தூர்தர்ஷனுக்கு வயசு 50
என்னதான் அரசாங்கத்தோடதுன்னாலும் இப்படியா கேட்பாரில்லாம விட்டுடறது? அவனவன் மெகா சீரியல் காலம் முடிஞ்சு,ரியாலிட்டி ஷோ,டி.வி லேயே சுயம்வரம்,கல்யாணம் காதுகுத்துன்னு போய்க்கிட்டிருக்கான், இன்னும் எதிரொலி வச்சு இன்லாண்ட் லெட்டர் வாசிச்சுட்டு இருந்தா எப்டி பாஸ்?அதே போல நாட்டில ஏதாவது பெரிய சம்பவம் நடந்தா உடனே கை,என்.டி.டி.வி, சி.என்.என் தான் ரிமோட்ல அழுத்த சொல்லுது.ஏன் தூர்தர்ஷன் ல இருக்கறவங்களே அதப் பாப்பாங்களான்னு டவுட் தான்.
டி.டி எங்கே சறுக்கியது? டெக்னாலஜியா,உள்ளடக்கமா,இல்லை வேற ஏதாவதா? ஆனா தூர்தர்ஷன் ஆத்ம விசாரணை பண்ண வேண்டிய நேரம் இது. தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலம் குழந்தைங்களோட மனசு கெட்டுப் போகாத காலம்.என்னதான் 24 மணி நேர சானல்கள் தகவல்களை அள்ளிக் கொட்டினாலும் குழந்தைகளை குறிப்பா டீனேஜ் பசங்க மனோபாவங்களை மாத்தினது தான் ஜாஸ்தி.கொஞ்சமாவது கலாச்சாரத்தை மீட்டெடுக்கனும்னா அதில் டி.டி யோட பங்கு நிச்சயமா வேணும்.என்னதான் டாக்டர்,பி.ஹெச் டி,எம்.பி.ஏன்னு போனாலும் நம்ம எலிமென்டெரி ஸ்கூல் டீச்சரை மறக்க முடியாது இல்லையா! அந்த மாதிரி தான் தூர்தர்ஷனும். அந்தக் கால டி.டி யின் சில வீடியோக்கள் உங்களுக்காக.
Anonymous
Friday, September 18, 2009
"சந்திரகாந்தா,வேர்ல்ட் திஸ் வீக் , சுரபி, சித்ரஹார்..."
மனசுக்குள்ள, பக்கத்துக்கு வீட்டு பழைய dyanora tv ய நினைவுபடுத்தர வார்த்தைகள்...
மழை நேரத்துல என் இனிய பொன் நிலாவே சாங்க, லவ்வரோட உக்கார்ந்து கேக்ற மாதிரி இருக்கு சார் உங்க article..its classic...keep rocking..