RSS

எல்லாம் ஒரு விளம்பரம் தான்...



உலகில் முதன் முதலில் விளம்பரங்கள் செய்ய பாப்பிரஸ் என்ற தாவரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.பண்டைய ரோமனிய கிரேக்கர் காலத்திலேயே போஸ்டர் எல்லாம் ஒட்டி ஓட்டுக் கேட்டு அதகளப் படுத்தியிருக்கிறார்கள். அப்புறமா மெல்ல சிந்து வழியா இந்தியா வந்து தமிழ்நாட்டுக்குள்ள எட்டிப் பார்த்த விளம்பரங்களை, அதுக்குன்னு ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி எங்கேயோ கொண்டு போய்ட்டாங்க நம்ம மக்கள்.

ஆனா முக்கியமான இடங்கள்ல இப்போ போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு கார்ப்பரேஷன் தன் சொந்த(?) செலவில ஓவியங்களை வரைஞ்சு தமிழ்நாட்டு லியானார்டோ டாவின்சிக்களையும் பிக்காஸோக்களையும் பதற வச்சிக்கிட்டுருக்கு. மெட்ராஸ்ல ஹோர்டிங்குகளை எடுத்தாலும் எடுத்தானுங்க..என்டெர்டெய்ன்மெண்டே போச்சு பாஸ். முன்னெல்லாம் வண்டி ஒட்டும் போது வேடிக்கை பாத்தாலே ஒரு பக்கம் நயன் தாரா இடுப்பைக் காட்டும்..இன்னொரு பக்கம்  த்ரிஷா பல்லைக் காட்டும்..ஷ்ரியா எதை எதையோ காட்டும்.மெட்ராஸ் காரனுங்களுக்கு அந்த குடுப்பினை எல்லாம் இல்லங்க. சரி! சொந்த சோகம் உங்களுக்கு எதுக்கு?

ஆனா போஸ்டரை பார்த்து உச் கொட்டலைன்னா நம்ம கண்ணு கெட்டுப் போய்டும் இல்லையா...அதனால சில ஹோர்டிங்குகள் நெட்ல இருந்து சுட்டது ..உங்களுக்காக































மில்லியன் டாலர் கேள்வியும்...சில குட்டிக் கேள்விகளும்..!



சில கேள்விகள் உலகத்தையே மாத்திடும்! ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்ற ஒரு கேள்வி விஞ்ஞானத்தின் திசையையே திருப்பியது.அது போல சில கேள்விகளுக்கு பதிலே கிடையாது.நான் யார்? பிரபஞ்சத்தின் எல்லை எது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் கடவுள் தான் வந்து பதில் சொல்லனும். மிகப்பெரிய ஆன்மீகவாதிகளும், அறிவு ஜீவிகளூம்,நாத்திகர்களும் அதைப் பற்றிக் கவலைப் பட்டுக்கட்டும்.

நம்மோட கேள்விகள் அதுவல்ல.தினசரி அலுவல்களில் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்வது இவைகள்.பதில் தெரிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க.இல்லாட்டி உங்க ஃப்ரண்ட்ஸ்களை இம்சை பண்ணுங்க.

கேள்விகள் இது தான்...!

1. ஒரு காய்ன்ல ஹெட்ஸ்(Heads) தலைன்னா டெய்ல்(Tails) "வால்"னு தானே சொல்லனும்.ஏன் "பூ"ன்னு சொல்றாங்க?


2. எப்போதும் கையில் ஏன் பச்சை மட்டும் குத்திக்கிறாங்க? ப்ளூ, ஆரஞ்சு, வயலெட்னு ஏன் குத்திக்கிறதில்லை?


3. (-) * (-)= + கரெக்ட்தான்.ஆனா ஏன்?


4. நாலு பேருக்கு நல்லது செஞ்சா தப்பில்லைன்றாங்களே...யார் அந்த நாலு பேர்?


5.இருக்கிறதா நெனைச்சிக்கிட்டு சாமி கும்பிடறதுக்கு எல்லாரும் கோவிலுக்குப் போறாங்க."நான் சாமியைப் பார்த்தேன்"னு ஒருத்தர் சொன்னா சட்டுனு யாரும் நம்ப மாட்றாங்களே ஏன்?


6."Never Say Never Again" - பிரபலமான ஜேம்ஸ்பான்ட் படம் இது. டைட்டிலை கொஞ்சம் தமிழ்ப்படுத்துங்களேன்.


7. பரீட்சையில் ஃபெயில் ஆனா கோட் அடிச்சுட்டான்றாங்களே அந்த கோட் எங்கே,எந்தத் துணிக்கடையில கிடைக்கும்?


8. எல்லாருக்கும் புரிகிற மாதிரி ஒரு தடவையாவது கமல் பேட்டி குடுப்பாரா மாட்டாரா?


9.சில பேர் பேட்டி குடுக்கும் போது " நான் ஒரு வீட்டுப் பறவை"ங்கறாங்களே.அவங்களுக்கு றெக்கை இருக்குமா?


10. கடைசியாக...இந்த மில்லியன் டாலர் கேள்வி,பில்லியன் டாலர் கேள்வினு ஒன்னு அடிக்கடி பத்திரிக்கைல வருதே..அந்த கேள்விக்குப் பதில் சொன்னா உண்மையிலேயே மில்லியன் டாலர் தருவாங்களா?

பதில் தெரிஞ்சா சொல்லுங்க இல்லைனா விட்டுடுங்க.வீட்டுக்கு ஆட்டோவெல்லாம் அனுப்பாதீங்க ப்ளீஸ்...!

முந்தைய பதிவின் முடிவு: ஜே.கே.ரித்தீஷ் விருது யாருக்கு?.நடிக்க வருதுன்னு நெனைச்சிக்கிட்டு இன்னும் நம்மளை கொன்னுக்கிட்டிருக்கிற அண்ணன் சேரன் தான்