RSS

தென்மேற்குப் பருவக்காற்று - Debutant's Breeze!


கொட்டிக்  கிடக்கும் நகரத்து இசைக்கு மத்தியில் எப்பொழுதாவது ஒரு ஆசுவாசம் கிடைக்கும். அநேகமாக அது இளையராஜாவிடமிருந்து கிடைக்கும்.ஆனால் ரஹ்நந்தன் எனும் புது இசை அமைப்பாளரிடமிருந்து ஒரு இளைப்பாறல் கிடைக்குமென எதிர்பார்த்திருக்கவில்லை. பருத்திவீரனில் வரும் " என் உசுருக்குள்ளே..." என ஸ்ரேயா கோஷல் இழுக்கும்போது கொஞ்சம் வெயிலில் பாதாம்கீர் சாப்பிட்டது போல் இருக்குமே...கிட்டத்தட்ட அதே போல ஒரு அனுபவம் தென்மேற்கு பருவக்காற்று பாடல்களைக் கேட்ட பொழுது. இந்தப் படத்தின் விளம்பர ஸ்டில்களைப் பார்த்தபோது ரியாலிட்டி எனும் பெயரில் நம்மை கழுத்தறுக்கப் போகும் இன்னொரு படம் என்றுதான் முடிவு கட்டியிருந்தேன். ஆனால் இந்தப் பட பாடல்களைக் கேட்டபின் வேறு மாதிரியோ என யோசிக்க வைக்கிறது.
சமீப காலமாக கிராமத்துப் படம் என்றாலே...குத்துப் பாட்டும் , திருவிழாக் கரகாட்டப் பாட்டும் தான் என்கிற மாதிரி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை மீறி கொஞ்சம் மெலோடியஸாகவும், கொஞ்சம் வெரைட்டியாகவும் அமைந்திருக்கும் ஆல்பம் எனக் கூறலாம்.

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் பாடல். முதல் முறை கேட்கும்போதே லயிக்கவைக்கும் ட்யூனும் குரலும். நேற்றிலிருந்து என்னுடைய ஃபேவரைட். வரிகளும் பிரமாதம். இதே பாடலை உன்னிமேனனும் பாடியிருக்கிறார், சோகமாக , ரஹ்மானுக்குப் பாடுவது போல் உருக்கமாக.

 சின்னாங் சின்னாங் காட்டுல - டிபிகல் ஷங்கர் மகாதேவன் பாடல். ரிதம் படத்தில் வரும் தனியே தன்னந்தனியே பாடலுடன் நிறைய ஒத்துப் போகிறது, சத்தங்கள் உட்பட.

கள்ளி கள்ளிச்செடி - ஸ்வேதா மோகன் பாடியிருக்கிறார். அருமையான மெலடி. ஹிட் ஆக நிறய வாய்ப்பிக்கிறது.இதே ட்யூனில் ஹரிணி பாடியிருக்கும் ஆத்தா அடிக்கையிலே குறும்பாடலும் கேட்க சுவாரஸ்யம்.

நன்மைக்கும் தீமைக்கும்- இந்தப் பாடலின் ஆரம்பம் பன்னீர் புஷ்பங்களில் வரும் கோடைகால காற்றே வை நினைவு படுத்துகிறது. ஆனாலும் விஜய் பிரகாஷ் பாடும் பாடல்களில் எல்லாம் அவர் குரல் தனித்துத் தெரிகிறது. பிரகாசமான எதிர்காலம்!!!

ஏடி கள்ளச்சி - ஸ்ரேயா கோஷலுடன் விஜய் பிரகாஷ் பாடியிருக்கும் டூயட். எண்பதுகளில் வந்த இளையராஜா பாடலின் தரத்தை  நெருங்கியிருக்கிறது.

ரஹ்நந்தன் போல ஒரு புதிய இசை அமைப்பாளரிடமிருந்து இத்தகைய பாடல்கள் வருவது அபூர்வம். குத்துப் பாடல்களையும் இரைச்சல் வாத்தியங்களையும் நம்பாமல் ரசனயான பாடல்கள் தருவதென்பது என்னைக் கேட்டால் கொஞ்சம் அதிசயம் தான். இந்தப் பாடல்கள் படத்துக்குப் பொருந்திப் போகுமா என்பது தெரியாது. எதிர்பார்ப்புகள் அதிகமில்லையாதலால் ஹிட் அடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். கள்ளிக்காட்டு கதைக்கு வரிகள் கொடுக்க வைரமுத்து பொருத்தமான தேர்வு.ஆனால் கிராமியப் படங்களுக்கு இதைவிட பிரபலமான பாடல்கள் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதால், விசேஷம் ஒன்றும் இல்லை. அரிவாளைத் தூக்கிக்கொண்டு அலம்பல் பண்ணாமல் உணர்வுப்பூர்வமாக கதை சொன்னால் டைரக்டருக்கு புண்ணியமாகப் போகும்.

தென்மேற்கு பருவக்காற்று - கடலோர கவிதைகள், கருத்தம்மா வரிசையில் இல்லையெனினும்  More than what can be expected from a debutant! 

****************************************************************************************************************************
போனஸ் :

வெளிவராத மிஷ்கினின் நந்தலாலா படத்தில் யேசுதாஸ் இளையராஜா கூட்டணியின்  மயங்க வைக்கும் பாடல்!

 
*******************************************************************************************************************************
 1. பட்டாபட்டி..

  Saturday, October 30, 2010

  ஆமா.. இப்ப வரவர , திரைபடங்களின் மேல்தான் உன் பார்வை போய்கொண்டிருக்கிறது..

  ஏதோ நடக்குது போல?... ஹி,,ஹி

 1. பட்டாபட்டி..

  Saturday, October 30, 2010

  யோவ்.. நிசமாவே பாட்டு நல்லாயிருக்கையா...

 1. பின்னோக்கி

  Saturday, October 30, 2010

  பாட்டு கேட்டுடலாம். அருவாள் எடுத்துகிட்டு சண்டை போடாத படமா இருக்கும்னு நம்புவோம்.

 1. Anonymous

  Saturday, October 30, 2010

  மொதல்ல போய் சிடி வாங்குறேன். நன்றி.

 1. Rettaival's

  Sunday, October 31, 2010

  யெஸ் பட்டாபி! அரசியல் பத்தி எழுதுனா சண்டை போட நீ ரெடியா?

 1. எஸ்.கே

  Sunday, October 31, 2010

  அனைத்து பாடல்களும் அருமை! நன்றி சார்!!

 1. Rettaival's

  Sunday, October 31, 2010

  சார் மோரெல்லாம் வேணாம் எஸ்.கே!

 1. பிரவின்குமார்

  Monday, November 01, 2010

  மிகவும் அருமையாக உள்ளது நண்பரே..! பகிர்வுக்கு நன்றி..!

 1. பட்டாபட்டி..

  Monday, November 01, 2010

  Rettaival's said...

  சார் மோரெல்லாம் வேணாம் எஸ்.கே!
  //

  ஏன் ரெட்டை.. மழை ஆரம்பிச்சுடுச்சா?...

  ஹி..ஹி

 1. பட்டாபட்டி..

  Monday, November 01, 2010

  Rettaival's said...

  யெஸ் பட்டாபி! அரசியல் பத்தி எழுதுனா சண்டை போட நீ ரெடியா?
  //

  ஓ.. அதுக்குத்தானே உயிரை கையில புடிச்சுக்கிட்டு இருக்கேன்.. ஹி..ஹி

 1. TERROR-PANDIYAN(VAS)

  Tuesday, November 02, 2010

  @ரெட்டை

  யோ!! என்னாதான்யா சொல்லி இருக்க? இது என்னா திரைவிமர்சனம் மாதிரி பாடல் விமர்சனமா??

  //debutant//

  இது யாரு அந்த பிரபல ஹிட்ஸ் பதிவரா?

 1. Veliyoorkaran

  Wednesday, November 03, 2010

  @@Rettaivaals..///

  http://vennirairavugal.blogspot.com/2010/10/2000.html

  ஹலோ யாரு ரெட்டைவால்ஸா,மாப்ள நான் வெளியூர்காரன் பேசறண்டா..இங்க ஒருத்தன் சிக்கிருக்கான்..அவன ஆட்டோல தூக்கி போட்டுக்கிட்டு மூத்தர சந்துக்கு வந்துடறேன்..நீ பட்டாபட்டிக்கு போன் போட்டு சொல்லிடு...அப்டியே நம்ம பசங்களுக்கெல்லாம் சொல்லி விட்ரு...இன்னிக்கு இவன ரொம்ப நேரம் அடிக்கனும்னு நெனைக்கறேன்...எதுக்கும் ஆபிஸ் லீவ் போட்டுட்டு வந்துரு....! :)

 1. ரோஸ்விக்

  Wednesday, November 03, 2010

  பாட்டு கேட்டிடுவோம். ரெட்டை வால் நல்லாயிருக்குன்னு பொய் சொல்லமாட்டான்....

 1. ப.செல்வக்குமார்

  Wednesday, November 03, 2010

  நான் இன்னும் கேக்களைங்க .. கேட்டுட்டு சொல்லுறேன் ..!!

 1. ILLUMINATI

  Sunday, June 02, 2013

  கேட்பதற்கு முன்னர் காதில் கம்பியை விட்டு கடாவிவிட்டு கேட்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. :)

Post a Comment