RSS

(மானங்கெட்ட) கூட்டணி கட்சி தலைவர்களுக்கு


அன்பு சகோதரி எழுதுவது!


எதற்காக திடீரென இவ்வளவு கூச்சலும் குழப்பமும்? நீங்கள் கேட்கும் தொகுதிகளெல்லாம் கொடுப்போம் என்று எப்படி உங்களால் நம்பமுடிந்தது? மைனாரிட்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால் இந்த வாக்காள மடையர்களுக்கு என்னை விட்டால் வேறு கதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?

வழக்கமாக தேர்தலுக்கு பின்பு உங்களை துரத்திவிடுவேன் என்பது தெரிந்து தானே எங்களுடன் கூட்டணி வைக்க சம்மதித்தீர்கள்.ஏதோ ரொம்ப நாள் ஆட்சியில் இல்லாததால் போர் அடிக்கிறதே என்று நானும் சசியும் தொகுதி பங்கீடு , பேச்சுவார்த்தை என்று பொழுதைப் போக்கினோம். அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வதா? தேர்தல் நெருங்கிவிட்டதே..பிரசாரத்துக்குப் போக வேன்டுமே என்ற அக்கறை இல்லாமல்...இப்படியா காமெடி பண்ணிக்கொண்டே இருப்பது?

சரி..உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் வந்துதான் என்ன கிழித்துவிட போகிறார்கள். நான் நியமிக்கும் ஏதோ ஒரு மடையன் வாசிக்கும் பட்ஜெட் உரைக்கு மேஜையை தட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள். அதை அங்கே செய்தால் என்ன...வீட்டில் இருந்து செய்தால் என்ன?

எம்.ஜி.ஆர் போல என்னைப்போல சிவப்பான நடிகர் நடிகைககளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன என் கட்சிக்காரர்களுக்கு திடீரென மேக்கப் இல்லாமல் விஜயகாந்த் வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் பயப்படமாட்டார்களா? வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?

இந்த முறை என்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை தேர்தலுக்கு பின் தடை பண்ணலாமா என்று கூட ஒரு யோசனை உள்ளது.

அப்பாவி தலைவர்களாகிய உங்களிடம் சொல்வதற்கென்ன? சோ ராமசாமி பேச்சைக்கேட்டு நான் இப்படி அதிரடியாக முடிவுகள் எடுப்பதாக மீடியாக்கள் அலறுகின்றன, என் ஆஸ்தான ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் சோ ராமசாமியிடமே பேசுவேன் என்பது உங்களுக்குப் புரியாமல் போனதில் ஆச்சர்யமே இல்லை?

மானங்கெட்டுப் போய் திரும்பவும் என் காலிலேயே விழுந்து நான் போடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு வந்தீர்களானால் பிரசார மேடையில் சந்திப்போம். ஒரே நார்காலிதான் போடப்பட்டிருக்கும்.அதற்கும் முரண்டு பிடித்து மூன்றாவது அணி அது இது என்று பினாத்தாதீர்கள்!

விஜயகாந்துக்கு போட்ட நாமம் வாழ்க! வைகோவுக்கு போட்ட பட்டை நாமம் வாழ்க!


இப்படிக்கு

உங்கள் அன்பு சகோதரி


பின் குறிப்பு :

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

-- கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதாக உங்களிடம் நான் சொல்லவிரும்புவதாக என்னிடம் சோ ராமசாமி சொன்னது!

***********************************************************************************

(மானங்கெட்ட)தங்கபாலு ஸ்பீக்கிங்- A பட்டாபட்டி Article


வணக்கம் ப்ளாக்கர்ஸ். ’இந்த வணக்கம் தேர்தலுக்காக’- என நீங்கள் நினைத்தால், தவறான முன்  உதாரணமாகிவிடும். இந்த ரெட்டையும் வெளியூர்காரனும் ஒவ்வொரு தலைவரையும் கைக்கு வந்தபடி எழுதி குழப்பி வருவது நீங்கள் அறியாததல்ல!


இது வரை அவர்கள் எழுதிய பதிவுகள், விஜய், கேப்டன் மற்றும் தற்போதைய முதல்வர் பற்றி படித்ததும், ஆம்... அவர்கள் சரியான பாதையில் பயணிக்கின்றனர், என்று என்அன்னை சோனியா மீது ஆணையாக,அடக்கமாகக் கூற  கடமைப்பட்டுள்ளேன்
 
நான் பலசில வருடங்களாக, தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருவது, பலருக்கு உறுத்துகிறது. ஏன்?. எனக்கே அவ்வப்போது உறுத்துகிறது! அதையெல்லாம் பார்த்தால் தொழில் பண்ணமுடியுமா?தமிழர்களின் நலனுக்காக, பிறந்த நாட்டை விட்டு, இங்கு வந்து ரத்தம் சிந்தும்(?) என் அன்னைக்கு,  உயிரைவிடத்தயாராக இருக்கும் நான் ஏன் தலைவனாக இருக்ககூடாது?..!
 
காங்கிரஸில் ஏழெட்டு கோஷ்டிகள் இருப்பதாக மீடியாக்கள் கூவுகின்றன.அவர்களுக்கு நான் ஒன்று கூற கடமைப்பட்டுள்ளேன்.

"நீங்கள் கூறுவது சுத்தப் பொய்!

உண்மையில் எங்களுக்கே தெரியாமல் ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கின்றன. அதை கணக்கெடுக்கத்தான் நாங்கள் உட்கட்சி தேர்தல் நடத்தினோம். ஆனால் ஓட்டுப் போடும் தொண்டர்களை விட போட்டியிட்ட நபர்கள் அதிகமாக இருந்ததால் வழக்கம் போல டெல்லி சொல்வதையே கேட்டுக்கொண்டோம்.இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக டெல்லி மேலிடத்தில் கோள்மூட்டி விடுவதற்கென்றே தனி கோஷ்டி ஒன்றை உருவாக்கி அதில் எல்லாக் கோஷ்டியை சேர்ந்தவர்களும் இடம்பெற செய்ய முயற்சி செய்தேன்,

உங்களுக்குப் புரியவில்லை இல்லையா? எனக்கும் புரியவில்லை ..அதனால்தான் நானே தலைவராக தொடர்கிறேன்!
 
சரி இன்னொன்று கேட்கிறேன்!


தமிழகமுதல்வரின் கட்சியில் கோஷ்டிகள் இல்லையா? , அதிமுக-வில் கோஷ்டிகள் இல்லையா?. எங்களை மட்டும் ஏன் இப்படி பிரிக்கிறீர்கள்? எங்களின் குறிக்கோள், ’தமிழர்களுக்கு பணி செய்துகிடப்பதே’ என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?


சமீபத்தில் ஒருவர், என் விளையாநிலத்தை, பாகம் பிரித்து விற்பதற்கு முயற்சித்தது என் அன்னைக்குத் தெரியும்.

ஆனால், அதில் தோல்வி அடைந்ததைக்கண்டு மனம் வருந்திய மகான்(?)களில் நானும் ஒருவன்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ்...மாநிலத்தில் ஏன் இல்லை?. இதை நான் கேட்கவில்லை.. மக்கள் கேட்கிறார்கள்!
வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம் ...தெரிந்தால் சொல்லமாட்டோமா?

மக்களுக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள் அற்பர்கள். என்ன செய்யவில்லை நாங்கள்?.


ஈழத்தமிழரை கொன்றொழிக்க, ஆயுதங்கள் விற்ற வகையில், அந்நியச்செலவாணி ஈட்டவில்லையா?.

அயல்நாட்டு உறவை பேணிக்காக்க, குட்டாச்சி.. சாரிப்பா.. குஷ்டாச்சி..சே.. விடுங்க..அவரை விடுவிக்கவில்லையா?.

அமெரிக்காவின் அறிவுரைப்படி, போபால் மக்களுக்கு வாய்கரிசி கொடுக்கவில்லையா?.

வரலாற்றை மறக்கக்கூடாது. மேலும் , இந்துமுஸ்லீம் உறவுக்காக, ’கான்-ஐ காந்தி-யாக்கவில்லையா’?.

கேட்கிறார்கள் கேள்வி.

ஏன் இந்த கூட்டணி?. இது உங்கள் மனதில் தோன்றும். அன்னையின் புதல்வனுக்கு அஷ்டசனி நடப்பதால், கலைஞருடன் கூட்டு சேர்ந்தோம். அதையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஆறறிவு அற்றவர்கள்.

கூட்டணி பேச, என் மகனை அழைத்துச்சென்றேனாம்?. இதில் என்ன தவறு?. பாங்கில பணம் பெறும்போது, பாதுகாப்புடன் செல்வதில்லையா?. 60 வருட ஆட்சிக்கட்டிலில், இந்தியா எப்படி முன்னேறி உள்ளது?. சிந்தியுங்கள்..

வரும் தேர்தலில், மனைவிக்கு சீட் ஒதுக்கியதாக சிலர் கூவல்.

விலைவாசி கன்னாபின்னா என்று உயர்ந்து, நடுத்தரமக்கள் , பிச்சைக்காரார்கள் ஆகிவருகின்றனர். அந்த வளர்ச்சி என்னையும் பாதிக்காதா?. மக்களுக்குக்காக, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அரசியலில் புகுந்த எனக்கு மனைவியைத்தவிர யார் துணை(?)புரிவார்? ஒரு குடும்பதில், கணவன் மற்றும் மனைவி வேலைக்குப்போவது தவறா?.. கேட்கிறேன். மனசாட்சிப்படி பேசுங்கள் மனிதர்களே.

எங்கள் தலைவர் ராகுல்ஜீக்கு பெண் பார்த்து, அடுத்த காந்தியை, நாடு பெறும் வரை, மகன் மற்றும் மனைவியுடன், எங்கள் தலைவி சோனியாவுக்கு உழைப்பதே என் கடமை. இந்தக் கூட்டத்தில், சிலர் சங்கு கூதுகிறார்கள். இதற்கெல்லாம் பயந்தவர்களா, காங்கிரஸ்காரர்கள்? நாங்கள் ஊதாத சங்கா?.

ஆகவே, ஒவ்வொரு வாக்காளரும், உங்கள் பொன்னான ஓட்டை, காங்கிரஸ்-க்கு அதாவது.. தங்கபாலு காங்கிரஸ்க்கு போட்டு, வெற்றிபெறச்செய்யுங்கள். உங்களுக்கு சேவைசெய்ய நாங்கள் இருக்கிறோம்.

வாழ்க அன்னை.. வளர்க தங்கபாலு கோஷ்டி!

( யோவ்.. போட்டோ.. மகனையும் அப்படியே எடுயா.... தக்காளி.. அடுத்த அஞ்சு வருஷம்.. ம். கு^%$@#ஞ்சவெச்சு, தண்ணி குடிச்சாவது, பதவியை விட்டு இறங்ககூடாது.. ஏழுமலை வெங்கடேசா.. தேர்தல் முடிஞ்சதும் உனக்கு முடி(?) காணிக்கை செலுத்துகிறேன். அதுவரை, மக்களை.... அப்படியே வெச்சிருய்யா பெருமாளே.. )
 
Written By Pattapatti
*************************************************************

(மானங்கெட்ட) விஜய் ரசிகனுக்கு




வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெயிலையும் படிச்சா அவன் மேல உள்ள வெறுப்பெல்லாம் போயி பரிதாபமே வந்துருச்சுடா! ஆனா எல்லாத்தையும் மீறி அவனோட அரசியல் ஆசைக்கு சாம்பிராணி புகையைப் போட்டு ஏத்திவிட்டுரக்க பாரு கில்லாடிடா நீ!
இதுவரைக்கும்... படத்தை ஓட வைக்கிறதுக்காக அரசியலுக்கு வந்திருக்கானுங்க..படம் இனிமே ஓடாதுன்னும் அரசியலுக்கு வந்திருக்கானுங்க...ஆனா கருமம் தான் படம் ஓட்டறதுக்கு தியேட்டர் கிடைக்கலைங்கறதுக்காக அரசியலுக்கு வந்த ஒரே பன்னாடை உன் தலைவன் தான்டா!

உன் தலைவன்ட்ட சொல்லிவை...அரசியல்னா மூஞ்சி நிறைய மஞ்சளை அப்பிக்கிட்டு சாமர்சால்ட் அடிச்சுட்டு பட்டாசு பாலுவை கலாய்க்கிறது இல்ல...அவன் எண்டர் குடுக்கணும்னு நினைக்கிறது ஒரு மெண்டல் ஆஸ்பத்திரி...ஸாரி..சட்டமன்றம்! ஒரு கைல ஃபோன்ல பேசிக்கிட்டே இன்னொரு கைல ஸ்னைப்பர் ல குறி பார்த்துட்டு இருப்பானுங்க. ஒரு கைல தன் வேட்டியை கட்டிக்கிட்டு இருக்கும்போதே இன்னொருத்தன் வேட்டியை உருவற ரியல் வில்லனுங்க சலம்புற இடம்.

வேணாம்டா...தமிழ்நாட்டு அரசியல் களம் என்ன ஷூட்டிங் ஸ்பாட்டா? ஜெயலலிதா ,வைகோ..ராமதாஸ்..திருமாவளவன்..அழகிரி..ராஜா...கனி மாதிரி ஏழைகளும் புண்ணிய ஆத்மாக்களும் கபடி விளையாடற இடம்.இவய்ங்களுக்கெல்லாம் மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏற்கெனவே கக்கா போற இடம் புண்ணாகிக் கெடக்கு...உன் தலைவன் வேற ஏன் வந்து சொறிஞ்சு விடனும்னு துடிக்கிறான்?

நல்லா யோசிச்சுப் பாரு... மூனு மணிநேரம் உன் தலைவன் படத்தை நகர்த்துறதுக்குள்ளேயே எங்களுக்கு மூச்சு முட்டுது...அஞ்சு வருஷமெல்லாம்...ரொம்ப கஷ்டம்டா! சனத்தொகைல பாதி பேருக்கு வலிப்பு வந்துரும்டா! இது ஏன் உன் தலைவனுக்குப் புரிய மாட்டேங்குது!

நாலு நல்ல படத்துல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமா நீலாங்கரைல நட்டு வச்ச செடிக்கு தண்ணி ஊத்தினோமான்னு நாசூக்கா வாழறதை விட்டுட்டு ஏன் இந்த வேண்டாத வேலை.அவனை சொல்லி குத்தமில்லை.அவங்கப்பன் இருக்கான் பாரு எஸ் ஏ சி!(தக்காளி அவனுக்கு இருக்குடி ஒரு நாளைக்கு). ஊரு உலகத்துல உன் தலைவனுக்கு எதிரியே வேணாம்டா...அப்பனே போதும்.

அஜித்தை பாரு! பத்து வருஷத்துக்கு ஒரு ஹிட் கொடுத்தோமா..வாயை பா...ன்னு தொறந்து வச்சிக்கிட்டு தமிழை கடிச்சுக் குதறி ஏதோ அவனால முடிஞ்ச சின்ன சின்ன இம்சையை பண்ணிட்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.ஏழெட்டு வருசமா எந்த ஹிட் கொடுக்கலைன்னாலும் அசராம அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கிட்டு ஜாலியா இருக்கான்.இப்படியா அரசியல்ல குதிக்கிறேன் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.அவனைப் பார்த்துமா உன் தலைவனுக்கு புத்தி வரலை?

சுனாமிக்கு அப்புறமா மக்கள் அதிகமா பயந்தது உன் தலைவனோட சுறா படத்துக்குதான்டா! அந்த படத்தை அடம் புடிச்சு முத நாள் பார்த்த எங்க பக்கத்து வீட்டுப் பையன் நாலு நாளா பல் விளக்க முடியாம படுத்துக் கிடந்து டாக்டருக்கு சன்னமா அழுது காப்பாத்தி கூட்டிட்டு வந்தாய்ங்க! இப்பத்தான் ஞாபகம் வருது... உங்க தலைவன் டாக்டராம்ல! இதையே காரணம் காட்டி அந்த சிம்பு பயலும் நாளைக்கு டாக்டராவான். ஜனங்க என்னடா பாவம் பண்ணுச்சு ?

இன்னும் என்னன்னவோ கேட்க தோணுது! வெய்ட் பண்ணு! உன்னை மாதிரியே உன் தலைவனோட ஒரு மானங்கெட்ட முன்னாள் ரசிகன் வெளியூர்காரன் உன் தலைவனை கலாய்க்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான்!

ஓவர் டு வெளியூர்!
****************************************************************************

(மானங்கெட்ட) தொண்டனுக்கு - கேப்டன் ரைட்டிங்-அக்காங்!



மானங்கெட்ட தொண்டனுக்கு,


நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..!

டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங்க....இருங்கடா ...இது நான் நடிச்ச சினிமா இல்லடா..தேர்தல் பிரச்சாரம்...அதுவும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம்...அக்காங்..!

எப்படா ஆட்சியைப் பிடிப்போம்..நாமளும் எம்.எல்.ஏ மந்திரி ஆகி நால்லா சம்பாதிக்கலாம்னு கனவோட இருக்குற என் ரசிகக் கண்மனிகளா...உங்க ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேறிடும்...! என் கால் கவுட்டி மேல சத்தியமா நாம கண்டிப்பா ஜெய்க்கிறோம்..!.. அக்காங்..!

நாம ஜெய்ச்சிருவாமான்னு சந்தேகமா கேக்குற சனியன் புடிச்ச ஈத்தரைங்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்... போன தேர்தல்ல நாம வாங்கின ஓட்டுசுமார் முப்பது லட்சம். தக்காளி அதுல பாதி பேரு என்னோட எதாச்சும் ஒரு சினிமாவ ஒரே ஒரு தடவ பார்த்துருந்தா கூட நான் நல்ல துட்டு பார்த்துட்டு ஓரமா போய் தண்ணிய போட்டுட்டு சத்தமில்லாம படுத்துருப்பேன்....இப்ப பாரு அரசியலுக்கு வந்துட்டேன்..இதெல்லாம் உங்களுக்கு தேவையா..? ஒழுங்கா என் படத்த பார்த்துருக்கலாம்ல....?.. இப்ப இவன் தோத்து போய்ட்டா மறுபடியும் சினிமால நடிக்க வந்துருவானேன்கர பயத்துலயாச்சும் மக்கள் எனக்கு வோட்டு போடுவாங்கடா..நான் ஜெய்ச்சிருவேன்...!

அதானால நீ தேவையில்லாம பயந்து என்னையும் பயமுறுத்தாத...இப்பல்லாம் பயம் வர்றப்ப முன்னாடி மாதிரி மடில படுத்து அழுக என் பொண்டாட்டி வேற விட மாட்டேன்கர... ஊசிப்போன சாராய நாத்தம் அடிக்குதாம் என்மேல.. எங்க விட்டேன்..ஆங்...எலெக்சன்ல ஜெய்க்கிறது...அதனால நீ தைரியமா போய் நீ எலெக்சன் வேலைய பாரு...! நாம ஜெய்க்கிறோம்..!

முதள்ள தனியா நின்னோம்...மக்கள் ஓரளவுக்கு ஓட்டுப் போட்டாங்க.அப்புறம் ஆண்டவனோட கூட்டணி வச்சோம்.லேசா மூஞ்சிய திருப்பினாங்க... இனிமேயும் தனியா நின்னா வைகொ ராமதாஸுக்கு அடுத்தபடியா நாம தான் காமெடி பீஸுன்னு நினைச்சி காரி துப்பிட்டு கழுவி ஊத்திட்டு போயிருவாங்கே..மூளையும் கலரும் கம்மியா இருந்தாலும் உன் தலைவன் ஆக்சன் ஸ்டாருடா... வெச்சேன் பார்த்தியாகூட்டணிய..!



ஏண்டா நாயே கட்சி ஆரம்பிச்சேன்னு என்ன பார்த்து எல்லாரும் கேக்றாங்க.சொல்றேன் கேட்டுகங்க.. தமிழ்நாட்டு அரசியல் என் கம்மங்கோட்டை மாதிரி நாறி போய் கெடக்கு...! இது சுத்தபடுத்தனும்னு இங்க இருக்கற முப்பத்தியாறு நடிகர்கள்ல யாருக்காச்சும் தோணுச்சா...! என் பொண்டாட்டிக்கு தோணுச்சு..அவதான் சொன்னா..மச்சான் மச்சான் கட்சி ஆரம்பிங்க கழுவுவோம்னு...எதடின்னு கேட்டதுக்கு, நாட்டை மச்சான் நாட்டைன்னு சொன்னா..! எனக்கு பொண்டாட்டி பேச்ச கேக்குறது அறவே புடிக்காது..அதனால இருபது வருசமா கவுட்டி கிழிய கிழிய கால தூக்கி தூக்கி சண்ட போட்டு மொறைச்சு மொறைச்சு பார்த்து சம்பாரிச்ச காசெல்லாம் எறக்கி ஆரம்பிச்சேன் பாரு கட்சிய...!

மெரண்டுட்டா என் பொண்டாட்டி...ஏன் மச்சான் நான் சொல்ற எதையுமே கேக்கமாட்ரீங்கன்னு..! அப்ப சொல்ல ஆரம்பிச்சேன் அவகிட்ட, தமிழ்நாட்ல மொத்தம் இருநூத்தி முப்பத்தி...,அவ அதுக்குள்ள அவ தம்பிகிட்ட போய் சொல்றா, உன்ட்ட அப்பவே சொன்னேன்ல, எனக்கு இந்த கருவாபய வேணாம், லுச்சாதனமா எதுனா பொலம்பிகிட்டே இருக்கானு...கேட்டியான்னு அழுதுகிட்டே பொலம்ப ஆரம்பிச்சிட்டா...! நான் என்ன பண்றதுன்னு தெரியாம போய் தண்ணியடிச்சிட்டு வழக்கம் போல வாந்தி எடுத்துட்டு தூங்கிட்டேன்..! அப்ப நெனச்சேன் பொண்டாட்டி கையாள செருப்படி வாங்கற நம்மள மாதிரி ஆம்பளைங்களுக்கு நம்ம கட்சில அடைக்கலம் குடுத்து குவார்டர் வாங்கி குடுக்கனும்னு...! இதோ இப்ப இந்தளவுல வளைந்து நிக்கறேன்...!



இத ஒரு மேடைல சொன்னதுக்கு ஒரு எதிர்க்கட்சி பத்திரிக்கைகாரன் என்ன பார்த்து கேக்றான்..கட்சி ஆரம்பிச்ச சரி..அது என்ன தேசிய முற்போக்கு திராவிடம்..அதுக்கு என்ன அர்த்தம் சொல்லுன்னு..? நான் அந்த பத்திரிக்கைகாரன பார்த்து ஒன்னு கேக்றேன்...?

கண்ணு சிவக்க, புருவத்தை தூக்கி தூக்கி முறைச்சு பேசறது எவ்வளவு கஸ்டம் தெரியுமா உனக்கு...?

இதுக்கு பதில் சொல்ல சொல்லு அவன..அதுக்கப்றம் நான் அவனுக்கு பதில் சொல்றேன்..தேசிய முற்போக்கு திராவிடம்னா என்னான்னு...! அந்த மடபயகிட்ட நான் ஒன்னு கேக்குறேன்...அர்த்தம் தெரியாமயா என் பொண்டாட்டி அந்த பேர கட்சிக்கு வெக்க சொல்லிருப்பா..! கண்டிப்பா எதாச்சும் அர்த்தம் இருக்கும்..கட்சி ஆரம்பிச்ச புதுசுல என் மச்சான் சுதீஷ் கூட வந்து என்கிட்டே சொன்னாப்ல...கட்சி பேரு செம அர்த்தம் மச்சான்னு...! அப்பறம் எப்டிரா அர்த்தம் இல்லாம போகும் அறிவுகெட்டவனே...! யாருகிட்ட வந்து என்னா கேள்வி கேக்குற..?

எங்க விட்டேன்..ஏய் ச்சீ..அசிங்கமா நெனைக்காதீங்கடா..நான் பேசிகிட்ருந்தப்ப எங்க விட்டேன்னு கேக்குறேன்..

அக்காங்..புடிச்சிட்டேன்..!

அதனால நான் சொல்லிக்கறது ஒன்னே ஒண்ணுதான்..தமிழ்நாட்ல இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதி இருக்கு, அதுல ஒவ்வொரு தொகுதிலயும் முன்னூத்தி பதினைஞ்சு பார்பர் ஷாப் இருக்கு, ஐநூத்தி முப்பத்தி ஆறு டெய்லர் கடை இருக்கு, நானூத்தி எழுபத்தி மூணு மளிகை கடை இருக்கு, அறுபத்தி ஆறு மருந்து கடை இருக்கு,எதுக்கு இந்த கணக்கெல்லாம் இவன் இப்ப சொல்றான்னுதான யோசிக்கற...வேற என்ன சொல்றதுன்னு தெரிலடா எனக்கு..சொல்ல தெரிஞ்சா சொல்லிரமாட்டேன்.. !

அதனால ரொம்பல்லாம் டீட்டைல் கேக்காத..நான் கொலம்பிருவேன்...எனக்கு தேவை இந்த தேர்தல்ல நான் எப்டியாச்சும் ஜெய்ச்சாகனும்..சொன்ன நம்பமாட்ட, இந்த தேர்தல்ல எப்டியாச்சும் ஜெய்ச்சிர்லாம்னு சொல்லி என் பொண்டாட்டியோட தாலி நகை வரைக்கும் வாங்கி அடகு வெச்சிருக்கேன்..இதுல தோத்தேன் ,சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்...அதுலயும் என் மச்சான் சுதீஷ் ரொம்ப மோசம்..கடுப்புல நான் குடிக்கற சரக்குல சயனைட கலந்தாலும் கலந்துருவான்..அதனால தயவு செஞ்சி எனக்கு வோட்டு போடுங்க...நம்ம கட்சி கொள்கை ஜெய்ச்சாகனும்..

என்ன எது நம்ம கொள்கையா...?

சொல்றேன் கேட்டுக்க..,

தமிழ்நாட்ல மொத்தம் முப்பத்தி ஆறாயிரத்து முன்னூத்தி நாப்பத்தி நாலு கக்கூஸ் இருக்கு..,

டேய் டேய் இருங்கடா...சொல்லி முடிச்சர்ரண்டா..ஏண்டா எல்லாரும் இப்டி ஓடுறீங்க...?

புரட்சி கலைஞர் விஜயகாந்த்

A article by Rettaivals and Veliyoorkaran.

********************************************************************************

(மானங்கெட்ட) உடன்பிறப்பே, - A VELIYOORKARAN ARTICLE



அன்பு உடன்பிறப்பே.,


மு க எழுதுவது..

தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...!

என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே...

நாம் என் செய்ய போகிறோம்..?

நாற்பதென்றார்கள்..முடியாதேன்றேன்..! ஐம்பதென்றார்கள்., முடிந்தால் பாரென்றேன்..! அறுபதென்றார்கள்.,மூஞ்சியை திருப்பி கொண்டேன்...! தக்காளி தூக்கிவிடுவோம் ராசாத்தியையும் கனிமொழியையும் என்றார்கள்...! பதறி போய் கொடுத்தே விட்டேன் என் கழக கண்மணியே..நான் குடுத்தே விட்டேன்...!

என் கழகமே அவர்கள்தானடா என் கண்மணியே...அவர்களை விட்டு நான் தனியே என் செய்வேன்...?

சில பட்டாபட்டி டவுசர் அணிந்த, கையில் பீடி வைத்த கோமான்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும்! கலங்கிவிடாதே! அவர்களின் தீஞ்சொற்களை தீக்கிரையாக்க வேண்டாமா?

எப்படி சந்திக்கபோகிறோம் இத்தேர்தலை..மக்கள் விரோத தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிபிடிக்கிடையில் எப்படி மாற்ற போகிறோம் வாக்கு பெட்டிகளை..?

ஊழல் கலைஞரின் ஆட்சி முடியபோகிறதென சுடுகாட்டு நரிகளின் ஊளை ஆரம்பித்து விட்டது..மனசை திடமாக்கி கொள்..கண்மணியே...நாம் திராவிடர்கள்...நாம் பார்க்காத தேர்தல்கள் இல்லை..புறப்படு களம் நோக்கி..இந்த ஐந்தாண்டில் என்னடா செய்தீர்கள் கயவர்களே என மக்கள் காரி காரி மூஞ்சியில் உமிழ்வார்கள்...கழகக்கொடி எடுத்து மூஞ்சியை துடைத்துகொள்...கயவர்களில் சிலர் காரும்போது சளியும் சேர்ந்து வரும்..மனம் தளராதே...அதையும் துடைத்து ஜோப்பில் வைத்துகொள்...அன்னை தெரசா வழி வந்தவர்கள் நாம்..எச்சிலை துடைத்து எறிந்துவிட்டு சிரித்துக்கொண்டே வாக்கு கேள்..ஊழல் கட்சியை சேர்ந்த நாயே வெளியே போ என்பார்கள்..விம்மாதே...!

ஆம்.நாம் ஊழல் கட்சிதான்..யார் செய்யவில்லை ஊழல்..உன் தங்க தலைவன் நான் செய்யாத ஊழலா.?..இல்லை என் அன்பு தம்பி கன்னகதுப்பு துரைமுருகன் அடிக்காத காசா..? அல்லது சிரிச்ச மூஞ்சி ஆற்காடு வீராசாமிதான் உஷார் பண்ணாத துட்டா...என் அவ்ளோ தூரம் செல்கிறாய் என் அன்பு தம்பி..நான் பார்த்து டவுசரை நனைத்து நனைத்து விளையாடிய என் அன்பு பேரன் தயாநிதி அடிக்காத கோடிகளா...? இது அரசியல் தம்பி...நான் செய்வது வியாபாரம்..நாங்களெல்லாம் அடித்த பணத்தை பூசுனாபோல அடித்து பொத்துனாப்ல பாக்கெட்டில் போட்டுக்கொள்ளவில்லை!..? அந்த திறமை நம் ராசாவிடம் இல்லாதது தான் என் வருத்தமே...யாராலையும் உஷார் பண்ண முடியாத என் மகள் கனியையே உஷார் பண்ணியவர், மணியையும் உஷார் பண்ணிவிடுவார் என்று நம்பினேன்..லூசு கபோதி இப்புடி எங்கள வைத்துல அடிச்சு பாடையில ஏத்திட்டான்..மன்னித்து விடு உடன்பிறப்பே...கோவத்தில் கெட்டவார்த்தைகள் உள்நுழைந்துவிட்டது..!

ஊழலில் அறிவியலை புகுத்தியவர்கள் நாம்...எதோ ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிவிட்டோம் என பதறுதல் தவறு...எதிலும் மாட்டவில்லை இதில் மாட்டிவிட்டோம்..அவ்வளவே...காங்கிரஸ் மத்திய சர்க்கார் வரும் சூன் மாத இறுதியில் ஆ .ராசா குற்றமற்றவர் எனவும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அறிவித்து அவரை விடுதலையாக்கும்..அதற்கான ஆவணங்களும் கோப்புகளும் தயாரிக்கப்பட்டு மத்திய சர்க்காருக்கு அனுப்பட்டுவிட்டன...ஆகவே அரசியலில் மாட்டியதுதான் தவறே அன்றி, ஊழல் புரிவது தவறில்லை என கொள்..!

கூச்சமில்லாமல் கழகத்துக்கு வக்காலத்து வாங்கு..!

இன்னொரு முறை இரவு முழுதும் கண்விழித்து காமிராவெல்லாம் செட் பண்ணி கத்திக்கொண்டே ஜெயிலுக்குப் போவது கஷ்டமடா கண்மணியே.!

இதுதான் என் கடைசி தேர்தல் என்பேன்! இன்னும் மூன்று தேர்தலுக்கும் அதையே சொல்வேன்! கண்டுகொள்ளாதே கண்மணி! நீ இளிச்சவாயன் என்பதை மட்டும் மனதில் நிறுத்து. வீட்டை மறந்து கட்சி பணி செய்! நீ சிந்திக்க ஆரம்பித்தால் நானும் என் குடும்பமும் எங்கேயடா செல்வோம்?

ஆகவே திராவிட முன்னேற்ற கழகம் இத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்..நான் இறக்கும் தருவாயில் மாநில சர்க்கார் ஒரு மகனிடமும், மத்திய சர்க்கார் ஒரு மகனிடமும் இருக்க வேண்டும்..இதுவல்லவோ உனக்கும் நம் தமிழினத்திற்கும் பெருமை..!

வரலாறு படைத்தவன் நான்..என்னை வாழ வை உடன்பிறப்பே..!

எனக்காக இதை மட்டும் செய் என் உடன்பிறப்பே..எப்போதும் போல, இது நான் உன்னிடம் மன்றாடி கேட்கும் என் இறுதி வேண்டுகோள்..!

நான் சொல்லுவதை எல்லாம் நீ திறம்பட செய்து முடிப்பாய் என எனக்குத்தெரியும் ..உன்னிடம் நான் மனம்திறந்து ஒன்றே ஒன்றை மட்டும் கேட்க வேண்டும்...!

அட அறிவுகெட்ட முட்டா பய மவனே ..இன்னுமாடா நீ என்ன நம்புற..?

கலைஞர் மு.கருணாநிதி

திராவிட முன்னேற்ற கழகம்..

--- Written by Veliyoorkaran
****************************************************

அதிர்ஷ்ட தேவதை யார் பக்கம் - உலகக் கோப்பை 2011




1987 ல் மைக் கேட்டிங் அந்த ரிவர்ஸ் ஸ்வீப் ஆடாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

1996 ல் கல்கத்தா ரசிகர்கள் கலவரம் செய்யாமல் இருந்து காம்ப்ளி காப்பாற்றியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

1999 ல் ஆலன் டொனால்ட் அந்த ஒரு ரன்னை வேகமாக ஓடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?


சில கணங்கள் தான் வாழ்வின் பெரும்பாலான பகுதியை தீர்மானிக்கிறது! கிரிக்கெட் மட்டும் என்ன விதி விலக்கா? கிரிக்கெட்டை Game of Glorious Uncertainties  என்பார்கள்.கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மாற்றப்போகும் அந்த ஒரு கணம் இந்தத் தொடரிலும் நடக்கக் கூடும்.அபிலாஷின் மேலிருந்து கீழ் நோக்கும் அந்த கிரிக்கெட் தேவதையும் தோழிகளும் இந்தியக் கிரிக்கெட்டை ஆசீர்வதிக்கட்டும்.எப்பொழுதும் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும் சட்டைப்பையிலிருந்து எட்டிப்பார்க்கும் தேசப்பற்றுக்கு நிதர்சனம் ஸ்னேகிதமாக இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறதல்லவா.எல்லோரும் ஆரூடம் சொல்கிறார்கள். சிலர் டெக்னிகலாக... சிலர் உள்ளுணர்வின் மூலம்!

ஃபேவரைட்டுகள் சொதப்புவதும் எதிர்பாராமல் கெவின் பிரயன் போன்றவர்கள் ஸ்டார்களாவதும் உலக்கோப்பையில் சகஜம். ஆனால் தனி ஒரு மேட்ச் வின்னரால் மட்டுமே கோப்பையைத் தட்டிகொண்டு வந்துவிட முடியாது! ரசிகர்களின்,மீடியாக்களின் பிரஷர் காரணமாக எந்த ஃபேவரைட் அணியும் சொதப்பத்தான் செய்யும். விதிவிலக்கு ஆஸ்திரேலியா மட்டுமே! 2003 லும் 2007 லும் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் நோக்கிலேயே விளையாடி ஜெயித்தார்கள். அதன் காரணம் அவர்கள் ஜெயிப்பதை ஒரு Habit ஆக வைத்திருந்தது தான். ஆசிய நாடுகளுக்கு அது சுத்தமாகக் கிடையாது. ஒருவேளை அது தான் கிரிக்கெட் ஆசிய நாடுகளில் இவ்வளவு காலூன்றுவதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

சமபலத்துடன் நான்கைந்து தேசங்கள் உறுமிக்கொண்டு நிற்கும் வேளையில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடும்?

மேற்கிந்திய தீவுகள் : டாரன் சாமி துவக்க விழாவில் சிரித்துக் கொண்டே வந்ததைப் பார்த்தால் சுற்றுலா வந்த மாதிரிதான் இருந்தது. தோற்றாலும் பிரச்சினை இல்லை என்பதால் எவ்வளவு முன்னேறினாலும் லாபம் தான்.

நியூஸிலாந்து : எல்லா நல்ல பிளேயர்கள் இருந்தும் ஏன் தோற்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. வெட்டோரி ஒரு அதிரடி கேப்டன் கிடையாது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.கேப்டன் எவ்வழி பிளேயர்கள் அவ்வழி!

தென் ஆப்பிரிக்கா : இவர்கள் அதிர்ஷ்டத்துக்கு வேற்றுக் கிரகத்திலிருந்து ஏலியன்கள் இறங்கி அதனால் டக் வொர்த் முறையில் வெளியேறினால் கூட ஆச்சர்யமில்லை. அப்படி ஒரு அதிர்ஷ்டக் கட்டைகள். ஸ்பின்னர்களுக்கு பயந்து நடுங்காத பட்சத்தில் இறுதி வரை முன்னேறக் கூடும்.

இங்கிலாந்து : இந்த அணியை பொறுத்த வரையில் ரெண்டே விஷயம் தான். இவர்கள் இரண்டு தப்பு செய்தால் தோற்றுவிடுவார்கள். எதிர் அணியினரை இரண்டு தப்பு செய்ய வைத்தால் ஜெயிப்பார்கள். நெருக்கடியை சமாளிப்பதில் பிரிட்டிஷ் வீரர்கள் ஒன்றும் சம்ர்த்தர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவைப் போல கடைசி வரை ஒரு கை பார்த்து விடுவது என்ற மனோ திடத்தில் இங்கிலாந்து ஆடினால், கோப்பை கைகூடும்.

ஆஸ்திரேலியா : எல்லோராலும் இந்த முறை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள அணி. 87 லும் , 99 லும் இவர்கள் ஒன்றும் ஃபேவரைட் கிடையாது என்பதை கவனிக்கவும்.ஆனால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.

இலங்கை : பேட்டிங்கில் ஸ்ட்ராங்.பவுலிங்கிலும் ஸ்ட்ராங். பழைய இந்திய அணியினர் போல் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்தும் கணிக்க முடியாத அணி. பாகிஸ்தானுடன் விளையாடியதைப் பார்த்தாலே புரிந்திருக்கும்.அதிகபட்சம் செமிஃபைனல்ஸ்.

இந்தியா : நிறைய எதிர்பார்ப்புகள். தோனியின் மீது கூடுதல் சுமை. யூசுஃப் பதானை முன்னால் இறக்கி விட்டு தோனி பின்னால் இறங்கினால் உத்தமமாக இருக்கும். ஆஸ்திரேலிய , இலங்கை வீரர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஹர்பஜனை கழட்டிவிட்டு அஸ்வினுக்கு வாய்ப்பளித்தால் மாஜிக்குகள் எதிர்பார்க்கலாம்.

இந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஸ்பின்னர்களை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு ஸ்லாக் விக்கெட்டுகளைக் கழட்டுவதில்தான் முக்கியப் பங்கு இருக்கும். ஆனால் விதியை வெல்ல பார்ட்னர்ஷிப் பிரேக்கர்கள் தேவை. மிதவேகப் பந்து வீச்சைப் பற்றி யாரும் கவலைப்பட்டாற்போல் தெரியவில்லை.

மிகவும் மெதுவாக எழும்பும் பிட்சுகள் கொண்ட இந்தியாவில் நிலைத்து ஆடுவது மிகவும் சுலபம். அதை உடைப்பது 30-40 ஒவர்களில் வீசும் பவுலர்களிடம் தான் உள்ளது. அதற்கு ஆல் ரவுண்டர்கள் தேவை. நாம் அதைப் பற்றியும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. இர்ஃபான் பதான் இருந்திருந்தால் நமது அணி சற்று வலுவாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

மேலும் கோப்பையை வெல்வதற்கு கேப்டன் கூலாக இருந்தால் மட்டும் போதாது. வெறி வேண்டும். லீக் ஆட்டங்களிலும் சாம்பியன் போல் ஆடும் அணி தான் இறுதிப் போட்டி வரை வரும். 2003 ல் ஆடிய இந்திய அணி முதல் மேட்சை தவிர்த்து எல்லா ஆட்டங்களிலும் சாம்பியன் போலவே ஆடியது. ஆனால் கங்குலியிடம் இருந்த வெறியை விட ரிக்கி பான்டிங்கிடம் இருந்த வெறி அதிகம். அதனால் தான் அவர்களால் கோப்பையை தொடர்ந்து கைப்பற்ற முடிந்திருக்கிறது.

இது வரை சாம்பியன் ஆன எந்த அணியையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆல்ரவுண்டர்கள் அந்த அணியில் நிறைந்திருப்பார்கள். 83 ல் இந்தியா..92 ல் பாகிஸ்தான்... 96 ல் இலங்கை என ஆசிய நாடுகள் ஜெயித்த எந்த வெற்றி அணியிலும் ஆல்ரவுண்டர்களின் பங்கு கணிசமாக இருந்திருக்கும்.அதே போல் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் கோப்பையை வெல்லும் எந்த அணியும் அந்தத் தொடரில் தான் ஃபார்முக்கு வரும்.அல்லது உலகத்தொடரின் முந்தைய போட்டிகளில் ஃபார்முக்கு வரும். 83 ல் இந்தியா வெஸ்ட் இண்டீஸின் சுற்றுபயணத்தில் அசத்திய கையோடு கோப்பையைத் தட்டிச் சென்றது. 96 ல் இலங்கை அந்தத் தொடருக்கு முன் தான் ஃபார்ம் ஆக ஆரம்பித்தது.99 உலகக்கோப்பையில் ஃபார்முக்கு வந்த ஆஸ்திரேலியா 10 வருடங்களுக்கு மேலாக தனது ஆட்டத்திறனை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

இந்த உலகக்கோப்பையில் ஒரு அணி தற்பொழுதுதான் ஃபார்முக்கு வர ஆரம்பித்திருக்கிறது. கிரிக்கெட் மீதுள்ள காதலில் தேசப்பற்றை சற்று மூலையில் அமர்த்தி வைத்துவிட்டுப் பார்த்தால் அந்த அணிதான்  என்னோட ஃபேவரைட்டும்.





அந்த அணி - பாகிஸ்தான்!

************************************************************************************