RSS

கோ- பத்திரிக்கை (அ) தர்மம்ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்கள் தாம்.அதாவது காதல் ஆக்ஷன் காமெடி சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சக சித்திரம்.அப்படி எடுத்தால் தான் தமிழ் ஜனம் ஓட வைக்கும் என்கிற புராதன காலத்து நினைப்பில் எடுக்கப்பட்ட மற்றுமொரு காவியம் தான் 'கோ'.

கல்லூரி லெக்சரரானாலும் சரி...இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்டானாலும் சரி...அதாகப்பட்டது தமிழ் சினிமா நாயகன்மார் அனைவரும் வேகமாக நடனமாட வேண்டும். பைக்கிலோ காரிலோ சேஸ் செய்து வில்லன்களை அடிக்கவேண்டும்.சடாரென நியூசிலாந்திலோ ஸ்விட்சர்லாந்திலோ ஹீரோயின் இடுப்பை அணைத்துக் கொண்டு மழைத்துளி முன்பனி என்று பேத்தலாக பாடிக்கொண்டே ஒரு டான்ஸை போட வேண்டும்.திடீரென மெழுகுவர்த்தி ஏத்தி ஊழலை ஒழிக்க முயற்சிப்பது போல இந்த அபத்தங்களை ஒழிக்க ஏதாவது செய்தால் நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பேன்.

ஒரிஜினல் வில்லன் யாரென கிளைமாக்ஸில் முடிச்சை அவிழ்க்கும் சாதாரண கதை.அதற்கு அப்படியொரு சொதப்பலான திரைக்கதை.சுவாரஸ்யமாக கதை நகரும்போதெல்லாம் அதை அம்போவென விட்டுவிட்டு கலர் காஸ்ட்யூம்களில் பாறை இடுக்கிலும் மலை முகடுகளிலும் ஸ்லோவாக கையை தூக்கி டான்ஸ் ஆடுகிறார்கள்.அதிலும் கார்த்திகா இரவு வேலை முடித்து வீட்டுக்குப் போகும் போது கூட ஃபுல் மேக்கப்பில் தான் போகிறார்.இன்னொரு ஹீரோயின் பியா அக்மார்க் தமிழ் சினிமா லூசு. சத்ரியன் ,இதயத்தை திருடாதேவில் ஆரம்பித்து இன்னும் சுட்டிப்பெண் கேரக்டருக்கான அம்சங்கள் நம் சினிமாக்களில் மாறவே இல்லை.அதிலும் பக்கத்துவீட்டுப் பையனுக்கு மேலாடையைத் திறந்து காட்டும் காட்சி.டைரக்டருக்கு திருஷ்டி சுத்திப் போட வேண்டும்.

ஜீவா முதலில் ஒரு வங்கிக் கொள்ளையை படம் பிடிக்கிறார் .பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் ஒரு அநியாயத்தை.பின்னர் முதலமைச்சர் செய்யும் ஒரு அராஜகத்தை.அப்படியே அரசியலுக்கு வரும் நல்லவர்களின் நன்னடத்தைகளை துரு துருவென படம் பிடித்தபடியே திரிகிறார்.இப்படியே பிடித்து பிடித்து ஆட்சியையே மாற வைத்து விடுகிறார்.அவ்வப்போது இரண்டு ஹீரோயின்களோடும் முற்போக்கு வசனங்கள் பேசுகிறார்.படத்தின் ஆரம்பத்திலும் சரி..முடிவிலும் சரி...அஜ்மல் செய்யும் அண்டர்பிளே நடிப்பு மட்டுமே ஆறுதல்.

ஹாரிஸ் ஜெயராஜ்,,தெய்வமே...இன்னுமா அந்த ட்யூனை விடல...! சலிக்காம ஒரே ட்யூனை மாத்தி மாத்திப் போட்டு எப்படிய்யா ஹிட் அடிக்க முடியுது உன்னால! எல்லாமே இந்த படத்துக்குத் தேவையற்ற ஆனால் ரசிக்கும்படியான பாடல்கள்.ஒளிப்பதிவு கச்சிதம்

டைரக்டருக்கு!

நீங்கள் இன்ஸ்பையர் ஆகும் அல்லது கண்ட்ரோல் வி செய்யும் ஆங்கில படங்கள் எல்லாமே மிகவும் தரமானவை. சென்ற படத்தில் 'Mariah Full of Grace ' ஐ ஒரு போர்ஷனுக்குப் பயன்படுத்தி இருந்ததைப் போல இதில் அப்பட்டமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் 'State of Play ' ,' Vantage Point ' போல எடுக்க வேண்டிய படத்தை தமிழ் சினிமாவின் ரெடிமேட் குப்பை திரைக்கதை அம்சங்களுக்குள் திணித்து இம்சித்திருக்க வேண்டாம். சகிக்கவில்லை!

கண்டபடி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று,வங்கிக்கொள்ளை அடித்து நக்ஸல் பாரி இயக்கத்தை வளர்த்து தேர்தல் அமைப்பில் புகுந்து மக்களுக்கு அவசியமான மந்திரி சபையா? லாஜிக்குகளின் சக்கரவர்த்தி ஷங்கரே தலையில் அடித்துக் கொள்வார்.முடியலை!


கடைசியாக...


1.மசாலா குப்பை எனத் தெரிந்தும் வீம்புக்கென நொள்ளை நொட்டு சொல்லி அல்லது பாராட்டி விமர்சனமெழுதும் பதிவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

2.தியேட்டர்களில் அவ்வளவு கூட்டம்! ஐ.பி.எல் அவ்வளவு போரடிக்கிறதா என்ன?

**********************************************************************************

அதிரடி கருத்து கணிப்பு...பங்கேற்க கடைசி வாய்ப்பு..!


தேர்தல் நேரத்தில் கருத்து கணிப்புகளின் தாக்கம் அசாத்தியமானது. கேள்விகள் அனைத்தும் கவனமாகத் தொகுக்கப்பட்டு விஞ்ஞான முறைப்படி அலசி ஆராய்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன.மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள், அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முதல் இலவசத்திட்டங்கள் வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நடத்தப்படும் ஒரு நடுநிலைமையான கருத்துக் கணிப்பு...இதோ உங்கள் பங்களிப்புக்கு...!


குஷ்பூ மாதிரி குழந்தை பிறக்கவேண்டுமென்றால்

1.திமுகவுக்கு ஓட்டுப் போடணும்

2.குலசாமிக்குப் பொங்கல் வைக்கணும்

3.சுந்தர்.சி ஒத்துக்கணும்

வண்டு முருகனின் தேர்தல் பிரசாரம்

1.ஊத்திக்கும்

2.திமுகவுக்கு உபயோகமா இருக்கும்

3.இதுவரையில சிரிப்பொலில வராத காமெடி

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது ஏன்?

1.விஜயகாந்துக்கு செல்வாக்கு கூடிடும்னு பயம்

2.விஜயகாந்த் அடிச்சிருவாரு

3.கேப்டன் குடிச்சுட்டு வந்து பேசும்போது மேல வாந்தி எடுத்துட்டாருன்னா!

வைகோ என்ன பண்ணிட்டு இருப்பார்?

1.நாஞ்சில் சம்பத்தோட சீட்டு விளையாடிட்டு இருப்பார்

2.வாலிபால் ஆடிட்டு இருப்பார்

3.சன் டி.வி சீரியல் பார்த்துட்டு இருப்பார்

கார்த்திக்கின் பிரசாரம் ஏன் டி.வி யில் காண்பிக்கப்படுவதில்லை

1.ஏற்கெனவே ரெண்டு காமெடி சானல்கள் இருக்கின்றன

2.கார்த்திக் கட்சிக்காரங்களே சேனல் ஆஃபீசை அடிச்சு நொறுக்கிடுவாங்க

3.தற்கொலைக்கு தூண்டும் வழக்கில் மாட்டிக்கொள்வோம் என டிவி சேனல்கள் அஞ்சுவதால்

தங்கபாலு என்பவர்

1.மயிலாப்பூரில் டீக்கடை நடத்துபவர்

2.கொளுத்துவேலை செய்பவர்

3.தானே உட்காரும் தானைத் தலைவன்

கருணாநிதி முதல்வரானால்,ஜெயலலிதா செல்லப் போவது

1.கொடநாடு

2.திராட்சைத்தோட்டம்

3.சிறுதாவூர்

ஜெயலலிதா முதல்வரானால், கருணாநிதி செல்லப்போவது

1.பாளையங்கோட்டை

2.புழல்

3.வேலூர்

காங்கிரஸை தோற்கடிக்க வேலை செய்வது

1.சீமான்

2.திமுக

3.அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்

2016 ல் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும்?

1.வீட்டுக்கு வீடு மெடிக்கல் காலேஜ் சீட்

2.வீட்டுக்கு வீடு கார்

3.எல்லோருக்கும் தினம் ஒரு லிட்டர் பெட்ரோல்முடிவுகள்

.

.

.எவன் கருத்துகணிப்பு நடத்தினாலும் எதையாவது கிழிக்கப் போறமாதிரி கருத்து சொல்ல வந்த டுபாகூர்களுக்கும் , எவன் ஜெயிச்சாலும் ஆப்படிப்பான் என்று தெரிந்தே அஞ்சு வருஷத்துக்கொரு முறை வாயில் வென்ணயடித்துக்கொள்ளும் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கும் ,மேலும் இதையும் ஒரு கருத்துகணிப்பு என்று நம்பி வேலையை விட்டு வாசித்த அனைத்து வாக்காள மடையர்களுக்கும் நன்றி.