எந்திரன் - சூப்பர் சோனிக் பாடல்கள்
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகமான தேடல்கள். வேறென்ன ...? எந்திரன் பாடல்கள் தான். புதிய இன்ஸ்ட்ருமென்ட்கள் , புதிய சத்தங்கள் என மீண்டும் ரஹ்மானிடம் இருந்து ஸ்பெஷல் ஆல்பம். "Neither a Shankar film, Nor a Rajini film " என விமர்சிக்கப்பட்ட சிவாஜியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் போல. முழுக்க முழுக்க ஷங்கர் பட பாடல்களாகத் தான் தோன்றுகிறது.
புதிய மனிதா பூமிக்கு வா - ரஹ்மானுடன் எஸ்.பி.பி பாடியிருக்கும் பாடல். ரோபோவை உருவாக்கி வரவேற்கும் பாடல். ரஹ்மானின் குரலில் ஸ்லோவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் எகிறுகிறது. ரஹ்மானின் மகள் கதீஜாவும் இரண்டு வரிகள் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் விசேஷம். வழக்கமாக ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு எஸ்.பி.பி தரும் உற்சாகத்தை விட இரண்டு மடங்கு துள்ளலுடன் பாடியிருக்கிறார்.அதிலும் தாய் மொழியை தந்தை மொழியாக்கியது புதுமை.வைரமுத்து!
பூம் பூம் ரோபோ டா - நம்ம பழைய யோகி.பி உடன் ஸ்வேதா ,தன்வி மற்றும் கீர்த்தி சகதியா பாடியிருக்கிறார்கள். ரோபோவின் பெயர் சிட்டி எனத் தெரிகிறது.ஹீரோயிஸ பாடல்தான்.சிவாஜியின் தீ தீ பாடலின் வாசனை நிறைய.
அரிமா அரிமா- ஷங்கரின் டிபிகல் "முதல்வா முதல்வா ", மாயா மச்சீந்திரா டைப் பாடல். பாடல் கேட்கும் போதே அரச உடையோடு கிராஃபிக்ஸில் ஆயிரம் பேரோடு கனவில் டூயட் பாடுவார்கள் என தெரிகிறது. ஹரிஹரனும் சாதனா சர்கமும் கஷ்டப்பட்டு பாடியிருக்கிறார்கள்.
கிளிமஞ்சாரோ - ஜாவித் அலி ,சின்மயி கூட்டணி.உடனடியாக ஹிட் ஆகும் வாய்ப்புண்டு.முதல் முறை உங்களுக்கு கேட்கும்போது பாடல் வரிகள் புரிந்து விட்டால் நீங்கள் செம்மொழி ஆராய்ச்சித் தலைவராக முயற்சி செய்யலாம்.அவசர அவசரமாக பாடியிருக்கிறார்கள்.
இரும்பில் ஒரு இதயம் - ரஹ்மானுடன் காஷ் 'ன் க்ரிஸ்ஸி தமிழும் ஆங்கிலமும் கலந்து கலக்கியிருக்கும் பாடல். முதலில் எரிச்சலை தந்து, பின் தாளம் போட வைத்து விடுகிறது.இளமையான ரஹ்மானின் குரல் , வித்தியாசமான சத்தங்கள் என ஒரு Complete party song.
தீம் ம்யூசிக் - எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வெஸ்டெர்ன் வயலின் , கர்நாடக தகிட தகிட என மிரட்டும் ஃப்யுஷன் இசை. ஆனால் ஏற்கெனவே கேட்டது போல் இருக்கிறது.
காதல் அணுக்கள்- ஆல்பத்தின் ஹைலைட். மெதுவாக ஸ்ட்ரிங்க்ஸில் ஆரம்பித்து அலட்சியமாக விஜய் பிரகாஷின் குரலிலும் பின்பு அட்டகாசமாக ஸ்ரேயா கோஷலிலின் குரலிலும் பாடல் நொறுக்கி எடுக்கிறது. பாடல் நெடுக வரும் ஸ்ட்ரிங்ஸும் பாடல் வரிகளும் மனதை அள்ளுகிறது.ரொம்பவும் அழகான பாடலுக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருக்கின்றனர் விஜய் பிரகாஷும் ஸ்ரேய கோஷலும்.
சிலிக்கன் சிங்கம், நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ?, சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் என ரஜினிக்காக தேடித் தேடி வார்த்தைகளைப் பிடித்திருக்கிறார்கள்.
ஓபனிங் சாங் இம்சைகள் , ஏழையாக இருந்து பணக்காரனாகும் பாடல் என ரஜினிகாந்த் படக் கட்டுப்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அதே போல் ரோபோ என்பதற்காக பாடல்களை சின்தஸைஸர் குரல்களில் வெறுப்பேற்றாமல் எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வித்தியாசமான பீட்டுகள் என எதிர்பார்ப்பை உணர்ந்து செய்திருக்கிறார்கள். அதனாலேயே எந்திரன் - A step ahead than satisfaction!
***********************************************************************************
ஜெய்லானி
Sunday, August 01, 2010
சூப்பர் பாட்டு ..