RSS

சிறுநகரக் காதல்கள்



உன்னை சைக்கிளில் பின் தொடர்ந்து

நீ படிக்கும் டியூஷனில் சேர்ந்து

உனக்கு முன் கோவிலில் நெய்விளக்கேற்றி

உனக்காக அர்ச்சனை செய்து

உனக்காக ஃபுட்போர்டில் தொங்கி

உன் பெயரை பஸ் சீட்டின் பின்புறம் எழுதி

உனக்காக ரிசல்ட் பார்த்து

உனக்காக ட்ரீட் வைத்து

கேண்டீன் அருகே காதலை சொல்லி

உன் அட்வைஸ் எல்லாம் கேட்டு

ஏதோ ஒரு மியூசிகல்ஸில்

இளைய நிலா பொழிகிறதில் ஆரம்பித்து

நிலாவே வா வில் முடிகிறது

பெருந்திரளான சிறுநகரத்துக் காதல்கள்!

*********************************************
மதுரை திருச்சி நெடுஞ்சாலையில்

பிரிந்து செல்லும் ஒரு கிளைச்சாலையில்

மூன்று கிலோ மீட்டர் தள்ளி

ஒரு மரத்தினடியில்

உலகையே வென்ற மமதையில்

ஒரு வாரம் துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்  மஜ்னுவும்

சிவப்பு சுடிதார் போட்ட லைலாவும்

காதல் பண்ணிக்கொண்டிருந்தார்கள்

எதிர்காலம் பற்றிய பயத்தைப் புறந்தள்ளிவிட்டு

யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தோடு...
  1. Veliyoorkaran

    Saturday, January 30, 2010

    மச்சான்...அந்த அழுக்கு ஜீன்ஸ் போட்ட மஜ்னுக்கள் கூட்டத்துல நீனும் ஒருத்தன்டா...முன்னொரு காலத்துல...மறந்துடாத... :)

  1. பின்னோக்கி

    Saturday, January 30, 2010

    பொருத்தமான படத்துக்கு ஒரு பாராட்டு (சில பேர் காதல் கவிதைன்னுட்டு, இங்கிலீஷ் பட ஹரோயின் போட்டோ போடுவாங்க).

    ரெண்டு கவிதையும் அனுபவத்தில் விளைந்ததால் படிக்க நன்றாக இருக்கிறது.

  1. Rettaival's Blog

    Sunday, January 31, 2010

    நன்றி பின்னோக்கி!

  1. Unknown

    Sunday, January 31, 2010

    machi unakku ennada aachi,kadhal kavithaiyila pinuriye,valthukal

Post a Comment