RSS

ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக்


பார்லிமெண்ட்டில் அந்த பெண் அமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்திருந்தது அவர்களுக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. தூர்தர்ஷனின் லோக் சபா சேனலில் அடுத்த வருஷம் நடக்கப்போகும் அமைச்சரினியின் மாநில சட்டசபை தேர்தலைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது அவர்கள் எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது.

"நான் சொல்லலை சகா...இந்தம்மாவுக்கு சட்டசபை தேர்தல் தான் முக்கியம். எண்பத்தியாறு போலீஸ்காரனுங்க செத்தது பத்திக் கூட ஒரு கவலையும் இல்லாம உக்காந்திருக்குது.இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக் கூடாது. ஆபரேஷனை சரியான சமயத்துல நடத்திக் காட்டணும்.இல்லைன்னா ஊருக்கே போக முடியாது. அவ்வளவு கேவலப்படுத்திருவானுங்க.!"

ரவி சொல்லி முடித்தபோது தேவன் டி.வியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தேவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ஏன் நம் தேசம் மட்டும் இப்படி இருக்கிறது? எங்கு பார்த்தாலும் கமிஷன்.கொஞ்சமாக சில்லறை புரட்டுபவனை அடித்துத் துவைத்து அதே நேரத்தில் ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி என்று கொள்ளை அடிப்பவனை ஏ கிளாஸில் அடைத்து சல்யூட் அடிக்கும் போலீஸ். தேர்தலின் போது கூச்சமே பார்க்காமல் காசை வாங்கிப் போட்டுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கத் துடிக்கும் ஜனங்கள். இதெற்கெல்லாம் விடிவே கிடையாதா?

முதலில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும். அது தான் முக்கியம். தன் மக்களிடம் தங்களை முழுவதுமாக கொண்டு சேர்க்கப் போகும் செயல் திட்டம்.

இந்த ஆபரேஷனுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க சகா?" -ரவி

"ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக். சரியா பத்து நிமிஷத்துக்குள்ள எல்லாம் முடியணும். இல்லைன்னா பேஜார் ஆயிடும். உங்களோட உதவியும் தேவைப்படும். ஃபோன் ரீசார்ஜ் பண்ணிட்டீங்க இல்ல...?

" எல்லாம் பெர்ஃபெக்ட் சகா! சரியா எட்டு மணிக்கு நான் மிஷினை ஆன் பண்ணிடனும். உடனே எனக்கு பாஸ்வேர்ட் குடுத்துடுவீங்க இல்ல..!"

"நிச்சயமா! நாம செய்யப் போற இந்த காரியம் நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டணும். எப்படி இவங்களால முடிஞ்சதுன்னு தன்லையை பிச்சிக்கணும்.நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டார் ரவி!"

"அதே தான் சகா! போன தடவை மாதிரி சொதப்பிடக் கூடாது. கடைசி நேரத்துல அந்த லாரி டிரைவர் மட்டும் ஹெல்ப் பண்ணலைன்னா....என்னால யோசிச்சுப் பார்க்கவே முடியலை சகா!

"விட்டுத் தள்ளுங்க...நாளைய பொழுது நமக்கானது. என்னோட கவலையெல்லாம் பொது மக்களைப் பத்திதான். எத்தனை நாளைக்கு இந்த மாதிரியான கஷ்டங்கள்? இந்த அரசாங்கம் சிந்திக்கவே செய்யாதா?

தொலைக் காட்சியில் இப்பொழுது அந்த பெண் அமைச்சர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.ரவியும் சகாதேவனும் டி.வியை பார்த்த படியே நகைத்தனர்.

"என்ன ஆவேசம்? இநத நடிப்பை பார்த்துதான் சகா மக்கள் ஏமாந்து போறாங்க!"

"ஹூம்! நமக்கு இந்த பொது ஜனங்களும் முக்கியமில்லை. அரசாங்கமும் முக்கியமில்லை! நம்ம லட்சியம் தான் முக்கியம் ரவி.சரி அப்போ நாளைக்கு காலைல எட்டு மணிக்கு...ஓகே!"

"ஒகே சகா!"

இவ்வளவு பெரிய காரியத்தை கம்ப்யூட்டரிலேயே முடிக்கப் போவதின் சந்தோஷத்தில் ரவிக்கு தலை கால் புரியவில்லை. தன் அப்பா தாத்தா பட்ட கஷ்டமெல்லாம் கண் முன் நிழலாடியது. தாத்தா மட்டும் உயிரோடு இருந்திருந்தாரென்றால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?

**********************************************************************************************************************************

மறு நாள் காலை மணி ஏழு ஐம்பது.

"சகா நான் மிஷின் ஆன் பண்ணிட்டேன். !"

"ரொம்ப கவனம் ரவி. யு.பி.எஸ் ஆன் ல தானெ இருக்கு.நெட் கனெக்ஷன் செக் பண்ணிட்டீங்கள?"

"எவ்ரிதிங் ஆல்ரைட் சகா! இன்னும் சரியா எட்டு நிமிஷம் இருக்கு.

7.55
7.56
7.57
.
.
.

மணி எட்டு .

"வாட்ஸ் ஹேப்பனிங் சகா..? க்விக்! "

சகாதேவனுக்கு இதயத்துடிப்பு அதிகமானது.மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.பலனில்லை.

" ரவி...இங்க வொர்க் அவுட் ஆகலை. நீங்க கொஞ்சம் உடனே ட்ரை பண்ணுங்க. "

"பாஸ்வேர்ட் சொல்லுங்க சகா....! என்னால முடிஞ்சதை பண்றேன்."

பாஸ்வேர்ட் டைப் செய்வதற்குள் நிமிடங்கள் கரைய ஆரம்பித்தன.

மணி 8.06

8.07
.
.
8.09
.
.
8.09.55

எல்லாம் முடிந்து போனது. இன்னும் ரவி மற்றும் சகாதேவன் கண்களில் ஏமாற்றத்தின் மிச்சம் அகலவில்லை.

"எப்படி சகா....? எப்படி இது சாத்தியம்? எல்லாமே சரியாதானே இருந்தது. கரெக்டாதானே லாக் இன் பண்ணினோம். கரெக்டா தானே ட்ரை பண்ணினோம். அப்படியும்...."

ரவிக்கும் சகாதேவனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

"மான்யுவலா ஏதாச்சும் பண்ண முடியுமா? நேர்ல யாரையாவது அனுப்பிருந்தீங்களா?"-ரவி.

இல்லை ரவி. அதுக்கு டைம் இல்லை. அதுவுமில்லாம நேர்ல போயும் வேஸ்ட் தான். கொஞ்ச நேரத்தில் டி.வி போட்டு பார்க்கலாம்.என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம்.

இனிமேல் ஊருக்கு எப்படிப் போவது என்ற கவலையில் இருவரது முகமும் பரிதபாகரமாக வெளிறிப் போயிருந்தது.

சற்று நேரம் கழித்து ஒன்பது மணி செய்திகளில்

"தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய பத்தே நிமிடங்களில் எல்லா ரயில்களிலும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன." என அந்த பெண்மனி வாசித்து முடித்தபோது இருவரின் கண்களிலும் நீர் தளும்பாத குறை.

ரவி பெருமூச்சுடன் "டி.வி பார்த்தீங்களா சகா!கொடுமை.அப்படியே ஒரு எட்டு கோயம்பேடு போய் ட்ரை பண்ணனும் சகா!" என்றான்.

அடுத்த படையெடுப்பு ஆரம்பமானது.
  1. ஜெயந்த் கிருஷ்ணா

    Sunday, August 08, 2010

    யப்பா சாமிகளா... இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல...

    நாட்டு பற்றோட எதோ சொல்ல வராங்கன்னு பார்த்த.. வீட்டு பற்றோட ஊருக்கு போறதில்ல எழுதியிருக்கீங்க...என்ன ஒரு பில்டப்...

    உண்மையில் சொல்லப் போனால் இது தான் இன்றைய நிலையும்.. நானும் 5 வருசமா ட்ரை பண்றேன் எப்பையாவது ஒரு தடவையாவது ஊருக்கு ட்ரைன்ல போகலாமுன்னு...ம்ம்ஹ்ம் நடந்த பாடில்ல..

  1. Veliyoorkaran

    Sunday, August 08, 2010

    அட நாதாரி பயலே...மனுசனாடா நீ...! :)

  1. Jey

    Sunday, August 08, 2010

    ///அடுத்த படையெடுப்பு ஆரம்பமானது. ///

    அப்ப விடுரதா இல்லையா மக்கா?...

  1. Jey

    Sunday, August 08, 2010

    கோயம்பேடும் ஒர்க்கவுட் ஆவலைனா, பழையபடி லாரி சிக்குதான்னு பாருங்க...

  1. Jey

    Sunday, August 08, 2010

    சண்டே லீவுநாள், காலங்கத்தாலெ வந்து உன் பிளாக் வந்தேன் பாரு...லீவு மூடு நாசமாப் போச்சு... எதாவது மப்பேத்திகிட்டு(மங்குனி மறுபடியும் வாங்கி குடுப்பானானு தெரியல...) குப்புர படுத்து தூங்கவேண்டியதுதா..., யோவ் பட்டா, இதயெல்லாம் என்னானு தட்டிக்கேகுரதில்லையா?. நீரே ஒரு தொடை நடுங்கி உம்மகிட்ட சொல்லிகிட்டூ... நல்லாயிருங்கலே......

  1. ILLUMINATI

    Sunday, August 08, 2010

    ஹா ஹா..
    ஏன்யா யோவ்,லவ் பத்தி நீ போடுறதா சொன்ன போஸ்ட் இது தானா?நடத்து...
    ஆனா,நல்ல நடை மச்சி.செம sarcasm !

  1. Jey

    Sunday, August 08, 2010

    ILLUMINATI

    செம sarcasm !//

    நொன்ன இலுமி, நீரு படிச்சிருக்கீருன்னு ஒத்துகிடுரோம், அதுக்காக, எங்களுக்கு புருதா பாஷைல எங்களை திட்டி எதுவும் இங்க போடாதே....

  1. ஜெய்லானி

    Sunday, August 08, 2010

    //பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்

    அட நாதாரி பயலே...மனுசனாடா நீ...! :)//


    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டெய்


    ச்சே விருவிருப்பா ஏதாவது வருமுன்னு பார்த்தா இப்பிடியா

  1. Jey

    Sunday, August 08, 2010

    ஜெய்லானி
    August 8, 2010 10:16 AM
    //பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்

    அட நாதாரி பயலே...மனுசனாடா நீ...! :)//


    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டெய்


    ச்சே விருவிருப்பா ஏதாவது வருமுன்னு பார்த்தா இப்பிடியா///

    எல்லாரும் சரக்கடிச்சி மட்டயாயிட்டனுக, ஒருத்தனையும் காணோம், நமக்கு ஆனின்னா மட்டும் வந்து கும்மி அடிப்பனுக நாதாரிங்க....

    யோவ் பாண்டி வாய்யா சீக்கிரம்...

  1. கருடன்

    Sunday, August 08, 2010

    @ஜெய்
    //நொன்ன இலுமி, நீரு படிச்சிருக்கீருன்னு ஒத்துகிடுரோம், அதுக்காக, எங்களுக்கு புருதா பாஷைல எங்களை திட்டி எதுவும் இங்க போடாதே....//

    தல அப்படின " அட முக்காடு போட்ட மூதேவி... காலைலே இப்படி கவுத்துடியே" அர்த்தம். அதன் இலுமி பாசமா சொல்லி இருக்கு... டிசைன் டிசைனா கொல்றானுங்க....

  1. மங்குனி அமைச்சர்

    Sunday, August 08, 2010

    யாருப்பா அது புதுசா ஏரியாவுக்குள்ள ???? (இரு படிச்சிட்டு வர்றேன் )

  1. Jey

    Sunday, August 08, 2010

    TERROR-PANDIYAN(VAS)

    @ஜெய்
    //நொன்ன இலுமி, நீரு படிச்சிருக்கீருன்னு ஒத்துகிடுரோம், அதுக்காக, எங்களுக்கு புருதா பாஷைல எங்களை திட்டி எதுவும் இங்க போடாதே....//

    தல அப்படின " அட முக்காடு போட்ட மூதேவி... காலைலே இப்படி கவுத்துடியே" அர்த்தம். அதன் இலுமி பாசமா சொல்லி இருக்கு....//

    அப்படியா,நான் கூட இலுமி என்னை ஏதாவது திட்டிருக்கானோனு ,தப்பா சந்தேகப்பாட்டேன்.

  1. மங்குனி அமைச்சர்

    Sunday, August 08, 2010

    ங்கொய்யாலே , நீ ஓவர் பில்டப் குடுக்கும் போதே ஏதோ மொக்கையா இருக்குமின்னு நினைச்சேன் , ஆனா டிரைன் டிக்கட் யோசிக்கல

  1. மங்குனி அமைச்சர்

    Sunday, August 08, 2010

    பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்

    August 8, 2010 8:05 AM

    அட நாதாரி பயலே...மனுசனாடா நீ...! :)
    /////

    உனக்கு என்னா தெரியும் வெண்ண , சிங்கபூருல உட்கார்கிட்டு நொந்னத்தனமா பேசக்கூடாது , எங்க தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி "சிங்கபூர் டு மதுரைக்கு " ஒரு ட்ரைன் டிக்கெட் எடுத்துக்குடு பாக்காலாம் .

  1. Jey

    Sunday, August 08, 2010

    இப்ப என்ன நடந்து போச்சு, ஃபிரீய விடுங்க மச்சிகளா, இருக்கவே இருக்கு, காய்கரி லாரி, அதுல ஓரமா குந்திக்கி ஜாலியா போலாம்பா, ட்ரைன்லாம் ஒசத்தியானவங்க போர வண்டி..

  1. கருடன்

    Sunday, August 08, 2010

    ஆமா இந்த ப்ளாக் ஆடு எங்க போச்சி? தல ஒரு வலு உங்களுக்கு ஒரு வலு எனக்கு... டீல் okva?

  1. Jey

    Sunday, August 08, 2010

    மங்குனி அமைசர்
    August 8, 2010 11:16 AM
    ங்கொய்யாலே , நீ ஓவர் பில்டப் குடுக்கும் போதே ஏதோ மொக்கையா இருக்குமின்னு நினைச்சேன் , ஆனா டிரைன் டிக்கட் யோசிக்கல//

    வாய்யா மங்கு, நீரும் பல்பு வங்குரதுக்குதான், நல்லா எழுதிருக்கான் போய் படின்னு சொன்னேன், வாங்குனியா.....

  1. Jey

    Sunday, August 08, 2010

    TERROR-PANDIYAN(VAS)
    August 8, 2010 11:26 AM
    ஆமா இந்த ப்ளாக் ஆடு எங்க போச்சி? தல ஒரு வலு உங்களுக்கு ஒரு வலு எனக்கு... டீல் okva? ///

    வால வச்சிகிட்டு என்னய்யா பண்ணப்போரே?..., எப்ப கூட்டமா வருவானுக.. கும்முவானுகனு தெரியாது, அலர்ட்டாவே இரு....

  1. கருடன்

    Sunday, August 08, 2010

    //வால வச்சிகிட்டு என்னய்யா பண்ணப்போரே?..., எப்ப கூட்டமா வருவானுக.. கும்முவானுகனு தெரியாது, அலர்ட்டாவே இரு....//

    ஆமா ஆமா இவிங்க ஆடு அறுத்து ரொம்ப நாள் அச்சி.... கொலவெறியோட திரிஞ்சிட்டு இருபாங்க.....

  1. ஜெய்லானி

    Sunday, August 08, 2010

    //வால வச்சிகிட்டு என்னய்யா பண்ணப்போரே?..., எப்ப கூட்டமா வருவானுக.. கும்முவானுகனு தெரியாது, அலர்ட்டாவே இரு//

    ”வால்”கைக்கு வால் ரொமப் முக்கியம் ஜாக்கிரத

  1. ஜெய்லானி

    Sunday, August 08, 2010

    //ஆமா ஆமா இவிங்க ஆடு அறுத்து ரொம்ப நாள் அச்சி.... கொலவெறியோட திரிஞ்சிட்டு இருபாங்க..//

    எனக்கு ஈரல் வேனும் ஃபிரை சாப்பிட்டு நாளாகுது

  1. ஜெய்லானி

    Sunday, August 08, 2010

    //இருக்கவே இருக்கு, காய்கரி லாரி, அதுல ஓரமா குந்திக்கி ஜாலியா போலாம்பா//


    யாருக்கூடன்னு ஒன்னியுமே சொல்லாட்டி எப்படி பாஸ்

  1. பின்னோக்கி

    Sunday, August 08, 2010

    ரெட்டைவால்ஸ்னு பேர பார்த்தவுடனே உசார் ஆகியிருக்கனும். ஏமாந்துட்டேன். நல்லாயிருக்கு.

  1. Veliyoorkaran

    Sunday, August 08, 2010

    என்னடா சத்தம் இங்க...! ராஸ்கல்ஸ்...! :)

  1. கருடன்

    Sunday, August 08, 2010

    @வெளியூர்
    //என்னடா சத்தம் இங்க...! ராஸ்கல்ஸ்...! :) //

    ஒன்னும் இல்லிங்கன சும்மா விட்டுல இருக்கீங்களா பாத்தோம்.... தோ கிளம்பிட்டேன்.

  1. Jey

    Sunday, August 08, 2010

    பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள்
    August 8, 2010 3:29 PM
    என்னடா சத்தம் இங்க...! ராஸ்கல்ஸ்...! :)///

    பிரபல பதிவர்னுனு போட்டதுக்கப்புறம், சவுண்ட் கொஞ்சம் சாஸ்தியாயிருக்கு... மாப்ளைக்கு...

  1. senthilkumar

    Monday, August 23, 2010

    time being this story is neccessary for our society.

    while i m reading this story, i feel the taste of kumudam short stories.

  1. 111

    Wednesday, August 25, 2010

    கடைசில என்ந்தலே பண்ணினீரு....பொடி நடையா ஊர் சேந்தீகளா...., அந்த கருமத்தயும் சொல்லித் தொலைலே...

  1. உதவாக்கரை

    Tuesday, August 31, 2010

    என்னல நெனச்சுக்கிட்டிருக்கீக! ஒரு மனுசன் எம்மா சீரியசா படிக்க ஆரம்பிச்சா, நக்கலும், நையாண்டியுமால்ல இருக்கு... ரொம்ம சின்னப்புள்ள தனமாக இருக்கு, ஆனா ரொம்ப நல்லாருக்கு....

  1. vinu

    Wednesday, September 01, 2010

    எல்லாம் முடிந்து போனது, இந்த காரியம் நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டணும். எப்படி இவங்களால முடிஞ்சதுன்னு தன்லையை பிச்சிக்கணும்.


    chumma oru villaiyattukku sonnamba yaravathu vanthu kummaatheenga

Post a Comment