RSS

எந்திரன் - சூப்பர் சோனிக் பாடல்கள்



தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகமான தேடல்கள். வேறென்ன ...? எந்திரன் பாடல்கள் தான். புதிய இன்ஸ்ட்ருமென்ட்கள் , புதிய சத்தங்கள் என மீண்டும் ரஹ்மானிடம் இருந்து ஸ்பெஷல் ஆல்பம். "Neither a Shankar film, Nor a Rajini film " என விமர்சிக்கப்பட்ட சிவாஜியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் போல. முழுக்க முழுக்க ஷங்கர் பட பாடல்களாகத் தான் தோன்றுகிறது.

புதிய மனிதா பூமிக்கு வா - ரஹ்மானுடன் எஸ்.பி.பி பாடியிருக்கும் பாடல். ரோபோவை உருவாக்கி வரவேற்கும் பாடல். ரஹ்மானின் குரலில் ஸ்லோவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் எகிறுகிறது. ரஹ்மானின் மகள் கதீஜாவும் இரண்டு வரிகள் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் விசேஷம். வழக்கமாக ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு எஸ்.பி.பி தரும் உற்சாகத்தை விட இரண்டு மடங்கு துள்ளலுடன் பாடியிருக்கிறார்.அதிலும் தாய் மொழியை தந்தை மொழியாக்கியது புதுமை.வைரமுத்து!

பூம் பூம் ரோபோ டா - நம்ம பழைய யோகி.பி உடன் ஸ்வேதா ,தன்வி மற்றும் கீர்த்தி சகதியா பாடியிருக்கிறார்கள். ரோபோவின் பெயர் சிட்டி எனத் தெரிகிறது.ஹீரோயிஸ பாடல்தான்.சிவாஜியின் தீ தீ பாடலின் வாசனை நிறைய.

அரிமா அரிமா- ஷங்கரின் டிபிகல் "முதல்வா முதல்வா ", மாயா மச்சீந்திரா டைப் பாடல். பாடல் கேட்கும் போதே அரச உடையோடு கிராஃபிக்ஸில் ஆயிரம் பேரோடு கனவில் டூயட் பாடுவார்கள் என தெரிகிறது. ஹரிஹரனும் சாதனா சர்கமும் கஷ்டப்பட்டு பாடியிருக்கிறார்கள்.

கிளிமஞ்சாரோ - ஜாவித் அலி ,சின்மயி கூட்டணி.உடனடியாக ஹிட் ஆகும் வாய்ப்புண்டு.முதல் முறை உங்களுக்கு கேட்கும்போது பாடல் வரிகள் புரிந்து விட்டால் நீங்கள் செம்மொழி ஆராய்ச்சித் தலைவராக முயற்சி செய்யலாம்.அவசர அவசரமாக பாடியிருக்கிறார்கள்.

இரும்பில் ஒரு இதயம் - ரஹ்மானுடன் காஷ் 'ன் க்ரிஸ்ஸி தமிழும் ஆங்கிலமும் கலந்து கலக்கியிருக்கும் பாடல். முதலில் எரிச்சலை தந்து, பின் தாளம் போட வைத்து விடுகிறது.இளமையான ரஹ்மானின் குரல் , வித்தியாசமான சத்தங்கள் என ஒரு Complete party song.

தீம் ம்யூசிக் - எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வெஸ்டெர்ன் வயலின் , கர்நாடக தகிட தகிட என மிரட்டும் ஃப்யுஷன் இசை. ஆனால் ஏற்கெனவே கேட்டது போல் இருக்கிறது.

காதல் அணுக்கள்- ஆல்பத்தின் ஹைலைட். மெதுவாக ஸ்ட்ரிங்க்ஸில் ஆரம்பித்து அலட்சியமாக விஜய் பிரகாஷின் குரலிலும் பின்பு அட்டகாசமாக ஸ்ரேயா கோஷலிலின் குரலிலும் பாடல் நொறுக்கி எடுக்கிறது. பாடல் நெடுக வரும் ஸ்ட்ரிங்ஸும் பாடல் வரிகளும் மனதை அள்ளுகிறது.ரொம்பவும் அழகான பாடலுக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருக்கின்றனர் விஜய் பிரகாஷும் ஸ்ரேய கோஷலும்.

சிலிக்கன் சிங்கம், நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ?, சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் என ரஜினிக்காக தேடித் தேடி வார்த்தைகளைப் பிடித்திருக்கிறார்கள்.

ஓபனிங் சாங் இம்சைகள் , ஏழையாக இருந்து பணக்காரனாகும் பாடல் என ரஜினிகாந்த் படக் கட்டுப்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அதே போல் ரோபோ என்பதற்காக பாடல்களை சின்தஸைஸர் குரல்களில் வெறுப்பேற்றாமல் எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வித்தியாசமான பீட்டுகள் என எதிர்பார்ப்பை உணர்ந்து செய்திருக்கிறார்கள். அதனாலேயே எந்திரன் - A step ahead than satisfaction!
***********************************************************************************
  1. ஜெய்லானி

    Sunday, August 01, 2010

    சூப்பர் பாட்டு ..

  1. Veliyoorkaran

    Sunday, August 01, 2010

    @Rettaivals...//

    வயித்துல பால வார்த்துபுட்ட மச்சி...! சாங்க்ஸ் ஆர் ராக்கிங்...! என் தலைவன் மாஸ் காமிச்சிருக்கான்...!

    And its a good review...! :)

  1. ILLUMINATI

    Sunday, August 01, 2010

    மச்சி,கலக்கல் ...
    நீ review போட்டத சொன்னேன். :)
    இரு படிச்சிட்டு வந்து கமெண்ட் போடுறேன்.

  1. ILLUMINATI

    Sunday, August 01, 2010

    //சிவாஜியின் தீ தீ பாடலின் வாசனை நிறைய.//

    கரெக்ட்டு...
    இரும்பில் ஒரு இதயம் கொஞ்சம் i'm a barbie girl சாயம்..
    கிளிமஞ்சாரோ கெத்து....

    //அதே போல் ரோபோ என்பதற்காக பாடல்களை சின்தஸைஸர் குரல்களில் வெறுப்பேற்றாமல் எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வித்தியாசமான பீட்டுகள் என எதிர்பார்ப்பை உணர்ந்து செய்திருக்கிறார்கள். அதனாலேயே எந்திரன் - A step ahead than satisfaction!//

    cool ! great review buddy.... :)

  1. ஜில்தண்ணி

    Sunday, August 01, 2010

    புதிய மனிதா டாப்பு....

    காதல் அனுக்களும்...கிளிமஞ்சாரோவும் சும்மா ரொமான்சு கலக்கல்

    யோகி பி யையும் செமையா பயன்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்

    நல்ல விமர்சனம்

  1. கனவுகளின் காதலன்

    Sunday, August 01, 2010

    நண்பரே,

    இரும்பினால் செய்த இதயம் பாடலைப் பாடிய பாடகிக்கு இனி நான் அடிமை. பழைய பாடல்களின் சாயல் இருப்பது உண்மையே. சிறப்பான பார்வை.

  1. ஜெ. ராம்கி

    Sunday, August 01, 2010

    //ஓபனிங் சாங் இம்சைகள் , ஏழையாக இருந்து பணக்காரனாகும் பாடல் என ரஜினிகாந்த் படக் கட்டுப்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
    //

    நீங்க பார்த்த முதல் ரஜினி படம் அண்ணாமலைதானே??

  1. Rettaival's Blog

    Sunday, August 01, 2010

    Than Q jailani, veli, iluminatti, kanavukalin kaathalan, mani and jill thanni!

  1. Rettaival's Blog

    Sunday, August 01, 2010

    J. Ramki said...
    //ஓபனிங் சாங் இம்சைகள் , ஏழையாக இருந்து பணக்காரனாகும் பாடல் என ரஜினிகாந்த் படக் கட்டுப்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
    //

    நீங்க பார்த்த முதல் ரஜினி படம் அண்ணாமலைதானே??
    *************************************************
    எடுத்த வரைக்கும் எந்திரன்! ஹி ஹி!

  1. பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி

    Sunday, August 01, 2010

    பாஸ் ,
    பாட்டெல்லாம் கலக்கல் ....,நாடு கெட்டு போனதுக்கு காரணம் ரஜினி என்று எத்தனை பதிவு வரபோகுது பாருங்க...:))

  1. Jey

    Sunday, August 01, 2010

    நேத்துலேர்ந்து ஆறேலு தடைவை கேட்டுட்டேன், பாடல்வரிகள் இன்னும் முழுசா புரியலை..., விசுவல் எப்படி இருக்கும்னு தெரியல..., ஆனா கேக்க.. கேக்க.. பிடிச்சா மாதிரி இருக்கு.

    இந்த கூட்டனி எப்படியாவது ஹிடாக்கிருவாங்க..

    நல்லா இல்லைனு சொல்ரவங்கள ஞானசூனியம்னு சொல்லி .. ஆஃப் ஆக்கிருவாங்க....

    ரெட்டை விமர்சனம் சூப்பர்:)

  1. Unknown

    Monday, August 02, 2010

    பாட்டை கேட்டுட்டு கமெண்ட் போடுறேன். ஓசியில டவுன்லோட் செய்ய மனசு வரலை. ஐ-ட்யூன்ஸ்ல வந்ததும் வாங்கிடனும்.

  1. yesosuresh

    Monday, August 02, 2010

    Already been released in Apple App store, not yet in iTunes. I bought it yesterday. Songs are rocking...

  1. Unknown

    Monday, August 02, 2010

    நிச்சயம் ஹிட் ஆகும்..

  1. பின்னோக்கி

    Monday, August 02, 2010

    முதல் கேட்பிலேயே சில பாடல்கள் நன்றாக இருக்கிறது. இன்னும் ஓரிரு நாளில் அது எல்லாவாக மாறிவிடும் என நினைக்கிறேன்

  1. jokkiri

    Monday, August 02, 2010

    எந்திரன் பாடல்கள் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கிறது....

    சிவாஜிக்கு பிறகு முழு ஆல்பமும் ஹிட்டாக வாய்ப்புள்ளது....

    என்னோட ஃபேவரிட் பாட்டு “ அரிமா அரிமா “

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, August 03, 2010

    ஆமா.. இது என்ன சினைமா ..sorry - ப்பா..
    சினிமா பாட்டா?..

  1. Unknown

    Wednesday, August 04, 2010

    Its a Original Rehman Music not influenced by rajini. Rehman takes thalaivar to next level

  1. Rettaival's Blog

    Thursday, August 05, 2010

    பனங்காட்டு நரி

    August 1, 2010 8:26 PM

    பாஸ் ,
    பாட்டெல்லாம் கலக்கல் ....,நாடு கெட்டு போனதுக்கு காரணம் ரஜினி என்று எத்தனை பதிவு வரபோகுது பாருங்க...:))
    **************************************************************************
    நீங்க வேற...நாம எந்திரன் பாட்டு கேக்கறதுனால விவசாயம் செழிக்குமான்னெல்லாம் கேப்பாங்க பாஸ்!

  1. Rettaival's Blog

    Thursday, August 05, 2010

    jokkiri

    August 2, 2010 4:57 PM

    எந்திரன் பாடல்கள் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கிறது....

    சிவாஜிக்கு பிறகு முழு ஆல்பமும் ஹிட்டாக வாய்ப்புள்ளது....

    என்னோட ஃபேவரிட் பாட்டு “ அரிமா அரிமா “
    ******************************************************************************************************************
    என்னோட ஃபேவரைட் காதல் அணுக்கள்!

  1. Rettaival's Blog

    Thursday, August 05, 2010

    Cool Jey!

    //////////////////////////////////////////////////////////////////////////
    பட்டாபட்டி..

    August 3, 2010 12:07 PM

    ஆமா.. இது என்ன சினைமா ..sorry - ப்பா..
    சினிமா பாட்டா?..
    *********************************************************************
    பட்டு...இது சினிமா பாட்டில்லைய்யா... நித்தியானந்தா சுவாமிகளோட பஜனை பாடல்கள்.

    (வெளியூரு ...நீ வேணா பாரேன்...பட்டாபட்டி இன்னிக்கு சிங்கப்பூர்ல ஒரு கடை விடாம இந்த ஆல்பத்தைக் கேட்டு அலைவான் பாரு!)

  1. கருடன்

    Saturday, August 07, 2010

    review கலக்கல்....

    //(வெளியூரு ...நீ வேணா பாரேன்...பட்டாபட்டி இன்னிக்கு சிங்கப்பூர்ல ஒரு கடை விடாம இந்த ஆல்பத்தைக் கேட்டு அலைவான் பாரு!//

    இது அதவிட கலக்கல்... ஹி ஹி ஹி...

  1. senthilkumar

    Saturday, August 07, 2010

    u r strong in music review. plesant feel to read.

  1. Anonymous

    Tuesday, August 10, 2010

    Really very nice songs. First I did not know for this film songs. Then I hear it really very good.

  1. Anonymous

    Tuesday, August 10, 2010

    Super Songs.. SPB song is very nice ... Rajini is going Another big Stage..


    www.maduraispb.blogspot.com

    மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB



    இசை உலகின் பாடும் நிலா, வானம் பாடி என்ற பட்டத்துக்கு உண்மையான சொந்தக்காரர் திரு.பத்மஸ்ரீ S.P.பாலசுப்பிரமணியம். இசையை அறியாதவர் எவரும் இவ்வுலகில் இருக்க முடியாது, அப்படியே இருந்தாலும் கூட இசைநாயகனாம் பத்மஸ்ரீ Dr.SPB-யை தெரியாதவர்கள் இப்பூவுலகில் எவரும் இருக்க முடியாது.

    அவரின் சாதனைகளை பட்டியலிட எனக்கு வயது போதாது. நான்கு தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கச் செய்யும் அளவிற்கு அவரது பாடல்கள் வந்துவிட்டன. அப்படியென்றால் அவர் இப்பொழுது பாடும் பாடல்களும் இன்னும் பாடப்போகும் பாடல்களும் எந்தத் தலைமுறைக்குச் சொந்தம் ? விடையை தேடிக் கொண்டிருக்கின்றேன். விடை கிடைக்காமலும், இன்னும் பல பாடல்கள் திரு.பாலுவின் குரலிலிருந்து வரவும் இறைவனை வேண்டுகிறேன்.

    பாட்டுடைத் தலைவனாம் பத்மஸ்ரீ Dr.SPB அவர்களின் புகழை எடுத்துச் சொல்லவும், அவரது குரலிலிருந்து வெளி வந்த பாடலின் வரிகளை, வாழும் மற்றும் வர இருக்கும் தலைமுறைக்கும் பரப்ப ஒரு வலைத்தளத்தை (WebSite) நான் உருவாக்கி இருக்கின்றேன்.

    பாலுஜியின் இந்த ரசிகர் தளத்திற்கு என் பிறந்த இடமான அந்த தெய்வ நாயகி மீனாக்ஷி குடி கொண்டிருக்கும் மதுரை மண்ணின் பாடும் நிலாவாக நம் இசை நாயகனை வைத்து இந்த வலைத்தளத்திற்கு ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB”
    என்று பெயர் சூட்டி தொடங்கி உள்ளோம்.

    வலைத்தளத்தின் முகவரி http://maduraispb.blogspot.com/
    வலைத்தளத்தின் சிறப்பம்சங்கள்..

     பாடலின் வரிகளை நேயர்கள் தமிழ் வார்த்தைகளில் காணலாம்.
     பாடல் பதிவின் போது நடந்த சுவாரஷ்யமான நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
     பாலுஜி பாடிய அணைத்துப் பாடல்களையும் இங்கு கேட்கலாம்.
     பாடலை பதிவிறக்கம் (Download) செய்யும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது.
     நேயர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும்,
     மிக சுவாரஷ்யமான ஓட்டுப் பதிவும் இங்கு உள்ளது.


    இம் மதுரையின் பாடும் நிலா தளத்திற்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் அணைவரும் வருக வருக என்று ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB” குழுவின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    வலைத்தளத்தில் தங்களை பின்னூட்டத்தில் (Followers List) இணத்துக்கொண்டு, ஒவ்வொரு பாடலிற்கும் தங்களது கருத்துகளை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும், பாடலின் தகவல்களில் ஏதேனும் பிழையோ அல்லது மாற்றமோ இருந்தால் உடனே தெரிவிக்கவும் குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.




    இப்படிக்கு,
    ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB”
    குழு உறுப்பினர்கள்.
    மதுரை அருண் குமார்.
    SRM Technology Pvt Ltd.,
    Chennai , Madurai
    9944531945

  1. Arun Kumar N

    Tuesday, August 10, 2010

    Super Songs.. SPB song is very nice ... Rajini is going Another big Stage..


    www.maduraispb.blogspot.com

    மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB

    வலைத்தளத்தின் சிறப்பம்சங்கள்..

     பாடலின் வரிகளை நேயர்கள் தமிழ் வார்த்தைகளில் காணலாம்.
     பாடல் பதிவின் போது நடந்த சுவாரஷ்யமான நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
     பாலுஜி பாடிய அணைத்துப் பாடல்களையும் இங்கு கேட்கலாம்.
     பாடலை பதிவிறக்கம் (Download) செய்யும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது.
     நேயர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும்,
     மிக சுவாரஷ்யமான ஓட்டுப் பதிவும் இங்கு உள்ளது.

  1. Arun Kumar N

    Tuesday, August 10, 2010

    வலைத்தளத்தில் தங்களை பின்னூட்டத்தில் (Followers List) இணத்துக்கொண்டு, ஒவ்வொரு பாடலிற்கும் தங்களது கருத்துகளை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும், பாடலின் தகவல்களில் ஏதேனும் பிழையோ அல்லது மாற்றமோ இருந்தால் உடனே தெரிவிக்கவும் குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.




    இப்படிக்கு,
    ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB”
    குழு உறுப்பினர்கள்.
    மதுரை அருண் குமார்.
    SRM Technology Pvt Ltd.,
    Chennai , Madurai
    9944531945

Post a Comment