சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
நிலா வானம் கடல்தீரம்
வெற்றுத்தாள்களில் மந்திரம்
உச் கொட்டும் கதவுகள்
அலமாரியில் உறங்கும் நினைவுகள்
யாருக்காக இதெல்லாம்
வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளலாகாது
என்கிறான் ஸ்டீஃபன் ஹாகிங்க்ஸ்
முன்னாள் காதலிகளோடும் என்கிறான் தனபால்
தனபால் பொய் சொல்வதரிது
தனபால் காதலில் தோற்றவன்
மீண்டும் மீண்டும் தோற்றவன்
தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன
காதல்கள் தெய்வீகமானவை
தெய்வீகமானவை அனைத்தும் பொய்கள்
பொய்களால் காதல் உருவாகிறது
உலகம் உருண்டை என்பது விஞ்ஞானம்
விஞ்ஞானம் விளக்கம் கேட்டு நிற்கிறது
விளக்கங்கள் சொற்களாலானது
சொற்கள் இடம் மாறுகின்றன
இடம் மாறுதல் இயற்கை
இயற்கை புதிரானது
எல்லாப் புதிர்களுக்கும் விடைகளுண்டு
விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்
எனினும் சகவாசியே!
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
*************************************************************************************
29 விமர்சனங்கள் & விமர்சிக்க:
சமீபத்தில சாருவ, எங்கேயாவது கிட்டக்க பார்த்தியா?..
இரண்டு ஏலுமிச்சம்பழம் வாங்கி..பிழிந்து... விளக்கெண்ணையோடு சேர்த்து..
சூரிஉஅன் வரும்முன், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்.. இந்தநாள் மட்டுமில்லை.. எல்லா நாளும் இனிதாய் கழியும்..
கவிதைக்கும் எனக்கும் காத தூரன் என்பதையும் தன்னடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்..
@Rettaivals.//
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை.///
உண்மைதான்..!
காதல் கவிதைகள் காதலிகளை போல..!
சில காதல் கவிதைகள் அலுப்பதே இல்லை...,
அவ்வபோது சில காதலிகளும்..!
@@Rettaivals.//
தனபால் பொய் சொல்வதரிது
தனபால் காதலில் தோற்றவன்
மீண்டும் மீண்டும் தோற்றவன்
தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன.//
தனபாலுக்கு பதில் நீ வெளியூர்க்காரன்னு போட்ருக்கலாம்...! :)
@@Rettaivals.//
காதல்கள் தெய்வீகமானவை
தெய்வீகமானவை அனைத்தும் பொய்கள்
பொய்களால் காதல் உருவாகிறது.//
Good one dude.. :)
Real treat after a long gap. :)
@Veliyoorkaran said...
Good one dude.. :)
Real treat after a long gap. :)
//
நல்லா ஏத்திவிடு.. விடாதே..
ஆமா.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?.. சத்தமே காணோம்?
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
ஒரு மார்கமா நல்ல தான் இருக்கு
யார் பெத்த புள்ளை தெரியல இப்படி பொலம்புது... பாவாம்... அதுக்கு இரண்டு புள்ளை தாளம் போடுது...யோ பட்டா வா நாம எப்பவும் போல யாராவது சிக்கரானா பாக்கலாம்... இவனுங்க லவ் பண்ணி சாகட்டும்...ச்சீ... வாழட்டும்.. :))
சில அல்ல..
பல காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை..
@@@இந்திரா said...
சில அல்ல..
பல காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை..///
காதல் கவிதைகள் மட்டுமல்ல இந்திரா...
காதல் சம்பந்தப்பட்ட எதுவுமே அலுப்பதில்லை..
ஆம்.,அவை அலுப்பதே இல்லை..!
பீலிங் பத்திரி ரைடுடன்
வெளியூர்க்காரன் :)
Veliyoorkaran said...
@@@இந்திரா said...
சில அல்ல..
பல காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை..///
//
சரி..சரி...
:-)
@Veliyoorkaran
//காதல் கவிதைகள் மட்டுமல்ல இந்திரா...
காதல் சம்பந்தப்பட்ட எதுவுமே அலுப்பதில்லை..
ஆம்.,அவை அலுப்பதே இல்லை..!//
பட்டா பாருயா பீல் பண்றாராம்... ல்வ்வுனு சொன்னாலே இந்த பய ஓவரா நெஞ்ச நக்கரான்... இதுல ரிப்ளை வேற போடராரு...
ரைட்டு , என்ன மோ சொல்ல வரிங்க ஆனா ஒன்னுமே பிரியல . . .
TERROR-PANDIYAN(VAS) said...
@Veliyoorkaran
//காதல் கவிதைகள் மட்டுமல்ல இந்திரா...
காதல் சம்பந்தப்பட்ட எதுவுமே அலுப்பதில்லை..
ஆம்.,அவை அலுப்பதே இல்லை..!//
பட்டா பாருயா பீல் பண்றாராம்... ல்வ்வுனு சொன்னாலே இந்த பய ஓவரா நெஞ்ச நக்கரான்... இதுல ரிப்ளை வேற போடராரு...
//
டெரர்.. இப்ப பாரு.. நான் சொன்னதுக்கோ..இல்ல ரெட்டை சொன்னதுக்கோ உருகினானா?..
விடு.. பய மந்திரிச்சு விட்டமாறி சுத்திகிட்டு இருக்கான்..
வராமலா போயிடுவான்...
//விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்//
அற்புதம்!
//தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன
காதல்கள் தெய்வீகமானவை//
அப்படின்னா லவ் பண்ணி தோத்து போனாதான் உலகம் மதிக்கும்னு சொல்லுறீங்களா ..?
//இயற்கை புதிரானது
எல்லாப் புதிர்களுக்கும் விடைகளுண்டு
விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்
எனினும் சகவாசியே!
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை//
ஐயோ , கலக்கிட்டீங்க போங்க ..!!
ஐயோ , கலக்கிட்டீங்க போங்க ..!!
//
பார்த்து.. அப்படியே டோமர் ப்ளாக்ல் போய் எடுங்க.. இங்க ரொம்ப சுத்தம் பார்க்கிறவங்க...
// சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை //
//காதல் கவிதைகள் காதலிகளை போல..!
சில காதல் கவிதைகள் அலுப்பதே இல்லை...,
அவ்வபோது சில காதலிகளும்..! //
சில செருப்புகள் எம்புட்டு அடிச்சாலும் பிய்வதே இல்லை !
அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது மச்சி! ;)
//No matter who I am...What matters is How I am!//
ஹெஹெ,ரெண்டுக்குமே பதில் ரொம்ப சிம்பிள்!
முக்காடு போட்ட மூதேவி! ;)
//அற்புதம்! //
யோவ்,இதுல என்ன எழவு அற்புதத்த கண்டுட்ட நீ? எனக்கு தெரிஞ்'சாவனும்'!
உன்னைய எல்லாம் ஒரு நாள் பூரா இந்த பயலோட அவன் தண்ணி அடிக்குறப்ப விட்டு கதவ பூட்டிடனும்.அப்ப தான் தெரிய வரும் உனக்கு...
வாந்தின்னா என்னன்னு.. :P
என்னது இது?
ஓ கவிதையா.. சாரி சார்..சாரி..சார்.. படிச்சிட்டு வாரென்!
////////பட்டாபட்டி.... said...
ஐயோ , கலக்கிட்டீங்க போங்க ..!!
//
பார்த்து.. அப்படியே டோமர் ப்ளாக்ல் போய் எடுங்க.. இங்க ரொம்ப சுத்தம் பார்க்கிறவங்க... //////////
எத?
////Veliyoorkaran said...
@Rettaivals.//
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை.///
உண்மைதான்..!
காதல் கவிதைகள் காதலிகளை போல..!
சில காதல் கவிதைகள் அலுப்பதே இல்லை...,
அவ்வபோது சில காதலிகளும்..! /////
அப்போ ஆட்டோகிராப்பு வால்யூம் வால்யூமா இருக்குன்னு சொல்லு?
அருமையா இருக்கு பாராட்டுக்கள்
பட்டாபட்டி.... said...
தமிழ்த்தோட்டம் said...
அருமையா இருக்கு பாராட்டுக்கள்
//
ஹி..ஹி ரொம்ப நன்றிங்க...
நாங்க எங்க கடமைத்தானே செஞ்சோம்...
உச் கொட்டும் கதவுகள்????????
A good try
ha...ha..ha...
what a panni people chi chi funny people...
try something small & spark
Post a Comment