காஸ்ட்லியான வேஸ்டுகள்! (இடையில் வரும் தேர்தல்களும் தான்)
ஒருவேளை தனக்குக் கிடைக்காததனால சொல்றானோன்னு நினைக்க வேணாம்!உண்மையிலேயே இது உலக தண்டங்களின் தொகுப்பு.
முதலில் கின்ஸா ஹேன்ட் பேக். வைரம் , பிளாட்டினம் பதித்த இதனுடைய விலை ஜஸ்ட் 1.63 மில்லியன் டாலர்.
இந்த வைர ஹெட் ஃபோன்களின் விலை 15000 டாலர் தான்.
இந்த பீட்ஸாவின் விலை 2800 டாலர்.
காரணம்...இதன் மேல் தூவப் பட்டிருக்கும் 24 காரட் தங்க இலைகள்!
செம காம்ப்ளிகேட்டட் ஆன கடிகாரம் இது.எப்பவுமே 5 நிமிஷம் லேட்டாதான் காட்டுமாம்.
இந்தக் கடிகாரம் 300000 டாலராம்.
ஓகே பா...இதெல்லாம் அசலூர்க்காரனுக பண்ற கிறுக்குத்தனங்கள்ல சிலதுன்னு விட்டுடலாம். நம்ம ஊர்ல காஸ்ட்லியான பொருளே இல்லையா...அதை நம்ம தண்டமாக்கறதே இல்லையான்னு யோசிச்சுப் பாருங்க!
இருக்கு...இதான் அது.
இந்த மை பெரிசா ஒன்னும் விலையில்லைன்னாலும் கண்ணுக்குத் தெரிஞ்சு நம்ம வேஸ்ட் பண்ற, மேல பார்த்ததைவிட காஸ்ட்லியானது.
ரூவாய்க்கு சுயமரியாதை கிடைக்கிற புண்ணிய பூமி சார் நம்மளோடது.
வெளியூர்க்காரன்
Sunday, December 20, 2009
ரூவாய்க்கு சுயமரியாதை கிடைக்கிற புண்ணிய பூமி சார் நம்மளோடது.////
ஹா...ஹா...எங்கேர்ந்துடா புடிக்கற இந்த வரியெல்லாம்...நல்லாருக்கு மச்சி...!