RSS

ராவணாயனம் - காவியம்-->சினிமா-->அபத்தம்!


சுஜாதா என்கிற மனிதர் இல்லாமல் மணிரத்னம் போல இயக்குநர்கள் படம் எடுத்தால் படம் எப்படி இருக்கும்? விடை கடைசியில்.

படம் முடிந்து வெளியே வந்த போது காதில் விழுந்த சில கமெண்டுகள்:

" இந்தப் படம் எடுக்கறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேணாம்."

" என்னாங்கடா இது லிங்குசாமி படத்துல வர்ற மாதிரி இருக்கு அவ்வளோ உசரத்தில் இருந்து குதிச்சா ஒரு சின்னக் காயம் கூடவா படாது?ஸ்விம்மிங் பூல்ல குளிச்சுட்டு வர்ற மாதிரி ஜம்முனு வர்றாய்ங்க! "

"நல்ல வேளை கார்த்திக்குக்கு வால் ஒன்னு மாட்டி விடலை"

"வீட்ல உக்காந்து ஃபுட்பால் பார்த்திருக்கலாம்"

" இந்த படம் பாக்க வந்ததுல நடந்த நல்ல விஷயம் செம்மொழி பாட்டை பெரிய ஸ்கிரீன்ல பார்த்தது தான்!"


ராவணன் ஸ்டில்களில் சில, ரஷோமோன் படத்தின் ஸ்டில்களைப்போல இருந்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.ராமாயணத்தைக் கொஞ்சம் புதுசாக சொல்லியிருப்பார்களோ என்று. ஆனால் ஓபனிங் சீனில் வீரா ராகினியை(ஐஸ்வர்யா பச்சன்)கடத்தும் போது அவர் பாரதியார் பாடல் பாடுவதும் அதற்கு வீரா மறுபடியும் பாரதியார் பாட்டு பாடுவதும்...சினிமாத்தனத்தின் உச்சம்.ரோஜா படத்திலயே நல்லாக் கடத்தினீங்களேய்யா..!

ராவணனின் கதையை சொல்வது என்று முடிவெடுத்த பின் அந்த ஒரு கேரக்டரையாவது கொஞ்சம் குழப்பமில்லாமல் சொல்லியிருக்க வேணாமா?விக்ரம் அடிக்கடி டுர்ர்ர்..டன்டணக்க டண்டனக்க...என்கிறார்,பக் பக் பக் என்கிறார்.கந்தசாமி ஷூட்டிங்கிலிருந்து கடத்திக் கொண்டுவந்து நடிக்க வைத்திருப்பார்கள் போல.படத்துக்கு படம் இப்படியே செய்துகொண்டிருந்தால் மனிதர் கொஞ்ச நாளில் வாத்தாகவோ சேவலாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது.டைட்டிலை நியாயப் படுத்துகிற மாதிரி அடிக்கடி "பத்து தலை...பத்து தலை"என்று வசனங்கள் வேறு.விக்ரம் இன்னும் தமிழ் ஜனங்கள் இது போன்ற மேனரிசங்களை ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பாரானால், ரொம்ப கஷ்டம் பாஸ். ஆனால் சில காட்சிகளில் எக்ஸ்பிரஷன்கள் அசத்தல்.

பிருத்விராஜ் அழகாக இருக்கிறார்.நன்றாக உறுமுகிறார்,ஆவேசமாக ஆக்ரோஷம் காட்டுகிறார்.இப்படியே நடித்தாரானால் இவருக்கும் நல்லது நமக்கும் நல்லது.சில காட்சிகளில் வீரா வீரா என்று கத்துவதை மக்கள் ரசித்தார்களானால் அடுத்தபடியாக சிங்கம் மாதிரி படங்களில் நடித்து நம்மை துன்புறுத்தக் கூடும்.

ராகினியாக முன்னாள் உலக அழகி.யாராவது இவருக்கு முன்னாள் உலக அழகி என்று ஞாபகப்படுத்தினால் நல்லது.சேட்டு வீட்டு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார்.கள்வரே கள்வரே என்று ராவண சேனைகளின் நடுவே பாடுவாரென்று எதிர்பார்த்துப் போனால் ஏமாந்து போவீர்கள்.அந்த அற்புதமான மெலடிக்கு சம்மந்தமில்லாமல் பரத நாட்டியம் ஆடி வதைக்கிறார்.வடிவேலுவெல்லாம் என்ன ஜுஜுபி..ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவும் விக்ரமிடம் சீரியஸாக பக் பக் பக் என்று சொல்லும்போது வயிற்றைப் புண்ணாக்குகிறது.கிளைமாக்ஸிலும் உடைந்த சிலையின் முன் வேண்டிக்கொள்ளும் போதும் பழைய ஐஸ்.

ராவணனின் அண்ணனாக பிரபு (கும்பகர்ணன்...???!தம்பியாக காட்ட முடியாதில்லையா!)
சூர்ப்பனையாக ப்ரியாமணி.அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம். ஒரு டயலாக் கூட பேசாத இந்த கேரக்டருக்குத்தான் என்ன மாஸ்? சான்ஸே இல்லை...தமிழன் தமிழன் தான்!

முக்கியமாக குறிப்பிடவேண்டியது வசனங்கள். சுஹாசினி ஜெயா டி.வி.யில் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று தராசில் ஒவ்வொரு படத்தையும் எடை பார்த்துக் கை வலிக்க எழுதியிருப்பார் போல.திடீரென்று திருநெல்வேலி பாஷை பேசுகிறார்கள்.திடீரென்று சாதாரணமாக பேசுகிறார்கள்.தலை சுத்துகிறது நமக்கு.மேடம் விமர்சனம் பண்ணுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

மணிரத்னம் சார்! பாடல் காட்சிகளை படம் பிடித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்காமல் பிண்ணனியில் ஓட விட்டதுக்கும் இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்டை வைத்து படம் எடுத்ததற்கும் பாராட்டுக்கள்.உங்கள் படத்தில் எல்லோருக்கும் பிடித்தது ஜெட் வேகத்தில் நகரும் காட்சிகளும் திரைக்கதையுமே. இந்தப் படத்தில் திரைக்கதை, விக்ரமும் பிருத்விராஜும் ஒரு உடைந்த பாலத்தில் தொங்குவார்களே...அதைவிட மோசமாக தொங்கிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு டெம்ப்ளேட் கதையிலேயே இவ்வளவு சொதப்பலா என்று தான் ஜீரணிக்க முடியவில்லை.

படத்தில் நல்ல விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு - லொகேஷனும்,காமிராவும் பிண்ணனி இசையும்.சந்தோஷ் சிவன் மிரட்டியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் இதவரைக்கும் படம் நெடுக சலிக்காமல் அழகாக காட்டைக் காண்பித்ததாக நினைவில்லை.
கடைசியாக கிளைமேக்ஸில் சி.டி யில் வராத பாடல் ஒன்று திரையில் பிண்ணனியில் வருகிறது.அற்புதம்!
 
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதில் - சுஜாதா இல்லாமல் அடுத்து எந்திரன் வேறு வருகிறது!
**************************************************************************
 1. Anonymous

  Sunday, June 20, 2010

  Endhiran dialougue Sujatha thaanu keelvipateen. Avar eppavoo ezdhu koduthutaaraam. Indha murai Shankar pozachikitaarnu nenaikareen.

 1. பட்டாபட்டி..

  Sunday, June 20, 2010

  உமக்கும் கடைசில, ஒண்ணை சொல்லிக்கொல்(ள்)கிறேன்...


  //அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம்.
  //

  ஓ..இதுலையும் வசனமே பேசாம நடிச்சிருக்காங்களா?..அப்ப சரி...

  //ராகினியாக முன்னாள் உலக அழகி.யாராவது இவருக்கு முன்னாள் உலக அழகி என்று ஞாபகப்படுத்தினால் நல்லது.சேட்டு வீட்டு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார்.//

  இதைத்தான் ஆண்டொன்று போனால்..வயதொன்று போகுமுனு சொல்வாங்க...

  //
  ராவணனின் அண்ணனாக பிரபு (கும்பகர்ணன்...???!தம்பியாக காட்ட முடியாதில்லையா!)//

  பார்த்துப்பா..குண்டர் சட்டத்தில உள்ளதூக்கிப் போட்டுடப்போறாங்க..
  நான் உன்னைய சொல்லலே..பிரபு அங்கிளச்சொன்னேன்

  //கந்தசாமி ஷூட்டிங்கிலிருந்து கடத்திக் கொண்டுவந்து நடிக்க வைத்திருப்பார்கள்//

  கந்தசாமி படத்தில..கட் பன்ணி வீசிய பகுதியா இருக்கும்..


  கடைசியா...நன்றி to இலுமி..ஹி..ஹி

 1. Veliyoorkaran

  Sunday, June 20, 2010

  மணிரேத்னம் படம் நல்லா இல்லைன்னு எழுத ஒரு தில்லு வேணும்..எழுதறவன கிறுக்கன்னு, படிக்கறவன் சொல்ற அபாயம் இருக்கு..! விமர்சனம் செம கிழி வாத்யாரே.!.மணிரேத்னம் அப்டீங்கற ஒரு பிராண்ட் ஐக்கான தூக்கிட்டு பார்த்தா இந்த விமர்சனம் நூறு சதவீதம் சரி...! ஆனாலும், ஒரிஜினல் கதைல கை வெக்காம இதுக்கு மேல ஒரு படம் எடுக்கறது ரொம்ப சிரமம்கறது என்னோட தாழ்மையான கருத்து...! எந்திரனின் விமர்சனத்தை ரெட்டைவால்சில் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...! :)

 1. Veliyoorkaran

  Sunday, June 20, 2010

  அடுத்தவன நொட்டாரம் சொல்ற தகுதிய இந்த படத்துல கேவலமா வசனம் எழுதுதியதன் மூலமா திரு.சுகாசினி மணிரேத்னம் இழந்துடாங்க..! இனிமேவாச்சும் மணிரேத்னம் தன்னோட படங்களுக்கு தானே எழுதி தன் ரசிகர்கள திருப்திபடுத்துவாருன்னு எதிர்பார்க்கறேன் ...!!

 1. ஜெய்லானி

  Sunday, June 20, 2010

  //படத்துக்கு படம் இப்படியே செய்துகொண்டிருந்தால் மனிதர் கொஞ்ச நாளில் வாத்தாகவோ சேவலாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது//

  அப்ப பக்..பக்..பக்...தான்

 1. ILLUMINATI

  Sunday, June 20, 2010

  அந்த பாரதியார் பாட்டு மேட்டர நானும் கேள்விப்பட்டேன் ரெட்டை.என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்குது?

  அப்புறம்,தமிழன சும்மா சும்மா ‘குத்தம்’ சொல்லாதையா.ரஞ்சிதாவுக்கு அப்டி ஒரு மாஸ் இருக்குன்னா அதுக்கு காரணம் அது நித்திய புகழ் கொண்ட நடிகை.அதேன். :)

 1. ஜெய்லானி

  Sunday, June 20, 2010

  ////அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம்.
  //


  கடைசில கன்னுலையாவது காட்டினாங்கன்னு சந்தோஷ படாம இது என்ன சினப்புள்ள தனமா?

  கேரக்டர் சொல்ல நம்ம நித்யா தாங்க வரனும்..!!

 1. பின்னோக்கி

  Sunday, June 20, 2010

  வால்ஸ். சூப்பர் விமர்சனம்.
  மணி எப்போ ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழிகளுக்குப் படம் எடுக்க ஆரம்பித்தாரோ, அப்போ இருந்தே படம் திராபைதான்.

  ரோஜா படம் வந்த போது சந்தோஷ்சிவன் என்று ஒருவர் மட்டுமே இருந்தார். அதனால் பிரம்மித்தோம். இப்ப அப்படி இல்லை. நிறைய பேர், கலக்கலா படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுனால மணி படம் இல்லைன்னா, அதைவிட ஸ்டைலிஷ்சா நிறைய பேர் எடுக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும் ஆசை விட்டுப்போச்சு

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Sunday, June 20, 2010

  //அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம்.//

  ரஞ்சிதாவைப் பற்றி அசிங்கமாக எழுதியிருப்பதற்கு கடும் கண்டனங்கள்!

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Sunday, June 20, 2010

  //அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம்//

  போன படத்துலயே என்ன கேரக்டருன்னு இன்னும் தெரியல!

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Sunday, June 20, 2010

  //கடத்தும் போது அவர் பாரதியார் பாடல் பாடுவதும் அதற்கு வீரா மறுபடியும் பாரதியார் பாட்டு பாடுவதும்...சினிமாத்தனத்தின் உச்சம்//

  தக்காளி, இவிங்களுக்கு இதே வேலையாப் போச்சு! ராஜிவ் மேனன் கண்டுகொண்டேன்2 ல இதே வேலைய பண்ணியிருப்பாரு!
  என்னா ஒரு வில்லத்தனம் பயபுள்ளைகளுக்கு! இனி எவனாவது பாரதியார டச் பன்ணா, பிச்சுபுடுவேன் பிச்சு!

 1. பன்னிக்குட்டி ராம்சாமி

  Sunday, June 20, 2010

  //உங்கள் படத்தில் எல்லோருக்கும் பிடித்தது ஜெட் வேகத்தில் நகரும் காட்சிகளும் திரைக்கதையுமே. இந்தப் படத்தில் திரைக்கதை, விக்ரமும் பிருத்விராஜும் ஒரு உடைந்த பாலத்தில் தொங்குவார்களே...அதைவிட மோசமாக தொங்கிக்கொண்டிருக்கிறது.//

  முடிவா என்ன சொல்ற தல, படம் பாக்கலாமா?

 1. Jey

  Sunday, June 20, 2010

  உலகத்தொலைகாட்சிகளில் முதன்முறையாக போடும்போது பார்த்துக்களாம்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே?. அப்படியே பாத்துடலாம் தல.

 1. Rettaival's

  Sunday, June 20, 2010

  பட்டு...உன் அடுத்தப் பதிவுக்கு மேட்டர் கிடைச்சிருக்குமே இப்ப...!

 1. Rettaival's

  Sunday, June 20, 2010

  Veliyoorkaran said...
  அடுத்தவன நொட்டாரம் சொல்ற தகுதிய இந்த படத்துல கேவலமா வசனம் எழுதுதியதன் மூலமா திரு.சுகாசினி மணிரேத்னம் இழந்துடாங்க..! இனிமேவாச்சும் மணிரேத்னம் தன்னோட படங்களுக்கு தானே எழுதி தன் ரசிகர்கள திருப்திபடுத்துவாருன்னு எதிர்பார்க்கறேன் ...!!
  *************************************************
  சுகாசினியை வசனம் எழுத வச்சது ...மணிரத்னம் செலவே இல்லாம ஃப்ரீயா வச்சுகிட்ட சூன்யம்!

 1. Rettaival's

  Sunday, June 20, 2010

  பின்னோக்கி said...
  வால்ஸ். சூப்பர் விமர்சனம்.
  மணி எப்போ ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழிகளுக்குப் படம் எடுக்க ஆரம்பித்தாரோ, அப்போ இருந்தே படம் திராபைதான்.

  ************************************************
  பின்ன என்ன பின்னோக்கி சார்! மத்தியப் பிரதேசத்துல வர்ற மாதிரி செட் போட்டு திருநெல்வேலி பாஷை பேசுனா சிரிப்பு வருமா வராதா?

 1. Rettaival's

  Sunday, June 20, 2010

  @ Pannikkutty and Jey

  ரொம்ப ரிஸ்க் எடுத்து பார்க்க வேணாம். படத்துல பெரிசா மேட்டர் ஒன்னும் இல்லை. டிக்கெட் விலையெல்லாம் குறைஞ்ச பிறகு போய் பாருங்க கண்ணுங்களா!

 1. பட்டாபட்டி..

  Monday, June 21, 2010

  //ரொம்ப ரிஸ்க் எடுத்து பார்க்க வேணாம். படத்துல பெரிசா மேட்டர் ஒன்னும் இல்லை. டிக்கெட் விலையெல்லாம் குறைஞ்ச பிறகு போய் பாருங்க கண்ணுங்களா!//

  எப்ப சார்..ரூபாக்கு மூணு விற்க்கும்போதா?..ஹி..ஹி

 1. Anonymous

  Tuesday, June 22, 2010

  // சுஜாதா இல்லாமல் அடுத்து எந்திரன் வேறு வருகிறது!//

  பயம் வேண்டாம், பாலகுமாரன் வசனம் எழுதுகிறார்

 1. indian voice

  Tuesday, June 22, 2010

  intha padatha pathutu ennoda (en thambiyoda) fast track glassa tholaichathuthan micham,ravanan nasamaga poga.-senthil

 1. senthilkumar

  Wednesday, June 23, 2010

  without sujatha......mani failed to make digital ramayana

  we cant imagine without ar rahman, vairamuthu,santhosh sivan in this film
  we hope
  mani make his own identy in his further films

  but it takes too many years.we cant expect instant remedy from him.

  good review

 1. Thameez

  Wednesday, June 23, 2010

  Sujatha has done work for Endiran already. By the way only recently Sujatah's associations in Tamil movies are hit and if you take the full history of his involvements, sorry all are flop. For your reminder I am an ardent fan of Sujatha!

 1. முத்து

  Friday, June 25, 2010

  இந்த படத்தை எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா (ஏன் என்று பிறகு சொல்கிறேன்)இப்படி கவுத்துட்டாரே மணி  நான் ஏன் எதிர்பார்த்தேன் என்றால் நம்ம ரஞ்சிக்கா தான்

 1. முத்து

  Friday, June 25, 2010

  Veliyoorkaran said...
  அடுத்தவன நொட்டாரம் சொல்ற தகுதிய இந்த படத்துல கேவலமா வசனம் எழுதுதியதன் மூலமா திரு.சுகாசினி மணிரேத்னம் இழந்துடாங்க..! இனிமேவாச்சும் மணிரேத்னம் தன்னோட படங்களுக்கு தானே எழுதி தன் ரசிகர்கள திருப்திபடுத்துவாருன்னு எதிர்பார்க்கறேன் ...!!/////////////////  சுகாசினி ஜெயா டிவியில் பண்ண அலப்பறை இருக்கே சாமி!இப்போ தானே தெரியுது அது மண்டையில் என்ன இருக்கு என்று

 1. ஜெய்லானி

  Friday, July 02, 2010

  ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

  அன்புடன் > ஜெய்லானி <
  ################

Post a Comment