RSS

எழுத்துச் சீர்திருத்தம் - எதைத் தின்னால் பித்தம் தெளியும்


பொதுவாக இரண்டு தமிழர்கள் பரஸ்பரம் அறிமுகமாகி கொண்டால் தப்புத் தப்பாகவேனும் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்கிறார்கள்.எங்கே தமிழில் பேசினால் சக தமிழன் தன்னை தரக் குறைவாக நினைத்து விடுவானோ என்கிற அச்சம் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.வேறென்ன?தமிழ் மட்டுமே பேசினால் தன்னைப் படிக்காதவன் என்று நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.

ஒரு அயல் மாநிலத்தவன் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு சகஜமாக சென்னை நகரத்தில் ஜீவிக்க முடியும்.ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு மனிதன் சென்னை போன்ற மாநகரத்தில் ஜீவிப்பது மகா கஷ்டம். தமிழ் போன்ற தொன்மையான மொழிக்கு இது அதீதமான கேவலம்.எதனால் இந்த நிலைமை என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்தால் பலர் கோபத்துக்கு ஆளாக நேரிடும். நம்முடைய ஆசையெல்லாம் செம்மொழி அந்தஸ்தை அரசியல் அல்லாது நிஜமாகவே மொழிக்குக் கிடைத்த கௌரவமாக மாற்றவேண்டும் என்பது தான்.

வரப்போகும் தமிழ் மாநாட்டில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரப் போவதாக காற்று வாக்கில் செய்தி அடிபடுகிறது. நல்லது தான்.குழந்தைகள் பழகும் விதமாக இலகுவாக மாற்றப் போவதாக சொல்கிறார்கள். அதாவது 247 வடிவங்களிலிருந்து கொஞ்சமாக குறைத்தால் மனனம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.உபயோகப் படுத்துவதும் எளிது என்பது அவர்களது கணக்கு. தமிழை இவ்வளவு வருஷங்களாக நாம் கஷ்டப் பட்டுக் கற்றுக்கொண்டதாகவும் இனி வரும் தலைமுறை எளிதாக கற்றுக்கொள்ளப் போவதாகவும் ஒரு நம்பிக்கை. வளைத்து வளைத்து எழுதுவதனால் தமிழ் வளரவில்லை எனக் கருதுவார்களானால் அதைப் போன்ற முட்டாள்தனம் இந்த பூமியில் இல்லை.

பிரச்சினை தமிழ் அல்ல.தமிழனின் உளவியல் சிக்கல் தான். படித்த நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகள் தமிழில் பேசக் கூச்சப் படுகின்றன. ஆங்கிலத்தைப் போல் நம் தமிழும் சந்தேகத்துக்கில்லாமல் நல்ல மொழி தானென ஒத்துக் கொள்ள மறுக்கும் சமூகம்.தமிழில் சிந்தித்து கஷ்டப் பட்டாகிலும் ஆங்கிலத்தில் மனதுக்குள் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் பேசுகிறார்களன்றி தமிழில் பேசினால் பாவம் என்பது போல ஒரு மனோபாவம். சென்னை நகரப் பள்ளிகளிலோ கேட்கவே வேண்டாம். ஆங்கிலப் புலமையே வேலை பெற்றுத் தருமென்ற நம்பிக்கையில் தமிழை தரை டிக்கெட் என்று குழந்தைகளை நம்பச் செய்வதில் சமர்த்தர்கள்.

தமிழக ஆட்சியாளர்களுக்கோ அலாவுதீன் அற்புத விளைக்கைத் தேய்ப்பது போல அரசாணை இட்டவுடன் எல்லோரும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை. மாணவர்கள் தமிழ் படிப்பதை பெருமையாக நினைக்க வழி செய்யுங்கள். அரசாங்கம் கொடுக்கும் சில்லறை ஸ்காலர்ஷிப்புகள் குவார்ட்டருக்கு கூடப் பத்தாது.

அடுத்ததாக பெயர்ப்பலகைகளை எல்லாம் தமிழ்ப் படுத்தப் போகிறார்களாம். அடிப்படை தப்பை சரி செய்யாமல் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்? தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக நினைத்தால், நினைக்க வழி செய்தால் தன்னாலேயே தமிழ்ப் பெயர் வந்து விடப் போகிறது.

தமிழைக் கொஞ்சம் வளைந்து கொடுக்க அனுமதித்தாலே போதும். ஜூன் என்ற மாதத்தை ஏற்றுக் கொண்ட பின் அதை சூன் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்வதில் தான் சிக்கல். ஃபேஸ் புக்கை அப்படியே ஏற்றுக் கொண்ட பின் அதை ஏன் முகப் புத்தகம் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும். முகப்புத்தகம் என்று அழைக்கும் நண்பர்கள் ஆர்குட்டுக்கு தமிழில் என்ன என்பதையும் சொன்னால் புண்ணியமாகப் போகும்.யாரும் சொல்ல மாட்டார்கள்.இந்தப் போலித்தன்மை தான் தமிழைப் பயிற்று மொழியாக அமைத்துக் கொள்வதில் சிக்கலை உண்டாக்குகிறது.

அமெச்சூர்த்தனமான மொழியாக்கங்கள், யாரும் ஏறெடுத்துப் பார்க்க முடியாத களஞ்சியங்கள் என தமிழுக்கு எதிராக நிற்பது தமிழர்களேதான். இது போதாதென்று பத்திரிக்கைகளில் கூட ஆனந்த விகட குமுதத் தமிழ் என்றும் காலச்சுவட்டு உயிர்மைத் தமிழ் என்கிற பிரிவெல்லாம் வேறு இருக்கிறது.

எனக்குத் தமிழில் மட்டுமே எழுதுவதில் பெருமையோ அல்லது அவமானமோ கிடையாது. நான் தமிழில் சிந்திப்பதால் தமிழிலேயே எழுத முயற்சிக்கிறேன்.இதைப் பெருமையாக நினைக்கும் காலம் வருமானால் அன்று எனக்கு தீபாவளி தான்.

மாற்றம் அத்தியாவசிய தேவைதான். ஆனால் இப்போதிருக்கும் டெஸ்ட் மேட்ச்சை இருபது ஓவர்களாக்கி நவீனப் படுத்துவது செம்மொழி மாநாட்டில் சாத்தியமா?

எதைத் தின்னால் பித்தம் தெளியும் நண்பர்களே?



பின் குறிப்பு :


எழுத்து சீர்திருத்தம் பற்றிய நண்பர் கனகரத்னம் ராஜ்குமாரின் கட்டுரை
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Saturday, April 24, 2010

    எனக்குத் தமிழில் மட்டுமே எழுதுவதில் பெருமையோ அல்லது அவமானமோ கிடையாது. நான் தமிழில் சிந்திப்பதால் தமிழிலேயே எழுத முயற்சிக்கிறேன்.இதைப் பெருமையாக நினைக்கும் காலம் வருமானால் அன்று எனக்கு தீபாவளி தான்.

    //


    அது....

  1. Veliyoorkaran

    Saturday, April 24, 2010

    @@@நவீனப் படுத்துவது செம்மொழி மாநாட்டில் சாத்தியமா?

    மாறலைனா மனுஷன் இன்னும் குரங்காவே இருந்துருப்பான்..

    மாற்றங்கள் கண்டிப்பா வரும்.வரணும்...!

    அதுவரை காத்திருப்போம்..

    தமிழின் காதலனாய் ..!!

  1. Aba

    Saturday, April 24, 2010

    ரெட்டை, கலக்கல்... உண்மையை எழுதி இருக்கிறீர்கள்...

    //போலித்தன்மை தான் தமிழைப் பயிற்று மொழியாக அமைத்துக் கொள்வதில் சிக்கலை உண்டாக்குகிறது.//

    //அமெச்சூர்த்தனமான மொழியாக்கங்கள்,//

    பலர் அறியாத உண்மை...

  1. Aba

    Saturday, April 24, 2010

    //மாறலைனா மனுஷன் இன்னும் குரங்காவே இருந்துருப்பான்..

    மாற்றங்கள் கண்டிப்பா வரும்.வரணும்...!//

    வெளியூரு, மாற்றங்கள் தேவைதான். ஆனா தமிழோட எழுத்து, பேச்சு வடிவங்களை மாற்றிய பிறகு அத எப்பிடி தமிழ்னு சொல்றது? வேற புதுப்பெயர் வச்சா நல்லாயிருக்கும்!

  1. ILLUMINATI

    Saturday, April 24, 2010

    //பொதுவாக இரண்டு தமிழர்கள் பரஸ்பரம் அறிமுகமாகி கொண்டால் தப்புத் தப்பாகவேனும் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்கிறார்கள்.எங்கே தமிழில் பேசினால் சக தமிழன் தன்னை தரக் குறைவாக நினைத்து விடுவானோ என்கிற அச்சம் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு.வேறென்ன?தமிழ் மட்டுமே பேசினால் தன்னைப் படிக்காதவன் என்று நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.//

    //ஒரு அயல் மாநிலத்தவன் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு சகஜமாக சென்னை நகரத்தில் ஜீவிக்க முடியும்.ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு மனிதன் சென்னை போன்ற மாநகரத்தில் ஜீவிப்பது மகா கஷ்டம். தமிழ் போன்ற தொன்மையான மொழிக்கு இது அதீதமான கேவலம்.//

    அசிங்கமான உண்மை.
    ரெட்டை,எழுத்து சீர்திருத்தம் ஒன்றையும் கிழிக்க முடியாது.கலைஞர் தன்னுடைய ஏட்டு சுரைக்காய் சாதனையில் ஒன்றாக இதையும் சொல்லிக்கொள்ளலாம்.அவ்வளவே....
    ஆங்கிலத்தில் பேசினால் மதிப்பு என்று நினைக்கும் மக்கள் எண்ணம் மாற வேண்டும். முக்கியமாக சென்னையில். இங்கே சில இடங்களில் ட்ரெஸ் கோட் இருப்பது போல்,பல இடங்களில் சொல்லப்படாத லேங்குவேஜ் கோடும் உண்டு.... சென்னையைத் தாண்டினால் நல்ல வேலை இந்த கேவலம் இல்லை.... ஆனால்,தமிழகத்தில் ஆங்கில மோகம் அளப்பரியதே.ஆங்கிலம் ஒரு மொழி,பல நூறு மொழிகளைப்போலே....அது எந்த வகையில் உயர்ந்தது என்று எனக்கு புரியவில்லை.

    “சாரி,எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது” என்று பெருமையோடு சொல்லும் ஆட்கள் இங்கு அதிகம்.அதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
    மற்ற பல மாநிலங்களில் தங்கள் மொழியோடு ஆங்கிலமும் தெரிந்து வைத்திருப்பார்கள்.ஆனால் இங்கே,ஆங்கிலத்தோடு தமிழ் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்...அதுவும் இப்போது செகண்ட் லேங்குவேஜ் சாய்ஸில் அடிபட்டு கொண்டு இருக்கிறது.கேட்டால் தமிழில் சுலபமாக ஸ்கோர் பண்ண முடியாது என்று பதில்.இதெல்லாம் யார் தப்பு ? படிக்கும் காலத்திலேயே தமிழின் மீது ஆர்வம் ஏற்படுத்தினால் தான் உண்டு.இப்படி விலகிப்போக வைத்தால் எவன் திரும்பிப் பார்ப்பான்? இதை பேசினால் இன்று முழுக்க பேசலாம். நாம் பேசி என்ன பிரயோஜனம்?

  1. ஜெய்லானி

    Saturday, April 24, 2010

    பெட்ரோல் , டீஸல் , கேஸ் இப்படி சில பேர்களுக்கு தமிழ்ல கேட்டா தமிழ் வாழுமா ? மாற்றம் நம்மிடமிருந்துதான் வரனும்.

  1. சாமக்கோடங்கி

    Saturday, April 24, 2010

    ஓலையில் இருந்து, காகிதப் புத்தகத்துக்கு மாறி, இப்போது, காற்றில் இணையத்தோடு கலந்து, செயற்கைக்கோள் மூலம் உலகையே சுற்றி வந்து கொண்டிருக்கிறது நம்முடைய தமிழ்.. மாற்றங்கள் என்னவென்று பொருமையாகத்தான் பார்க்க வேண்டும்.. அப்புறம் தமிழின் மீது நமக்குப் பற்று வரவைத்தது யார்..? எனக்கு சரியாக ஞாபகமில்லை.. என் தாய் தந்தையர் இல்லை.. என்னுடைய வகுப்பாசிரியர்கள் தான்.. அவர்கள் சொல்லித்தரும் விதத்தில் தான் எல்லாம் இருக்கிறது.. நம்மைப் போன்றோர் பெற்றோர்களாக ஆகும்போது, குழந்தைகளுக்கு இதன் தனித்துவத்தை விளக்கலாம்..

  1. Rettaival's Blog

    Sunday, April 25, 2010

    ILLUMINATI said...

    ...அதுவும் இப்போது செகண்ட் லேங்குவேஜ் சாய்ஸில் அடிபட்டு கொண்டு இருக்கிறது
    ***************************************

    ரொம்ப சரி இலுமி.. இப்போ செகண்ட் லாங்குவேஜ்ல இருந்தும் எடுத்துடுவாங்களோன்னு தோணுது!

  1. Rettaival's Blog

    Sunday, April 25, 2010

    பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    நம்மைப் போன்றோர் பெற்றோர்களாக ஆகும்போது, குழந்தைகளுக்கு இதன் தனித்துவத்தை விளக்கலாம்..

    ************************************************

    தமிழ் பேசுவதை பெருமையாக நினைக்க வைக்க என்ன செய்யலாம் பிரகாஷ்?

  1. Unknown

    Sunday, April 25, 2010

    சரியான பதிவு ரெட்டை..

    தமிழ்ப் படிப்பதை கேவலமாக நினைக்கும் குணம் சென்னைக்குப் பாத்தியப்பட்டது. இப்போது அது சிறுகச் சிறுக மதுரை போன்ற சிறு நகரங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

    பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. தமிழின் சிறப்பையும் பெருமையயும் சேர்த்து சொல்லித்தர வேண்டும்.

    பள்ளிகளில் சொல்லித்தராவிட்டால் பெற்றோர்கள் செய்ய வேண்டும்.. ஆனால் 95% பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமலிருப்பதை பெருமையாக அல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Monday, April 26, 2010

    பதிவர்களுக்கு

    எகத்தாளம் புடிச்ச தமிழ்மொழியே நமக்கு வேண்டவே வேண்டாம்.
    எது எப்படியானாலும், தமிழ்மொழி சம்மந்தப்பட்ட எதுவுமே நமக்கு வேண்டாம்...
    இப்படி கோரமாக தனிமனித தாக்குதல் நடத்த உதவும் தமிழ் மொழிக்கு, கோவையில் மணிமண்டபம் கட்டினாலும் கட்டுவார்கள்.
    நாட்டின் நலனுக்கு இது உகந்ததில்லை.

    எனது இந்த கருத்தில எவ்வித மாற்றமும் இல்லை..
    நன்றி-( மேன்... த டாபர் மேன்..)

  1. senthilkumar

    Wednesday, April 28, 2010

    அமெச்சூர்த்தனமான மொழியாக்கங்கள், யாரும் ஏறெடுத்துப் பார்க்க முடியாத களஞ்சியங்கள் என தமிழுக்கு எதிராக நிற்பது தமிழர்களேதான்


    தமிழைக் கொஞ்சம் வளைந்து கொடுக்க அனுமதித்தாலே போதும். ஜூன் என்ற மாதத்தை ஏற்றுக் கொண்ட பின் அதை சூன் என்று தான் அழைக்க வேண்டும் என்று சொல்வதில் தான் சிக்கல். ஃபேஸ் புக்கை அப்படியே ஏற்றுக் கொண்ட பின் அதை ஏன் முகப் புத்தகம் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும். முகப்புத்தகம் என்று அழைக்கும் நண்பர்கள் ஆர்குட்டுக்கு தமிழில் என்ன என்பதையும் சொன்னால் புண்ணியமாகப் போகும்.யாரும் சொல்ல மாட்டார்கள்.இந்தப் போலித்தன்மை தான் தமிழைப் பயிற்று மொழியாக அமைத்துக் கொள்வதில் சிக்கலை உண்டாக்குகிறது.

    intha article makkal tvkku oru copy anuppungappa......... avinga thollai thaanga mudiyala

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, April 29, 2010

    எழுத்துச் சீர்திருத்தம் - எதைத் தின்னால் பித்தம் தெளியும்

    //

    ஆரஞ்சுப் பச்சிடியை...

    ஹை.. ஆத்தா நான் பாஸாயிட்டேன்...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Saturday, May 01, 2010

    ரெட்டை.. இருக்கியா?..
    மே தின வாழ்த்துக்கள்..

  1. MUTHU

    Thursday, May 06, 2010

    புது பதிவை போடு இல்லை உன்னை டோன்'டு வுடன் கோத்து விட்டு விடுவேன்

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, May 07, 2010

    Muthu said...

    புது பதிவை போடு இல்லை உன்னை டோன்'டு வுடன் கோத்து விட்டு விடுவேன்
    //

    Pls don't do..டோண்டூ..
    ரெட்டை.. நாய்கடிக்கு , ஊசி ரெடி பண்ணீட்டையா?..

Post a Comment