அன்பு சகோதரி எழுதுவது!
எதற்காக திடீரென இவ்வளவு கூச்சலும் குழப்பமும்? நீங்கள் கேட்கும் தொகுதிகளெல்லாம் கொடுப்போம் என்று எப்படி உங்களால் நம்பமுடிந்தது? மைனாரிட்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்பினால் இந்த வாக்காள மடையர்களுக்கு என்னை விட்டால் வேறு கதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?
வழக்கமாக தேர்தலுக்கு பின்பு உங்களை துரத்திவிடுவேன் என்பது தெரிந்து தானே எங்களுடன் கூட்டணி வைக்க சம்மதித்தீர்கள்.ஏதோ ரொம்ப நாள் ஆட்சியில் இல்லாததால் போர் அடிக்கிறதே என்று நானும் சசியும் தொகுதி பங்கீடு , பேச்சுவார்த்தை என்று பொழுதைப் போக்கினோம். அதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வதா? தேர்தல் நெருங்கிவிட்டதே..பிரசாரத்துக்குப் போக வேன்டுமே என்ற அக்கறை இல்லாமல்...இப்படியா காமெடி பண்ணிக்கொண்டே இருப்பது?
சரி..உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்குள் வந்துதான் என்ன கிழித்துவிட போகிறார்கள். நான் நியமிக்கும் ஏதோ ஒரு மடையன் வாசிக்கும் பட்ஜெட் உரைக்கு மேஜையை தட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள். அதை அங்கே செய்தால் என்ன...வீட்டில் இருந்து செய்தால் என்ன?
எம்.ஜி.ஆர் போல என்னைப்போல சிவப்பான நடிகர் நடிகைககளையே பார்த்துப் பழக்கப்பட்டுப்போன என் கட்சிக்காரர்களுக்கு திடீரென மேக்கப் இல்லாமல் விஜயகாந்த் வந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால் பயப்படமாட்டார்களா? வைகோ கூட போன தேர்தலிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் வந்து நான் இன்னும் கட்சி நடத்துகிறேன்..எனக்கும் சீட் கொடுங்கள் என்றால் எங்கே போவது? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் மிஸ்டர்.வைகோ?
இந்த முறை என்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளை தேர்தலுக்கு பின் தடை பண்ணலாமா என்று கூட ஒரு யோசனை உள்ளது.
அப்பாவி தலைவர்களாகிய உங்களிடம் சொல்வதற்கென்ன? சோ ராமசாமி பேச்சைக்கேட்டு நான் இப்படி அதிரடியாக முடிவுகள் எடுப்பதாக மீடியாக்கள் அலறுகின்றன, என் ஆஸ்தான ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் சோ ராமசாமியிடமே பேசுவேன் என்பது உங்களுக்குப் புரியாமல் போனதில் ஆச்சர்யமே இல்லை?
மானங்கெட்டுப் போய் திரும்பவும் என் காலிலேயே விழுந்து நான் போடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு வந்தீர்களானால் பிரசார மேடையில் சந்திப்போம். ஒரே நார்காலிதான் போடப்பட்டிருக்கும்.அதற்கும் முரண்டு பிடித்து மூன்றாவது அணி அது இது என்று பினாத்தாதீர்கள்!
விஜயகாந்துக்கு போட்ட நாமம் வாழ்க! வைகோவுக்கு போட்ட பட்டை நாமம் வாழ்க!
இப்படிக்கு
உங்கள் அன்பு சகோதரி
பின் குறிப்பு :
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
-- கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதாக உங்களிடம் நான் சொல்லவிரும்புவதாக என்னிடம் சோ ராமசாமி சொன்னது!
***********************************************************************************
About Me
Linkbar
My Blog List
-
கோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன் - *'குருஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த...18 hours ago
-
மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள் - அ.முத்துலிங்கம் - பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்; இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், க...22 hours ago
-
கற்றது தமிழ் ராம் ஏன் குறும்படங்களை, தமிழ் இலக்கியத்தை எதிர்க்கிறார்? - விஜய்டிவி குறும்பட போட்டியின் போது “கற்றது தமிழ்” ராம் குறும்படம் எடுப்பது முழுநீளப் படம் எடுப்பதற்கான தகுதி அல்ல என்று பேசி இளைய இயக்குநர்களை கசப்படைய ...4 days ago
-
1984–Ramblings of a disillusioned mind…… - [image: penguin-1984] 1984, a novel based on a dystopian future, is about the everyday life of Winston Smith, his internal struggle, fear, his search ...4 days ago
-
நீயா நானா - வாய்க்கெட்டாத பழம் - சில வாரங்களுக்கு முன்பு... தமிழினத்தலைவர் தோட்டா அவர்கள் போன் பண்ணி, ‘மாப்பி நீயா நானால பிரபல(!) டிவிட்டர்கள எல்லாம் ஒரு ஷோவுக்கு கூப்புட்றாங்க... இப்போதைக...5 days ago
-
டைலான் டாக் - தமிழில்!! - *இத்தாலிய சித்திரக்கதை ரசிகர்களின் அபிமான ஹீரோக்களில் ஒருவராகிய டைலான் டாக் அவர்களின் கதையான ஜானி ஃப்ரீக் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு தரவிறக்கி படிப்பத...1 week ago
-
Celluloid vs Digital: மந்திரவாதிகளின் இரு கோல்கள் - A cinematographer is a visual psychiatrist……moving the audience from here to there, there to here…through a movie….. making them think the way you want the...1 week ago
-
அப்பாவின் ரேடியோ விமர்சனம் .எஸ்.ராஜகுமாரன் - பெண் பெயரில் எழுதுபவர்கள் எல்லோரும், பெண் எழுத்தாளர்கள் என்றுதான் அப்போது நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போது? சுஜாதா என்ற பெயரை பத்திரிகைகளில் பார்...2 weeks ago
-
கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி - சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நே...3 weeks ago
-
வடை பறிப்பு - சாம் மார்த்தாண்டன்!!! - சமீப காலமாக பக்கிலீக்ஸில் அடிக்கடி பதிவுகள் வெளியாவதில்லை. காரணம் பெரிதாக எதுவும் இல்லை.. சமீபகாலமாக ஜெட்லி எழுதும் பதிவுகள் நேரடியாக எடிட் எதுவும் செய்யப...4 weeks ago
-
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி2 months ago
-
தாண்டவம் - தடை கோரி வழக்கு - நண்பர்களே. இயக்குநர் விஜய்யின் ’தாண்டவம்’ படத்துக்குத் தடைகோரி, உதவி இயக்குநர் பொன்னுச்சாமி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அ...7 months ago
-
ரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...! - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...8 months ago
-
சுதந்திரமும் அலாவுதீனின் அற்புத விளக்கும்! - ரோஜா படம் , இந்தியன் படம் மற்றும் ஒரு புதுப் படம் என விடுதலை தினத்தை சம்பிரதாயமாக கொண்டாடும் கோடானு கோடி தமிழ் ஜனங்கள் மீண்டும் நாளை காலை தத்தமது வேலைகளை ...9 months ago
-
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் - தமிழில்: சுகுமாரன் நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வா...1 year ago
-
சினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...2 years ago
Popular Posts
-
தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகம...
-
அன்பு உடன்பிறப்பே., மு க எழுதுவது.. தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...! என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே... நாம் எ...
-
சைந்தவி புருஷனுக்கு, சைந்தவி எழுதுவது.வழக்கமா எல்லாக் கடிதத்துலையும் எழுதிக்கொள்வதுன்னு தான் போடுவேன். ஏன்னா இது வரைக்கும் எந்தக் கடிதத்...
-
வணக்கம் பங்காளி! ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன்! நீயெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்க? உன் தலைவனை கிண்டலடிச்சு வர்ற எஸ் எம் எஸையும் மெ...
-
மானங்கெட்ட தொண்டனுக்கு, நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..! டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங...
-
வெளியே வருபவர்கள் கண்ணில் அப்படி ஒரு பரவசம். எதையோ சாதிச்ச திருப்தி! ஒரு புது தன்னம்பிக்கை…இனிமேல் வாழ்க்கைல எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்...
-
(மானங்கெட்ட) உடன்பிறப்பே ! ஆசையில் ஓர் கடிதம் ... என் உடலும் , என் உடலில் உன் உள்ளமும் நலமென கொள் .. நின்னின் நலம் விழைய அவ...
-
ஒரு தமிழ் சினிமாவை இது என்ன 'Genre'என கேட்பது அபத்தம், எப்போதாவது வரும் சில விதி விலக்குகளை தவிர!இங்கே எடுக்கப்படுவது ஒரே வகை படங்க...
-
மணிரத்னம் படம் நன்றாக இல்லையென்று சொல்லிவிட்டால் நம்மை கிராமத்தான் என்று கேலி செய்வார்களோ என்று பயந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இப்பொழ...
-
அபத்தமான நோக்கு வர்மங்களில் இருந்தும் , ட்ரெய்னை கையால் நிறுத்தும் கொடுமைகளில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு ஒரு தாற்காலிக விடுதலை கிடைத்துள்...








