RSS

டென்ஸல் வாஷிங்டனின் FLIGHT


       
FLIGHT என்றொரு படம். டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் குடிகாரர்களின் மனசாட்சியை உலுக்கும் படம். விவாகரத்தாகி மனைவி மகனுடன் தொடர்பற்று மனம் போனபடி குடித்தும் குஜாலாகவும் வாழும் விமானி. ரிப்பேர் ஆன விமானத்தை தன் சாதுர்யத்தால் தரையிறக்கி பல பேர் பிழைக்கக் காரணமாயிருக்கிறார்.  ஒரே நாளில் நேஷனல் ஹீரோ. ஆனால் பழுதடைந்த அந்த விமானத்தை தரை இறக்கும் முன் ரெண்டு பெக் போட்டு விடுகிறார். விசாரணையில் பைலட் குடித்திருப்பது தெரிந்தால் சிக்கல். அசாத்திய திறமை கொண்ட வாஷிங்டனை பைலட் யூனியனும், ஏர்வேஸும் காப்பாற்றப் போராடுகிறார்கள். காயத்தோடும் மனிதர் குடித்துக் கொண்டே இருக்கிறார். இடையில் இன்னொரு போதைக்காரப் பெண்மணியிடம் உன்னதமான தொடர்பு வேறு. குடிப்பழக்கத்தைக் கைவிடும் உளவியல் சிக்கல்கள் அற்புதமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. விசாரணை துவங்கும் முந்தின இரவு அறையில் பாட்டில்களுடன் டென்ஸல் காண்பிக்கும் போராட்டம் , அசத்தியிருக்கிறார். சுலபமாக ஒரே ஒரு பொய் சொல்லிவிட்டால் கெட்ட பெயரிலிருந்தும் சிறையிலிருந்தும் தப்பித்து விடலாம். அதை டென்ஸல் சொன்னாரா, கிளைமேக்ஸ் என்ன என்பதையும், திரையில் பார்த்துக் கொள்ளவும்.
” Leaving Las Vegas"  நிக்கோலஸ் கேஜுக்குப் பிறகு குடிகாரர்களின் வாழ்க்கையை அசலாக வாழ்ந்திருப்பது டென்ஸல் தான். இரண்டு ஆஸ்கார் பரிந்துரைகள் என்கிறார்கள். வென்றால் ஆச்சர்யப் படுவதற்கில்லை. டைரக்‌ஷன் : ராபர்ட் ஸெமிகிஸ்.(Cast Away, Forrest Gump)

 

பட்டு : அலெஸான்ட்ரோ பாரிக்கோ - சுகுமாரன்(தமிழில்)
 

பல்வேறு மொழிகளில் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டுத் தற்போது தமிழில் தரை தட்டியிருக்கும் இத்தாலிய நாவல். 1860களில் நடக்கும் ஒரு உன்னதமான காதல் கதை.
ஹெர்வே ஜான்கர் ஒரு பட்டுப் புழு வியாபாரி. ஹெலென் அவனது மனைவி. வருடத்தின் சரி பாதி நாட்கள் வியாபார நிமித்தம் வெளிநாடுகளில் அலைந்து , மிச்ச நாட்களை ஓய்வுடன் கழிக்கும் செல்வந்தன் ஜான்கர். ஒரு முறை ஜப்பான் பயணப்பட நேர்கிறது. அங்கு இவனோடு வியாபாரம் செய்யும் ஹரா கீய் என்பவனது துணைவி(?)யுடன் காதல் பற்றிக் கொள்கிறது. இவனிடம் ஒரு காதல் கடிதம் கொடுக்கிறாள்.ஜப்பானிய பாஷை தெரியாததால் அதன் அர்த்தம் தெரிய துடிக்கிறான். ப்ளான்ச்சி எனும் விபசாரியிடம் உதவி கிடைக்கும் என்று தெரிந்து அவளிடம் செல்கிறான்.
 

 ”திரும்பி வா...இல்லையேல் இறந்துவிடுவேன்!” - இது தான் அந்தக் கடிதம்.
 

அவள் பால் உள்ள ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் ஜப்பான் பயணமாகிறான். மிகுந்த எதிர்பார்ப்புடன் நான்காவது தடவையாக செல்லும்போது  அதிர்ச்சியும் சோகமும் தான் அவனுக்கு விடையாகக் கிடைக்கிறது.நஷ்டப்பட்டுத் திரும்பியதும் மீண்டும் ஒரு கடிதம்,அவன் முகவரிக்கு. அந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்பதையும் யார் எழுதியது என்பதையும் ஒரு சின்ன ட்விஸ்டோடு முடிக்கிறார் அலெஸ்ஸாண்ட்ரோ பாரிக்கோ.
முழுக்க முழுக்க எமோஷனல் அத்தியாயங்கள்.  மொழிபெயர்ப்பதில் என்ன அவசரமோ, ஒரு அத்தியாயத்தைக் கூட மனம் ஒன்றிப் படிக்க முடியவில்லை. மரியாதைக்குரிய எழுத்தாளரிடமிருந்து ஒரு டப்பிங் சீரியல் டைப் மொழிபெயர்ப்பை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆங்கிலத்தை அப்படியே தமிழ்ப்  படுத்தியது, வாசிக்க , மிகுந்த சோர்வை ஏற்படுத்துகிறது.
 

”அவன் வாங்கி விற்றான்.
 

பட்டுப் புழுக்கள்”
 

இது சின்ன உதாரணம் தான். இதைப் போன்ற ஏராளமான பத்திகள் உள்ளன. இவ்வகையான மொழிபெயர்ப்புகள் நம்மை மூலக்கதையிலிருந்து மேலும் அந்நியமாக்குகின்றன.  கதையின் பிரதானப் புள்ளி ஜான்கருக்கு அந்த ஜப்பானிய பெண்ணிடம் ஏற்படும் Obsession . இனம் புரியாத அந்த மிகுஈர்ப்பு தான் அவனை ஜப்பான் நோக்கிப் பயணப்படவைக்கிறது. ஒவ்வொரு முறை அவனது பயணத்தில் குறுக்கிடும் ஏரியை உள்ளூர்வாசிகள் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கிறார்கள். இது போன்று ஏராளமான நுண் தகவல்களை மொழிபெயர்ப்பு கவனப் படுத்த மறுக்கிறது. அது ஒன்று தான் பெரும் குறை. ஒரு மகத்தான குறுநாவல் மனதில் பதிய மொழிபெயர்ப்பே தடையாக இருப்பது சோகம் தான்.
 

வெளியீடு : காலச்சுவடு                          விலை : 95 ரூ
 

நீதி: அட்டையைப் பார்த்து அவசரப்பட்டுப் புஸ்தகம் வாங்கக் கூடாது!
 1. Bena Shankar

  Monday, February 11, 2013

  bravo 17 வரிகளில் ரத்தினச் சுருக்கமாகப் பட விமர்சனம், டென்செலின் American Gangster பார்த்தேன்,இந்த விமர்சனம் மீண்டும் டென்செலை flight இல் பார்க்கத் தூண்டுகிறது.
  பட்டு நூல் விமர்சனம் flight பட விமர்சனத்தை விட மிக அருமையாக அமைந்துள்ளது, அதுவும் // ”அவன் வாங்கி விற்றான்.

  பட்டுப் புழுக்கள்” //என்பது போன்ற ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசித்து விமர்சனம் செய்வது இலகுவான விடயமா :)

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  மிகவும் அருமையான விமர்சனம் தோழர்...!! குடியினால் குடல் வெந்து சாகும் கொடுமையை அழகாக கூறியுள்ளீர்கள்...!! ஆனால் டென்சல் வாஷிங்டன் எதற்க்காக பட்டு பூச்சி விற்பனையில் ஈடுபட்டார் என்பதை சொல்ல தவறி உள்ளீர்கள்...!! தாங்கள் இது பற்றி என்னிடம் விவாதம் பண்ண தயாரா....???

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  ”அவன் வாங்கி விற்றான்.

  பட்டுப் புழுக்கள்”//////

  பிசாத்து...இப்ப எங்க ஆள் எழுதுவான் பாரு இத விட டாப்பா...!! யோவ் பட்டாபி...தம்பிக்கு இந்த மாதிரியே ஒரு புது கவிதைய எடுத்து விடுயா...!! இந்தா மேரிக்கு...!!

  "மேலே ஊற்றியதை கீழே ஊற்றினான்..!!!"

  "Heniken...!!"

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  ஏலேய் ரெட்டை.. நீ தான் ஜாக்கி சேகர் என்ற பேரில் ப்ளாக் எலுதிரியா?.. சாரிப்பா.. எழுதுகிறாயா?

  ஏன்னா.. அங்கேயும்.. இந்த படத்தை பற்றி விமர்சனம் வந்திருக்கு....

  பார்த்தியா... சொல்லவேயில்ல....

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  ஏன் மச்சி.. அந்த வாஷிங்டன்ல் வீராசாமினு ஒரு படம் வந்துச்சே.. அதை பற்றி உன் கருத்தை நாலு வரில நச்சு-னு சொல்லேன்...

  உன் விமர்சம் படிக்காம கக்கா கூட வரமாட்டிங்குது!!!! ஆங்...


 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  ஏலேய்..
  உலகப்படம் பார்த்தா மட்டும் பத்தாது.. அதை எப்படி விமர்சனம் பண்ணனும்னு எங்க அண்ணனை பார்த்து தெரிஞ்சுக்க...!!!

  http://www.jackiesekar.com/2013/02/flight2012.html#more

  படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

  // படத்தின் தொடக்கத்தில்.....ஒரு பிளைட் பறக்குது அடுத்த ஷாட் ஒரு அலராம் அடிக்குது... அந்த அலராம் பிரேமிலேயே ஒரு பெண்ணின் வெற்று மார்பகம் அவுட்ஆப் போகசில்.... அதன் பின் அந்த பெண் முழு நிர்வாணத்தோடு எழுந்து பாத்ரூம் செல்கின்றாள்...
  //

  இந்த அரிய காட்சிய பற்றி ஏய்யா சொல்லாம விட்ட..!!!

  இதுக்கே ரெண்டு ஆஸ்கார் கொடுக்கலாம்னு பேசிக்கிட்டு இருக்காங்க... அந்த முக்கியமான விசயத்தை விட்டுப்புட்டு... வழவழ.. கொழகொழனு!!!

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  மிகவும் அருமையான விமர்சனம் தோழர்...!! குடியினால் குடல் வெந்து சாகும் கொடுமையை அழகாக கூறியுள்ளீர்கள்...!! ஆனால் டென்சல் வாஷிங்டன் எதற்க்காக பட்டு பூச்சி விற்பனையில் ஈடுபட்டார் என்பதை சொல்ல தவறி உள்ளீர்கள்...!! தாங்கள் இது பற்றி என்னிடம் விவாதம் பண்ண தயாரா....???//

  மழை பொய்சிருச்சாம் .. இல்லாங்காட்டி.. பட்டு பூச்சிய... ஏரோபிளேன் வெச்சு சாகுபடி செய்வது எப்படினு சொல்லியிருப்பாங்க111

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  நீதி: அட்டையைப் பார்த்து அவசரப்பட்டுப் புஸ்தகம் வாங்கக் கூடாது!
  //

  நடுப்பக்கத்தை பார்த்துட்டுத்தான் வாங்கனும்னு அண்ணன் சொல்றாரு வோய்..!!!

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  @@முனைவ்வ்வர் பட்டாபட்டி.... says:
  ஏலேய்..உலகப்படம் பார்த்தா மட்டும் பத்தாது.. அதை எப்படி விமர்சனம் பண்ணனும்னு எங்க அண்ணனை பார்த்து தெரிஞ்சுக்க...!!!///

  என் பதிவுலக ஆசான் ஜாக்கி சேகர் அண்ணனை பற்றி யாராவது கழுவி ஊற்றினால் இங்கே ஒரு நான்காம் உலக போர் மற்றும் ஒரு தெரு சண்டை நடக்கும் அபாயம் இருப்பதை பதிவு செய்ய நான் கடமைபட்டிருக்கிறேன்...!!

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  அந்த அலராம் பிரேமிலேயே ஒரு பெண்ணின் வெற்று மார்பகம் அவுட்ஆப் போகசில்.... அதன் பின் அந்த பெண் முழு நிர்வாணத்தோடு எழுந்து பாத்ரூம் செல்கின்றாள்...//

  @Rettaivals ///

  இந்த கவிதையை பற்றி தாங்கள் ஏன் எழுதவில்லை தோழர்...?? இது பற்றி என்னிடம் விவாதம் பண்ண தயாரா...???

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  என் பதிவுலக ஆசான் ஜாக்கி சேகர் அண்ணனை பற்றி யாராவது கழுவி ஊற்றினால் இங்கே ஒரு நான்காம் உலக போர் மற்றும் ஒரு தெரு சண்டை நடக்கும் அபாயம் இருப்பதை பதிவு செய்ய நான் கடமைபட்டிருக்கிறேன்...!!
  //

  அதேதான் மச்சி... முக்கியமான கட்டத்தை.. எங்கண்ணன் எவ்வளவு நேர்த்தியா பதிவு செய்திருக்கார்..

  ஆனா இந்த ரெட்டைய பாரு.. விமர்சனம் என்ற பேரில் வாந்தி எடுத்து வெச்சிருக்கு!!!!


  //படுக்கையில் டென்சில்... என்ன ஸ்டெக்சர்? என்ன கட்டைடா ,என்று மனசு யோசிக்கும் அளவுக்கு அவள் நிர்வாணம் பார்வையாளர்களை பரவசபடுத்துகின்றது.... பட் அந்த நெருக்கம் கிளைமாக்சில் இந்த படத்தில் எந்தள அளவுக்கு மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றது என்பது கவிதை..//

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  இந்த முக்கியமான கட்டம் வரும்போது.. சீட்டுக்கடியில் விழுந்த 1 ரூபாய் காயினை தேடிக்கிட்டு இருந்த ரெட்டைக்கு,
  என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்!!!!...

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  ஏலேய் ரெட்ட, என்ன தைரியம் இருந்தா பட்டுவ நீ நக்கலடிப்ப? யோவ் பட்டு, என்னன்னு கேளுய்யா. கேட்டாத்தான் கொடுப்பாங்களாம். வாங்கிட்டு வந்து என்ன கொடுத்தாங்கனு சொல்லு.

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  @முனைவ்வ்வர் பட்டாபட்டி.... says:
  சீட்டுக்கடியில் விழுந்த 1 ரூபாய் காயினை..//

  யோவ் பட்டாபி...என்னய்யா சொல்ற...இப்பல்லாம் அது ஒரு ரூபாய்க்கு கெடைக்குதா...?? எந்த ஏரியால...??

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  // என்னதான் திறமையானவனாக இருந்தாலும் குடிக்கு அடிமையாகிவிட்டால் சமுகம் அவனை குடிகாரன் என்றே அடையாளப்படுத்தும்... //

  ஏலேய் என்னால எழுதுற நீ? எங்கண்ணன் மாதிரி கருத்தா எழுதப் பழகுய்யா முதல்ல.

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  @@ ILLUMINATI says:
  கேட்டாத்தான் கொடுப்பாங்களாம். வாங்கிட்டு வந்து என்ன கொடுத்தாங்கனு சொல்லு...///


  அப்ப வாய் மட்டும்தான் உன்னோடது...!! மத்த எல்லாமே ஆட்ட தானா...??? இதுக்கு நீ பதிவெழுதி பொழைப்பு நடத்தலாமே மச்சி...!! ( அது பிச்சைய விட கேவலம்..)

 1. Rettaival's Blog

  Tuesday, February 12, 2013

  யோவ்! பிட்டு படத்துக்கா விமர்சனம் எழுதுறோம்!அந்த ஒரு ஸீனை மனசில வச்சு மொத்தப் படத்தையும் உக்காந்து பார்த்தீங்கன்னா வெறுத்துடுவீங்க...(உக்காந்து குடிச்சுட்டே இருப்பாய்ங்க)
  .
  .
  .
  (சந்திரமுகி ரஜினி ஸ்டைல்ல வாசிக்கவும்)

  நான் உங்களுக்கு நல்லது தான் பண்ணிருக்கேன்!

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  //
  பனமரத்துக்கு கீழ உட்கார்ந்துகிட்டு பால் குடிச்சாலும் கள்ளு குடிச்சான்னுதான் இந்த உலகம் சொல்லும்...ஆனா பனை மரத்துக்கு கீழ உட்கார்ந்துக்கிட்டு கள்ளு குடிச்சா சும்மா விட்டுவிடுமா இந்த சமுகம்...?//

  இத பார்த்து கத்துக்கய்யா யோவ். அப்பால இப்டி வெகுளித்தனமா எல்லா கமெண்ட்டையும் வெளிய விடாதய்யா. சுறுக்கா அமுக்கி வச்சுட்டு சுளுவா எச்சி துப்பி அழிச்சுரனும் ஆமா.

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  @@ILLUMINATI says:
  ஏலேய் என்னால எழுதுற நீ? எங்கண்ணன் மாதிரி கருத்தா எழுதப் பழகுய்யா முதல்ல.////


  உலக போர் கண்பார்ம்டே ...!!! வேண்டாம்டா...நீங்க கொந்தளிக்கிற எரிமலைக்குள்ள உச்சா போக பார்கறீங்க...!! பொங்குனா போசுங்கிரும்...!!! விட்ருங்க...!! அண்ணன் விட்ருங்க...!!

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  @@@Rettaival's Blog says:
  நான் உங்களுக்கு நல்லது தான் பண்ணிருக்கேன்!
  (சந்திரமுகி ரஜினி ஸ்டைல்ல வாசிக்கவும்)////


  இத வாசிக்கறதே தெண்டம்...இதுல எப்புடி வாசிகரதுன்னு வேற சொல்லி குடுக்குது இந்த தெண்ட கருமாந்திரம்......!!

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  @ veli, என்ன மச்சி முக்காட்டு மூக்கு வரை வந்துருச்சு? விட்டா ....வரை வந்துரும் போலயே. சீக்கிரம் எதுனா போஸ்ட் போடு மச்சி. :P

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  ஏலே ரெட்ட, என்னல எழுதியிருக்க ஹீரோ பத்தி? ஒரு கெத்தா எழுத வேணாம் ஹீரோவ பத்தி? அண்ணன் பென்சில் பத்தி ச்சே..டென்சில் பத்தி பின்னிப் பிடல் எடுக்குறத படிச்சாவது திருந்துய்யா.

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  //பிளைட்டில் டென்வில் ஏறும் போது படியில் கால் தடுக்கும்... நம்ம ஊரில் அதை சகுனம் சரியில்லை என்பார்கள்.. ஆனால் அவன் போதையில் இருந்தான் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.//

  மாற்றுப்பார்வைன்னா இது தான் மச்சி. அண்ணன் ஒத்தக் கண்ண பொத்திகிட்டு பார்த்தாரானு கேக்கணும். :)

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  மாற்றுப்பார்வைன்னா இது தான் மச்சி. அண்ணன் ஒத்தக் கண்ண பொத்திகிட்டு பார்த்தாரானு கேக்கணும். :)
  //

  முடியலே தொரை...!!!:-))))))))

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  ச்சே..டென்சில் பத்தி பின்னிப் பிடல் எடுக்குறத படிச்சாவது திருந்துய்யா.
  //

  யோவ்.. டென்சிலு அந்தாளு பேரா...  நான்கூட ஏதோ பென்சிலு(?)னு.. நிர்வாணம், அவுட் ஆப் போகஸ்.. ஷகீலா படம்னு ... நினச்சு பேசிக்கிட்டு இந்ருக்கேன்...

  அவ்வ்வ்வ்!!!

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  அத விடு மச்சி, பல்ப்பம் வச்சு பலாக்காவ பிளக்குறது எப்டின்னு அண்ணன் ஒரு புக்கே எழுதியிருக்காரு. மங்களகரமா மஞ்சளா இருக்குமாம். :)

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  மச்சி.. படத்தை கூர்ர்ர்ந்து கவனிச்சுபார்த்தா.. ஒன்னு புரியும்..

  அந்த காக்பிட்-ல...Map செருகி வெச்சுட்டு ப்ளைட் ஓட்டுவாப்படி..

  அதே கண்டி.. கருமாரியம்மன் போட்டோ வெச்சு ஓட்டியிருந்தா..விபத்தே நேர்ந்திருக்காது மச்சி!!

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  தக்காளி, அத தான் உத்துப் பார்த்துட்டு உக்காந்துருக்கியா நீயு? :P

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Tuesday, February 12, 2013

  சிறு விளம்பர இடைவேளைக்குப்பின் தொடரும்...

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  ஹாஹா... எது மச்சி? :)

 1. Rettaival's Blog

  Tuesday, February 12, 2013

  Illuminatiblog Tamil

  Translation is something that must be done with appreciation and respect. If it is done as a mere job , it always sucks. To be a writer, you must be a reader. Same goes for translation. You must understand and appreciate the work in order to emulate the tone perfectly. Without that it is not about a work of art. It might quite well have been about financial reports.

  ##########


  யோவ் வெளியூரு, பட்டாபட்டி...

  மேலாக்க இலுமினாட்டி சொன்னதை மட்டும் உங்களுக்குப் புரிஞ்சுருச்சுன்னு சொல்லுங்க...
  என் முக்காடை கழட்டிடறேன் நானு!

 1. Veliyoorkaran

  Tuesday, February 12, 2013

  @Rettai / மேலாக்க இலுமினாட்டி சொன்னதை மட்டும் உங்களுக்குப் புரிஞ்சுருச்சுன்னு சொல்லுங்க...
  என் முக்காடை கழட்டிடறேன் நானு! //

  இதுவரைக்கும் அவன் சொன்ன எதுரா புரிஞ்சிருக்கு..இது மட்டும் புரியறதுக்கு...!! லூசு எதோ உளறதுன்னு போயிரு...!! இல்லைனா பட்டாப்பட்டி மாதிரி ஆயிருவ...!!

 1. ILLUMINATI

  Tuesday, February 12, 2013

  ஊறுகாவுக்கு பக்கத்துல உஜாலா பாட்டில் வச்சாக் கூட தானா உளறுற பக்கியெல்லாம் உளறுறதப் பத்தி கருத்து சொல்ல வந்துருச்சு. போடா டேய். பொழுது போறதுக்குள்ள வீட்டுக்கு போய் சேரு. இல்லாட்டி பொண்டாட்டி பொடதில அடிக்கப் போறா. :)

 1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

  Wednesday, February 13, 2013

  இதுவரைக்கும் அவன் சொன்ன எதுரா புரிஞ்சிருக்கு..இது மட்டும் புரியறதுக்கு...!! லூசு எதோ உளறதுன்னு போயிரு...!! இல்லைனா பட்டாப்பட்டி மாதிரி ஆயிருவ...!! //

  ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!
  ஒரு பால் வச்சு 10 சிக்சர் அடிக்கலாம்னு கனவு மட்டும் காணாதே!!!

  நானெல்லாம்....
  இடது கைய மடக்கி .... வலது கையில கட்ஸ் ஏத்தி..
  கொஞ்சம் குனிஞ்ச மாறீ உக்காந்தேனு வை..
  தண்டுவடம் முடியற இடத்தில...வருங்கால பிரதமர் மூஞ்சி தெரியும்.. ஆங்..
  அம்பூட்டு ராஜ லட்சணம்மா இருக்கும் நம்ம பாடி!!! ஆங்!!!!

 1. Anonymous

  Monday, June 10, 2013

  What i don't understood is actually how you're not
  actually a lot more smartly-preferred than you
  may be now. You are so intelligent. You understand therefore
  considerably in relation to this matter, produced me personally believe it
  from so many varied angles. Its like women and men are not involved except it's one thing to accomplish with Lady gaga! Your personal stuffs great. All the time handle it up!

  Also visit my webpage :: home cellulite treatment

Post a Comment