RSS

ஆயிரத்தில் ஒருவன்: இல்ல இல்ல நிறைய பேரு!


இது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காதது..இது ரொம்ப புதுசு என்பார்களே..அது இந்தப் படத்துக்கு ஓரளவு பொருந்தும்.ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள், காதில் பூ வைக்கும் சமாச்சாரங்கள் என்று நிறைய இருந்தும் படம் 3 மணி நேரம் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.

கி.பி 1279 ல் கடைசி சோழ மன்னன் தன் நாட்டை இழக்கும் போது தன் வாரிசைக் காப்பாற்றி தொலைவில் வியட்னாம் அருகில் உள்ள ஒரு தீவுக்கு அனுப்பிவிடுகிறான்.கூடவே முன்பு கைப்பற்றி இருந்த பாண்டியர்களின் குல தெய்வ சிலையையும். வாரிசுக்கு அரணாக நிறைய தடைகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

ஏறத்தாழ 750 ஆண்டுகளுக்குப் பிறகு தொல் பொருள் ஆராய்ச்சியாளரான பிரதாப் போத்தன் அந்த இடத்தைத் தேடிப் போய் தொலைந்து விடுகிறார்.அவரைக் கண்டு பிடிக்க ரீமா சென் தலைமையில் ஒரு அழகம் பெருமாள் புடை சூழ ஒரு டீம். அதற்கு துணையாக ஆண்ட்ரியா.ஆண்ட்ரியாவுக்கு மட்டுமே ஓலைச்சுவடியைப் படித்து தெரிந்து தீவை அடைய வழி தெரிகிறது. இவர்களுக்கெல்லாம் கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கூலி வாங்கிகொண்டு கப்பலில் துணைக்கு வரும் ஹெல்பர்கள். மொத்தம் ஏழு தடங்கல்கள். தண்ணீரில் அலையும் விஷ ஜந்து,காட்டுவாசிகள், புதைகுழி,சர்ப்பம் பசி தாகம் ,கடைசியாக கிராமம் என்று அத்தனையும் அட்டகாசம். எல்லாவற்றையும் கடந்து போகும் கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியாவுக்குக் காத்திருக்கிறது அதிர்ச்சி!

அங்கே இன்னும் சோழர்கள் வாழ்கிறார்கள்.சோழ ராஜனாக பார்த்திபன்! கார்த்தி, ரீமா ஆண்ட்ரியா மூவரையும் கட்டிப் போட்டு சித்திரவதை செய்க்றார்கள். ரீமா சென் யார் என்பது தெரியும்பொழுது ஆரம்பிக்கிறது கதை. தான் கொண்டுவந்த செய்தி ஒன்று உள்ளது என்ற படி, ராஜாவிடம் கலவி செய்த பிறகே சொல்வேன் என்பதும்..அதன் பின் வரும் காட்சிகளும் அட்டகாசம். சோழ மக்கள் அங்கே உமக்காகக் காத்திருக்கிறார்கள், ராஜ்யத்தை ஏற்கவேண்டும் என்பதே அந்த செய்தி என்று ரீமா ஆசை காட்ட சோழ ராஜாவான பார்த்திபனும் மக்களுடன் நாடு திரும்ப ஒத்துக்கொள்கிறார். பார்க்திபனும் ரீமாவும் சண்டை போடும் காட்சியிலும் பின்பு படம் முடியும் வரை நாம் கேட்கும் தமிழும் இதற்கு முன் நிறைய சரித்திரக் கதைகளில் கூட கேட்காதது. ரீமா பாண்டிய பேரரசின் வாரிசு என்பதோடு நிறுத்தியிருக்கலாம். கமாண்டொ ஆஃபிசரான அழகம் பெருமாளும் இன்னும் ஏழு பேரும் பாண்டிய வாரிசுகள் என்பதும் கடைசியில் போரின் போதும் கூட ஆர்மி ஆட்களுடன் அவர்கள் பழைய பாண்டியர்கள் டிரெஸ்ஸில் இருப்பது உறுத்துகிறது.

சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி கிளாடியேட்டர் பாணியில் ஒரு மைதானத்தில் நடக்கும் சண்டையில் சோழர்களிடையே ஹீரோவாகி சோழப் படையுடனே சேர்ந்து விடுகிறார். போர் வியூகம் வகுப்பதெல்லாம் கூட சார் தான். கடைசியில் போரில் என்ன ஆகிறது ? காணாமல் போன பிரதாப் போத்தன் என்ன ஆனார்..?சோழ மன்னன் நாடு திரும்பினானா...அவனது வாரிசை யார் காப்பாற்றுவது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை வெள்ளித்திரையில்.

படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா , ரீமா சென் , பின்னணி இசை மற்றும் செல்வ ராகவன். இப்படி ஒரு கதையை யோசித்ததற்கே அவரைப் பாராட்டலாம். பார்த்திபன் அறிமுகமாகும் காட்சியிலும், புதைகுழி காட்சிகளிலும் செல்வராகவன் நிமிர்கிறார். ஆனால் நிறைய இடங்களில் பல இங்கிலீஷ் படங்கள் கண்முன் தோன்றி மறைகின்றன. 300, கிளாடியேட்டர் என்று ஏகப்பட்ட படங்கள். ஆனால் தமிழிலும் சரித்திரப் படங்கள் எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்களே.அதுவும் பழைய படங்களில் வருவது போலல்லாமல், நிஜமாக.படத்தில் நிறைய ரத்தம்,வன்முறை.

ஆனால் படம் பார்க்கும் போது அது பொருட்டாகவே இல்லை. ரீமா, பார்த்திபன், கார்த்தி , ஜி.வி.பிரகாஷ், டைரக்டர் என்று ஆயிரத்தில் நிறைய பேர் படத்தைத் தூக்கி நிறுத்த கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை தமிழ் படங்கள் பார்க்கும் போதும் பிளாகில் கண்டபடி ஓட்ட வேண்டும் என்றே தோன்றும். இந்தப் படத்தில் ஓட்டுவதற்கு நிறைய இருந்தும் அப்படிச் செய்யத் தோன்றவில்லை.

"துள்ளுவதோ இளமை" வந்த பிறகு அது மாதிரி 30 குப்பைகளாவது வந்திருக்கும். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு 5 படம் வந்தால் சந்தோஷமாயிருக்கும்.

 1. குட்டிபிசாசு

  Friday, January 15, 2010

  //"துள்ளுவதோ இளமை" வந்த பிறகு அது மாதிரி 30 குப்பைகளாவது வந்திருக்கும். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு 5 படம் வந்தால் சந்தோஷமாயிருக்கும்.//

  நல்ல கமெண்ட்...

 1. ||| Romeo |||

  Friday, January 15, 2010

  \\ஆர்மி ஆட்களுடன் அவர்கள் பழைய பாண்டியர்கள் டிரெஸ்ஸில் இருப்பது உறுத்துகிறது//

  logic மீறிய செயல் இது .

 1. பின்னோக்கி

  Friday, January 15, 2010

  படம் பார்க்கலாம்னு சொல்றீங்க. சரி. 2010ன் முதல் ஹிட் ?

 1. தமிழ் வெங்கட்

  Friday, January 15, 2010

  தியேட்டருக்கு சென்று படம் பார்கலாமா..?

 1. Veliyoorkaran

  Friday, January 15, 2010

  Elei...enada Parthibana pathi onnume eluthala...alwa kuduthutaanugala thalaivanukku..

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, January 15, 2010

  //தமிழ் வெங்கட் said...
  தியேட்டருக்கு சென்று படம் பார்கலாமா..?//

  தாரளமா தலைவா...தியேட்டர் ல மட்டும் போய் பாருங்க...ரெகுலரா இங்கிலீஷ் படம் பாக்கறவங்களுக்கு..இந்த படத்தோட கிராஃபிக்ஸ், டயலாக் எல்லாம் சப்பையா இருக்கும் ..ஆனா தமிழில் ரொம்பவே புதுசு!

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, January 15, 2010

  Elei...enada Parthibana pathi onnume eluthala...alwa kuduthutaanugala thalaivanukku..

  எலேய்! பார்த்திபன் முதல் முறையா ஒரு படத்துல நடிச்சிருக்கான்டா.. தலைவி ரீமா சென் மேல இருக்கற பாசத்துல அவனை லூஸ்ல விட்டுட்டேன்...

  ரீமா சென் போதையை போட்டு ஆடுவா பாரு... ஜென்மம் சாபல்யம் அடைஞ்சிடுச்சு மச்சி!

 1. jeya prabu

  Friday, January 15, 2010

  கிட்டத்தட்ட மூணு மணிநேரம் படத்த சீட்டு நுனில உக்காந்து பாத்துட்டு, க்ளைமாக்ஸ் ல என்ன சொன்னார் படத்தோட முடிவு என்னான்னு அடுத்த ஷோ ல காட்டுவானுன்களோ ன்னு தியேட்டர திரும்பி பாத்துகிட்டே வந்த என்னை மாதிரி ஞான சூனியத்த ஆறுதல் படுத்தவாச்சும் க்ளைமாக்ஸ் சொதப்பல் பத்தி ரெண்டு வரி நீங்க எழுதிருக்கலாம் ன்னு தோணுது.
  எனக்கென்னமோ ஆண்ட்ரியா வால சோனியா அகர்வாலிடம் மன கசப்பு , பைனான்ஸ் பிரச்சன இதெல்லாம் தான் செல்வா வ இந்த நெலமைக்கு தள்ளிட்டு ன்னு நெனைக்கிறேன்..

 1. Prasanna

  Friday, January 15, 2010

  Nalla review! Niraya solliteenga. Aanalum padam parkum pothu makkalukku swarasyam irukkum.

  Prasanna.

 1. கும்க்கி

  Friday, January 15, 2010

  சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வர்ர்து....
  அழுகிறேன் அழுகிறேன் அழுகை வர்து......

 1. ரெட்டைவால் ' ஸ்

  Friday, January 15, 2010

  "சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வர்ர்து....
  அழுகிறேன் அழுகிறேன் அழுகை வர்து......"//

  யோவ் கும்க்கி எகத்தாளம் புடிச்சவர்யா நீ...

 1. ஹிப்ஸ்...

  Friday, January 15, 2010

  மெய்யாலுமா...!

 1. ம.சங்கர்

  Thursday, January 21, 2010

  அந்த காலத்தில் தான் நடந்து போனார்கள்.ஆனால் போன் போட்டதும் ஆட்கள் ஆயுதம் எல்லாம் ஹெலிகாப்டரில் வரும் போது ஹெலிகாப்டரிலேயே
  சோழர்களின் இடத்திற்கு போய்விடலாமே

 1. ரெட்டைவால் ' ஸ்

  Thursday, January 21, 2010

  வாஸ்தவம் தான் சங்கர் ஜி ! அங்க சோழர்களைத் தேடிப் போகலையே...பிரதாப் போத்தனைத் தேடி தானே போறாங்க. அங்க கடைசில தானே சொழர்கள் வாழறாங்கன்னே தெரியுது! இது ரொம்ப பலவீனமான லாஜிக் தான். இந்த மாதிரி genre படம் வருவதே அபூர்வம்! அதனாலதான் இந்த மாதிரி படங்கள் வேணும்னு சொல்றேன். இல்லாட்டி இன்னும் ஹீரோ ஹீரோயின் ரயில்வே ஸ்டேஷன் ல ஒன்னு சேருவதை எவ்வளவு நாள் பாத்துக்கிட்டு இருக்கிறது!

 1. வெளியூர்காரன்

  Friday, January 22, 2010

  இல்லாட்டி இன்னும் ஹீரோ ஹீரோயின் ரயில்வே ஸ்டேஷன் ல ஒன்னு சேருவதை எவ்வளவு நாள் பாத்துக்கிட்டு இருக்கிறது..////
  ஹா..ஹா...மச்சி...நல்லா காப்பாத்துரடா செல்வாவ...படத்துல லாஜிக் இருக்கோ இல்லையோ...முன்னூறு வருஷம் தவம் இருந்தாலும் நம்மள மாதிரி சாமான்யனால பார்க்கவே முடியாத ஒரு விசயத்த சரித்திர படம்ங்கற பேர்ல உன் ஆளு காமிசிட்டான்...ரீமா சென் வாழ்க..அந்த ராஜ ராஜா சோழனின் மருத்துவச்சி வாழ்க..மெடிக்கல் டெஸ்ட் வாழ்க... :)

Post a Comment