RSS

மயக்கம் என்ன - எமோஷனல் மசாலா!


அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. அதுவும் சமீப காலங்களில் எமோஷனல் டிராமா என்கிற ஒரு தளமே விடுமுறைக்கு சென்று , திரும்பி வந்திருக்கிறது "மயக்கம் என்ன " மூலமாக.




தனுஷ் செல்வராகவன் இணைந்தால் என்ன நடக்குமோ ..அதே தான். கொஞ்சம் காதல், கொஞ்சம் பண்பாட்டு மீறல்கள், கொஞ்சம் சைக்கோத் தனம், ஆனால் இம்முறை பாஸிட்டிவாக ஒரு கிளைமாக்ஸ். அங்கங்கே பளிச்சிடும் லாஜிக் பொத்தல்களையும் மீறி மனதைக் கவர்ந்து விடுகிறது படம்.

( கார்த்திக்) தனுஷ் ஒரு ஃபோட்டொகிராஃபர். நண்பரின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார்கள் கார்த்திக்கும் அவன் தங்கையும். வைல்ட் லைஃப் ஃபோட்டோகிராஃபரான மாதேஷிடம் அசிஸ்டண்ட்டாக சேரும் ஆசையில் அவர் முன் தன் புகைப்படங்களை காட்டுகிறான். அவமானப் படுத்தி அனுப்பி விடுகிறார்.ஆனால் அதே புகைப்படங்களை தன் பெயரில் பத்திரிக்கையில் வெளியிட்டு பேர் வாங்கிக் கொள்கிறார். இதனிடையில் நண்பனின் கேர்ள் ஃப்ரண்டுக்கும் (ரிச்சா) கார்த்திக்குக்கும் காதல். நண்பனை சமாதானப் படுத்தி ரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். தான் எடுத்த புகைப்படத்துக்கு மாதேஷுக்கு விருது கிடைத்த அதிர்ச்சியில் மாடியில் இருந்து கீழே விழுந்து மன நலம் பாதிக்கப்படுகிறான். நிறைய குடித்து , மனைவியை அடித்து , அபார்ஷன் வரை கொண்டு போய் பின் மனம் திருந்தி மனைவியின் முயற்சியால் பத்திரிக்கைகளில் கவனிக்கப்பட்டு பிரபலமாகிறான். சர்வதேச புகைப்பட விருதுக்காக மாதேஷுடன் கார்த்திக்கின் புகைப்படம் ஒன்றும் போட்டிக்கு கலந்து கொள்கிறது. யாருக்கு விருது என்பதுடன், கார்த்திக் மாதேஷுக்கு அழுத்தமாக தாங்க்ஸ் சொல்வதுடன் படம் முடிகிறது.

நமக்கு பாலச்சந்தர் படத்தில் ஆரம்பித்து விக்ரமன் படத்தில் முடிவது போல ஒரு பிரமை. ஆனாலும் அங்கங்கே தெரியும் செல்வராகவன் டச், படு ஷார்ப்பான வசனங்கள் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது.



ஒரு ரெகுலர் தமிழ் சினிமா கதை தான். ஆனல் வசனங்களும் , ராம்ஜியின் ஒளிப்பதிவும் ,முக்கியமாக ஜீ.வி யின் பின்னணி இசையும் (ஒரிஜினல் என்று நம்புவோம்) படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கின்றன. தனுஷும் ரிச்சாவும் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் நிச்சயமாக இதற்கு முன் நமக்கு பாலு மகேந்திரா படங்களில் மட்டுமே காணக் கிடைப்பவை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பாடல் வந்தவுடன் ஸ்க்ரீன் அருகே போய் ஆடும் விடலைகளைப் பார்க்க முடிந்தது இந்தப் படத்தில் தான் (காதல் என் காதல்). ஓட ஓட பாட்டை படமாக்கியிருக்கும் விதமும் வித்தியாசம். மற்றபடி மயக்கம் என்ன ஒன்றும் புது வகையான படமெல்லாம் இல்லை. இரண்டாவது பாதியில் திரைக்கதையில் சற்று தொங்காமல் இருந்திருந்தால் செல்வராகவனுக்கு இது இன்னொரு 7 ஜியாக இருந்திருக்கக்கூடும்.

உருக்கமான காதல் கதை என நினைத்து வந்தவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனாலும் இது போன்ற படங்கள் வெற்றி பெறுவது வேலாயுதம் மங்காத்தா வெற்றி பெறுவதை விட உத்தமமானது .

மயக்கம் என்ன - Typical Selvaraghavan Film.
**********************************************************************************
  1. Ismail

    Saturday, November 26, 2011

    APPA UDANE PAARTHU VIDA VENDIATHUTHAN

  1. திண்டுக்கல் தனபாலன்

    Sunday, November 27, 2011

    நல்ல விமர்சனம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  1. வரிசை கி. இராமச்சந்திரன்

    Sunday, November 27, 2011

    இது போன்ற படங்களை விட வேலாயுதம் படத்தை நாலு தடவை பார்க்கலாம். வக்கிரத்தையும் குரூரத்தையும் மக்கள் மனங்களில் திணிக்க முயலும் இயக்குநரை கண்டிக்காமல் வக்காலத்து வேறு வாங்குகிறீர்கள்.

    ‘நான் அடுத்து இயக்குப்போகும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எனது தந்தையே தயாரிக்கிறார்’. – செல்வராகவன் பேட்டி.

    ”மயக்கம் என்ன” நாலு நாள் கூட போகாதுன்னு தெரிஞ்சுதான் படம் வர்றதுக்கு முன்னரே செல்வராகவன் மற்ற தயாரிப்பாளர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று ரெண்டு கையையும் தூக்கிட்டாரா?. ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை சோழர்கள் கதை, ஆண்ட்ரியா-ரீமாசென் கதை என்று குழப்பினார். இரண்டாம் பாகத்தில் யாரை குழப்ப போகிறாரோ?

    ஏங்க சார் உங்களுக்கு நல்ல கதையம்சத்துடன் உள்ள படமே எடுக்க தெரியாதா? உதிரிபூக்கள், முதல்மரியாதை போன்ற படங்களை தயவு செய்து 100 முறைக்கு மேல் பார்க்கவும்.

  1. Rettaival's Blog

    Sunday, November 27, 2011

    @ismail

    பாருங்க இஸ்மாயில்...சில லாஜிக் குறைகளை தவிர்த்தால் இது ஒரு அழகான சினிமா..!

  1. Rettaival's Blog

    Sunday, November 27, 2011

    @திண்டுக்கல் தனபாலன்

    Thanks Bro!

  1. Rettaival's Blog

    Monday, November 28, 2011

    இது போன்ற படங்களை விட வேலாயுதம் படத்தை நாலு தடவை பார்க்கலாம். வக்கிரத்தையும் குரூரத்தையும் மக்கள் மனங்களில் திணிக்க முயலும் இயக்குநரை கண்டிக்காமல் வக்காலத்து வேறு வாங்குகிறீர்கள்.

    @ வரிசை கி. இராமச்சந்திரன்,
    **********************************************************
    நண்பரே..நீங்களும் ஹிட் அடித்த மிடில் சினிமாக்களை மட்டும் தான் உதாரணம் காட்டுகிறீர்கள்...

    சில வருஷங்களுக்கு முன்பு "குட்டி" என்றொரு திரைப்படம் வந்தது... யாராவது ஆதரித்தீர்களா..?
    சந்தியா ராகம், அந்தி மந்தாரை என எவ்வளவோ நல்ல படங்கள் தந்தும் அதன் இயக்குநர்கள் அந்த விலகி மோசமான கமர்ஷியல் படங்கள் தந்ததற்கான காரணம் வேலாயுதம் போன்ற படங்களை வெறி கொண்டு ஆதரித்த தால் தான். செல்வராகவன் தனக்கென ஒரு பாணி வைத்திருக்கிறார்.ரசிக்கும்படி அந்த பாணியில் படம் எடுப்பதில் என்ன தவறு! தவிர மயக்கம் என்ன போன்ற சினிமாக்கள் வரும்போது தான் தான் சினிமா விஷுவல் மீடியம் என்பதையே உணருகிறோம். கெட்ட வார்த்தைகளும் பாத்ரூம் சீன்களும் தான் கலாசாரத்தை குட்டிச் சுவர் ஆக்குகிறதெனில்... நம் சமூகம் சார்ந்த சினிமா வயதுக்கு வர இன்னொரு தலைமுறை ஆகும்.

    நீங்களும் மகேந்திரனின் வெற்றி சினிமாவைத் தான் உதாரணம் காட்டுகிறீர்கள்..."நண்டு" "மெட்டி" என அவரது இன்னொரு பரிமாணம் உங்களுக்கு ஏன் உதாரணமாக மாட்ட வில்லை.

    நான் வக்காலத்து வாங்குகிறேன் தான்...சமீபத்தில் வந்த எந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தது? எந்த படத்தில் பிண்ணனி இசைக்கு முக்கியத்துவம் இருந்தது? இதெல்லாமே இருக்கும் மயக்கம் என்ன வை வக்காலத்து வாங்குவதில் என்ன தப்பு?
    இயக்குநர் தனக்கான ஆடியன்ஸை உருவாக்கிய பின் , அதிர்ச்சிக்காக அவர் வலிந்து திணிக்கும் வக்கிரமான சீன்கள் காணாமல் போய் விடும்... இல்லையென்றால்..அடுத்த படமாக "மாரியாத்தா" என்று விஜயையோ அஜிததையோ வைத்து எடுக்கும் நிலை வந்து அதற்கு கை தட்டிக் கொண்டிருக்கும் நிலை வரலாம்!

  1. KUTTI

    Thursday, December 01, 2011

    your re view is sweet....

    good writing style...

    my reiview about this film at
    http://feelthesmile.blogspot.com/2011/11/blog-post.html

  1. என்றும் இனியவன்

    Saturday, December 31, 2011

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    எனது ப்ளாக்கில்:
    பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
    புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
    A2ZTV ASIA விடம் இருந்து.

  1. Rettaival's Blog

    Saturday, December 31, 2011

    எங்க அப்பத்தாவையும் சேத்துக் கூட்டிட்டுப் போய் தாங்கலாமா...?

  1. Rettaival's Blog

    Saturday, December 31, 2011

    கோவாவுல தான் போய் தாங்கனுமா..இல்ல மதுரையிலேயே தாங்கிக்கலாமா....!அப்பத்தா கொஞ்சம் வெய்ட்டு ஜாஸ்தி..! அதான் கேட்டேன்!

  1. Veliyoorkaran

    Tuesday, January 03, 2012

    @@என்றும் இனியவன் said...
    கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு..//

    தாங்கரதுக்கு ஒரு குடும்பமே வேணும்னா., அப்டி என்ன பரிசா இருக்கும்..ஒருவேளை கோவா கூட்டிட்டு போய் எடைக்கல்ல குடுப்பாங்கேலோ..? :)

Post a Comment