RSS

என் குட்டிக் கடவுளுக்கு!



இவளின் அபத்தங்கள் சுவாரஸ்யமானவை

வெயிலோடும் வியர்வையோடும் வரும் தகப்பனிடம்

தெத்துப் பல் காட்டி சிரிப்பாள்

மொழிகளுக்கு வார்த்தை கொடுப்பாள்

சுவர்களுக்கு அர்த்தம் கொடுப்பாள்

வண்ணங்கள் பார்த்து வியப்பாள்

அம்மாவிடம் அடங்கிப் போவாள்

சொல்கூட்டங்களிடயே சுழலுவாள்

கடந்த ஜென்மம் பற்றிக் கூறென்பாள்

தொலைபேசியில் கதை சொல்லுவாள்

தொலைந்திருந்த வாழ்க்கையை மீட்டுத் தருவாள்

மார் மீதமர்ந்து தலை முடி பற்றுவாள்

காதோரம் நகைப்பாள் பள்ளிக்கதைகள் உதிர்ப்பாள்

இன்னும் எத்தனை காலம் இந்த அபத்தங்கள்

வாழ்வின் அனர்த்தங்கள் புரியும் முன்

மழலைத்தனம் முடியும் முன்

வாழ்ந்து தொலைந்து விடு என் குட்டிக் கடவுளே!

*******************************************************************

புகைப்படம் : நன்றி : கார்த்திக் ராஜ்
  1. ஜெய்லானி

    Tuesday, April 13, 2010

    குழல் இனிது , யாழ் இனிது என்பார் மழழை சொல் கேளாதார் .....>>>

  1. அன்புடன் அருணா

    Tuesday, April 13, 2010

    குட்டிக் கடவுள் சூப்பர்!பூங்கொத்து!

  1. Rettaival's Blog

    Wednesday, April 14, 2010

    நன்றி ஜெய்லானி , கார்த்திக் , பட்டு மற்றும் பின்னோக்கி சார்!

    பூங்கொத்துக்கு நன்றி அருணா மேடம்!

  1. www.bogy.in

    Wednesday, April 14, 2010

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

  1. Veliyoorkaran

    Wednesday, April 14, 2010

    தமன்னா கழுத்துல வைரமாலை போட்டா மாதிரி இருக்கு மச்சி போட்டோ..!

    வைரமாலைக்கு மேச்சிங்கா பிளாட்டினம் வளையல் உன் கவிதை..!!

    சூப்பர்டா...!! :)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, April 14, 2010

    ரெட்டை..
    கவிதையில கலக்கிட்டே..

    அடுத்து..
    .
    .
    எப்ப கல்யாணம்? ஹி..ஹி

  1. பருப்பு (a) Phantom Mohan

    Thursday, April 15, 2010

    அய்யா ரெட்டைவால் அவர்களே,

    உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

    என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

    அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

    என்றும் என்றென்றும் அன்புடன்
    சிஷ்யன் பருப்பு
    கத்தார்

  1. ஜெயந்த் கிருஷ்ணா

    Wednesday, April 21, 2010

    என்னை தாலாட்டுகிறாள்,
    சீராட்டுகிறாள்
    சோறூட்டுகிறாள்
    என் தாய் எனக்கு
    மகளாக ....

  1. Jey

    Thursday, June 10, 2010

    நண்பரே, எனக்கு கவிதை-னா அல்ர்ஜி, இருந்தாலும் உங்க கவித எனக்கு முழுசா புரிஞ்சிருச்சி, நல்லா இருக்கு.
    குட்டீஷ்னாலே சந்தோசம்தான் இல்லையா.

  1. தேவதை காதலன்

    Monday, July 05, 2010

    //அம்மாவிடம் அடங்கிப் போவாள் //
    :-) மறுக்க முடியாத மாற்ற முடியாத உண்மை..
    //வாழ்ந்து தொலைந்து விடு என் குட்டிக் கடவுளே! //
    கவிதையை பற்றிய உங்கள் கவிதை மிக அழகு... மிக நேர்த்தி..

Post a Comment