(மானங்கெட்ட) உடன்பிறப்பே !
ஆசையில் ஓர் கடிதம்...என் உடலும், என் உடலில் உன்
உள்ளமும் நலமென கொள்..நின்னின் நலம் விழைய அவா...! உன் அன்பிற்கும் ஆசைக்கும் உரிய நெஞ்சத்திற்கு என்
வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்..!..!
தமிழ் இணையத்தில் சில நாட்களாய், என் இதயத்து உடன்பிறப்புக்கள்
தாக்கப்படுவதாய் சிறுகுறிப்பொன்று என் மேஜைக்கு வரக்கண்டேன்..துணுக்குற்றேன்...திடுக்கிட்டு போனேன்...!! திமுக தொண்டன்
தாக்க வேண்டியவனே அன்றி, தாக்கப்பட வேண்டியவன் அல்லவே, என என் மனம் வெம்பி பதறியது கண்டேன்..உனக்கொன்று
சொல்வேன் நான்...கேட்டுகொள் உடன்பிறப்பே..!
நம்மை போன்ற நயவஞ்சகர்களுக்கு நாவடக்கம் முக்கியம் என்பதை
மனதில் நிறுத்து ...! கோவத்தை குறைத்துக் கொள்..!இணையத்தில் வார்த்தைகளை கட்டுக்குள் வை..உணர்ச்சிவசபடாதே...!! திராவிட முன்னேற்ற கழகம் மனிதம் உள்ளவர்களால்
நிறுவப்பட்டு என்னை போல் மூளை உள்ளவர்களால் வளர்க்கப்பட்டு உன்னை போல்
சிந்திக்கும் திறன் குறைந்த உணர்ச்சிமிகு தொண்டர்களின் உழைப்பில் வலுபெற்ற
மாபெரும் இயக்கம் என்பதை வரலாற்றிடம் கேட்டறிந்து கொள்...இது வரலாறு
திரும்பும் நேரம்...! இணையத்தில்
கழகத்திற்காக சிறப்பாக செயலாற்று...அடுத்தவர்களுக்கு
சிரிப்பு வர செயலாற்றாதே...!!..!
நாம் என்றைக்கு ஒரு பிரச்சினையை தீர்த்திருக்கிறோம். ஒரு
பிரச்சினையைத் தீர்க்க இன்னொரு பிரச்சினையை இழுத்துவிடுவது தானே நம் வழக்கம். நிலத்தை
அபகரிக்கிறோம் என்று குற்றச்சாட்டுகள்..நிலத்தை நாம் எங்கே அபகரித்தோம்..அது அங்கேயே
தானே இருக்கிறது. ஜனங்கள் முன்பு போல் இல்லையடா கண்ணே! நாம் கொடுத்த டி.வி யில் நியூஸ்
பார்த்து நமக்கே ஆப்பு வைக்கிறார்கள்.நம் இயக்கத்தையும் என்னையும் பற்றி இணையத்தில்
பிரச்சனைகள் எழும்போது அதை மறைக்க மற்றொரு பிரச்சனையை கிளப்பிவிடுவதுதான்
ராஜதந்திரம் என்பதை புரிந்துகொள்...என்னை ஏசும் வீணர்கள்..கிராதகர்கள்..என் தமிழ்
கேட்காதவர்கள்...என்னை புரிந்து கொண்ட ஈன பிறவிகள்...என்னை அப்படிதான்
தூற்றுவார்கள்...நீ அவர்களிடத்தே உன் காதை குடுக்காதே...அவர்கள் என் தொடர்பாய் ஒரு
பிரச்சனையை கிளப்பிவிடுவார்களாயின்,நீ அதற்க்கு சற்றும் தொடர்பில்லாத மற்றொரு பிரச்சனையை
கிளப்பிவிடு...அவர்கள் கவனத்தை சிதற வை..ஈழம் அழிந்துகொண்டிருக்கும்போது கைகட்டி
வாய் பொத்தி அமைதியாய் வேடிக்கை பார்த்தவன் நான்..இப்போது எதற்கு டெசோவை பற்றி பேச
வேண்டும்..யோசித்து பார் உடன்பிறப்பே...அரசியல் சூட்சுமம் பயில்...! தனி ஈழமோ தனித் தமிழ்நாடோ..நம்
கவனத்தை கல்லாவில் வை!
திராவிடம் பேசு..ஆனால், சத்தமில்லாமல் பேசு..திமுக காரன்
என உரக்க சொல்லாதே... நம் கழக தலைவர்களின் தற்போதைய நிலை தமிழகத்திலே என் தெரியுமா
உனக்கு...! கொன்னு கைய கட்டி புதர்ல தூக்கி போட்ருவாங்கே..ஆனா, கொன்னவன் கெடைக்க
மாட்டான்..!! அப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை நமக்கு...இப்ப போய் எங்கனா வாய
குடுத்து மாட்டிக்காத..!
முடிந்தவரைக்கும் இணையத்திலேயே போராடு. நடு வீதிக்கு வந்து
போராடினால் நடு மண்டையிலேயே நச்சென்று கொட்டுவார்கள். நீ இளிச்சவாயந்தான். எத்தனை வருசமாதான்
நீயும் வாய் பர்த்துட்டே உக்காந்திருப்ப. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் தான் இருக்கிறது.
ஆனால் உனக்கே தெரியும், என் குடும்பத்திலேயே அதை விட அதிகமாக சீட் கேட்பார்கள் என்று.
அதனால் தான் தமிழீழம் கேட்டு டெசோ ஆரம்பித்திருக்கிறேன்.அது இது எது புரோகிராமில் சிரிக்காதவர்கள்
கூட இதைக் கேட்டவுடன் வெடிச்சிரிப்பு சிரித்து நம்மை ஏளனப் படுத்துகிறார்கள். ஆனால்
நாம் காரியவாதிகள்.
அன்று அண்ணாவின் போர்வாள் என அழைக்கபட்டவன் நான்...ஆனால்
இன்று, தமிழகத்து
தாய்மார்கள் ஊழல் பெருச்சாளி தாத்தா என எனை காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டும் அவல
நிலை...!
என் மூத்த மகன் அழகிரி..அன்பானவன்...ஆவேசம்
மிகுந்தவன்..ஆத்திரக்காரன்.. சிறுவயதில் அவன் தின்பண்டங்கள் வாங்கி கேட்டு நான்
குடுக்கவில்லையே ஆயின் என் மடியில் ஏறி உட்கார்ந்து என் மூக்கில் குத்தி வாங்கி
கேட்பான்..பெத்த மனம் மகிழ்ச்சியில் திளைத்த தருணங்களவை...!! ஆனா தறுதலைப்பய மவன்
இப்பவும் அதே மாதிரி கேட்டால் என்ன செய்வது?
மற்றொரு புறம் என் ஆசை மகன் ஸ்டாலின்...!
அவன் அதுக்கு சரிப்பட்டு வர
மாட்டான்! எதற்கு என்று கேட்காதே... அதுக்கு அவன் சரிப்பட்டு வர மாட்டான். சந்தேகமாக
இருந்ததால் ஸ்டாலினும் தயாளு, அன்பழகன் ஏன் குஷ்புகிட்ட கூட கேட்டுப் பார்த்தான்
" நான் எதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்?" என்று.
எல்லோரும் நான் நினைப்பதையே
சொல்லி இருக்கிறார்கள்..." அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்"னு. நான்
எதுக்குடா சரிப்பட்டு வர மாட்டேன் என்று கேட்பதற்காக தமிழ்நாடு முழுக்க வந்து கேட்பான்.
நீங்களும் " நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய்!" என்று சொல்லிவிடுங்கள்.
அறுபது வயதில் இளைஞரணிக்கு ஆள் சேர்ப்பதில் உள்ள கஷ்டம் அவனுக்கு!
இவர்களிருவரும் ஒரு புறம்..மற்றொரு புறம் என் ஆசை மகள்
கனிமொழி...! கழகத்திற்கு அழிக்கமுடியா கறையை உருவாக்கிய என் அன்பு மகள்..! தேசிய
அரசியலில் ஒரு முக்கிய தலைவரான என்னை காங்கிரஸ் மேலிடம் ஒரு கட்டண கழிவறை
காப்பாளரை போல் மதிப்பதற்கு முக்கிய காரணம் என் செல்ல மகள் கனிமொழி...! வெறுமனே
சிபிஐ என போட்டு வீட்டிற்கு ஒரு அஞ்சல் அட்டை வந்தால் கூட டெல்லியை அழைத்து என்
மகளை விட்ருங்கம்மான்னு அன்னை சோனியா காந்தியை நான் கெஞ்சி கதறுவதற்கு காரனமானவளும் இவளே...! இவள்
மேல் படிந்த ஊழல் கரைகளுக்கு இவளில்லை காரணம் ! நானே காரணம்..! தக்காளி அன்னிக்கே
கொஞ்சம் கண்ட்ரோலா இருந்துருக்கலாம்..!!
என்னிடம் சொல்வதற்கு உனக்கு ஆயிரம் இருக்கலாம்.அதையெல்லாம்
கேட்டிருந்தால் என் நிலைமை ஏன் இப்படி இருக்கப் போகிறது?
ஆனால் என்னிடம் ஒரு வரி உண்டு உனக்கு...!
மக்களுக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கறவன் தக்காளி புள்ள
குட்டி பெத்துக்காதீங்கடா டேய்..!
******************************************************************************************
-
பட்டாபட்டி.... said...
கழகத்திற்கு அழிக்கமுடியா கறையை உருவாக்கிய என் அன்பு
//
அம்பூட்டு கறையா சார்?..
அழுத்தி துவைக்க சொல்லுங்க....
பிச்சுக்கும்....///////////
தொவைச்சா..."கனி" அழுக்கு.,,,,
நாடா அழுக்கு,,,
இருக்குற எல்லா அழுக்கும் போயிடுமா சார்.....???
ஆமா சார்....இவர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....காலத்தில....
மத்திய அரசாங்கம்...முக்கோண விளம்பரம் ....
சரியா பண்ணலையா....?????
இல்லை ஏதும் பழச யூஸ் பண்னாரோ....??????
டவுட்ஓ...டவுட் .......!!!!!
வெளங்காதவன்™
Tuesday, May 01, 2012
Sir. Nikkaama vardhu sir.