விண்ணைத் தாண்டி வருமா? கௌதம் மேனனுக்கு ஒரு வேண்டுகோள்!
பொதுவாக ரஹ்மான் பாடல்கள் 15 வது முறை கேட்கும் போதுதான் புரிய ஆரம்பிக்கும்.அதிலும் நடு நடுவில் எது இங்கிலீஷ் ராப் எது தமிழ் ராப் என்பது 33 வது முறை கேட்டால் தான் விளங்கும்.வி.தா.வருவாயாவும் விதிவிலக்கல்ல. பாடல்களின் நடுவே ஆங்கிலம் தமிழ் வித்தியாசாப் படுத்த ஒரு எளிய வழி ! பிளாஸி பாடினால் ஆங்கிலம் மற்றதெல்லாம் தமிழ். இந்தப் படத்தில் மலையாளமும் இருக்கிறதென்பது வேறு விஷயம். ஆஸ்காருக்குப் பின் தமிழில் ரஹ்மானுக்கு ராவணா தான் முக்கியமாக இருக்குமென்று நினைத்திருந்தேன்.
ஆனால் இந்தப் படமும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் கௌதம் மேனனின் இசை ரசனை. மணிரத்தினத்துக்குப் பின் எல்லா படங்களிலும் பாடல்கள் ஹிட் ஆகவும் சூப்பர் ஹிட்டும் ஆகியது அநேகமாக கௌதம் மேனனுக்காகத்தான் இருக்கும்.
சும்மா சொல்லக் கூடாது.கௌதம் ஏமாற்றவில்லை. முதலில் ஹோசன்னாவா , ஹொசானா வா....ஏற்கனெவே எல்லா பண்பலைகளிலும் போட்டுத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து ஓமனப்பெண்ணே பாடல். நிச்சயம் சன் ம்யுசிக்கிலும் இசையருவியிலும் ஏகப்பட்ட டெடிகேஷன்கள் கேட்டுப் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள். அப்புறம் தேவன் & சின்மயி பாடும் பாடல். லேசாக பாய்ஸ் படத்தில் அட்னன்சாமியின் பூம் பூம் பாடலை நினைவுபடுத்துகிறது. பிறகு கார்த்திக் பாடியிருக்கும் டைட்டில் பாடல். டிரேட்மார்க் ரஹ்மான் பாடல். "மன்னிப்பாயா" என்று ஒரு பாடலில் ஷ்ரேயா கோஷல் ரஹ்மானுடன் சேர்ந்து உருகுகிறார்.
ஆரோமலே - மிகவும் கவர்ந்த பாட்டு இதுதான். லேசான ஸ்ட்ரிங்க்ஸில் ஆரம்பிக்கும் பாடல் முழுக்க முழுக்க மலையாளத்திலேயே பாடப்பட்டிருக்கிறது. அநேகமாக தமிழ் படத்தில் முழு மலையாளப் பாடல் இதுவாகத்தான் இருக்கும். கண்ணுக்குள் கண்ணாய் பாடலை என்னதான் தாமரை அட்டகாசமாக எழுதியிருந்தாலும் லிரிக்ஸை தனியாக வாசித்தால்தான் பாடலே புரிகிறது.
விண்ணைத் தாண்டி வரட்டும் வராமல் போகட்டும் ... கௌதம் மேனனுக்கு என்னுடைய வேண்டுகோள் எல்லாப் பாடல்களையும் வலுக்கட்டாயமாக ஒரு படத்தில் திணிக்காதீர்கள் என்பது தான். இப்போதைய ரசிகர்கள் யாரும் எல்லாப் பாடலையும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று விரும்புவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. படத்தில் சுவாரஸ்யத்தையும் குறைக்கும், பாடலுக்கான உழைப்பும் வீண். பாடல்களை டி.வி யில் மட்டும் காட்டிவிட்டு அந்தந்த சிச்சுவேஷன்களில் Sound Track மட்டும் ஒலிக்கச் செய்யுங்கள். நிறைய மலையாளப் படங்களிலும் ஏன் ஹிந்தி படங்களில் கூட பாடல்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்து விட்டார்கள்.
குறிப்பாக இந்தப் படம் வருகிற நேரம் வைக்கப் படுகின்ற வேண்டுகோளில் எங்களைப் போன்றவர்களின் சுயநலமும் இருக்கிறது கௌதம் சார்!ஏதோ தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துவதற்காகவோ ரஹ்மானின் வெறியன் என்பதற்காகவோ சொல்லவில்லை. இந்த மாதிரி அற்புதமான பாடல்களுக்கு சிம்பு கையை காலை ஆட்டி பண்ணப்போகும் கூத்துக்களைப் பார்க்கிற தைரியம் எங்களுக்கு இல்லை சாமி! அதற்காகவாவது ப்ளீஸ் கௌதம்....
ஹாய் அரும்பாவூர்
Friday, January 22, 2010
ஹலோ வால்ஸ் நல்ல சிறப்பான திறனாய்வு ஆனால் இறுதியில் வரும் .
"இந்த மாதிரி அற்புதமான பாடல்களுக்கு சிம்பு கையை காலை ஆட்டி பண்ணப்போகும் கூத்துக்களைப் பார்க்கிற தைரியம் எங்களுக்கு இல்லை சாமி! அதற்காகவாவது ப்ளீஸ் கௌதம்...."
வரிகள் அக்மார்க் குசும்பு நன்றாக உள்ளது