மெட்ராஸ்- கலக்கல் 10 கலீஜ் 10
முதல்ல ,
கலக்கல் 10:
1. எலெக்ட்ரிக் ட்ரெய்ன்:- ஊருக்குள்ள நூறு பஸ் ஓடினாலும், இதுல போற சுகமே தனி.
வண்டி கிளம்புற சத்தமும்,ப்ளாட்ஃபார்ம் ல நிக்கிற ஃபிகருங்களூம், ட்ரெய்னுக்குள்ள
கேக்குற பாட்டுகளும்,ஓரமா நின்னா வீசற காத்தும்...சூப்பரா இருக்கும்.
2. தி.நகர் :- தியாகராய நகர் @ திருவிழா நகர். பந்த் அன்னிக்கு கூட
திருவிழாக் கூட்டம் இருக்கும்.தீபாவளி வந்துட்டா...யப்பா...இப்பவே மூச்சு
முட்டுது. ஊதுவத்தி ஸ்டாண்ட் ல இருந்து ஹெலிகாப்டர் றெக்கை வரைக்கும் கிடைக்கிற
தமிழ்நாட்டின் ஷாப்பிங் ஜங்க்ஷன்.
3. பீச் ரோடு :- இந்த ரோட்ல பைக்ல ஃபிகர வச்சு ஓட்டிட்டுப் போனா ஜென்மம் சாபல்யம் அடைஞ்சிடும்.
4. ரிச் ஸ்ட்ரீட் :- " இன்னிக்கு காலைல நார்வேல லான்ச் பண்ண ஹார்ட் டிஸ்க் கா? கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார் ! பையனை எடுத்தாற சொல்றேன்"- இந்த மாதிரி டயலாக் இங்க ரொம்ப சகஜம்.
5. சத்யம் தியேட்டர் :- படத்துக்குப் போனேன்டான்னு சொல்றதைவிட சத்யம் போனேன்னு சொல்றது தான் இந்த ஊர் ல மரியாதை.
6. ஹிண்டு பேப்பர் :- டேஸ்டா இருக்கோ இல்லையோ சரவணபவன் ல தான் சாப்பிடுவேன்னு நிறைய பேர் அலைவாங்க இல்லையா அது மாதிரி படிக்கிறாங்களோ இல்லையோ, மெட்ராஸ்ல முக்காவாசிப்பேர் வீட்ல ஹிண்டு நிச்சயமா இருக்கும்.ஹிண்டு மெட்ராஸின் பெருமை.
7. ட்ராஃபிக் போலீஸ் :- இவங்க இல்லாம ரோட்ல வண்டி ஓட்டவே எரிச்சலா இருக்கும். ஹெல்மெட் போடாம ஹெட்லைட்டயும் கழட்டிட்டு, சைலென்ஸரப் புடுங்கி விட்டுட்டு சம்மர் சால்ட் அடிச்சாக் கூட கண்டுக்காம நிக்கிற நல்லவங்க. ஆனா மவனே ! மாம்ஸ் ஃபுல் ஃபார்ம் ல வசூல் பண்ணிட்டு இருக்கும் போது மாட்டின , ஓவர் ஸ்பீட்னாவது புடுங்காம விடமாட்டாங்க. ( ஸ்டாண்டர்ட் ஃபீஸ் 50 ரூபா)
8. பர்மா பஜார் :- பைசைக்கிள் தீவ்ஸ் ல இருந்து சம்பூர்ண ராமாயணம் வரைக்கும் எல்லாப் படமும் கிடைக்கும். ஒரு தடவ வந்து டி.வி.டி வாங்க ஆரம்பிச்சீங்கன்னா அப்புறம் இந்த எடத்துக்கு அடிக்கடி வருவீங்க.
9. மெட்ராஸ் பசங்க :- கில்லித் தாண்டவராயனுங்க ! முதல் சந்திப்பிலேயே "சொல்றா பாடு (baadu) "ன்னு தான் பழக ஆரம்பிப்பானுங்க. அடிக்கடி ".....தான்னு முடியிற கெட்ட வார்த்தை, வித விதமா டாட்டூனு வித்தியாசமா அலையற ஷங்கரின் பாய்ஸ்.
10. மெட்ராஸ் பொன்னுங்க :- நாமெல்லாம் தேவதையோட பெரியம்மா பொன்னுங்கன்னு நெனப்பு...புடிச்சுப்போச்சுன்ன கேக்காமலே முத்தம் கொடுக்கற மாடர்ன் மத்தாப்புங்க...
இவளுங்க ரொமான்டிக்கா பார்த்தா இதுக்கு மேல என்னடா சந்தோஷம் இருக்கப்போகுது உலகத்துலன்னு..தோணும்.
"டேய் புஜ்ஜுக்கு ஐஸ்க்ரீம் வேணும் டா...!"ன்னு இவளுக உதட்ட சுழிச்சுக் கேக்கும்போது,
அப்பன் சொத்த வித்தாவது இந்த புள்ளைக்கு செலவு பண்ணலாம்னு தோணும்..
(பட், கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணிப் பார்த்தீங்கன்னா..." அங்கிள் பார்றா செல்லம்..." " மாமாக்கு டாட்டா பை பை சொல்லு..." மாதிரி டயலாக் லாம் கேக்கும்.)
இன்னும் ஜெமினி ஃப்ளை ஓவர்,ஐநாக்ஸ்,லயோலா,ஐ.பி.எல்,ஸ்பென்ஸர் பிளாசா, சென்ட்ரல் ஸ்டேஷன்னு நிறைய இருக்கு . ஸோ இப்போ ஓவர் டு
கலீஜ் 10
1.மெட்ராஸ் ட்ராஃபிக் :- உள்ள நுழைஞ்ச உடனே கண்ணைக் கட்ட ஆரம்பிச்சுடும்.அப்புறமா உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாப் பழகி ரோடு என்னிக்காவது ஃப்ரீயா இருந்தா மனசு ஷூமாக்கர் மாதிரி ஓட்ட சொல்லும்.
2. மெரீனா :- பேரு தான் பெத்த பேரு! எந்தப் பக்கமா நின்னு கால் நனைச்சாலும் நைட்டு கால் அரிக்கலைன்ன தயவு செஇது டாக்டரைப் போய் பாருங்க.
3. மெட்ராஸ் ஆட்டோ :- மதுரைல இருந்தே வெறும் 140 ரூபா குடுத்து மெட்ராஸ் வந்துடுவ! ஆனா தலைவா ஊருக்குள்ள எங்கயாவது போகனும்னா மினிமம் 150 ரூபால தான் பேரமே ஸ்டார்ட் ஆகும்.ஆனா இவனுங்க கேட்ட காசை மட்டும் குடுத்துட்டீங்க...உங்கள கண்ணுக்குள்ள வச்சு கொண்டு போய் சேத்துடுவானுங்க..இல்லாட்டி மவனே சந்த்ராயண் ரோட்ல பறக்கும். ஷேர் ஆட்டோனு ஒன்னு இருக்கு.....வேணாம் அது தனிக்கதை.
4. ஸ்கூல்கள் :- காலேஜ்ல கூட ஈசியா சேத்துடலாம், குழந்தைய ஸ்கூல்ல சேத்துப் பாருங்க...நொந்துடுவீங்க. இவனுங்க போடற ஃபீஸ் கரெக்டா கட்டிட்டீங்கன்னா,வீடு கட்றது, கல்யாணம் பண்றது எல்லாம் சும்மா ஜுஜுபி.
5. கூவம் :- என்னத்த சொல்றது. இப்போ தூர்வார்றோம்ங்கிற பேர்ல கார்ப்பரேஷன் ஏதோ காமெடி பண்ணிட்டு இருக்கு. கூவம் ஆத்த தூர்வாரி போட் விட்டாங்கன்னா...அது கம்ம்யூனிஸ்டுகள் தனியா நின்னு ஆட்சியைப் பிடிக்கிறதுக்கு சமம்.
6. மெட்ராஸ் குட்டீஸ்:- கலீஜ்னு சொல்லக் கூடாது! இருந்தாலும் இந்த லிஸ்ட் ல சேத்துக்கலாம். உன் பேர் என்னனு ஆசையா தமிழ்ல கேட்டீங்கன்னா "mommy! he doesn't know english. I think he is from some village "னு
உங்களைக் கேவலமா பார்த்துட்டு போகும்.
7. சிட்டி பஸ் :- பீக் ஹவர்ல ஏதாவது சிட்டி பஸ்ல போய்ப் பாருங்க! எல்லாக் கருமத்தையும் அனுபவிக்கலாம்.எப்படா ஸ்டாப் வரும்? எப்படா இறங்கித் தொலைவோம்னு இருக்கும்.எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழற கண்டக்டர்,முன்னாடி நின்னா பின்னாடி போக சொல்ற,பின்னாடி நின்னா முன்னாடி போக சொல்ற ஜனங்க.மொத்தத்தில பைக்ல ,ப்ளாட்ஃபார்ம்ல போறவங்களுக்கு அப்பப்போ சொர்க்கத்தின் வழிகாட்டி. உள்ள இருப்பவங்களுக்கு ஒரு மாடர்ன் நரகம்.
8. க்யூ :- எந்த எடத்துக்குப் போனாலும் க்யூல நின்னுட்டு இருப்பானுங்க. மெக் டொனால்ட்ஸ்,ஈ.பி ஆஃபீஸ்.ரேஷன் கடை,சத்யம் தியேட்டர் ..இப்படி எங்க போனாலும் ஒரு கூட்டம் உங்களுக்கு வழிவிடாம நின்னுட்டு இருக்கும்.கொஞ்ச நாள் முன்னாடி "காளை"ங்கிற படத்துக்கெல்லாம்
ஒரு ஷோ ஃபுல் ஆச்சுன்னா பாத்துக்குங்களேன்.
9. டாஸ்மாக் :- வருஷத்துல எல்லா நாளும் ஹவுஸ்ஃபுல் ஆகிற ஒரே இடம். வால்ட் டிஸ்னில இருந்து காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் வரைக்கும் டிஸ்கஷன் நடக்கும். ஐ.டி ய விட அரசாங்கத்துக்கு இதுதான் ரெவென்யூ ஜெனெரேட்டர்.அதப் பத்தி அரசாங்கமே கவலைப் படலை... நமக்கென்ன ?
10. மெட்ராஸ் தமிழ் :- சௌகார்பேட்டை லால் சந்த் முதல் அறநிலையத் துறை ஆஃபீஸர் வரை இந்த ஊர்ல தமிழை கடிச்சுத் துப்பாதவனே கிடையாது.டைட்டிலப் பார்த்தாலெ தெரியுமே..எவ்வளோ பாதிச்சுருக்குன்னு! டோமர், கலீஜ், சோமாரி, டங்குவாரு, டகுலு,..இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியனும்னா பதிணென்கீழ்கணக்கு நூல்கள்ல தேடி பாருங்க.இந்த ல......பால்னு அடிக்கடி திட்றானுங்களே அப்டினா என்னங்க?
தண்ணி லாரி,குப்பைகள்,ட்ரான்ஸ்ஃபார்மரை பாத்ருமா பயன்படுத்தறதுன்னு இதுவும் ஒரு பெரிய லிஸ்ட் தான்.
அதனால மக்களே! எவ்வளோ திட்டினாலும், கொஞ்சினாலும் மெட்ராஸ் அதுபாட்டுக்கு மாறிட்டே இருக்கும். ரோமுக்குப் போனா ரோமானியனா இருங்கற மாதிரி மெட்ராஸுக்கு வந்தா மெட்ராஸ்காரனா மாறிடு.என்ன கரெக்டா?
Anonymous
Saturday, September 19, 2009
சும்மா மெர்சலா கீது வாத்யாரே...கலக்கிட்ட போ...த்தா மெட்ராஸ்காரன் மெட்ராஸ்காரன் தான்...