீக் , சுரபி, சித்ரஹார்,காது கேளாதோருக்கான செய்திகள்,கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்,எல்லாத்துக்கும் மேல ஒலியும் ஒலியும்(ரோட்ல ஈ காக்கா இருக்காது) இன்னும் எத்தனையோ. அப்புறமா சாட்டிலைட் டி.வி வந்த பின்னால கழுதை தேஞ்சு கட்டெறும்பாகி இப்போ அமீபா ரேஞ்சுல இருக்கு.

என்னதான் அரசாங்கத்தோடதுன்னாலும் இப்படியா கேட்பாரில்லாம விட்டுடறது? அவனவன் மெகா சீரியல் காலம் முடிஞ்சு,ரியாலிட்டி ஷோ,டி.வி லேயே சுயம்வரம்,கல்யாணம் காதுகுத்துன்னு போய்க்கிட்டிருக்கான், இன்னும் எதிரொலி வச்சு இன்லாண்ட் லெட்டர் வாசிச்சுட்டு இருந்தா எப்டி பாஸ்?அதே போல நாட்டில ஏதாவது பெரிய சம்பவம் நடந்தா உடனே கை,என்.டி.டி.வி, சி.என்.என் தான் ரிமோட்ல அழுத்த சொல்லுது.ஏன் தூர்தர்ஷன் ல இருக்கறவங்களே அதப் பாப்பாங்களான்னு டவுட் தான்.

டி.டி எங்கே சறுக்கியது? டெக்னாலஜியா,உள்ளடக்கமா,இல்லை வேற ஏதாவதா? ஆனா தூர்தர்ஷன் ஆத்ம விசாரணை பண்ண வேண்டிய நேரம் இது. தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலம் குழந்தைங்களோட மனசு கெட்டுப் போகாத காலம்.என்னதான் 24 மணி நேர சானல்கள் தகவல்களை அள்ளிக் கொட்டினாலும் குழந்தைகளை குறிப்பா டீனேஜ் பசங்க மனோபாவங்களை மாத்தினது தான் ஜாஸ்தி.கொஞ்சமாவது கலாச்சாரத்தை மீட்டெடுக்கனும்னா அதில் டி.டி யோட பங்கு நிச்சயமா வேணும்.என்னதான் டாக்டர்,பி.ஹெச் டி,எம்.பி.ஏன்னு போனாலும் நம்ம எலிமென்டெரி ஸ்கூல் டீச்சரை மறக்க முடியாது இல்லையா! அந்த மாதிரி தான் தூர்தர்ஷனும். அந்தக் கால டி.டி யின் சில வீடியோக்கள் உங்களுக்காக.


  1. Anonymous

    Friday, September 18, 2009

    "சந்திரகாந்தா,வேர்ல்ட் திஸ் வீக் , சுரபி, சித்ரஹார்..."
    மனசுக்குள்ள, பக்கத்துக்கு வீட்டு பழைய dyanora tv ய நினைவுபடுத்தர வார்த்தைகள்...
    மழை நேரத்துல என் இனிய பொன் நிலாவே சாங்க, லவ்வரோட உக்கார்ந்து கேக்ற மாதிரி இருக்கு சார் உங்க article..its classic...keep rocking..

  1. சகாதேவன்

    Friday, September 18, 2009

    பரமார்த்த குருவும் சீடர்களும், பாலசந்தரின் ரயில் சினேகம், சுகாஸினி டைரெக்ட் செய்த பெண், போன்ற சீரியல்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ சினிமாவுக்கெ போட்டியாக 2 1/2 மணி நேரம் ஓடக்கூடிய மெகா சீரியல்கள் நூறு நாட்கள் ஓடும் நிலை வந்துவிடுமோ.

    சகாதேவன்

  1. Rettaival's Blog

    Saturday, September 19, 2009

    ஆமா சகாதேவன்! மெகாசீரியல்களுக்காக ஏதாவது சட்டச் சீர்திருத்தம் கொண்டு வந்தால் தேவலை.

  1. Anonymous

    Saturday, September 19, 2009

    அது வீண் வேலை ரேட்டைவால்ஸ்...பேசாம தூர்தர்சன சன் டீவீக்கு வித்துடலாம்..அவங்க பார்த்துப்பாங்க..அதான் ஒரே வழி...

  1. www.nelsonsavarimuthu.com

    Tuesday, September 22, 2009

    HI, ITS ONE OF THE FABULOUS THING THAT U HAVE BEEN IN-DEPTH OF THE CHENNAI.SURE,THIS WILL HELP OUT THE PEOPL WHO WANNA KNOW ABOUT CHENNA.I DO AGREE WITH ALL YOUR WORDS BCOZ I DO PASS MAY DAY TO DAY LIFE HERE FOR THE PAST 8YRS... HA HA HA

  1. www.nelsonsavarimuthu.com

    Tuesday, September 22, 2009

    HI, ITS ONE OF THE FABULOUS THING THAT U HAVE BEEN IN-DEPTH OF THE CHENNAI.SURE,THIS WILL HELP OUT THE PEOPL WHO WANNA KNOW ABOUT CHENNA.I DO AGREE WITH ALL YOUR WORDS BCOZ I DO PASS MAY DAY TO DAY LIFE HERE FOR THE PAST 8YRS... HA HA HA

  1. Anonymous

    Tuesday, September 22, 2009

    HI, ITS ONE OF THE FABULOUS THING THAT U HAVE BEEN IN-DEPTH OF THE CHENNAI.SURE,THIS WILL HELP OUT THE PEOPL WHO WANNA KNOW ABOUT CHENNA.I DO AGREE WITH ALL YOUR WORDS BCOZ I DO PASS MAY DAY TO DAY LIFE HERE FOR THE PAST 8YRS... HA HA HA

  1. பின்னோக்கி

    Monday, September 28, 2009

    //செல்லமா டி.டி

    நான் கூட, நீங்க ஜோடி நம்பர் 1 டி.டிக்கு அவ்வளவு பிரண்ட்டான்னு பார்த்தேன் :-)

  1. பின்னோக்கி

    Monday, September 28, 2009

    என்னங்க..ஸ்டேசன் ஆரம்பிக்கும் போது மியூசிக் ஒன்னு போடுவாங்களே..அதப் பத்தியும் சொல்லியிருக்கலாம்..டாண்டடாண்டான்..சூப்பர் மியூசிக் அது.

    உங்க நடை..ஐ மீன் எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்குங்க..

    அதுவும் அந்த அமீபா உதாரணம், கலக்கிட்டீங்க.

  1. மஞ்சூர் ராசா

    Sunday, October 04, 2009

    தூர்தர்ஷன் கட்டெறும்பாக மாறிவிட்டது உண்மையென்றாலும் விளையாட்டு பற்றிய பொதிகையில் வரும் நேரடி கேள்விபதிலும் அதை நடத்துபவரும் மிகவும் சிறப்பாக செய்கின்றனர்.

Post a Comment