RSS

எந்திரன் - ஹைடெக் பிரியாணிஉங்களுக்கு ரஜினி ஸ்டைல் பிடிக்குமா? அதுவும் வில்லத்தனம் செய்யும் ரஜினியின் ஸ்டைல்கள்.அப்படியென்றால் உங்களுக்கும் எந்திரன் பிடிக்கும்.அதிகமில்லை ஜென்டில்மேன் படத்தில் எண்பது சதவீதம் ரஜினி.பத்து சதவீதம் ஐஸ்.மீதி பத்து சதவீதமும் ரஜினி தான். 

ஹோம் தியேட்டரைத் தவிர அநேகமாக தமிழ்நாட்டின் எல்லாத் தியேட்டர்களிலும் ரிலீஸான படம், ரஜினி படம், இதெல்லாத்தையும் விட படம் பார்த்தவர்கள்  பார்க்காதவர்களை துக்கம் விசாரிக்கும் கொடுமையைத் தவிர்ப்பதற்காகவாவது எந்திரன் டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிட்டார்கள்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு உள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷனே எடுத்தாலும் ஐந்து பாடல்கள் வைக்கவேண்டும். ரோபோவாகவே இருந்தாலும் வில்லன்களிடம் சிக்கிகொண்ட கதாநாயகியின் அபலக்குரல் கேட்கும் போது ஓடி வந்து காப்பாற்ற வேண்டும்.கோர்ட்டில் நீதிபதிகளுக்கு உண்மை தெரிந்தவுடன் ஹீரோவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிட வேண்டும்.அதுவும் ஷங்கர் படமென்றால் கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னதாக மெகா க்ராஃபிக்ஸில் குரூப் டான்ஸ் ஆடியே தீர வேண்டும்.இந்த அபத்தமான விதிகளுக்கு எந்திரனும் தப்பவில்லை.சொல்லப்போனால் ஷங்கர் படமென்றால் பொதுமக்களிடம் ஹீரோ நல்லவனா கெட்டவனா என்று மீடியா மைக்கை நீட்டிக் கேட்டுக் கொண்டே அலைவார்கள். இதிலும் ரோபோவை அரெஸ்ட் செய்து அந்த மாதிரியெல்லாம் இம்சை பண்ணுவார்கள் என நினைத்திருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை.

ஒரு ரோபோ.அதை உருவாக்கிய விஞ்ஞானி வசீகரன்.அவருடைய காதலி சனா. இவர்களைச் சுற்றித்தான் மூன்று மணி நேரமும் நகர்கிறது. ஆனால் அலுக்கவில்லை.எல்லா கலைகளும் கற்பிக்கப்பட்ட (அ) ப்ரோகிராம் செய்யப்பட்ட ஆக்க சக்திக்காக ரோபோவை (சிட்டி) உருவாக்கும் விஞ்ஞானிக்கு அவரது புரஃபஸரே வில்லன் ரூபத்தில் வருகிறார்.சகல வல்லமை படைத்த ரோபோவை உணர்ச்சிகள் இல்லாததால் ஆபத்தானது என்று கூறி பயன்பாட்டுக்கு லாயக்கற்றது என அனுமதி தர மறுத்து விடுகிறார். ஆனால் உள்ளூர சிட்டியின் நியூரல் ஸ்கீம் ஃபார்முலாவை அடைந்து விட விரும்புகிறார். இதனிடையில் வசீகரன் சிட்டிக்கு உணர்ச்சிகள் கற்றுக் கொடுக்க ரோபோ சனாவை விரும்ப ஆரம்பிக்கிறது. காதல் ஜோரில் தன்னிஷ்டப்படி நடந்து கொண்டு சனாவை கவர நினைக்கிறது. எதற்கு வம்பென்று ரோபோவை செயலிழக்க வைத்து குப்பையில் போட்டு விடுகிறார் வசீகரன். இது தான் சமயமென்று ப்ரொஃபஸர் போரா ரோபோவை குப்பையில் இருந்து எடுத்து வந்து அழிவு வேலைகள் செய்யும் 'சிப்'பை பொருத்திவிடுகிறார். ரோபோ அட்டகாசம் செய்து போராவையும் கொன்று சனாவையும் கடத்தி பின் என்னவாகிறது என்பதை பெரிய ஸ்க்ரீனில் பார்த்துக் கொள்ளவும். சமர்த்தான ரோபோவை விட வில்லன் ரோபோவாக நொறுக்கி எடுத்திருக்கிறார் ரஜினி. அதுவும் ஐஸ்வர்யாவை மிரட்டும் இடங்களிலும், விஞ்ஞானி ரஜினியை கலாய்க்கும் போதும் ரசிகர்களுக்கு சரவெடி. யாரையாவது வெறுப்பேற்றுவதற்கு,  லகலக போல் இனி" மேமேமே..." தான்.குறிப்பாக வில்லன் ரோபோவின் சிரிப்பும் நடையும் , சான்ஸே இல்லை.நல்ல தியேட்டரில் அனுபவியுங்கள்.

கொஞ்ச நாள் கழித்து ஜில்லென்று ஐஷு மாதா. ராவணனில் ஆண்ட்டி மாதிரி இருந்த ஐஷு இதில் நிஜமாகவே ஐஸ்கிரீம்.பாடல்களுக்கு மட்டும் இல்லாமல் படம் முழுக்க வருகிறார். 

சுஜாதாவின் "ஆகாயம்" என்கிற ரேடியோ நாடகத்தில் கொஞ்சம், என் இனிய இயந்திரா , மீண்டும் ஜீனோவில் கொஞ்சம் , ராபின் வில்லியம்ஸின் Bicentennial Man ல் கொஞ்சம் என அள்ளி எடுத்து தமிழ் மசாலா கொஞ்சம் சேர்த்து ரஜினி என்னும் மேஜிக் உப்பை சேர்த்தால் ஷங்கரின் எந்திரன் தயார். ரோபோவை வைத்து என்ன கதை சொன்னாலும் மேற்கூறிய கதைகளின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது என்பது வேறு விஷயம். ஃபேன்டசி என்கிற பெயரில் நம்ப முடியாத அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் வைப்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. தொப் தொப்பென்று ஆட்கள் செத்து விழுவதை பார்க்கையில்  சமயத்தில் வீடியோ கேம் பார்ப்பது போல இருக்கிறது.முதல் பாதியில் வரும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். சந்தானமும் கருணாஸூம் இருக்கிறார்கள்.அவ்வளவே. மொத்தத்தில் ரஜினி ஜெயித்திருக்கிறார்.அதனால் ஷங்கரும் ஜெயித்திருக்கிறார்.அதனாலேயே சன் பிக்சர்ஸும் ஜெயித்திருக்கிறது. 

பன்ச் டயலாக் இல்லாமல், வழக்கமான ஷங்கர் க்ளிஷேக்கள் இல்லாமல் ஒரு வித்தியாசமான Genre   தொட்டிருப்பதால் எந்த லாஜிக்கும் பார்க்கத் தோன்றவில்லை.ரஜினி படத்தில் லாஜிக்கா? ரஜினிக்குக் கதையே தேவையில்லை.அப்புறம் என்ன லாஜிக்.ரஜினி படத்தை முதல் நாள் பார்க்கிற ஜாலி போதாதா?
 1. பட்டாபட்டி..

  Saturday, October 02, 2010

  கண்ணு முழிச்சு பார்த்திருக்க போல..

 1. பட்டாபட்டி..

  Saturday, October 02, 2010

  படம், இதெல்லாத்தையும் விட படம் பார்த்தவர்கள் பார்க்காதவர்களை துக்கம் விசாரிக்கும் கொடுமையைத் தவிர்ப்பதற்காகவாவது எந்திரன் டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிட்டார்கள்.
  //

  அட.. ஆமாய்யா ஆமா.. எவனப்பார்த்தாலும், படம் பார்த்தாச்சானா விசாரிக்கிறானுக..

  இது சன் பிச்சர்ஸ்ன் வெற்றி..
  ( கஷ்டப்பட்டு விளம்பரம் செய்து..எல்லோருடைய மண்டையிலும் நுழைச்சுட்டாங்க..நல்ல மார்க்கெட் தியரி..)

 1. Veliyoorkaran

  Saturday, October 02, 2010

  @Rettaivals...ராவணனில் ஆண்ட்டி மாதிரி இருந்த ஐஷு இதில் நிஜமாகவே ஐஸ்கிரீம்////

  ஹி...ஹி... ஆமாம் ஆமாம்....! (ச்சே பப்ளிக் ப்ளேஸ்ல இப்புடி வழிஞ்சிட்டனே ....! ) :)

 1. Veliyoorkaran

  Saturday, October 02, 2010

  @@@ராவணனில் ஆண்ட்டி மாதிரி இருந்த ஐஷு ////

  ராவணனில் ஐஸ்வரா ராய் ஆண்டி போல இருந்தார் என்னும் கருத்தை வன்மையாக கண்டித்து தமிழ்மணத்தில் நெகடிவ் வோட்டு போட்டுவிட்டு குஜால் பத்திரி ரைடாய் ஐஸ்வர்யா ராயை சைட் அடிப்போர் சங்கம்...! :)

 1. Rettaival's

  Saturday, October 02, 2010

  பட்டாபட்டி.. said...
  இது சன் பிச்சர்ஸ்ன் வெற்றி..
  ( கஷ்டப்பட்டு விளம்பரம் செய்து..எல்லோருடைய மண்டையிலும் நுழைச்சுட்டாங்க..நல்ல மார்க்கெட் தியரி..)
  **************************************************

  அப்படியே சுஜாதாவை கொஞ்சம் கௌரவப்படுத்தியிருந்தாங்கன்னா நல்லா இருந்திருக்கும்! ஒரு தேங்க்ஸ் கார்ட்...ஒரு அஞ்சலி...இப்படி ஏதாவது! அது ஒன்னு தான் வருத்தம் பட்டாபட்டி!

 1. Rettaival's

  Saturday, October 02, 2010

  வெளியூர் அங்கிள்! நீங்க ஐஷு மாதா ரசிகரா...என்ன உங்களுக்கு வயசு ஒரு அம்பது இருக்குமா....ஆண்ட்டி இந்த படத்தில அழகா இருக்காங்க...!

  ஹி ஹி...!

 1. பட்டாபட்டி..

  Saturday, October 02, 2010

  @வெளியூரு
  //ராவணனில் ஐஸ்வரா ராய் ஆண்டி போல இருந்தார் என்னும் கருத்தை வன்மையாக கண்டித்து தமிழ்மணத்தில் நெகடிவ் வோட்டு போட்டுவிட்டு குஜால் பத்திரி ரைடாய் ஐஸ்வர்யா ராயை சைட் அடிப்போர் சங்கம்...! :)
  //

  ங்கொய்யாலே.. நிசமாவே நெகடிவ் ஓட்டு போட்டிருக்கே..
  @ரெட்டை..
  பீஸ்-க்கு ”ஐஸ்” சோட மேக்கப் போடாத போட்டோவை அனுப்பு..
  அனுபவிக்கட்டும்....

 1. பட்டாபட்டி..

  Saturday, October 02, 2010

  முடிஞ்சா..ரோஸ்விக் பயலுக்கும் அனுப்பு..
  ஏன்னா.. ரெண்டு பன்னாடைகளும் வேற வேறயாம்..

  அய்யோ..அய்யோ....

  இவனுக அலும்பு தாங்க முடியலே....
  .
  .

 1. TERROR-PANDIYAN(VAS)

  Saturday, October 02, 2010

  படம் பாத்துட்டு வந்து டிசைன் டிசைனா வயித்து எரிச்சல கொட்டிக்கிறாங்கபா.... :-(

 1. Rettaival's

  Saturday, October 02, 2010

  டென்சன் ஆவாதய்யா...பட்டாபட்டிகிட்ட சொன்னீன்னா குஷ்பு கிட்ட சொல்லி ரெண்டு டிக்கெட் எடுத்து தருவான்!

 1. TERROR-PANDIYAN(VAS)

  Saturday, October 02, 2010

  @Rettaival
  //டென்சன் ஆவாதய்யா...பட்டாபட்டிகிட்ட சொன்னீன்னா குஷ்பு கிட்ட சொல்லி ரெண்டு டிக்கெட் எடுத்து தருவான்! //

  ஏன் இப்பொ அகிலவுலக அழகு ஆயாக்கள் சங்கத்துக்கு பட்டா தான் தலைவரா?? மச்சி நீ சொன்னது சினிமா டிக்கட் தான? வேற எதும் டபுள் மீனிங் இல்லியே?

 1. Rettaival's

  Saturday, October 02, 2010

  ஏன்யா இப்படி அவன்கிட்ட கோர்த்து விடுற....தனிப் பதிவு போட்டு டவுசரை கழட்டுவான்யா அவன்...! குஷ்புன்னு தான சொன்னேன்.ஆயான்னா சொன்னேன்! ஆண்ட்டிக்கும் ஆயாக்கும் வித்தியாசம் தெரியனும்னா வெளியூர்காரன் கிட்ட ஒரு வாரம் டியூஷன் போ...எல்லாமே விளங்கிடும்!

 1. Veliyoorkaran

  Saturday, October 02, 2010

  @@@@Rettaival's said...
  ஆண்ட்டிக்கும் ஆயாக்கும் வித்தியாசம் தெரியனும்னா வெளியூர்காரன் கிட்ட ஒரு வாரம் டியூஷன் போ...////

  போயேஸ் கார்டன், அண்ணா நகர்ல இருக்கற ஆயாக்கல்லாம் ஆண்டிங்க என அழைக்கபடுவார்கள்..அதே மாதிரி எண்ணூர் ராயபுரத்துல இருக்ககூடிய ஆண்டிங்கல்லாம் ஆயாக்கள் என அழைக்கப்படுவார்கள்...

  (மொத்தத்துல டிக்கட்டு சோக்கா இருந்தா அது ஆண்ட்டி..அதுவே அட்டா இருந்தா ஆயா...அம்புட்டுதேன்..).

  விளக்கம் போதுமா பொதுமக்களே....?

 1. TERROR-PANDIYAN(VAS)

  Saturday, October 02, 2010

  Veliyoorkaran

  //(மொத்தத்துல டிக்கட்டு சோக்கா இருந்தா அது ஆண்ட்டி..அதுவே அட்டா இருந்தா ஆயா...அம்புட்டுதேன்..).//

  அப்போ கிண்டி பஸ் ஸ்டாப்ல உன்னை பார்த்து “ கிழவியை கூட எப்படி மொறச்சி பாக்குது பாரு தெருபொருக்கி நாய்” அப்படினு திட்டிய 60 வயது பாட்டி, செண்ட்ரல் ஸ்டேஷனில் உங்கள் கொடுர பார்வை தாங்காது முந்தானை சரி செய்த 80 வயது கன்னி பெண் இவங்க எல்லாம் ஆண்ட்யா?

 1. Veliyoorkaran

  Sunday, October 03, 2010

  @@@@TERROR-PANDIYAN(VAS) said...
  அப்போ கிண்டி பஸ் ஸ்டாப்ல உன்னை பார்த்து “ கிழவியை கூட எப்படி மொறச்சி பாக்குது பாரு தெருபொருக்கி நாய்” அப்படினு திட்டிய 60 வயது பாட்டி, செண்ட்ரல் ஸ்டேஷனில்/////

  கழுத மேய்க்கற பையனுக்கு எம்பூட்டு அறிவு...என்னா கருத்தா கேள்வி கேக்குது...! :)

 1. TERROR-PANDIYAN(VAS)

  Sunday, October 03, 2010

  @Veliyoorkaran

  //கழுத மேய்க்கற பையனுக்கு எம்பூட்டு அறிவு...என்னா கருத்தா கேள்வி கேக்குது...! :)//

  நல்லா பாருயா.. இது ஒட்டகம்... குஷ்பு மாதிரி குள்ளமா இருந்தா க்ழுதை... சிம்ரன் மாதிரி ஒசரமா இருந்தா ஒட்டகம்... யோ பட்டா அங்க எவன் டவுசர் கழட்டற?? வா வந்து இந்த பயலுக்கு விளக்கம் சொல்லு.... அகிலவுலக ஆண்ட்டிகள் சங்கத் தலைவர் பட்டா மேடைக்கு வரவும்....

 1. balaji

  Thursday, October 07, 2010

  Nice review...Super Star rocks...

 1. rockzsrajesh

  Wednesday, October 20, 2010

  எல்லாம் வயசுக்கு தகுந்த படித்தான் பேசுரிங்கப்பா ஆன்டி, ஆயான்னு , இதுக்குத்தான் இந்த பெருசுங்க ஏரியா பக்கமே நான் வர்றது இல்ல . சரி அடுத்த படதலயாவது நம்ப தலைவரு சூப்பர் ஸ்டார் கூட ஐஸ் பேத்திய ஜோடிய போட சொல்லுங்க , என்ன மாதிரி யூத் எல்லாம் waiting இல்ல . . . .
  ஹி ஹி ஹி

  ராக்ஸ் ...... ( புதுசா blog எழுத வந்து இருக்கேன் அண்ணாச்சி )

  http://rockzsrajesh.blogspot.com/

 1. பிரவின்குமார்

  Wednesday, October 20, 2010

  சுவாரஸ்யமாக சொல்லியிருக்கீங்க..!! உண்மையிலேயே அந்த வில்லன் ரோபோ ரஜின செய்யும் அட்டகாசம் மே..மே... மே... சான்ஸே இல்ல கலக்கிட்டார்...!!!!!!

 1. dondu(#11168674346665545885)

  Saturday, October 30, 2010

  //ராபின் வில்லியம்ஸின் Bicentennial Man//
  ராபின் வில்லியம்ஸ் நடிகரின் பெயர். இந்தக் குறுநாவலை எழுதியது இஸாக் அசிமோவ்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

Post a Comment