RSS

கோ- பத்திரிக்கை (அ) தர்மம்



ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்கள் தாம்.அதாவது காதல் ஆக்ஷன் காமெடி சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சக சித்திரம்.அப்படி எடுத்தால் தான் தமிழ் ஜனம் ஓட வைக்கும் என்கிற புராதன காலத்து நினைப்பில் எடுக்கப்பட்ட மற்றுமொரு காவியம் தான் 'கோ'.

கல்லூரி லெக்சரரானாலும் சரி...இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்டானாலும் சரி...அதாகப்பட்டது தமிழ் சினிமா நாயகன்மார் அனைவரும் வேகமாக நடனமாட வேண்டும். பைக்கிலோ காரிலோ சேஸ் செய்து வில்லன்களை அடிக்கவேண்டும்.சடாரென நியூசிலாந்திலோ ஸ்விட்சர்லாந்திலோ ஹீரோயின் இடுப்பை அணைத்துக் கொண்டு மழைத்துளி முன்பனி என்று பேத்தலாக பாடிக்கொண்டே ஒரு டான்ஸை போட வேண்டும்.திடீரென மெழுகுவர்த்தி ஏத்தி ஊழலை ஒழிக்க முயற்சிப்பது போல இந்த அபத்தங்களை ஒழிக்க ஏதாவது செய்தால் நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பேன்.

ஒரிஜினல் வில்லன் யாரென கிளைமாக்ஸில் முடிச்சை அவிழ்க்கும் சாதாரண கதை.அதற்கு அப்படியொரு சொதப்பலான திரைக்கதை.சுவாரஸ்யமாக கதை நகரும்போதெல்லாம் அதை அம்போவென விட்டுவிட்டு கலர் காஸ்ட்யூம்களில் பாறை இடுக்கிலும் மலை முகடுகளிலும் ஸ்லோவாக கையை தூக்கி டான்ஸ் ஆடுகிறார்கள்.அதிலும் கார்த்திகா இரவு வேலை முடித்து வீட்டுக்குப் போகும் போது கூட ஃபுல் மேக்கப்பில் தான் போகிறார்.இன்னொரு ஹீரோயின் பியா அக்மார்க் தமிழ் சினிமா லூசு. சத்ரியன் ,இதயத்தை திருடாதேவில் ஆரம்பித்து இன்னும் சுட்டிப்பெண் கேரக்டருக்கான அம்சங்கள் நம் சினிமாக்களில் மாறவே இல்லை.அதிலும் பக்கத்துவீட்டுப் பையனுக்கு மேலாடையைத் திறந்து காட்டும் காட்சி.டைரக்டருக்கு திருஷ்டி சுத்திப் போட வேண்டும்.

ஜீவா முதலில் ஒரு வங்கிக் கொள்ளையை படம் பிடிக்கிறார் .பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் ஒரு அநியாயத்தை.பின்னர் முதலமைச்சர் செய்யும் ஒரு அராஜகத்தை.அப்படியே அரசியலுக்கு வரும் நல்லவர்களின் நன்னடத்தைகளை துரு துருவென படம் பிடித்தபடியே திரிகிறார்.இப்படியே பிடித்து பிடித்து ஆட்சியையே மாற வைத்து விடுகிறார்.அவ்வப்போது இரண்டு ஹீரோயின்களோடும் முற்போக்கு வசனங்கள் பேசுகிறார்.படத்தின் ஆரம்பத்திலும் சரி..முடிவிலும் சரி...அஜ்மல் செய்யும் அண்டர்பிளே நடிப்பு மட்டுமே ஆறுதல்.

ஹாரிஸ் ஜெயராஜ்,,தெய்வமே...இன்னுமா அந்த ட்யூனை விடல...! சலிக்காம ஒரே ட்யூனை மாத்தி மாத்திப் போட்டு எப்படிய்யா ஹிட் அடிக்க முடியுது உன்னால! எல்லாமே இந்த படத்துக்குத் தேவையற்ற ஆனால் ரசிக்கும்படியான பாடல்கள்.ஒளிப்பதிவு கச்சிதம்

டைரக்டருக்கு!

நீங்கள் இன்ஸ்பையர் ஆகும் அல்லது கண்ட்ரோல் வி செய்யும் ஆங்கில படங்கள் எல்லாமே மிகவும் தரமானவை. சென்ற படத்தில் 'Mariah Full of Grace ' ஐ ஒரு போர்ஷனுக்குப் பயன்படுத்தி இருந்ததைப் போல இதில் அப்பட்டமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் 'State of Play ' ,' Vantage Point ' போல எடுக்க வேண்டிய படத்தை தமிழ் சினிமாவின் ரெடிமேட் குப்பை திரைக்கதை அம்சங்களுக்குள் திணித்து இம்சித்திருக்க வேண்டாம். சகிக்கவில்லை!

கண்டபடி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,வங்கிக்கொள்ளை அடித்து நக்ஸல் பாரி இயக்கத்தை வளர்த்து தேர்தல் அமைப்பில் புகுந்து மக்களுக்கு அவசியமான மந்திரி சபையா? லாஜிக்குகளின் சக்கரவர்த்தி ஷங்கரே தலையில் அடித்துக் கொள்வார்.முடியலை!


கடைசியாக...


1.மசாலா குப்பை எனத் தெரிந்தும் வீம்புக்கென நொள்ளை நொட்டு சொல்லி அல்லது பாராட்டி விமர்சனமெழுதும் பதிவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

2.தியேட்டர்களில் அவ்வளவு கூட்டம்! ஐ.பி.எல் அவ்வளவு போரடிக்கிறதா என்ன?

**********************************************************************************
  1. Veliyoorkaran

    Tuesday, April 26, 2011

    @Rettaivals./
    நீங்கள் கண்ட்ரோல் வி செய்யும் ஆங்கில படங்கள் எல்லாமே மிகவும் தரமானவை.////

    இதுக்கு பேருதான் டீசென்ட்டா செருப்பால அடிக்கறதா..?

  1. Veliyoorkaran

    Tuesday, April 26, 2011

    @Rettaivals.//இன்னொரு ஹீரோயின் பியா அக்மார்க் தமிழ் சினிமா லூசு. சத்ரியன் ,இதயத்தை திருடாதேவில் ஆரம்பித்து இன்னும் சுட்டிப்பெண் கேரக்டருக்கான அம்சங்கள் நம் சினிமாக்களில் மாறவே இல்லை.//

    எதுக்குடா மாறனும்..?
    நான் இந்த வரியை ஜெனிலியா மற்றும் லைலா கூட்டு லூசு ரசிகர் மன்றங்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்..! :)

    லூசு பொண்ணுங்களும் ஒரு அழகுதான் என்று ஆராதிக்கும் அன்பர்கள் சத்யா சாய்பாபா ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்க வேண்டுகிறேன்..! (கொழம்பி சாவுங்கடா..) :)

  1. Veliyoorkaran

    Tuesday, April 26, 2011

    டெம்ப்ளேட் சொக்கா கீது வாத்யாரே...!:)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, April 26, 2011

    Read More..
    //

    இன்னாய்யா.. கிளிக் பண்ணினா.. அதேதான் வருது..
    அப்புறம் எதுக்கு ”Read More..“

  1. ILLUMINATI

    Tuesday, April 26, 2011

    //ஹாரிஸ் ஜெயராஜ்,,தெய்வமே...இன்னுமா அந்த ட்யூனை விடல...! சலிக்காம ஒரே ட்யூனை மாத்தி மாத்திப் போட்டு எப்படிய்யா ஹிட் அடிக்க முடியுது உன்னால! //

    ஹாஹா,கிளாஸ் மச்சி!
    ஆனா என்ன சொல்லு, ஒரே ட்யூன் போட்டு போட்டே ஹிட் ஆக்கிடுறான் இல்ல? ;)

    //நீங்கள் இன்ஸ்பையர் ஆகும் அல்லது கண்ட்ரோல் வி செய்யும் ஆங்கில படங்கள் எல்லாமே மிகவும் தரமானவை.//

    இது செருப்படி. :)

    //தியேட்டர்களில் அவ்வளவு கூட்டம்! //

    அது ஒண்ணுமில்ல மச்சி, எவனோ ஒருத்தன் படம் நல்லா இருக்குன்னு கொளுத்திப் போட்டுட்டான். வேற ஒண்ணுமில்ல.

  1. Veliyoorkaran

    Tuesday, April 26, 2011

    @@@பட்டாபட்டி.... said...
    Read More..
    //
    இன்னாய்யா.. கிளிக் பண்ணினா.. அதேதான் வருது..
    அப்புறம் எதுக்கு ”Read More..“//

    இந்த சின்ன வயசுல இந்த புள்ளைக்கு எம்புட்டு அறிவு...!
    யோவ் பட்டாப்பட்டி கழுதை மேய்க்கற பயலுக்கு இவ்ளோ அறிவான்னு உன்மேல எல்லா பயலுக்கும் பொறாம வரபோகுதுயா...!

    எவனுமே கிளிக் பண்ணாத அந்த பட்டன நீ க்ளிக்கி பார்த்து குறை கண்டுபுடிச்ச பார்த்தியா...இனிமே நீ "குறை கண்ட சோழன் பட்டாப்பட்டி" என்று எல்லோராலும் பெருமையுடன் காரபடுவாய்...!:)

  1. Rettaival's Blog

    Tuesday, April 26, 2011

    நான் இந்த வரியை ஜெனிலியா மற்றும் லைலா கூட்டு லூசு ரசிகர் மன்றங்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்..! :)
    **************************************************************************************************
    வெளியூரு! டிக்கெட் உசரமா இருக்கேன்னு வெள்ளியை வேஸ்ட் பண்ணிடாத!ராதாவே நடிச்சிருந்தா கூட நம்ம ஜனங்க ஜொள்ளு விட்டு பார்த்திருப்பானுங்க! அது தாவாங்கட்டையை சொறிய விட்டுருச்சு!!

  1. Rettaival's Blog

    Tuesday, April 26, 2011

    பட்டாபட்டி.... said...
    Read More..
    //

    இன்னாய்யா.. கிளிக் பண்ணினா.. அதேதான் வருது..
    அப்புறம் எதுக்கு ”Read More..“
    **************************************************************************************************
    பட்டு! உன் அறிவுக்கு இங்க எவனும் கிடையாது! நீ இப்படியே இரு. அறிவு மண்டை வழியா வழிஞ்சதுன்னா எடுத்து ஜேப்புல போட்டுக்க...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, April 27, 2011

    பட்டு! உன் அறிவுக்கு இங்க எவனும் கிடையாது! நீ இப்படியே இரு. அறிவு மண்டை வழியா வழிஞ்சதுன்னா எடுத்து ஜேப்புல போட்டுக்க...
    //

    ஜேப்புல போட்டு என்ன பண்ண?..

    வழிவதை வழிச்சு.. ஏதோ ஒரு ஓட்டையில் வைத்து... அடச்சிக்கிட்டு........ போயிட்டே இருப்போம்..

    ஹி..ஹி மூளக்காரன் பாரு.. அப்படிதான்

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, April 27, 2011

    எவனுமே கிளிக் பண்ணாத அந்த பட்டன நீ க்ளிக்கி பார்த்து குறை கண்டுபுடிச்ச பார்த்தியா...இனிமே நீ "குறை கண்ட சோழன் பட்டாப்பட்டி" என்று எல்லோராலும் பெருமையுடன் காரபடுவாய்...!:)

    //

    நல்லவேளை.. கறை கொண்ட சோழன்னு சொல்லாம இருந்தியே..ஹி..ஹி இல்லாட்டி.. பெரிசு கோவிச்சுக்கிட்டு.. டெல்லி போயிருக்கும்..

Post a Comment