RSS

டுபாகூர் ஜோசியம் - ரெட்டைவால்ஸ்


ஜோசியத்துல ஏகப்பட்ட வகை இருக்கு.இது என்ன வகைன்னு எனக்கே தெரியாது.கீழ கொடுத்திருக்கிற 10 கேள்விகளையும் பொறுமையா படிச்சுட்டு எதாவது பதிலை முதலில் டிக் பண்ணிட்டு முடிவுகளுக்குப் போங்க.. சினிமா டைட்டில் கார்டுல போடுவானுங்களே " இது உண்மை சம்பவம் இல்லை"னு ...அதை மாதிரி இது உண்மை ஜோசியம் இல்லை.

அ) தக்காளி என்பது
1. சாப்பிட உபயோகிக்கும் பொருள்
2. ஒரு பிரபலமான கெட்டவார்த்தைக்கு சப்ஸ்டிட்யூட்
3. எப்படியும் விலை ஏறும்.அதை வச்சு கலைஞரை திட்டலாம்

ஆ) இளைய தளபதி என்பவர்
1. பன்ச் டயலாக் பேசி நோகடிப்பவர்
2. தானை தலைவன், அடுத்த முதல்வர் ஃபிளாப் படங்களின் போது கூட)
3. கலாய்க்க உபயோகப்படும் இன்னொரு ஜென்மம்.

இ) பதிவுலகம் என்பது
1. திரையுலகம், பத்திரிக்கை உலகம் மாதிரி ஏதோ ஒரு எழவு
2. வருவோர் போவோரையெல்லாம் நக்கல் பண்ண ஒரு நல்ல இடம்
3. வீட்டில் மனைவியை திட்ட முடியாததால் மற்ற எல்லோரையும் திட்டுவதற்கு தோதான இடம்

ஈ) ஃபாலோயர்ஸ் என்பவர்கள்
1. ஒரு குறிப்பிட்ட தலைவரை , தத்துவத்தை பின் தொடர்பவர்கள்
2. கிறுக்குப் பயலுக...என்னத்த எழுதுனாலும் படிக்கிறவங்கே
3. பொண்டாட்டியையும் திட்ட முடியாமல், வெளியாட்களையும் திட்ட முடியாமல் இன்னொருத்தன் கலாய்ப்பதை வெறிகொண்டு ரசிப்பவர்கள்

உ) உதார் என்பது
1. வெத்து சவுண்டு
2. எவ்வளவு மிதி வாங்கினாலும் அலட்டிக்காம பண்ணுவது
3. எல்லாப் பதிவுலயும் பண்ணுவது

ஊ) திரை விமர்சனம் என்பது
1. பத்திரிக்கைகளில் வருவது
2. மொக்கை படத்துக்கு முதல் நாள் கைக்காசை அழிச்சு போயிட்டு வந்து படம் எடுத்தவனை வண்டி வண்டியா திட்டுவது.
3. படமே பார்க்காமல் அப்பப்போ செய்வது

எ) மாமனார் என்பவர்
1.மனைவியின் அப்பா
2.உலகத்துலயே மகா ஏமாளி.நம்மளை நம்பியும் பொன்னு கொடுத்த , கொடுக்கப்போற அப்பாவி
3. மாமான்னா ஏட்டைய்யா...மாமனார்னா , வயசான ஏட்டைய்யாவா?

ஏ)இத்தாலி ராணி எனப்படுபவர்
1. அப்படி யாரையும் தெரியாது
2. இத்தாலி ராஜாவுக்கு மொத பொண்டாட்டி...(ராஜாவோட செகண்ட் ,தேர்டு இவங்க ஃபோட்டொவெல்லாம் எந்த வெப்சைட்டுல கிடைக்கும்?)
3. காங்கிரஸ் தலைவர்.இலங்கை தமிழர் பிரச்சினைல இருந்து சிந்தாதிரிபேட்டை பிக்பாக்கெட் கேஸ் வரைக்கும் கலாய்க்க உபயோகப்படுபவர்

ஐ) சாரு நிவேதிதா என்பவர்
1. தன்னைத் தானே அடிக்கடி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்பவர்.
2. யாரு சார் அந்த ஃபிகரு..? நம்பர் கிடைக்குமா?
3. அட நம்ம சாணி... மவனே வா நீ...உன்னை போட்டு தள்றேன் இருடி!

ஒ) தமிழன்.....?
1. நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நமீதாவுக்கு அடுத்து யார் என்று யோசிப்பவன்
2. விஜய் படம். வக்கீலா வருவாப்லயே..!கரெக்டா?
3. தன்னை தான் ஓட்டறான்னு தெரியாமலேயே கமெண்ட் ஏரியாவுல கூட சேர்ந்து கும்மி அடிப்பவன்.

முடிவுகள்:

அனைத்து கேள்விகளுக்கும் எண் 3 ஐ டிக் செய்தவர்களுக்கு :

நீங்கள் அநியாயத்துக்கு நல்லவர்கள்.கிழிந்திருந்தாலும் பட்டாபட்டியை மட்டுமே அணிந்து கொள்வீர்கள்.உங்கள் ராசிக்காரர்களுடன் அன்பாயிருப்பீர்கள்.நீங்கள் அமர்ந்தபடி பீடி குடிக்கும் ஸ்டைலிலேயே எதிர்கால சந்ததியினர் உங்களுக்கு சிலை வைக்க வாய்ப்புண்டு.நக்கீரனிலோ தட்ஸ்தமிழிலோ ஏதாவது செய்தி படித்தவுடன் ரட்சகன் நாகார்ஜுன் மாதிரி உங்களுக்கு நரம்பு புடைக்கும்.இந்த உலகத்தையே மாற்றவேண்டுமென்று துடிப்பீர்கள்.ஆனால் அது உங்களால் முடியாது என்று தெரிந்தவுடன் நொந்துபோவீர்கள்.அப்பாவி மக்கள் மீது ரொம்பவும் கரிசனாமயிருப்பீர்கள்.குறிப்பாக தமிழ் அப்பாவிகள் என்றால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.இன்னும் மன்னராட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வந்து ஓட்டலில் சர்வர் இட்லிக்கு தேங்காய் சட்னி ஊற்றினால் கூட அது கருணாநிதி குடும்பத்தின் அராஜகமாகத் தோன்றும் வாய்ப்பு இருக்கிறது.ஒரு நாள் கூட சும்மாயிருப்பது உங்களுக்குப் பிடிக்காது.அதற்கு தோதாக நித்தி , சாரு , ராமதாஸ் என உங்களுக்கு நூசு(?) கிடைத்துக் கொண்டே இருக்கும்.எதைப் பற்றியாவது கருத்து சொல்லவேண்டுமே என மனசு அடித்துக் கொள்ளும்.கமெண்ட் அடிப்பதில் நீங்கள் கில்லாடிகள்.ரெ,வெ என தொடங்கும் பெயர் கொண்ட ஆசாமிகளிடம் கவனமாக இருக்கவும்.அவர்கள் உங்கள் பட்டாபட்டியை உருவவும் வாய்ப்பிருப்பதால் நித்யானந்தாவின் ஸ்பெஷல் பூஜையில் கலந்து கொண்டு தோஷத்தை நீக்கவும்.
அதிர்ஷ்ட எண் : 1800-ங்கொய்யாலே
அதிர்ஷ்ட நிறம் : ஏதோ ஒரு கலர்.தெரிஞ்சு என்ன சாதிக்கப் போறீங்க?

எல்லாக் கேள்விகளுக்கும் எண் 2ஐ தேர்வு செய்தவர்களுக்கு :

ஜாலி பேர்வழியான நீங்கள் எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டிர்கள்.எந்த அளவுக்கு என்றால் எதாவது ஒரு ஃபிகரிடம் செருப்பாலேயே அடிவாங்கினால் கூட "ஹீல்ஸ் ரொம்ப ஹார்டா இருக்கும்மா...உன் கால் வலிக்கப்போகுது " என்று கொஞ்சும் அளவுக்கு மானமுள்ளவர்கள்.அழகான ஜிகுடிகளை, அஜ்ஜும்மா,புஜ்ஜும்மா,உச்சிமாங்காளி என செல்லம் கொஞ்சுவதில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது.வலிக்காத மாதிரியே நடிப்பதில் வல்லவர்கள்.உங்கள் ஏரியாவில் ஆண்கள் பின்னூட்டமிட வந்தால் உங்கள் முகம் சரக்கடித்து வாந்தி எடுத்தது போல் ஆகி விடும்.அவர்களை அடித்து விரட்ட ஆசைப்படுவீர்கள்.அதே சமயம்,சில பொன்னுங்க வந்து பின்னூட்டமிட்டால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்களுடன் ஸ்விட்சர்லாந்திலும் ஸ்பெய்னிலும் டூயட் ஆடிக்கொண்டிருப்பீர்கள்.எதற்குமே லாயக்கில்லாத வெத்து டோமர்களுக்கு ரசிகர்களாயிருப்பீர்கள்.அவர்கள் படம் எவ்வளவு மொக்கையானாலும் ஓடிவிடாதா என ஏங்குவீர்கள்.மாமனார் மேல் மிகுந்த அன்பு(?) வைத்திருப்பீர்கள்.வெறும் வாயில் உதார் விட்டு அடுத்தவனை சண்டைக்கு இழுப்பது உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.ரசிக்கும்படியான புதிய புதிய கெட்ட வார்த்தைகளை கண்டுபிடிப்பீர்கள்.உங்களை யாராவது பாராட்டினால் அவனை கண்டமேனிக்கு ஓட்டுவீர்கள்.அதே சமயம் யாராவது உங்களை கலாய்த்தால் ரசிப்பீர்கள்.உள்ளூரில் நிறைய ஃபிகர்களிடம் ஒரு ரவுண்டு அடி வாங்கி முடித்துவிட்டு வெளியூர்காரனாக அடி வாங்க முடிவெடுத்துள்ளீர்கள்.நீங்கள் நினைத்தது நடக்கும்.
அதிர்ஷ்ட எண் : ஃபிகர்களின் ஃபோன் நம்பர்.
அதிர்ஷ்ட நிறம் : அந்த கருமத்தை பத்தி உங்களுக்குக் கவலையே கிடையாது.

எல்லாக் கேள்விகளுக்கும் எண் 1 ஐ தேர்வு செய்தவர்களுக்கு :

உங்களுக்கு சம்மந்தமில்லாத இடத்தில் வந்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.போங்க..! போய் உருப்படியா உங்க ஜோலியை பாருங்க
****************************************************************************
 1. பட்டாபட்டி..

  Saturday, July 24, 2010

  முதல் வெட்டு என்னோடது.. இரு படிச்சுட்டு வாரேன்...

 1. பட்டாபட்டி..

  Saturday, July 24, 2010

  நீங்கள் அநியாயத்துக்கு நல்லவர்கள்.கிழிந்திருந்தாலும் பட்டாபட்டியை மட்டுமே அணிந்து
  //

  அடப்பாவி... என்னைய போட்டு தள்ள ரெடியாயிட்டியா?...

  இரு.இரு... உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறேன்..

 1. பட்டாபட்டி..

  Saturday, July 24, 2010

  . வீட்டில் மனைவியை திட்ட முடியாததால் மற்ற எல்லோரையும் திட்டுவதற்கு தோதான இடம்
  //

  எந்த மனைவி பாஸ்.. கரெக்டா சொல்லுங்க...

 1. பட்டாபட்டி..

  Saturday, July 24, 2010

  ஓய்.. நம்பர் 0 தேர்ந்தெடுத்தவங்களுக்கு, பதில் எங்கேய்யா?...

 1. Rettaival's

  Saturday, July 24, 2010

  எனக்குத் தெரியும்லே...நீ எகத்தாளமாதான் நம்பரை தேடுவேன்னு!

 1. பட்டாபட்டி..

  Saturday, July 24, 2010

  http://pattapatti.blogspot.com/2010/07/blog-post_24.html

  //


  ஏம்பா..வெளி நாடெல்லாம் போயிட்டு வந்திருக்கே..ஹி...ஹி

  பேட்டி ...ஹி...ஹி..


  சரக்கு.....ஹி..ஹீ

 1. ரோஸ்விக்

  Saturday, July 24, 2010

  அட 1,2, 3 போட்டிருக்கிறது தான் பதிலாயா...? நான் அ, ஆ, இ... இதுகளையில்ல பதில்னு நோட்டுல எழுதி வச்சுகிட்டு கீழ ஜோசியம் பார்க்க வந்தேன்... ச்சே...

 1. ரோஸ்விக்

  Saturday, July 24, 2010

  உன் ப்ளாகுக்கு போட்டிருக்கிறது என்ன வெளிநாட்டுக்கு நீ போனப்ப வாங்குன சட்டையா??

 1. Jey

  Saturday, July 24, 2010

  நீங்க போட்ருக்கிற காஸ்ட்யூம் மக்காத்தீவுல வங்குனதுங்களா?...
  சோஸியம் பாக்குறதுல, நொம்ப கெட்டிக்காரகலா, இருப்பீக போலயே..., எம்புட்டு பீசு?..

 1. பின்னோக்கி

  Saturday, July 24, 2010

  எல்லாத்துக்கும் எல்லாமே கரெக்டா இருக்கே ?. ஜோசியத்திலகம்.

 1. சேலம்ஆனந்த்

  Saturday, July 24, 2010

  சூப்பர்

 1. ஜெய்லானி

  Saturday, July 24, 2010

  //. யாரு சார் அந்த ஃபிகரு..? நம்பர் கிடைக்குமா?
  3. அட நம்ம சாணி... மவனே வா நீ...உன்னை போட்டு தள்றேன் இருடி!//

  ஹா..ஹா.. ரெட்டை சூப்பர் கேள்வி,, ஆமா ரெண்டையிம் டிக் அடிச்சா எந்த பலனை படிக்கிறது

  அவ்வ்வ்வ்வ்

 1. ஜெய்லானி

  Saturday, July 24, 2010

  //அட 1,2, 3 போட்டிருக்கிறது தான் பதிலாயா...? நான் அ, ஆ, இ... இதுகளையில்ல பதில்னு நோட்டுல எழுதி வச்சுகிட்டு கீழ ஜோசியம் பார்க்க வந்தேன்... ச்சே//

  நானுந்தான் ரொஸு ஆனா வடை போச்சே..!!

 1. கே.ஆர்.பி.செந்தில்

  Saturday, July 24, 2010

  என்னமோ போங்க.. இந்த மாமனாருகள நெனச்சாத்தான் சிரிப்பு சிரிப்பா வருது..

 1. ILLUMINATI

  Monday, July 26, 2010

  மச்சி,கலக்கல்.
  அதிலும் அந்த விஜய் கேள்வி,followers கேள்வி,தமிழன் மற்றும் சாணி கேள்விகள் அந்தரு. :)
  யோவ்,ஒரு நாள் வாய்யா.நாம ரெண்டு பேரும் சேந்து வெளியூர்காரன கலாய்ச்சு கலாய்ச்சு விளையாடலாம். :)
  (அப்பாடி,நாம safe.நம்மள நாரடிக்கல. :) )

 1. ILLUMINATI

  Monday, July 26, 2010

  வெளியூர்கரனின் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் சில கேள்விகள்...

  பிகர் என்பது ?

  1.அழகான பெண்.

  2.கண்ணுல படுற எல்லாமே.முக்கியமா,செருப்பால் அடிக்குற எல்லாருமே..


  காதல் என்பது?

  1.உன்னதமான விஷயம்.

  2.பார்த்த ரெண்டாவது நொடியிலேயே வர்றது.நாரத்தனமா அடி வாங்கினாலும் ,வெக்கமே இல்லாமல் செய்வது.
  ஆனா,முடிவை எல்லாம் கேக்கக் கூடாது.


  ஆடு வெட்டு என்பது?

  1.கோவிலில் செய்வது.

  2.வர்ற போறவனை எல்லாம் இழுத்துப் போட்டு கலாய்ப்பது.

  சின்னத் தளபதி என்பவர்?

  1.எந்த எழவெடுத்த நாயோ?

  2.தானைத் தலைவனின் தங்க மகன்.

  செருப்பு என்பது....

  1.கால்ல போடுறது.

  2.கன்னத்தில் படுவது.

 1. Jey

  Monday, July 26, 2010

  இலுமி, ஏன்யா இந்த லொலைவெறி.. ஏதவது ஆடு சிக்குமானு, ஏன்யா இப்படி அலையுரீக....

  ரொமான்ஸ்மூடுல இருக்குரவங்கள... குச்சி விட்டு ஆட்டாதயா, உலகத்துலேயே அதுதான் நொம்ப டேஞ்சரு...

 1. Veliyoorkaran

  Monday, July 26, 2010

  தக்காளி வந்துட்டான்யா...என்னடா வரலேன்னு பார்த்தேன்... ! :)

 1. ILLUMINATI

  Monday, July 26, 2010

  //ரொமான்ஸ்மூடுல இருக்குரவங்கள... குச்சி விட்டு ஆட்டாதயா, உலகத்துலேயே அதுதான் நொம்ப டேஞ்சரு...//

  யோவ்,வெளியூர்கரானின் நாத்த ச்சே,மொத்த வரலாறு உனக்கு தெரியாதுயா. :)

 1. Veliyoorkaran

  Monday, July 26, 2010

  @ Illuminaaatti ///
  மச்சி போன வாரம் சிவாஜி கணேசன் நடிச்சு வீர சிவாஜின்னு ஒரு படம் ரிலீஸ் ஆய்ருக்காம்..பார்த்துட்டியா...பார்த்துட்டு அதுக்கு உடனே விமர்சனம் சுடசுட எழுதிரு...உன் விமர்சனம் படிச்சிட்டுதான் நான் படமே பார்க்க போகணும்..! - இலுமியின் சுடும் விமர்சனங்களை படித்துவிட்டு கொதித்து போயிருப்போர் சங்கம்...:)

 1. ILLUMINATI

  Monday, July 26, 2010

  @veli...
  மச்சி,அதுக்கு முந்தா நாள் வந்த கொரிய படத்த பாத்துகினு இருக்கேன்.அதனால,இது பத்தி பதிவு போட லேட் ஆவும்டே.அதுவும் போக,இது மாதிரி உலகப் படங்கள எல்லாம் நாங்க பாக்குறது இல்ல.அதுக்கு உன்னை மாதிரி ஆளுவ இருக்குறதே போதும்டே.
  - என்ன லொள்ளு பண்ணினாலும் வெக்கமே இல்லாம கவுன்ட்டர் கொடுப்போர் சங்கம்.

 1. ILLUMINATI

  Monday, July 26, 2010

  அப்புறம் மச்சி,முந்தா நாலு அந்த முக்கு சந்துல ஒரு பாட்டி கிட்ட ப்ரோபோஸ் பண்ணி அடி வாங்குனியே அது பத்தி எப்ப மச்சி போஸ்ட் போடுவ?

  --அடி வாங்கும் போது கூட நின்னு குமுறி விட்டு,பிறகு அப்புராணியாக அலும்பு பண்ணுவோர் சங்கம்.

 1. ILLUMINATI

  Monday, July 26, 2010

  அட,என் பதிவு கிடக்கு மச்சி.அடுத்த பதிவுல யாரு கிட்ட அடி வாங்குன கதை மச்சி?
  -- விடாமல் லொள்ளு பண்ணுவோர் சங்கம்.

 1. வால்பையன்

  Monday, July 26, 2010

  நான் யாரு!
  எனக்கேதும் தெரியலையே!

 1. Anonymous

  Tuesday, July 27, 2010

  எ) கேள்வி டாப்பு..
  இந்த மாதிரி research எல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறீங்க?

 1. ராஜன்

  Tuesday, July 27, 2010

  ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் அமையப் பெற்ற ஒருவன்!


  ஒருவன்.....


  அது நாந்தான்!

 1. sweatha

  Saturday, July 31, 2010

  உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  :)

 1. Selvamani

  Wednesday, August 25, 2010

  different post...
  Nanri tholare..!!!

Post a Comment